Friday, May 29, 2020
Book Reviewநூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: யார் கைகளில் இந்து ஆலயங்கள் – பேரா. வ.பொன்னுராஜ்

131views
Spread the love

 

இந்தியாவில் பெருவாரியான மக்கள்  மத நம்பிக்கையில் மூழ்கி இருப்பவர்கள். மதம் சார்ந்த சடங்குகளில் உளப்பூர்வமாக ஈடுபடுபவர்கள். சாதியில்லை மதமில்லை என்று தாங்கள் பணிபுரியும் இடத்தில் முழக்கமிடும் தொழிலாளர்கள் கூட வாழ்விடங்களில் மத உணர்வோடிருப்பதைக் காணமுடிகிறது. தங்கள் மதம் மீது மாறாத பற்றும் நம்பிக்கையும் இருந்தாலும் அவர்களிடம் பிற மத வெறுப்பு இருப்பதில்லை. மதங்கடந்து மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். காலங்காலமாக மக்களிடம் இருந்துவரும் இந்த ஒற்றுமை உணர்விற்கு உலை வைக்க மத வெறியர்கள் இமாலய முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

குறிப்பாக RSS படைகள் தங்களின் சுயநல மத அரசியலுக்காக  மக்களின் மத நம்பிக்கையைப் பயன்படுத்துகிறார்கள். அதன்  ஒரு பகுதியாகக்கிளப்பப்படுவதுதான் “இந்து கோயில்கள் மட்டும் அரசின் கைகளில் இருப்பது ஏன்? இந்து கோயில்களை. இந்துக்களிடம் கொடு” என்ற முழக்கம். ஆலயங்களையும் அறநிலையங்களையும் அரசியல்களங்களாக மாற்ற சங்பரிவாரங்கள் துடித்துக் கொண்டிருக்கிற இக்காலக்கட்டத்தில் தோழர் S G ரமேஷ்பாபுவின் இம்முயற்சி பாரட்டத்தக்கது.

Image may contain: 1 person
தோழர் S G ரமேஷ்பாபு

புத்தகம்  மூன்று பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி கோயில்களின் தோற்றம் எழுச்சி குறித்த வரலாற்றை இயக்கவியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தோடு எடுத்து வைக்கிறது. மன்னர்களின் கருவூலங்களாக என்றென்றும் கோயில்கள் இருந்தன என்பதையும் அதன் காரணமாகவே அவை தாக்கப்பட்டுள்ளன அன்றி மதவெறியால் அல்ல என்பதையும் இப்பகுதி மறுக்கமுடியாத சான்றுகளோடு உறுதி செய்கிறது.  இந்த ஆய்விற்காக வாசிக்கப்பட்டுள்ள புத்தகங்களில் பலவற்றை நானும் படித்திருக்கிறேன் என்கிறபோது அப்புத்தகங்கள் சொல்லும் செய்திகளின் சாரங்களை உள்வாங்கி, கோர்வையாகத்தொடுத்து, எளிய வாதங்களாக முன்வைத்திருக்கிற ரமேஷ்பாபுவின் திறனும் உழைப்பும் கண்டு மகிழ்வோடு சற்றுப் பொறாமையும் வருகிறது.

இரண்டாம் பகுதி மதிப்பிற்குரிய திரு (வேட்டி) ஜெயராமனுடனான ஒரு அர்ததமுள்ள செறிவான நேர்காணலின் தொகுப்பு. நேர்காணல் என்று சொல்லப்பட்டிருந்தாலும் உண்மையில் அது தங்குதடையற்ற .

Rameshbabu (@Rameshcpim) | Twitter

கதையோட்டம் கொண்ட குறு நாவல் போல் அமைந்துள்ளது. இங்கு திறமையான கதைசொல்லி யார்? ஜெயராமனா? ரமேஷா? அக்குறுநாவல் ஆகம விதிகள் குறித்து சிலாகித்து, பெருமை பேசுவர்களே அவற்றை சுயநலத்திற்காக காற்றில் பறக்க விட்ட பல நிகழ்வுகளைப் பேசுகிறது; வேலியே பயிரை மேய்ந்த கதையாக கோயில் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்ட உண்மைச் சம்பவங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது;  சிலை கடத்தல் வழக்குகளில் “நுங்குத் தின்னவனை விட்டுவிட்டு நோண்டித் தின்னவனை” கைது செய்திருக்கிற சூதின் உள்நோக்கம் என்னவென்று கேள்வி எழுப்புகிறது.

இவ்விரு பகுதிகளின் பின்னணியில் இன்றைக்குள்ள நிலைமைகளில் பயணிக்கிறது மூன்றாம்பகுதி. இப்பகுதி, மதவெறிக்கூட்டம் கட்டவிழத்துவிட்டு வரும் பொய் மூட்டைகளைக் கிழித்து தவறான பிரச்சாரங்களைத் தோலுரித்துக் காட்டுகிறது. நியாயம் போல் தோற்றமளிக்கிற சூது நிறைந்த பல கேள்விகளை அறிக்கைகளை மக்கள் மத்தியில் மதவெறியர்கள் பரப்பி வருகின்றனர்.  உண்மைகளை மறைத்து உணர்சசிகளின் மேல் பொய் பிம்பங்களைக் கட்டமைக்கிற ‘post truthism’ என்ற   வலதுசாரிகளின்

இத்தகைய  உத்திகளையும் மீறி மாயக்கேள்விகளையும் அறிக்கைகளையும் பொடிப்பொடியாக்கும் எளிய நேர்ததியான வாதங்களை இப்பகுதியில் காண முடிகிறது.  நாள்தோறும் துன்பத்தில் உழன்று வரும் “ உழைப்பாளி மக்கள் காரணங்களைஅறியாமல் கடவுளை நோக்கி அலைஅலையாகத் திரண்டு கண்ணீர் வடிக்கும் யதார்த்ததை வெறும்

‘கோவிலுக்குப் போறாங்கப்பா’ என்ற கோணத்தில் மட்டும்தான் அணுகப்பகிறோமா? “

– இது போன்ற ஆழமான பொருள் பொதிந்த கேள்விகளை நம் விவாத்திற்கு முன்வைத்து புத்தகம் நிறைவடைகிறது.

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/yaar-kaikalil-indhu-alayangal/

Leave a Response

Top Reviews

Video Widget

gallery