Articleஅறிவியல்

கோவிட் 19 பரிசோதனையில் பாலிமரீஸ் தொடர்வினை மற்றும் உடல் திரவங்கள் பரிசோதனை ஆகியவற்றை இணைத்துச் செய்வது நமக்கு சிறந்த தேர்வாக ஏன் இருக்கும்? – நிரஞ்சனா ராஜலஷ்மி (கால்நடை நுண்ணுயிரியலாளர்) | தமிழில்: கி.ரமேஷ்

Spread the love

உடல் திரவங்கள் பரிசோதனை மிகவும் துல்லியமாக இருக்காது.  அதே சமயம் PCR சரியான வேகத்துடன் இருக்காது.  இவை இரண்டையும் இணைத்துச் செய்வதே சரியான தீர்வாக இருக்கும்.

சார்ஸ் கொவிட் -2 (கோவிட் 19) வைரஸ் 212 நாடுகளைத் தாக்கியுள்ளது.  அதனால் 85000 பேருக்கு மேல் இறந்துள்ளனர்.  இது மிகவும் அதிகம் என்பது தெளிவு.  இந்தக் கொடூரமான நோயை எதிர்த்துப் போராடும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.  இந்த நோயை எதிர்த்துப் போராடும் ஒரு திறனுடைய தடுப்பு மருந்தைத் தயாரிப்பது என்பது கேள்விக்கிடமின்றி முக்கியமானது.  உலகிலுள்ள நிபுணர்கள் அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.  எனினும், இந்த நேரத்தில் நோயை விரைவாகக் கண்டறிவதுதான் சரியான சிகிச்சை அளிப்பதற்கும், பொதுசுகாதாரத் தலையீட்டுக்கும் முக்கியமானதாகும்.  அறிவியல் சமூகத்தினரைத் தவிர பொதுமக்களும் பயன்படுத்தப்படும் பரிசோதனைகளின் திறன், வரம்புகள் பற்றி அறிந்து கொள்வது பலன் தருவதாக இருக்கும்.

Coronavirus; A- to Panic; Z between the lines | Data Driven Investor

சார்ஸ் கோவிட் 2 (கொரோனா வைரஸ்)

தற்போது கோவிட் 19 பரிசோதனைக்கு இரண்டு அடிப்படையான, நடைமுறை அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.  ஒன்று வைரசையே கண்டு பிடிப்பது, இரண்டாவது, வைரசுக்கெதிராக உடல் உருவாக்கும் எதிர்ப்பொருளைக் கண்டு பிடிப்பது.  வைரசைக் கண்டுபிடிப்பதற்காக PCR – Polymerase Chain Reaction அதாவது, பாலிமரீஸ் தொடர்வினை என்ற பரிசோதனை செய்யப்படுகிறது.  இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், ஆர்.டி.பி.சி.ஆர். (ஆர். டி. பி.சி.ஆர். (ஆர்.என்.எ வை நிரப்பு இரட்டை உட்கரு அமிலமாக (சி.டி.என்.எ) மாற்றும் நுட்பம்) பயன்படுத்தப்படுகிறது.  பி.சி.ஆர். தொழில்நுட்பத்தைத் பயன்படுத்தி, மரபு நூலிழையின் (DNA) குறிப்பிட்ட ஒரு சிறு பகுதியை தெர்மோசைக்ளர் என்ற ஒரு கருவியின் துணையுடன் பல்லாயிரக்கணக்கில் பெருக்க முடியும்.

ஆர்.டி.பி.சி. முறை:

சார்ஸ் கோவிட் 2 என்பது சுவாசம் தொடர்பான வைரஸ்.  அதை மேல் சுவாசக்குழாய் அல்லது கீழ் சுவாசக் குழாயில் பெரும்பாலும் கண்டுபிடிக்க முடியும்.  எனவே பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரியை (சாம்பிள்) மூக்கும் தொண்டையும் சேரும் மேல்தொண்டைப் பகுதியில் ஒரு சுத்தீகரிக்கப்பட்ட பஞ்சைச் செலுத்திப் பெற முடியும்.  இந்த முறை மிகவும் திறனுடையதாகக் கருதப்படுகிறது.  சில சமயம் நோயாளியின் மூக்கில் குழாய் சொருகப்பட்டிருந்தாலோ அல்லது சளி மூக்கை அதிகமாக அடைத்துக் கொண்டிருந்தாலோ, துப்பும் சளி எடுத்துக் கொள்ளப்படுகிறது.

Jual PCR Machine Harga Murah Gresik oleh CV. Gredia

PCR தொடர்வினைக் கருவி

இவ்வாறு எடுக்கப்பட்ட மாதிரிகள் கவனமாக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்காகக் குறிப்பிட்ட சோதனைக் கூடங்களுக்கு அனுப்பப்படுகின்றன.  பின்னர் வைரசின் நியூக்ளிக் அமிலம் தனியாகப் பிரிக்கப்பட வேண்டும்.  நியூக்ளிக் அமிலம் வைரசின் மரபியல் பொருளை (genetic material) குறியீட்டுக் காட்டும்.  அது டி.என்.ஏ. வாகவோ ஆர்.என்.ஏ. வாகவோ இருக்கலாம். சார்ஸ் கோவிட் 2 ஒரு ஆர்.என்.ஏ வைரஸ்.  பொதுவாக ஆர்.என்.ஏ என்பது டி.என்.ஏ.வை விட மிகவும் பலவீனமானது.  காரணம் பெரும்பாலான வைரசுகளுக்கு டி.என்.ஏ இரட்டைச் சுருள் வடிவத்திலும், ஆர்.என்.ஏ. ஒற்றைச்சுருள் வடிவத்திலும் இருக்கும்.  வேறு வார்த்தைகளில் ஆர்.என்.ஏ. வைரசுகள் வேகமாக சிதைவடையும்.  எனவே அவற்றைத் தனியாகப் பிரித்து பாதுகாத்து வைப்பது மிகவும் சவாலானது.  இதற்கு கோவிட் 19 விதிவிலக்கல்ல.

ஆர்.என்.ஏவின் இன்னொரு அம்சம் என்னவென்றால், தனியாகப் பிரிக்கப்பட்ட ஆர்.என்.ஏ.வை டி.என்.ஏ.வைப் போன்று பிசிஆர்.ஆல் நேரடியாகப் பெருக்கிக் காட்ட முடியாது.  ஏனெனில் பிசிஆர் நடைமுறையில் வினையூக்கியாகச் செயல்பட டாக் டிஎன்.ஏ (அதிக வெப்பத்தைத் தாங்கக் கூடிய இந்த நொதி பிசிஆர்.இல் பயன்படுத்தப்படுகிறது)  என்ற நொதி (என்சைம்) மிகவும் முக்கியம்.  ஆனால் இந்த நொதி டி.என்.ஏ. மீதுதான் செயல்புரியும், ஆர்.என்.ஏ மீது செயல்புரியாது.  எனவே ஆர்.என்.ஏ.வைப் பிரித்ததும், உடனடியாக அடுத்ததாகச் செய்ய வேண்டியது, அதனை பல படிகள் மூலம் குறைநிரப்பு டி.என்.ஏ. (complementary DNA) வாக மாற்ற வேண்டும்.

Double Helix - Spider Dna Structure PNG Image | Transparent PNG ...

டிஎன்.ஏ இரட்டைச் சுருள் வடிவம்

இந்த குறைநிரப்பு டிஎன்.ஏ தொகுப்புக்காக, Reverse transcriptase (RT) என்ற நொதி சேர்க்கப்படுகிறது.  எனவே ஒட்டுமொத்த நடைமுறையும் ஆர்.டி.பி.சி.ஆர். என்று அழைக்கப்படுகிறது.  இறுதியாக, குறைநிரப்பு டி.என்.ஏ ஒரு தெர்மோசைக்ளர் மூலமாக பல்லாயிரக்கணக்காகப் பெருக்கப்படும்.  பிறகு பாசிடிவ் மாதிரிகள் தொடர்வரிசைப்படுத்தப்பட்டு ( ஒரு மரபணுவில் உட்கரு அமிலத் தொடர்தான் தொடர்வரிசை எனப்படுகிறது) அவை ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள மற்ற பாசிடிவ்  தனியாகப் பிரிக்கப்பட்ட தொடர்களுடன் ஒப்பிடப்படும்.  இப்படித்தான் ஒரு மாதிரி பாசிடிவாக இருக்கிறதா அல்லது நெகடிவாக இருக்கிறதா என்று பிசி.ஆர்.ஆல் கண்டுபிடிக்கப்படுகிறது.

உடல் திரவப் பரிசோதனை (serological testing method)

உடல்திரவப் பரிசோதனை என்பது இரண்டாவது வகை.  இதில் வைரஸ் நேரடியாகக் கண்டுபிடிக்கப்படுவதில்லை.  மாறாக வைரசுக்கெதிராக உடல் வெளியிடும் எதிர்ப்பொருள் கண்டறியப்படுகிறது.  எதிர்ப்பொருள் என்பது வெளிப்பொருள் உடலுக்குள் நுழையும்பொழுது அதை எதிர்த்து பி-லிம்பொசைட் என்று அழைக்கப்படும் சிறப்பு வெள்ளை அணுக்கள் வெளியிடும் ஒரு பாதுகாப்பு சாதகமான புரதம்.  இந்த விஷயத்தில் வெளிப்பொருள் என்பது சார்ஸ் கோவிட் 2 வைரஸ்.  எதிர்ப்பொருள் மூலக்கூறுகளை க்ளைக்கோ புரதம் என்றும் நோய் எதிர்ப்புப் புரதம் (இம்யூனோகுளோபுலின்) என்றும் வகைப்படுத்தலாம்.   உடலில் ஐந்து வகைகளான நோய் எதிர்ப்புப் புரதங்கள் வெளியிடப்படுகின்றன.  அதில் ஜி வகையும் எம் வகையும்தான் ரத்த சீரத்தில் கண்டுபிடிக்கும் வகையில் தன்மைகளுடன் உள்ளன.  ஜி வகையை தொற்று ஏற்பட்ட மூன்று நாட்களிலும், எம் வகையை தொற்று ஏற்பட்ட பத்து நாட்களிலும் கண்டுபிடிக்க முடியும்.

Serology Testing Service, सेरोलॉजिकल की सेवाएं ...

உடல் திரவப் பரிசோதனை

சார்ஸ் கோவிட் 2 வை விரைவாகக் கண்டறிய கேசட்டுகள் அடங்கிய கருவிகள் கிடைக்கின்றன. இந்தக் கேசட்டில் மறுசீரமைப்பு சார்ஸ் கோவிட் 2 புரதம் வண்ணமயத் துகள்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.  இந்தப் பகுதி சற்றுக் கடினமானது.  ஏனென்றால் வைரசின் சில பகுதிகள் சார்ஸ் கோவிட் 2 வைத் தவிர்த்த பிற வைரஸ்களைப் போன்ற பகுதிகளுடன் ஒத்து இருக்கலாம்.  கோவிட் 19 பரிசோதனைக்கு மொத்தமாக ரத்தமோ அல்லது உடல்திரவமோ தேர்வாக இருக்கிறது.  இந்த சாம்பிள் கேசட்டில் இடப்பட்டவுடனேயே அதில் எதாவது எம் அல்லது ஜி வகை நோய் எதிர்ப்புப் புரதம் இருந்தால் அது உடனே வைரசின் புரதத்துடன் சேர்ந்து கலவைகளை உருவாக்கி விடுகிறது.  இது அடுத்ததாக வண்ணமய பட்டையை உருவாக்குகிறது.  அதாவது எய்ட்ஸ் நோயையோ அல்லது கர்ப்பத்தையோ விரைவாகக் கண்டறியும் சோதனையில் செயல்படுவது போல் செயல்படுகிறது.  மிகவும் அண்மையில், ஐ.சி.எம்.ஆர். நாட்டில் 7 விரைவுப் பரிசோதனைக் கருவிகளுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது.

இந்த உடல்திரவப் பரிசோதனையை ஒரு பரிசோதனை நிலையத்திலேயே எளிதாகச் செய்து விட முடியும்.  ஆனால் ஆர்.டி.பி.சி.ஆர்.உக்கு உயிர்ப்பாதுகாப்பு 2ஆம் கட்டம் (biosafety level 2) வசதி உள்ள பரிசோதனை நிலையம் தேவை.  மேலும் விரைவுப் பரிசோதனைக் கருவிகள் எதிர்ப்பொருட்களை 15இலிருந்து 30 நிமிடத்துக்குள் கண்டறிந்து முடிவைத் தெரிவித்து விடும்.  இது பி.சி.ஆர். நடைமுறைக்குத் தேவையான காலத்தை விட மிகவும் குறைவு.  தொற்றுநோய்க் கல்வியிலும், அதற்கெதிரான தடுப்பு மருந்தை (வாக்சின்) உருவாக்குவதிலும் எதிர்ப்பொருளைக் கண்டறியும் பரிசோதனைகள் மிகவும் பயனுள்ளவை.  ஏனென்றால் வைரசுக்கெதிராக உடல் சுரக்கும் எதிர்ப்பொருட்கள் அதிக காலத்துக்கு ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும்.

எனினும், விரைவுப் பரிசோதனையில் துல்லியம் பற்றிய கேள்வி எழுகிறது.  ரத்தத்தில் கண்டறியப்பட எதிர்ப்பொருளுக்குக் குறைந்த பட்சம் ஒரு வாரம் தேவை.  எனவே வைரஸ் தொற்று ஏற்பட்ட தொடக்கத்தில் உடல்திரவப் பரிசோதனையைக் கொண்டு வைரஸ் தொற்று இல்லை என்று கூறி விட முடியாது. இதற்கு மாறாக நோய் தொற்றிய உடனேயே பிசிஆர் முறையில் கண்டறிந்து விட முடியும்.  எனினும், தொற்று எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வரும் வேளையில் குறைந்த காலத்தில் ஆர்.டி.பி.சி.ஆர்.ஐக் கொண்டு அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாது.  எனவே ஐ.சி.எம்.ஆர். அண்மையில் உத்தியாகக் கூறியுள்ளபடி இரண்டு பரிசோதனைகளையும் இணைத்துச் செய்வது திருப்திகரமான முடிவுகளைக் கொடுக்கும்.

ஒருவர் மூலம் 406 பேருக்கு கொரோனா ...

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்

ஆண்டிஜனைக் கண்டறியும் கருவிகளும் உருவாக்கப்படுகின்றன.  பிசிஆர் முறையைப் போலவே இந்த முறையும் வைரசைக் கண்டறிகிறது, ஆனால் அதைப் பெருக்கிப் பார்க்க வேண்டிய தேவையில்லை.  மாறால பரிசோதனை செய்யப்படும் மாதிரியில் இருக்கும் வைரஸ் புரதங்கள் முன்பு ஒரு காகிதப் பரிசோதனையில் கண்டறியப்பட்ட எதிர்ப்பொருளுடன் கலவையை உண்டாக்கும்போது கண்டறியப்படுகின்றன.  30 நிமிடங்களில் பார்க்கக்கூடியதாக இருக்கும் ஒரு அறிகுறி ஒரு நேர்மறை வினையைக் காட்டுகிறது. இந்த முறை மற்ற இரு முறைகளிலும் இருக்கும் பெரிய வரம்புகளைக் கடந்து தொற்று ஏற்பட்ட விரைவிலேயே, குறைந்த கால நேரத்தில் அதைக் கண்டறிந்து மேலும் நம்பகமான முடிவைத் தருகிறது.

Image

இதை எழுதியவர் நிரஞ்சனா ராஜலஷ்மி (கால்நடை நுண்ணுயிரியலாளர்).

தமிழில்: கி.ரமேஷ்.

இணைப்புகள்:

மூலக்கூற்று உயிரியலில் பாலிமரேசு தொடர் வினை (Polymerase chain reaction, PCR) தொழில்நுட்பத்தைத் பயன்படுத்தி, மரபு நூலிழையின் (DNA) குறிப்பிட்ட ஒரு சிறு பகுதியை பல்லாயிரக்கணக்கில் பெருக்க முடியும்.

டி.என்.ஏ (DNA) அல்லது தாயனை என்பது ஆக்சிசன் குறைந்த இரைபோ கருக்காடி (Deoxyribonucleic acid அல்லது Deoxyribose nucleic acid – DNA) எனப் பொருள் தரும். இது எந்த ஒரு உயிரினத்தினதும் (ஆர்.என்.ஏ வைரசுக்கள் தவிர்ந்த) தொழிற்பாட்டையும், விருத்தியையும் நிர்ணயிக்கும் மரபியல் சார் அறிவுறுத்தல்களைக் கொண்ட ஒரு கரு அமிலம் ஆகும்.

டி.என்.ஏ என்பதை இனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம். உயிரினங்களின் (சில தீநுண்மங்கள் உட்பட) உயிர் வளர்ச்சிக்கான மரபுக் கட்டளைகள் டி.என்.ஏ-யில் அடங்கியுள்ளது. உயிரினங்களின் பாரம்பரியப் பண்புகள் அவற்றின் சந்ததிகளுக்கும் (offspring) வருவதற்கு டி.என்.ஏ யே காரணமாகும். இனப்பெருக்கத்தின் பொழுது டி.என்.ஏ மூலக்கூறுகள் இரட்டித்து பெருகி சந்ததிகளுக்கு கடத்தப்படுகிறது.

புரதம்ஆர்.என்.ஏ போன்ற உயிரணுக்களின் ஏனைய கூறுகளை அமைப்பதற்குத் தேவையான தகவல்களை டி.என்.ஏ கொண்டிருப்பதனால் இதனை நீல அச்சுப்படி தொகுப்பு ஒன்றுக்கு ஒப்பிடலாம். டி.என்.ஏ யில் மரபியல் தகவல்களைக் கொண்ட பகுதிகள் மரபணு எனப்படும். ஏனைய பகுதிகள் கட்டமைப்பிற்கும், மரபியல் தகவல்களின் பயன்பாட்டை ஒழுங்கமைப்பதிலும் பங்கெடுக்கும்.

நன்றி : newsclick.in

 

 

 

 

Leave a Response