Poetry

டி.எஸ். எலியட்டின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் – தமிழாக்கம் தங்கேஸ்

Spread the love

 The Love Song of J. Alfred Prufrock  ( By T. S. Eliot)

டி.எஸ். எலியட் எழுதிய ஆல்பிரட் ப்ருப்ராக்ககின் காதல் பாடல்

The Love Song of J. Alfred Prufrock Full Text and Analysis - Owl Eyes

மொழிபெயர்ப்பாளர் தங்கேஸ் இன் முன்குறிப்பு

நான் மொழி பெயர்த்த  டி.எஸ். எலியட் கவிதைதான் இதுவரை மொழிபெயர்த்ததிலேயே மிகுந்த சிரமத்தை கொடுத்த மொழிபெயர்ப்பு அனுபவம். கவிதைக்குள் நுழையும் முன்பு கவிதையின் சூழலைப் புரிந்து கொள்வது வாசிப்புக்கு உதவியாக இருக்கும்

கவிதையின் சூழல் 

The Love Song of J. Alfred Prufrock  ( By T. S. Eliot)

நூற்றாண்டுகளாக எந்த மொழிபெயர்ப்பாளனுக்கும் ஆகச்சிறந்த சவாலாக நம் கண்முன் நிற்கும் 134 வரிகள் கொண்ட கவிதை இது. மொழிபெயர்ப்பாளனோடு முரண்டுபிடிக்கும் டி.எஸ் கவிதைகள் கால மாற்றத்தின் பொக்கிஷம்.  இந்த ஆல்பிரட் ப்ருப்ராக் .இன் காதல் பாடல் 1910 ஆம் ஆண்டு எலியட்டின் இருபத்தி இரண்டாவது வயதில் எழுதப்பட்டது. (மிக இளம் வயதிலேயே ஒரு ஞானியைப்போல் எழுதியவன் எலியட் )  ஐந்து வருடங்களாக இந்தக்கவிதையை வெளியிட நல்ல பதிப்பகம் அவருக்குக் கிடைக்கவில்லை. சென்ற நூற்றாண்டு கவிதைகளின் காலமான ரொமாண்டிக் கவிதைகள் ( உணர்ச்சிக் கவிதைகள் ) விக்டோரியன் காலக் கவிதைகளின் (அறிவு மரபு சார்ந்த கவிதைகள் ) ஆகியவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டு புதிய வார்த்தைகள் புதிய சொல்லாடல்கள் புதிய காட்சிகள் புதிய வடிவம் புதிய உவமைகள் படிமங்கள் என்று ஒவ்வொரு வரியிலும் வாசகனை திகிலடையச் செய்யும் வரிகள் டிஎஸ் எலியட்டினுடையது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கவிதைகளை முடித்து வைத்து, இருபதாம் நூற்றாண்டு நவீன கவிதைக் கதவுகளைத் திறந்து வைத்த கவிதைச் சூழல். ( அப்பொழுது நம் தமிழ்கவிஞர்கள் பாரதியைத்தவிர என்னமாதிரியான தமிழ்கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தார்கள் ? ) .

கவிதையின் காலச்சூழல்

முதல் உலகப்போருக்குப் பின்னர் மனித இனம் முற்றிலும் மனிதத்தை கைவிட்டுவிட்டது. எலியட் இந்தக்கவிதையில் ஆல்பிரட் ப்ருப்ராக் என்ற நடுத்தர வயது  மனிதனைப் படைத்து அவனை அப்போது கையறு நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த எண்ணற்ற மனிதர்களின் பிரதிநிதியாக்கி  தனக்கே உரிய பிரத்யேகமான மொழியில் பேசவைத்து இந்தக் கவிதை நெடுகிலும் உலாவ விட்டிருக்கிறார்.

ஆல்பிரட் ப்ருப்ராக் நடுவயது கடந்தவன் நடுமண்டையில் நல்ல வழுக்கை வேறு  விழுந்துவிட்டது. கை கால்கள் எல்லாம் மெலிந்து சூம்பிப் போய் ஒரு பலவீனமான பிராணி போல் தோற்றம்  தருபவன். எந்தக்காட்சியையும் விட்டேத்தியாக விரக்தியாக பார்க்கும் மனநிலை வாய்த்தவன் வேறு.

ஒரு சமயம்அவனுக்குள் பாலிச்சை தலைதூக்குகிறது.

அவன் விரும்பும் ஒரு பெண்ணிடம் (அதுவே உண்மையோ என்னவோ?) அவனது பலவீனத்தின் காரணமாக அவனால் வெளியிட முடியவில்லை.

எதிரிலிருப்பவரை துணைக்கழைத்துக்கொண்டு வா நீயும் நானும் அங்கே போகலாம் என்கிறான். அது எங்கே என்றால் அது ஒரு விருந்துக்காகவோ அல்லது அந்தப் பெண்ணை சந்திப்பதற்காகவோ இருக்கலாம்.

இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும்  You என்ற ஆங்கில வார்த்தை உண்மையிலேயே எதிரில் இருப்பவரை குறிப்பது அல்ல .உண்மையில் எதிரில் யாருமில்லை என்று சில இலக்கிய விமர்சகர்கள் சொல்கிறார்கள். பிறகு யாரை அவன் You என்ற வார்த்தையால் அழைக்கிறான் என்றால் அவனையே தான். அதாவது மனதுக்குள் பல மனிதனாகப் பிளவுபட்டுக்கிடக்கும் அவனையேதான்

 சில விமர்சகர்கள் வாசிக்கும் வாசகர்களான உங்களைத்தான் அவன் அந்த வார்த்தையால் அழைப்பது என்றும் சொல்கிறார்கள். உண்மையிலேயே தன் உடலைச்சுமந்து கொண்டு அந்தப் பெண்ணைக் காண அந்த இடத்திற்கு ஆல்பிரட்டும் அந்த நபரும் போகிறார்களா இல்லை ஆல்பிரட் மனதின் கற்பனையிலேயே அந்த இடத்திற்கு போய்க்கொண்டிருக்கிறானா என்று தோற்ற மயக்கம் கொள்ளும் அளவுக்கு இடம் கொடுத்து கவிஞர் இந்தக் கவிதையைப் படைத்திருக்கிறார்.

Gaurav (India)'s review of The Love Song of J. Alfred Prufrock

கடைசி வரையிலும் தன் காதலை ஆல்பிரட் ப்ருப்ராக்  எந்தப்பெண்ணிடமும் வெளியிடவேயில்லை .அது உண்மையிலேயே காதல் தானா என்பது வேறு விசயம்.

இந்தக்கவிதையை புரிந்து கொள்வதற்கு நாடகஆசிரியர் தாந்தேவின் இன்பேர்னோ முதல் ஷேக்ஸ்பியரின் ஹேம்லட் பைபிள் போன்ற புத்தகங்கள் வரையிலும் நாம்  முதலில் புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது, அதிலிருந்து நிறைய வரிகளை கவிதை முரண்பாட்டிற்காக கவிஞர் எடுததாளுகிறார்.

கவிஞர் இதில் பயன்படுத்தும் மொழி dramatic monologue எனப்படும் வகையாகும். அதாவது ஒரு வகையான நாடகப்பாங்கான தனித்து புலம்பும் சலிப்பைத் தரும் ஒரு மொழியாகும்.உண்மையிலேயே காதுகொடுத்துக் கேட்பவர்  இங்கு பேசுபவருக்கு முன்னால் இருக்க வேண்டிய தேவையில்லை

இந்தக்கவிதையின் நுழைவு வாயிலே புகழ்பெற்ற இத்தாலியக் காப்பியக்கவிஞன் தாந்தே எழுதிய Divine Comedy.என்ற நூலிலிருந்து  நரகம்    ( INFERNO ) என்ற   அத்தியாயத்திலிருந்து  எடுக்கப்பட்டுள்ள சிலவரிகள்தாம்.

 அந்தக்காப்பியக் கதையின்படி தாந்தே உயிரோடு நரகத்திற்குள் பாதாள உலகத்திற்குள் செல்கிறான். யாருமே அப்படிச் செல்ல முடியாது. அங்கே சென்றவர்கள் உயிரோடு திரும்பவும் முடியாது.

நரகத்தின் வாயிலில் நுழையும் போதே கீழ்கண்ட கல்வெட்டு வாசகங்கள் அவனை வரவேற்கின்றன.

The entrance to hell is marked by a grim message:

“Through me you pass into the grievous city,

through me you pass into eternal pain,

Through me you pass among the lost people[…]

Abandon all hope, you who enter here.”

நரகத்தின் நுழைவு வாயிலில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது

** என் வழியாக துன்பமென்னும் நகரத்திற்குள் நுழைகிறாய்

என் வழியாகவே முடிவற்ற துயரத்திற்குள் நுழைகிறாய்

என் வழியாகவே தொலைந்து போன மனிதர்களுடன்

போய் நீ சேரப்போகிறாய்

இவ் வாயிலில்  நுழையும் போதே உன் அனைத்து நம்பிக்கைகளையும்

உதறி விடு **

T. S. Eliot, Poet - Home | Facebook

நரகத்தில் புகழ்மிக்க ரோமானியக் கவிஞரான விர்ஜில்லை சந்திக்கிறான். அவரின் உதவியுடன் நரகத்தின் ஒன்பது பகுதிகளுக்குச்  செல்கிறான். வாழும் காலத்தில் ஒழுக்கம் தவறியவர்கள், மதத்துவேசம் செய்தவர்கள், பூமியில் வெறுப்பைப் பரப்பியவர்கள் என்று கொடிய பாவம் செய்தவர்கள் அனைவரும் அங்கே மீளாத்துயரில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். நரகம் அத்தியாயம் XXVII ல் பிரபு ஹைடோவை (COUNT GUIDO)  தாந்தே சந்திக்கிறான் அங்கே  அவன் தீ சுவாலைக்குள் சிறைவைக்கப்பட்டிருக்கிறான் .நெருப்பில் வெந்தபடி தண்டணையை அனுபவித்துக்கொண்டிருக்கும் பிரபு  தாந்தேவைப்பார்த்து அவனும் ஒ  இறந்து போன ஒரு மனிதன் தான் என்று சில  உண்மைகளை மறைக்காமல் அவனிடம் கூறுகிறான் அது பரம ரகசியம். அதன் பிறகு அவன் தாந்தேவை பார்த்து கூறிய வார்த்தைகள் தான்  இந்தக்கவிதையின் ஆரம்ப வரிகள். அதைக்கவிஞர் அப்படியே இத்தாலி மொழியில் கொடுத்துள்ளார்.

ஹைடோ பிரபு –

என்னுடையை  அதி இரகசியமான  பதில்கள்

இந்தப்பூமிக்கு  மறுபடியும் திரும்பிப்போகும் ஒரு   மனிதனிடம்   சொல்லப்படுமானால்

கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் இந்த தீ

அப்படியே அசைவற்று நின்று விடும்

ஆனால் அப்படி எதுவும் இந்த நரகத்தில்

நிகழாதென்பதால்

 நான் கேட்டதும்  உனக்கு சொல்வதும்

முற்றிலும்   உண்மையே

 மேலும் இந்த இரகசியத்தை உரைப்பதால் வரும்

 பழிபாவத்திற்கு

   நான் பயப்படவும் தேவையில்லை

இனி கவிதையின் தமிழாக்க வரிகள்

அடுத்த பகுதியாக இடம்பெறும்.

Leave a Response