Book Review

புத்தக அறிமுகம்: எழுத்தாளர் சி.மோகனின் மொழிப்பெயர்ப்பு நாவல் “ஓநாய் குலச்சின்னம்” -தமிழ்மதி

Spread the love

சிறந்த தலைமை, தலைமைக்கு கட்டுப்படுதல், குழுவாக வாழ்தல், மேன்மையான தாய்மை பண்பு,  மெலிந்தோரையும், நோயுற்றோரையும் பேணுதல், அளப்பரிய போர்க்குணம், தன் உணவை தானே சம்பாதித்து உண்பது,  வேட்டையின் போது இறவாது சுணங்கி கிடந்தால் தன் இனமென்று கூட பார்க்காது அப்பொழுதே கொல்லும் குணம், எதிரியிடம் ஒருபோதும் சரணடைய விரும்பாத வீரம், மகா பொறுமைசாலியான….

ஓநாய் இனத்தையா இத்துணை நாள் ‘தந்திரக்காரன்’ என்றும், எவ்வளவு சாப்பிட்டாலும் வயிறு நிறையாத பீமனை ‘ஓநாய் வயிறன்’ என்றும் எமக்கு அறிமுகப் படுத்தி, ஓநாய்களை இருட்டடிப்பு செய்திருந்தீர்கள்.
1960 களில் சீனாவில் மாவோவின் கலாச்சார புரட்சியின் போது, மங்கோலிய மேய்ச்சல் நிலமான ஓலான்புலாக்கிற்கு வருகை தரும் ஹென் இனத்தவரான, ஜென் மற்றும் யாங் இவர்கள் எப்படி ஓநாய் பற்றியும் மேய்ச்சல் நிலம் பற்றியும் அறிந்து கொண்டார்களோ அதே போல் நாமும் திரு.மோகன் அவர்களால் சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட இப்புத்தகத்தின் வழியே, மானுடவியல், சுற்றுச்சூழல், மேய்ச்சல் நிலம் பற்றியும், மங்கோலியர்கள் பற்றியும் அறியலாம்.
ஜென், புரட்சி புத்தகங்கள் படிப்பவன். அங்கு வாழும் மேய்ச்சல் நில மூப்பரான பில்ஜியை தந்தையாக பாவிப்பவன், பில்ஜி, அவரது மகள் காஸ்மா அரவணைப்பில் வாழ்ந்து, ஓநாய்கள் பற்றி அறிந்து கொள்கிறான்.
பில்ஜி ஒருநாள் அவனுக்கு ஓநாய்கள் எத்துணை “பொறுமைசாலிகள்” என்பதை விளக்குகிறார். அன்று ஓநாய்கள் மான் கூட்டத்தை வேட்டையாடுகின்றன.
மான்களுக்காக, ஜென் பரிதாபம் கொள்ளும்போது மேய்ச்சல் நிலம் பெரிய உயிர். மேய்ச்சல் நிலத்தைக் காக்கவே ஓநாய்கள் மான்களை வேட்டையாடுகின்றன என தன் குறிப்பை ஏற்றி சொல்கிறார்.
இது எல்லாமே இயற்கையாக நடப்பது. மேய்ச்சல் நிலத்தை பாதுகாக்க எனும் நோக்கில் ஓநாய்கள் வேட்டையாடவில்லை. அதனால் மனிதனுக்கும் நன்மை. மனிதன் வளர்க்கும் ஆடு, மாடு, குதிரைகளுக்கு புற்கள் எப்போதும் கிடைக்குமல்லவா.ஆசிரியர் தன் குறிப்பை ஏத்தி சொல்கிறார். ஓநாய் பற்றிய
மங்கோலியர்களின் நம்பிக்கை அது அவ்வளவுதான். எல்லாமே இயற்கையாக நிகழ்வதாகவே எனக்கு தோன்றுகிறது.
சூரியன் உதிப்பது இயற்கை.நாம் நம்முடைய அபிப்ராயத்தை சூரியன் மீது ஏத்தி அதைக் கடவுளாக்கி, நம் கலாச்சாரத்தில் சூரியனுக்கு பொங்கல் வைப்பதில்லையா அது போல.
தாய்மை
ஓநாய் குலச்சின்னம் | Buy Tamil & English Books ...
ஜென் ஓநாய்குட்டியை திருடி வந்து வளர்க்கிறான். தன் பிள்ளை போல. ஓநாய்களின் குணத்தை அறியவும், வேட்டை நாய்களோடு கலப்பு செய்து வீரியமிக்க கலப்பினங்களை உருவாக்க வேண்டும் என நினைப்பான்.
எப்படி அதற்கு உணவளிக்க வேண்டும் என்பதையெல்லாம் காஸ்மா விளக்குகிறாள்.  “ஓநாய் குட்டி ஓநாய் குட்டி” என கொஞ்சி கொஞ்சி உணவளிக்கிறான்.
நெகிழ்ச்சி!!
ஆனால் பில்ஜிக்கு மிகவும் கோபம். வீரமுள்ள ஓநாயை இப்படி கட்டிவைத்து, அதன் சுதந்திரத்தை பறித்து, இடும் பிச்சை உணவை உண்ண வைப்பதென்பது இழிவான செயல், அதனை அவமானப்படுத்துவது என விசனப்படுகிறார்.
ஆம்! உங்களால், சிங்கம், புலி, யானை போன்றவற்றையெல்லாம் கூட tame செய்து அவற்றை சர்க்கஸ் கூடாரங்களில் வைத்து அவமானப்படுத்த இயலும். எங்கேனும் நீங்கள் ஒரு ஓநாய் நெருப்பு வளையத்துக்குள் நுழையும் சாகசத்தை பார்த்திருக்கிறீர்களா?! மொத்தத்தில் மனிதன் பெரும் சுயநலவாதி. எல்லாவற்றையும் இவன் கறந்து கொண்டு, பசு பால் தரும் என்பவன் தானே. Pets என்பது, மிருகங்களின் சுதந்திரத்தை பறித்து, உங்கள் மகிழ்ச்சிக்காக அடைத்து வைப்பதே பெரும் கொடுமை.
அந்த இடத்தில் உங்களை நினைத்து பாருங்கள். 3 வேளையும் உணவு தருகிறேன். கழுத்தில் சங்கிலி போட்டு வாக்கிங் கூட்டி செல்கிறேன் என்று இருந்தால் எப்படி இருக்கும்?! சுதந்திரம் தான் ஒவ்வொரு உயிருக்கும் அவசியம்.
இங்கு நம் நாட்டில் பெண்களின் நிலைமை கிட்டத்தட்ட அப்படித்தானே!.
கதையில் ஓநாயின் தாய்மை பண்பு நம்மை சிலிர்க்க வைக்கிறது.  குட்டிகளை திருட விடாது, போக்கு காட்டுவதும், அவற்றை பத்திரமாக ஒழித்து வைப்பதும் என வியக்க வைக்கிறது. ஆம் ஓநாய் அன்னை, மனித குழந்தையையும் வளர்த்த வரலாறும் உண்டு தானே!
(மோக்லி  ❤
️  கதை வேறு நினைவுக்கு வருகிறது.)
பில்ஜி எச்சரிப்பார். குட்டியை இழந்த ஓநாய் பழிவாங்கும் என. அதுபோலவே நடக்கும்.
ஓநாய் குலச்சின்னம் Onay Kulasinnam
இரண்டு வேட்டைகள்.
 Goosebumps while reading.
வேட்டை ஒன்று, குதிரைகளை ஓநாய்கள் வேட்டையாடுவது. இதில் தாய் ஓநாய்களின் பங்கு அதிகம். மோகன் அவர்களின் மொழிபெயர்ப்பால் வேட்டை, காட்சியாக நம் கண்முன்னே விரியும். குலை நடுங்கச்செய்யும்.
பில்ஜி அவர்களின் மகன் பட்டு எவ்வளவோ முயற்சி செய்தும் குதிரைகளை காப்பாற்ற இயலாது. அதிகாரி பாவோவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். வேலைக்கான புள்ளிகள் குறைக்கப்படும்.
ஓநாய்களை வேட்டையாட அதிகாரி உத்தரவிடுவார். பில்ஜி மன்றாடுவார் வேண்டாமென. ஓநாய்களால் தான் மேய்ச்சல் நிலம் உயிர்ப்போடு இருக்கிறது. இல்லையென்றால் அழிந்துவிடும் என்பார். இப்பொழுது மனிதன் ஓநாய்களை வேட்டையாடுகிறான்.
இரண்டாவது வேட்டை!
கோபம் கொண்ட ஓநாய்கள் மனிதனது ஆடுகளை வேட்டையாடுகின்றன.
மனிதனால் சுற்றுசுவர் வளர்க்கப்பட்ட ஆட்டுப் பட்டிக்குள் நுழைந்து குதறுவது.
அபாரமான போர்தந்திரம்.
செங்கிஸ்கான் இவைகளிடமிருந்து தான் கற்றுக் கொண்டதாக வரலாறு. பதுங்கி தாக்குதல், சுற்றி வளைத்தல், எதிரியை கலங்கடித்தல் என ஏராளம்.
விவசாய நில மக்கள் Versus மேய்ச்சல் நில மக்கள்!
மேய்ச்சல் நில மக்களான மங்கோலியர்கள் இடம் பெயர்ந்து கொண்டே இருப்பதனால்,  நிலவளத்தை exploitation செய்யாது நிலத்தை எப்பொழுதும் உயிர்ப்புடனும் செழிப்புடனும் வைத்திருப்பவர்கள். ஒநாய்கள் இவர்கள் நண்பர்கள். டெஞ்ஞர் எனும் அவர்கள் வழிபடும் இயற்கை தெய்வம் கொடுத்த பரிசு இந்த ஓநாய்கள் எனும் நம்பிக்கை உடையவர்கள். அதனாலேயே இறந்த பின் இவர்கள் தங்கள் உடலையும் ஓநாய்க்கே கொடுத்து விடுகிறார்கள்.
ஆனால் விவசாய நில மக்கள் ஒரே இடத்தில் தங்கி, விவசாயம் எனும் பேரில், நிலத்தை மாசுபடுத்துகிறவர்கள். இவர்களுக்கு ஓநாய்கள் பெரும் எதிரி. ஜென் ஓநாய் வளர்ப்பதை எதிர்க்கிறார்கள்.
ஓநாய் மீதான அன்பு!
ஜென் ஓநாய்குட்டியை ஒரு உண்மையான ஓநாய் போல வளர்க்க நினைத்து பயிற்சி கொடுப்பான். வேட்டையாட கற்று கொடுப்பான். நீந்த சொல்லி தருவான். ஒரு நாள் கடித்து விடும்.திட்டுவான்.
How dare! U bite me!
அப்புறம் மகிழ்வான். ஆம் அதுதானே உன்குணம் என. நீ ஒரு சுத்தமான மங்கோலிய ஓநாய் அல்லவா என பெருமை படுவான்.
ஓநாய்கள் இல்லாத நிலத்தில் ...
ஜியாங் ரோங்
காஸ்மா
மங்கோலிய பெண்ணான காஸ்மாவின்(gasma) அறிமுகமே அற்புதமாக இருக்கும். அவள் வீரம். தன் பட்டிக்கு வந்த ஓநாயுடன் அவள் போராட்டம் ஒரு சாகசமிக்க அனுபவம் வாசிக்கும் போதே. ஓநாயின் வாலையும் பின்னங்கால்களையும் அவள் பிடித்தபடி நிற்பது ஒரு ஓவியம் போல் உள்ளது.அவள் குழந்தை பதினாறடி. காயர்(gayyar)  ஓநாயின் இடத்திற்கே சென்று, குகையில் நுழைந்து ஓநாய் குட்டியை எடுப்பதில் கில்லி. இவையெல்லாவற்றையும் பார்த்து பிரமித்து விடுவான் ஜென்.
ஒருமுறை ஜென் தான் வளர்க்கும் ஓநாய்க்குட்டியை பார்த்துக்க சொல்லி காயரிடம் ஒப்படைப்பான்.  மற்ற குழந்தைகளுக்கு காட்ட முற்படும்போது கடித்துவிடும்.
டாக்டர் கை விரித்து விடுவார் மருந்து இல்லையென. காஸ்மா சூளுரைப்பாள் என் குழந்தை பிழைக்கவில்லையெனில் உன் ஓநாய் குட்டியை நானே கொன்றுவிடுவேனென. ஜென் டவுனுக்கு சென்று மருந்து வாங்கி கொடுப்பான். குழந்தை காயர் பிழைப்பான். காஸ்மாவின் அன்பை பெறுவான் ஜென்.
யாங்
மிக மென்மையான யாங் அன்னப்பறவைகளின் மீது காட்டும் இரக்கம் சிறப்பானது. பில்ஜி, ஜென், குழுவினர் வேறு மேய்ச்சல் நிலத்திற்கு செல்வார்கள். அன்னபறவை ஏரியை கண்முன் கொண்டுவார் மோகன்.
ஓநாய்களுக்கும் மனிதனுக்குமான போராட்டத்தில், மனிதனால் வீழ்த்தப்பட்டு, மேய்ச்சல் நிலத்தை மனிதன் கைப்பற்றுகிறான். இயற்கையின் சமன் குறைவால் நிலத்தின் வளம் அழிந்து, மஞ்சள் புயலால் சூழப்படுகிறது ஓலான்புலக்.
ஜியாங் ரோங்
நூலின் ஆசிரியர் தன் பயண அனுபவத்தை வெகு சில ஆண்டுகள் கழித்தே நூலாக்குகிறார் அதுவும் புனைப்பெயரில்.  புத்தகம் சம்பந்தப்பட்ட எந்த விழாக்களிலும் கலந்து கொள்ள மறுக்கிறார். தான் எந்த குகையின் முன் ஓநாய் குட்டியை எடுத்தாரோ அங்கே மீண்டும் ஒருமுறை வந்து, இந்த புத்தகத்தை சமர்ப்பிக்கிறார்.
“Wolf Totem” என்ற பெயரில் படமாகவும் வந்துள்ளது.
இதை மொழிபெயர்த்த திரு.சி.மோகன் அவர்களுக்கு நன்றிகள்!!
-தமிழ்மதி

Leave a Response

Top Reviews

Video Widget

gallery