Web Series

இசை என்னும் அரசியல் (சூபி இசையின் தீர்க்க அரசியல்!) -13 : மு.வெ.ஆடலரசு, ஆய்வாளர்

157views
Spread the love

 

இசை மரபில் சூபி  இசைக்கு பெரிதும் ஒரு நம்பிக்கை உலகம் முழுக்க பரவிக் கிடந்ததை நம்மால் பார்க்க முடிகிறது. ஒரு இசை மரபு ஒருவருடைய ஆன்மாவை தொட்டு உணருகிறது என்றால் அது சூபி இசை என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இசை மட்டுமல்லாது அதோடு சேர்ந்து நடனத்தையும் ஆடும் கலைஞர்களாக சூபி சமூகத்தை சார்ந்தவர்கள் உலகம் முழுக்க பரவிக்கிடந்தது பல ஆய்வுகள் நமக்கு தருகின்றன.

சூபி இசை மனிதர்களின் நேரடியான உளவியல் சார்ந்து பயணிக்கக்கூடிய இசைவடிவம்.  குறிப்பாக உலகம் முழுக்க பேசப்பட்ட சூபி இசை மரபை  சமூகம் புறம் தள்ளி இருக்கிறது என்பது வருத்தத்திற்குரியது அதற்கு காரணமாக பல்வேறு ஆதாரமில்லாத வாதங்களை முன்வைக்கும். இசையின் மீது ஒரு மதத்தின் சாயலை அவர்கள் கட்டவிழ்த்துவிட்டது இதற்கு காரணம்.

இசைக்கு மொழி, மதம், சமூகம் இல்லை என்றெல்லாம் சொல்லப்படுகிறார்கள்  இன்று பல்வேறு இசை மரபுகளை மறந்துவிட்டு கடந்து செல்கிற பயணத்தை தொடங்கி இருக்கிறோம். அதற்கு காரணம் சமூகத்தினுடைய கற்பிதம் தான்.  ஒருவரின் ஆழ்மனதில் இதுபோன்ற புரிந்துணர்வை தருகிறது. சூபி இசை என்றாலே இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவர்களுக்குகாண  இசை என்று ஒரு கட்டமைப்பை இவர்கள் வடிவமைத்து விட்டார்கள்.

மேலை நாடுகளிலும், இந்தியா போன்ற துணை கண்டங்களாக இருக்கக்கூடிய நாடுகளிலும் செவ்வியல் இசையை புதிதாக போற்றி பேசப்படுகிற மக்கள் ஏன் இது போன்ற பாரம்பரியமிக்க இசைகளை பெரிதாக பேசப்படுவதில்லை. அதற்கான ஆய்வுகளையும் அவர்கள் தொடர்வது இல்லை என்பதற்காக உள்நோக்கம் ஒன்றுதான் அவர்கள் இசையை மதமாக பார்க்கிறார்கள்.

Kisah Bijak Para Sufi: Isa dan Para Peragu

இசையோடு இறைவனிடம் பேசுகிறார்கள், இறைவனை நேரடியாக அவர்கள் தொடர்பு கொள்கிறார்கள் மனதோடு, இதயத்தோடும் அவர்கள் ஒன்றி விடுகிறார்கள் என்று ஒரு நீண்ட நெடிய இசை மரபை இவர்கள் புறம்தள்ளி வைத்ததை இன்றைக்கு நம்மால் பார்க்க முடிகிறது. கர்நாடக சங்கீதம், கீர்த்தனைகள் இதுபோன்ற இசை மரபுகள் இந்துமதம்  தொடர்ச்சியில் உள்ளது அதன் தோற்றத்தை நம்மால் இன்று வரை குறிப்பாக செல்வதற்கான வாய்ப்புகள் அரிதாக இருக்கிறது.

ஆனாலும் மக்களிடத்தில் ஒரு மூலக்கூறாக, போகப்பொருளாக பார்க்கப்படுகிறது கர்நாடக இசை, ஏன் கர்நாடக இசையோடு நாம் சூழ்நிலையை ஒப்பிட்டு பேசுகிறோம் என்றால்  இரண்டிற்குமான வேறுபாடுகள் மிகக் குறைவு இரண்டுக்குமான பாடல் முறைகள், ராகங்கள், பெயர்கள் அனைத்தும் ஒருசேர இருப்பதாக நாம் பார்க்கிறோம். ஒருவேளை கர்நாடக இசை மரபு சூபியிசையினுடைய  தொற்றாக கூட இருக்கலாம் என்று அறிஞர்கள் ஒரு வாதத்தை வைக்கின்றனர். வேறு சிலர் இந்த இசை மரபு தனித்துவமானது இதற்கு எந்த கலப்பும் தேவைப்படுவதில்லை என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர்.

சூபி  இசையை இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பரவிக்கிடக்கிறது  ஒரு ஆய்வாளர்  எம். எஸ். எம் அனீஸ் என்பவர் சூபி இசை பற்றிய ஆய்வை மேற்கொள்கிறார் அதற்கான நிறைய சான்றுகளை அவர் முன்வைக்கிறார். சூபி சமூகத்திலிருந்து வந்து இன்று பல்வேறு தத்துவங்களை கொடுத்த ரூமி போன்ற தேவதூதர்களை அறிமுகம் செய்து வைக்கிறார்.

இன்று மார்கழி கச்சேரிகள் நடப்பதுபோல சூபி இசைக்கச்சேரிகள் அரங்கேறி இருக்கின்றன அதற்கான சான்றுகளை நிறைய இந்திய வரலாற்றில் நாம் காணுகின்றோம். இருந்தாலும் அந்த இசை குறித்தான பார்வை என்பது ஒற்றை சாளர பார்வையாகவே சமூகத்தில் பரவிக் கிடக்கின்றது.சூபியிசை  பக்தி, ஆன்மீக மடைமாற்றமாக செய்யப்பட்டிருக்கிறது.

Religion Muslim Sufism, Sufi Whirling Dervish Dance, Large 1880s ...

சூபிகளின் ஆன்மீக பயிற்சி உறுதியான முக்கிய இடத்தைப் பெறுகின்றன. சூபிசம் என்பது ஒரு முன்னேற்தத்துவம்  உடையது . அவரின் நேரடி விளக்கம் உணர்வுகள் ஆன்மீகத்தின், பைத்திய நிலையை அடைவதும். அதற்கான பயிற்சியில் ஈடுபடுவது ஆகும்.  பல்வேறு  சாட்சியங்கள் சூபியின் இசை கூறுகளும் கண்களில் படுவதில்லை காரணம் உணர்வினாலும், ஆன்மீக உணர்வை ஏற்படுத்துவது ஆகும்.

இறைவனை அடைவதற்கான முயற்சியில் இசை அடிப்படையாகும்.  அடிப்படையான ஆன்மிக  பார்வைகளையும்   சார்ந்த குழுவுடன் பகிர்ந்துகொள்கிறார்கள் .   நபியை புகழ்ந்து பாவிப்பது கி.பி  600 ஆண்டுகள்    தொடக்க காலம் அறிவிக்கப்பட்டன குர்ஆன் வசனங்கள்  வைத்திய மரபினர்கள் என்று குறிக்கின்றது .  கிறிஸ்தவத்திற்கு எதிராக இந்த மரபு தனது கருத்துக்களை முன் வைக்கின்றது. மத்திய ஆசியாவிலும், தென் ஆசியாவில், துருக்கி, ஈரான், சிரியா, வட ஆப்பிரிக்கா, அமெரிக்கா, இந்தியா உட்பட பல கண்டங்களில் பல பாகங்களுக்கும் பரவி காணப்படுகின்றன.

உலகியல் எண்ணங்களை கடந்து ஆன்மாவின் உணர்வை ஊட்டி பரஸ்பர  வேலை செய்கிறது இசை . ஆழமாக ஆன்மீக தொடர்புகளை ஏற்படுத்தும். ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை இரண்டு பக்கத்திற்கு ஒரு வகை தொடர்பு  இருப்பதாக அவர் உறுதியாக நம்புகிறார்கள். இறைவனின் அருளும், ஒளியும் பரவும் ஆன்மீக நிலைக்கு வழியமைக்கும் இசையை ஆன்மா (சோல்  ஆப் மியூசிக்) என்று அழைக்கின்றனர்.

இசையை ஆன்மாவின் உணர்வு என்று கூறுகிறார்கள். ஒரு விசையானது உடலிலும், உள்ளத்திலும் அதிர்வுகளை தோற்றுவிக்க இதன் மூலம் ஒருவர் ஆன்மீக உச்சத்தை அடைகிறார்  என்று குறிப்பிடுகின்றனர். இறைவனின் படைப்பில் ஓசையும், ஆன்மீகமும் அபிவிருத்தியின்  இசை என்பதே அவரது பிரதான ஆய்வுப் பொருளாக இருந்துள்ளன.

இனாயத்துக்கான் அவர்கள்   ” மேற்குலகின் சூபித்துவ பார்வை” என்ற  அமைப்பை உருவாக்கினார். அவருடைய பாட்டனார்கள்   இசை குடும்பத்தைச் சார்ந்தவர், அவரது பாட்டனார் புகழ்பெற்ற வீணை இசைக் கலைஞர் சுற்றுச்சூழல்,  இஸ்லாமிய கருத்துக்களை சிந்திப்பதும், பொதுமை வாதத்தையும், வரலாறு அனுபவங்களையும்   பற்றிய கருத்துக்களையும் வளர்ப்பதில் ஈடுபட்டார். ஆன்மிகப் பண்புகளை ஏற்படுத்துவதில் இசையை பயன்படுத்தி புதிய கலந்துரையாடல்கள், இசை  இயக்கம், வாழ்வின் முக்கிய அம்சத்தில் வழி வகுத்துத்தந்தனர்.

Image of Whirling Dervishes Whirling Dervish Museum Istanbul ...

ஒவ்வொரு வார்த்தையிலும்,  சிந்தனையிலும் இனிய ராகம் உள்ளது. எல்லா உணர்ச்சிகளிலும் இருப்பதுதான் இசை.  கேட்பதற்கு எளியமுறையில் இசை என்பது இருக்க வேண்டும் இதைத்தான் இலக்கு என்று  நினைத்துக்கொண்டார்.  இதயம் சீராக மாறும்வரை வீணை இசையை கேட்கவேண்டும் என்கிறார்  இனாயத்கான் கூறுகிறார்.

ஷாமா இசை ஊடாகத்தான் நாம் சூபி இசையை அதன் வகைகளை, இசையும், நடனமும் கலந்த பக்தி தியான பாதையில் அறிகின்றோம். இனிய இசை நடனத்தின் வழியாக நிகழும் தியான முறை என்றும் பரிபூரணத்தை அடையும் வழிமுறை என்றும் இது வர்ணிக்கப்படுகிறது.  ஷாமாவின் குறிக்கும் வார்த்தை இறை நிலையை அடைவதாகும்  என்றும்  மெய்மறந்த பரவச நிலை குறிக்கின்றது. ஜலாலுதீன் ரூமி தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் 2015 இசை அடிப்படையில் ஆன்மீக தூண்டலுக்கு வழி ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இருந்த போதும் ஏனைய இசை பரிணாமங்களை ஷாமா  இசை வெளிப்படுத்தி வருகின்றது.

ஒருவருக்கு அது தூய ஆன்மிக உணர்வையும் மற்றவர்களுக்கு புதிய  இசை இன்பத்தையும் அது வழங்குதல் என சொல்லப்படுகிறது. சூபி இசை என்று பொதுவாக பேசப்படும் இசை மரபு ஷாமா இசையில் இருந்து  ஆரம்பமாகிறது. ஆன்மீக பயிற்சிக்கும், ஆன்மீக உணர்வு தூண்டளுக்கும்  பதினோராம் நூற்றாண்டில் இருந்து சூபி பிரிவினர் மத்தியில் இன்றும் கொண்டாடப்படுகிறது.

சூபி இசை ஆன்மீகத்தோடு மட்டுமே தொடர்புடையது என்று  டென்ஷசான் போன்றவர்கள்  வாதிடுகின்றனர். நீக்ரோ வித்தாகி  போன்றவர்கள் இதை மறுத்து வாதிடுகிறார்.  ஒரு செய்தியை முன் வைத்து  அங்கு பல்வேறு இசை பண்புகளும், அதன்  பணிகளும் ஒன்று கலக்கின்றன.  ஆன்மீக ஒன்றுகூடலில் இசைக்கப்படும் சூபி இசைக்கும் , பொதுமக்கள் இசை அரங்குகளில் இசைக்கப்படும் இசைக்கும் வேறுபாடுகள் இல்லை என்பது அவரது வாதம்.

Spirituality & Brunch — Middle Circle

சூபி இசை நோக்கில் அதனுடைய அம்சங்களை இனாயாத்திகான்   குறிப்பிடுவதே நாம் பார்க்க முடியும்.

தாப் – இசை உடல் இயக்கங்களை தூண்டுகிறது

குல் – இசை உணர்சிகளை  தூண்டுகின்றது

நீதா – இசை உணர்வை ஏற்படுத்துகிறது

சவுத்- இசை அருவமானது.

பெரும்பாலும் அது அவ்வாறு தான் நிகழ்ந்துள்ளது மத்திய கிழக்கு நாடுகளில், மத்திய ஆசிய இந்திய உபகண்டம் மக்களை மட்டுமன்றி இது சர்வதேச அளவில் உள்ள  இசை ஆர்வலர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய சினிமா இசை என்றும் இதன் செல்வாக்கு ஆழமானது. டெல்லிக்கும், இஸ்தான்புல், தென்அமெரிக்கா விற்கும் இன்னும் பல நாடுகளுக்கும், நகரங்களுக்கும் இசையை நேரடியாக பார்த்து ரசிக்க மக்கள் பல்வேறு பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

முகமது அலி புத்தகம் ஒன்று தியானத்தின்போது உச்சாடனங்கள் நடைபெறுவது பற்றியும், அங்கு நிகழும் போதனைகளின் முக்கியத்துவம் பற்றியும் கூறுகின்றது. இசையுடன் கலந்த நடனம் சில பிரிவுகளில் பின்பற்றப்படுகின்றன.  இசை மரபும் அழகான பெரிய பங்களிப்பாக இன்று போற்றப்படுகிறது. தொடக்ககாலத்தில் சிந்தனைகளும், வழிமுறைகளும் வாய்மொழி மரபாகவே பெரிதும் காணப்பட்டது.

இதுவும் ஒரு வகையில் நாட்டுப்புற பாடல் வகையாக தோன்றுகின்றது.

சுமார் 800 ஆண்டுகள் பின்னரே அதன் போதனைகளும், கோட்பாடும் எழுத்துருவம் பெற்றது. அடுத்த நான்கு நூற்றாண்டுகளில் சூபிகளுக்கான  கையேடுகள், கதைகள், வாழ்க்கை வரலாறு செய்திகள், சிந்தனைகள், சூபித்துவ பாடல்கள் என்பன எழுத்து வடிவம்பெறுகின்றது. குறிப்பாக இவைகள்  வாழ்க்கை வரலாறு கதைகளாக இருக்கின்றன இவற்றில் அதிகமானவை ஞானத்தை விளக்கும் போதனைகளால் “பறவைகளின் மாநாடு” சவூதியின் சரோஜ் தோட்டம்,  என பல சூபி இலக்கியங்கள் தோன்றின விஞ்ஞான அறிவை பரப்புவதற்காக சூபிகள், கவிதைகளையும், இசைப் பாடல்களையும் பயன்படுத்தினார்கள் .

சூபி இசை (SUFI MUSIC) என்றால் என்ன?

ரூமி  போன்ற மகான்களின் இலக்கிய படைப்புகள் உலக அளவில் புகழ் பெற்றவை. 13ம் 14ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இஸ்லாமிய நாடுகளில் உலகம் முழுக்க சூபித்துவ சிந்தனை கலாச்சாரமும், ஆன்மீக வழிபாட்டு முறைகளும் ,வேகமாக பரவின. அவை ஒன்று கூடுவதற்கும் தியானம் வழிபாடுகளில்  செயல்படுவதற்கும் இது தேவைப்பட்டது என்று கூறுகின்றனர்.  பெரும்பாலும் தர்காக்கள், இறைநேசர்களின் கட்டிடங்கள், பள்ளிவாசல்கள் என்று பல்வேறு இடங்களில் சூபி இசையை  பயன்படுத்தி வந்தனர்.

வட ஆப்பிரிக்காவில் இன்றும் சூபி இசை குறித்த பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. சவுத் தியிலிருந்து  அல்போனியா போன்ற நாடுகளிலும் இன்றும் சூபி இசை பற்றி பேசப்படுகிறது. இசை என்பது மூன்று  வகைகளைக் கொண்டு  வகைபடுத்துகின்றனர். இயக்கத்தின் வகையான ஒழுங்கமைப்பு, உருவாகும் மரபு இசை, மரபின் தொடர்ச்சி என  பல கூறுகள்  இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். புதியதாக மக்களின் உருவாக்குவதற்கும், சந்தர்ப்பங்கள் உண்டு என்றும் கூறப்படுகிறது.

ரூமியின் செல்வாக்கு ஈரானிலும், பாகிஸ்தானிலும், துருக்கியிலும், கிரேக்கத்திலும், தத்துவங்களிலும் இந்திய உபகண்டத்தில் இலங்கையில் என பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளது. இந்த சூழ்நிலையில்   காணப்படும் ரூமியின் செல்வாக்கும் இங்கு முக்கிய பங்கு வகிப்பதை நாம் குறிப்பிட முடியும்.

இப்படி ஒரு இசையின் மீது தொடர்ந்து வாதமும் , பிரதிவாதமும் நிகழ்த்துவது என்பது இசை மீதான அரசியல் பார்வையை நமக்கு விளக்குகின்றது.

தொடர் 1ஐ வாசிக்க

https://bookday.co.in/the-politics-of-music-1/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.co.in/the-politics-of-music-2/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.co.in/the-politics-of-music-3/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.co.in/the-politics-of-music-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.co.in/the-politics-of-music-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.co.in/the-politics-of-music-6/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.co.in/the-politics-of-music-7/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.co.in/the-politics-of-music-8/

தொடர் 9ஐ வாசிக்க

https://bookday.co.in/the-politics-of-music-9/

தொடர் 10ஐ வாசிக்க

https://bookday.co.in/the-politics-of-music-10/

தொடர் 11ஐ வாசிக்க

https://bookday.co.in/the-politics-of-music-11/

தொடர் 12ஐ வாசிக்க

https://bookday.co.in/the-politics-of-music-12/

Leave a Response