நூல் அறிமுகம்

தரணி ஆளும் கணினி இசை | இசையமைப்பாளர் தாஜ்நூர் | விலை ரூ.180

இசை குறித்த 21ம் நூற்றாண்டு புத்தகம் இப்படித்தான் இருக்கும். எத்தனை சுவாரசியம்… என்ன அழகான தகவல்களஞ்சியம் இசை பற்றி ஏதும் அறியாத கேட்டு ரசிக்க மட்டுமே தெரிந்த நமக்கு கிடைத்த சூப்பர் புதையல் தாஜ்நூர் சாரின் இந்த தொகுப்பு. அசாத்தியமான நுட்பங்களை தன் எழுத்தில் அவரால் வடிக்க முடிகிறது.

திரைப்படங்கள் வழியே அவர் நம் புதிய இசையை கணினி மயமாக்கப்பட்ட இன்றைய பாடல் பதிவை விவரிக்கும்போது ‘மிடி’ கீ போர்டு, ரோ லேண்ட் கணினி வரிசை, சீக்குவென்ஸர் என புதிய சொல்லாடல்கள் விரிவடைகின்றன. நமக்கு தெரிந்த பல்லவி, சரணம் ராகதாளம் எல்லாம் டெம்போ, ஸ்ட்ரக்ஷர், சேம்ப்ளர் என புதிய உலகாக விரிவடைகிறது.

திரைப்படங்களின் பாடல்கள் தனி பின்னணி இசை குறித்த பதிவுகள் அதைவிட சிறப்பான ஆய்வு கட்டுரைகளாக மிளிர்கின்றன. ‘விரல்களின் வழியே வெளிப்படும் கற்பனை’ எனும் தலைப்பிட்ட ஆறாவது கட்டுரை குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று. வெறும் தவில் வாத்தியம் வழியாக முழு இசை உலகையும் ஏழு சுவரங்கள் என விவரிக்கும் எளிய பாடம் சிறப்பானது.

பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார் பற்றிய ‘அதிசய பாடலாசிரியன் ஒருவன்’ கட்டுரை என்னை கண் கலங்க வைத்தது. நூலில் இறுதியில் எப்படி எல்லாம் இசையை ரசிக்கலாம் என எழுதி இருப்பதும் புதுமை. தரணி ஆளப் போகும் புத்தகம்

Leave a Response