Poetry

தங்கேஸ் கவிதைகள்

Spread the love

சாத்தான் (@saatthan) | Twitter

டாக்டர் பாஸ்டஸ்

வேப்ப மரத்தடியில் நிற்கும் சாத்தான்

இருகரங்களையும் விரித்து அழைக்கிறான்

அவன் கடவுள் அளவு மோசமில்லை

சாத்தான் சாதி பார்ப்பதில்லை

மதம் பார்ப்பதில்லை

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

எது நடக்கின்றதோ அதுவும் நன்றாகவே

போதும் நிறுத்துங்கள்

காதில் இரத்தம் கசிகிறது

வறியார்க்கு ஒன்று ஈவதே

பத்தாக பிடுங்கி கொள்வதற்குத்தானோ?

கீழடி: ஆறாம் கட்ட அகழாய்வில் ...

தனிமைச்சிறையின் கூரிய கம்பிகள்

குத்திக்கிழிக்கின்றன நம் இருத்தலை

மனிதத்தை தேடி துக்கித்தலையும் இதயங்கள்

மௌனித்து விழுகின்றன கேட்பாரற்ற வீதிகளில்

தொற்றுக்கிருமிகளை விடவும் துயரம் தரும்

தனிமைப்படுத்தலில் தவிக்கும்

விம்மும் மனது கேட்கிறது

சாதியின் பெயரால் மதத்தின் பெயரால்

அவர்களைத் தனிமைப்படுத்திய

லெமூரியா கண்டத்து மனிதா

உன் மனசாட்சியை கிள்ளிப்பார்த்துக் கொள்

கீழடியில் முதுமக்கள் தாழிக்குள்

கைகளைக் கோர்த்தபடி

தனிமைப்படுத்தப்பட்ட எலும்புக்கூடுகள்

உன் மூதாதையர்களின்

மூதாதையர்களின்

ஆமா எலும்புக்கூடுகளுக்கு

சாதி இல்லை தானே ?

How to remove blood stains from clothes and furniture

நாவுக்கரசரே என்னதான்  பதிகம் பாடினாலும்

கொரானாவிலிருந்து  நீர் தப்ப முடியாது

போலிருக்கிறதே

நான் எந்த கொரானாவைச் சொல்கிறேன் என்று

நீர் புரிந்து கொள்வீர்தானே புத்திசாலி

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசுதென்றலும் வீங்கிள வேனிலும்

மாசுவண்டறை பொய்கையும் போன்றதே

அடடா ஒரு கருப்பாடு போல்

குறுக்கவும் மறுக்கவும் துள்ளி விளையாடுகிறதே

கயமைகளைச் சுமக்கும் பொழுது

நீண்ட கைப்பிடி கொண்ட குவளை நிறைய

தழுதளும்பியிருக்கும்

அடர் சிவப்புநிற திரவத்தை

அருந்தி முடித்தபின்

பழரசம் பிரமாதம் என்கிறான்

கார்ப்பரேட் முதலாளி

திரவம் சொல்கிறது

நான் அப்பாவி மனிதர்களின்

குருதி குருதி

 

4

வாசலில் நிற்கும் பன்னீர் மரத்தை

மொய்த்துச் செல்லும்

நூறுவிழிகளில்

ஒன்றும் அகல விரியவில்லை

மேன்மையான உடையணிந்து

கடந்து செல்லும் கனவான்

ஒரு பார்வையிலேயே கணக்கிட்டு விடுகிறான்

அடடா அத்தனையையும்

அழகாக சந்தைப்படுத்தினால்

ஒரே நாளில் பல்லாயிரங்கள்

அதிசய பறவைகள் – chinnuadhithya

அலகுகள்

இரவு விழுதுகளை பற்றிக்கொண்டு

விண்ணேகும் இரவுப்பயணம்

உதட்டில் இரத்தச் சிவப்பையும்

பற்களில் பச்சை மாமிச வாடையுமாக

யட்சியின்பேருருவை நேரில் கண்டதும்

தானாகப் பிடியை விடுகின்றன

பட்சியின் அலகுகள்

தூண்டிலைக் கவ்விய அலகுகளுக்கு

இனி தண்ணீர் சொந்தமில்லை

சுடும் மணலில் துள்ளும்

அப்பழுக்கற்ற உடலைப் பார்க்கப் பார்க்க

எச்சிலூறி சுவைக்கின்றன  கொக்குகளின் அலகுகள்

கொத்திக் கொத்தி எடுத்து வந்த சுள்ளிகளின் மேல்

வைக்கோல் பரப்பி வனைந்த கூட்டை

விளையாட்டாகப் பிய்த்து எறிந்து விட்டு

சலனமற்று அமர்ந்திருக்கும் குரங்கைப் பார்க்கும் போது

குத்திய முட்களின் வலியில் தெறிக்கின்றன

குருவியின்  அலகுகள்

குத்திக்கொண்ட போதும் வலிக்கவில்லை

படிகளேறியபோதும் வலிக்கவில்லை

ஆனால் அப்பா போன அன்று வலித்தது

குத்திய  இடங்களெல்லாம் அலகுகள்

நடைவெளிப் பயணம் - Kungumam Tamil Weekly Magazine

காலுக்குச் செருப்பற்றவர்கள்

வெய்யிலோடு பூண்டிருப்பது

வெறுக்கத்தக்க விரோதமல்ல

கொஞ்சம் கசப்பு கலந்த கட்டங் காப்பியின் துவர்ப்பு

ஒரு குடையின் கீழ்

அறுந்த செருப்புகளைத்

தைத்துக் கொண்டிருப்பவனுக்கு

ஒரு குடையின் கீழ் அரசாளும் கனவு

அவ்வப்போதுஇடைஞ்சல் தந்தாலும்

வாழ்க்கையோடு எந்தப் பிணக்குமில்லை

தெருமுக்கில் பெட்டிக்கடை வைத்திருக்கும் மணவாளனுக்கு

தினமும் பத்துப் பாடை பார்த்த பின்னும்

ஆழ்ந்ததூக்கத்தின் மீது அத்தனை விரக்தியுமில்லை

வார்த்தை கவசம் பூண்டு

சொற்போர் புரிந்து கொண்டிருக்கும்

ஒரு அலுவலக ஊழியனான எனக்கு

ஏனோ பார்ப்பவர் மீதெல்லாம்

இனம் புரியாத கோபம்

என் மகள் மீதும் கூட

ஒரு சின்னஞ் சிறிய சாக்லெட்டிற்கே

பெரும் அழுகையை நிறுத்தி

அவள் சமாதானமாகி விடும் போது கூட அல்ல

ஆனால் எதன் பொருட்டு அவள் அவ்வளவு சீக்கிரம்

சமாதானமானாள்

என்பதன் பொருட்டே

தங்கேஸ்

Leave a Response

Top Reviews

Video Widget

gallery