archiveWilliam Adelman

May Day
நூல் அறிமுகம்வரலாறு

மே தினத் தியாகிகளின் மகத்தான வரலாறு | வில்லியம் அடல்மன் | தமிழில்: ச. சுப்பாராவ்

1886 மே 4, செவ்வாய்க்கிழமை, இரவு சுமார் எட்டரை மணியளவில் சிகாகோவின் டெஸ்பிளெய்னஸ் தெருக்கு அருகேயுள்ள ஹேமார்க்கெட் சதுக்கத்தில் ஒரு பழைய வண்டியைச் சுற்றி சுமார் 2500 பேர் கூடியிருந்தார்கள். அதற்கு முந்தைய தினம், மெக்-கார்மிக் ரீப்பர் தொழிற்சாலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதைக் கண்டித்து, தொழிலாளர் பத்திரிகையின் ஆசிரியரான ஆகஸ்ட் ஸ்பைஸ், அந்த வண்டி மீது நின்று உரையாற்றினார். அடுத்து, தொழிலாளர் தலைவரான...