archivethamizh books

Book Reviewஇன்றைய புத்தகம்

வேரோடு பிடிங்கி வெட்டி வீசப்பட்ட எம் ஜூனாக்களின் கனவுகள் நீசத்தனமாக களவாடப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட ரத்தம் தோய்ந்த நிஜங்களை சொல்லும் தொல்குடித் தழும்புகள்…!

ஆயோம்,
தன் 10 வயது மகள் ஆமுவின்
உடலெங்கும் கத்தியால் கீறியதெதற்கு..?
வாசித்துப் பாருங்கள்..
உங்கள் மூச்சுகாற்றெங்கிலும் பச்சை ரத்த வாடையடிக்கும்.

வெள்ளயர்களின்
மார்பு பிளந்து கப்பலில் இருந்து ஆமூவை அழைத்து வந்ததோடு கருப்பர்களை விடுவிக்க
ஆயோமை அழைத்துபோன
மொமுதுவின் நயவஞ்சகம்தானென்ன..?

வேரோடு பிடிங்கி வெட்டி வீசப்பட்ட
எம் ஜூனாக்களின் கனவுகள் நீசத்தனமாக
களவாடப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட
ரத்தம் தோய்ந்த நிஜங்களை..
பிரான்ஸ் தேசத்தின் வீதிகள், சந்துகளனைத்திலும் பார்க்கலாம் என்றென்றும்.

Asobo Studio komt met nieuwe mysterieuze piratengame'

மனைவியை.. பிள்ளைகளை..
வாழ்க்கையின் அழகையெல்லாம் இம்மி இம்மியாக ருசித்து வாழ்ந்த
என் சாய்பா ஒரே ராத்திரியில்
அழைத்துச் செல்லப்பட்டு
காவலர்களால் தின்று செரிக்கப்பட்ட
கதையும் காரணமும்
அவன் கொண்ட ஒரே ஒரு நம்பிக்கைதான்
என்பது எவருக்குத் தெரியும்..

வல்லூறு மனம் படைத்த முஸ்தபா போன்ற ஆண்களால்தான்
எத்தனை எத்தனை நும்பேக்களும்.. அய்த்தாக்களும் ஏமாற்றப்பட்டு
சித்திரவதை வாழ்வினை மேற்கொண்டு வருகிறார்கள் அந்த மூன்று நாட்களுக்காய்.

குறுமணற் சந்தில் இருக்கக் கூடிய
அத்தனை குடும்பங்களின்
சந்தோசம்.. அவர்களின் கொஞ்சல்..
ஒருவருக்கொருவர் கட்டித்தழுவிய கொண்டாட்ட களியாட்டப் பொழுதுகள்.
ராத்திரிச் சிரிப்பொலிகள்
எப்படி ஒரே ராத்திரிக்குள்
அழிந்தொழிந்தது..
குறுகிய சந்தின் வீடுகளனைத்தும்
சொந்தம் பேசி குதுகளித்த யோரோ என்னவானான்.. சன்னலோரத்து
கின்யே எப்படி காணாமல் போனாள்..
உலகின் சந்தோஷமிக்க குறுமணற்சந்து
துயர்மிக்க இடமானதின் வலி என்ன..?

இப்படியே எழுதிக்கொண்டும்..
அழுது கொண்டும்.. ஒருவர் கரத்தை ஒருவர் அழுத்தி பற்றிக் கொண்டும்
அசைப் போட்டுக் கொண்டே இருக்கலாம்..

செனகல் நாட்டைச் சேர்ந்த
திரைப்பட இயக்குநர், இலக்கியவாதி, தொழிற்சங்த் தலைவர் செம்பென் உஸ்மான் அவர்களின்
“தொல்குடித் தழும்புகள்”
சிறுகதைகளை வாசித்திடும்போது.

பிரான்சிடமிருந்து செனகல் விடுதலைப் பெறுவதற்கு முன்னர்
மூத்தவர்களின் வாழ்வுதனை.. வேதனைகளே.. உயிர் அழும் வலிகளை..
பிரான்ஸ் தேசத்தின் வளர்ச்சிகளனைத்தும் கருப்பின மக்களின் உழைப்பின் அடையாளங்களே எனபதினை ரத்தப்பிசுக்கேறிய வியர்வையின் வாசத்தோடு பதிவு செய்திருக்கிறார் செம்பென் உஸ்மேன் தன் “தொல்குடித் தழும்புகள்”ளின் 12 கதைகளிலும்.

தொல்குடித் தழும்புகள் Tholkudith Thalumpukal

பிரெஞ் வழி ஆங்கிலத்தில்
லென் ஆர்ட்சென் என்பவராலும்..
ஆங்கில வழி தமிழில்
லிங்க்ராஜா வெங்கடேஷ் என்பவராலும்
மொழிபெயர்க்கப்பட்டு தோழர் வே.ராமசாமி அவர்களின் ” கலப்பை” வெளியீடாக வந்திருக்கிறது. வலிமிகுத்த அட்டை படத்தை வடிவமித்திருக்கிறார் ஓவியர் ஜீவமணி.

தனித்துவமிக்க மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு.
கொண்டுவந்த தோழமைகள் அனைவருக்கும் பேரன்பும் வாழ்த்துக்களும்.

நன்றி: கருப்பு அன்பரசன் முகநூல் பதிவிலிருந்து

Book Reviewநூல் அறிமுகம்

‘இப்படி எழுதினால் யாருக்குதான் வாசிக்க தோணாது?’ – என்கிற தலைப்பில் வாசகர் ‘விசை’ சரவணன் எழுதிய நீர் எழுத்து குறித்த மதிப்புரை…!

'அரசியல்' எனக்கு பிடித்தமான ஒன்று. சமூக நீதி பற்றி என்னிடம் உரையாடியது 'பெரியாரின் எழுத்துக்கள்' என்றால், 'சூழல் நீதி' பற்றி...
Book Reviewநூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: நம் மீதும் பற்றியெரியும் படுகைத் தழல் -பா.சத்யபெருமாள்

நாம் அனைவருமே ஆரிய திராவிடப் போரின் சம காலச் சாட்சியங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆரியத்தின் ஆதிக்கவெறி திராவிடத்தின் சில அடிமைக்...
Book Reviewநூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: கேள்விகளையும் விவாதங்களையும் உருவாக்கும்.. நன்மைகளின் கருவூலம் நூல்…!

பலருடைய கவனம் கொண்டாட்டங்களில் இருக்கிறது; வெகு சிலருடைய கவனம்தான் பிரச்சினைகளில் இருக்கிறது. சமூக சிந்தனையும், மனித நேயமும் கொண்டோர் பிரச்சினைகளின்...
Book Review

வாழ்கையில் ஒருவர் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பதை மிக விரிவாகக் கூறும் நூல்.

சிறந்த குறிக்கோள் இருப்பவர்களே சிறந்த மனிதர்களாக விளங்க முடியும். சிறந்த மனிதர்களால் மட்டுமே சிறந்த வெற்றியை ஈட்ட முடியும். எந்தச்...
எழுத்தாளர் அறிமுகம்

சோம வள்ளியப்பன் பற்றிய சில வரிகள்…!

சோம வள்ளியப்பன் பற்றிய சில வரிகள் சோம. வள்ளியப்பன் அவர்கள் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர், பயிற்சியாளர் மற்றும் மனித வள...
Book Reviewநூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: உள்ளங்கையில் உடல் நலம்

 "நோய்கள் என்பவை விபத்துகள் போன்றவைதான். நல்ல ஆரோக்கியத்தோடு வாழும் மனிதர்களைக் கூட தீவிர நோய் வீழ்த்தி விட முடியும். ஆயினும்...
Book Reviewநூல் அறிமுகம்

நோக்கமும் வழிகளும் – பேரா. செ. கனிமொழியின் மதிப்புரை…!

விளதீமிர் மிஹனோவ்ஸ்கியின் 'நோக்கமும் வழிகளும்' என்ற இந்நாவல் நவீனங்களுக்கு வழித்தடம் பதிக்கும் இக்காலகட்டத்தில் 21ஆம் நூற்றாண்டாகிய நாளையை நோக்கி நம்மை...
Book Review

‘நீங்க பிராமணப்பிள்ளையா?’ – திருமாவேலன்…!

எனக்கு ஜெயகாந்தனை அவ்வளவாக பிடிக்காது என்ற ஒரு வரி முன்னுரையைச் சொல்லிவிட்டால் உங்களுக்கு இந்தக் கட்டுரையை வாசிப்பதற்கு எளிமையாக இருக்கும்...
நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: பிறழ்வும், பிறழ்ச்சியும் பிறர் தர வாரா – ஜனமித்திரன்

தலைகீழாய்த் தொங்கிக் கொண்டிருக்கும் சாத்தானின் பிம்பம், எப்போதுமே ஒரு பிறழ்வுக் காட்சிதான். பிறழ்விலிருந்துதான் உலகின் உன்னதப் படைப்புகளும், குழந்தைகள் முதல்...
1 2 3 7
Page 1 of 7