archivetamil books

Uncategorized

நூல் அறிமுகம்: மிருதுவாய் ஒரு நெருப்பு – ரோஸா பார்க்ஸ் | ம.கதிரேசன்

 

இந்தக் கொரோனா பேரிடர் காலத்திலும் “ரோஸா பார்க்ஸ்” ( உப தலைப்பு: மிருதுவாய் ஒரு நெருப்பு) எனும் புத்தகத்தை வெளியிட்டுள்ள பாரதி புத்தகாலயத்திற்கு நன்றி!

புத்தக ஆசிரியர்கள் திருவாளர்கள். மா.லைலா தேவி- ச.மாடசாமி இணையர்கள்.

அமெரிக்க கறுப்பின மக்களின் மகத்தான தலைவர்களில் ஒருவர் ரோஸா பார்க்ஸ். அவரைப் பற்றிய சுருக்கமான அறிமுகம்தான் இப் புத்தகம்.சிறு நூல். ஆனால் அடர்த்தியான புத்தகம். ஒரு காவியத் தலைவியின் வரலாற்றை இலக்கிய அலங்கார மொழி நடையில் படைப்பது இரு எழுத்தாளர்களுக்கு எளிதானது.ஆனால், எளிமையான மொழிநடையே எழுத்தாளர்களின் பிரக்ஞைப் பூர்வமான முடிவு. எளிமையான எழுத்து நடை நம்மிடம் மிக வலிமையான உணர்வை ஏற்படுத்துகிறது. நீரோடை போன்று புத்தகம் செல்கிறது. படித்து முடித்ததும் நெஞ்சை விட்டு நீங்காத நினைவலைகள்.

“என்னால் மூச்சு விட முடியவில்லை” எனும் ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரண ஓலம் அமெரிக்க நிறவெறி ஆதிக்கத்தின் குறியீடாகவே மாறியுள்ள இன்றைய நிலையில் ரோஸா பார்க்ஸ் புத்தகம் வந்துள்ளது.

புத்தகம் 1960கள், 1970 களில் அமெரிக்காவில் நிலவிய பாகுபாடு களையும், அதற்கெதிராக அமெரிக்க ஆப்பிரிக்கர்கள் சட்டப் போராட்டம், களப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டதையும் ஆசிரியர்கள் உணர்வுப் பூர்வமாக சொல்லி உள்ளனர்.

நிற அடிப்படையில் தனிப் பள்ளி-ஆசிரியர்க ளுக்கு தனி ஊதியம், வாக்குரிமையில் பாகுபாடு,பஸ் பயணத்தில் பாகுபாடு என ஏராளமான பாகுபாடுகள்.

ரோஸா பார்க்ஸ் மையமான பஸ் புறக்கணிப்பு போராட்டம்.

Rosa Parks statue to be unveiled Sunday | 8News

தந்தையின் குடும்ப புறக்கணிப்பால் அம்மாவின் அரவனைப்பில், அடிமை வாழ்வை அனுபவித்த வெள்ளை ஆதிக்க எதிர்ப்புணர்வும், சுய மரியாதையையும் கொண்ட தாத்தாவின் வீட்டில் இருந்து ரோஸா மேள்கொள்ளும் கடுமையான கல்விப் பயணம்; நிறவெறி ஆதிக்க வன்முறையில் வெள்ளையினச் சிறுவர்களும் ஈடுபடுவதைப் பார்த்து திகைக்கிறோம். மென்மையானவர். ஆனால் உறுதி மிக்க ரோஸா எல்லா வற்றையும் அஞ்சாமல் எதிர் கொள்கிறார்.

ஒரு பெண்ணின் வாழ்வில் சிறப்பான கணவரும்,அமைப்பும் வாய்த்துவிட்டால் அவரின் வாழ்க்கை எவ்வளவு மகத்தானதாக மாறும் என்பதை …

ரோஸாவின் கணவர் ரேமாண்ட் பார்க்ஸ் மற்றும் கறுப்பர்களின் உரிமைகளுக்கான அமைப்பு ( NAACP) மூலமாகவும் காண்கிறோம். இயல்பான வெள்ளை ஆதிக்க எதிர்ப்புணர்வு டன் கணவரும் அமைப்பும் அமைந்ததால் மென்மையான ரோஸா பார்க்ஸ் வரலாற்று தலைவியாவதை மிக அழகாக சொல்கின்றனர் ஆசிரியர்கள்.

Rosa Parks: the real story | Morning Star

பஸ் நடு இருக்கையில் உட்கார்ந்தார் ரோஸா பார்க்ஸ் (1955,டிச.). வழக்கு பதிவு. நீண்ட சட்டப் போராட்டத்துடன் மாண்ட்காமரி கறுப்பர்கள் பஸ் புறக்கணிப்பு போராட்டம். 42000 கறுப்பினத்தவர்கள் 386 நாட்கள் நடந்தனர். மலைப்பாக உள்ளது இன்று இப்படிப் பட்ட போராட்டத்தை நடத்த முடியுமா என்று!

இந்தப் போராட்டத்தில் முன்னுக்கு வரும் மார்ட்டின் லூதர் கிங்கை (ஜீனியர்) சந்திக்கிறோம். அதே போது கேமரா வெளிச்சத்துக்கு கூசும் ரோஸா பார்க்ஸ் தனக்குரிய பங்கை செலுத்தி விட்டு இடத்தை அடைக்காமல் ஒதுங்குவதையும் பார்க்கிறோம்.

பேரா.ச.மாடசாமி- மா.லைலா தேவி இணையர் முன்னுரையில், ஒரு விதத்தில் இப் புத்தகம் தங்களின் அடையாளம் என்கின்றனர்.ரோஸா- ரேமாண்ட் பார்க்ஸின் வாழ்வைப் படித்த பின்னர் இது முற்றிலும் உண்மை என்று உணர்கிறோம்.

இச் சிறு புத்தகம் ரோஸா பார்க்ஸின் My Story உள்ளிட்ட அமெரிக்க ஆப்பிரிக்கர்களின் பல்வேறு இலக்கியங்களையும் படிக்கத் தூண்டுகிறது.

ம.கதிரேசன்.

Web Series

தொடர் 2: தான் – கந்தர்வன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

வாஞ்சைமிகு மனிதர்களை தமிழ்க்கதைப் பரப்புக்குள் கை பிடித்து அழைத்து வந்த படைப்பு முன்னோடி கந்தர்வனின் கதைகளில் சுய எள்ளலுடன் விரைந்து...
Book Review

உடல் ஆயுதம் – புலியூர்முருகேசன் | நூல் மதிப்புரை – கருப்பு அன்பரசன்

அடக்குமுறை எங்கெல்லாம் தன் குரூரத்தை கட்டவிழ்த்துவிடுகிறதோ அங்கெல்லாம் தன் அடிவயிற்றில் இருந்திடும் சக்தியனைத்தும் திரட்டி, கழுத்து நரம்புப் புடைக்க, உயர்த்திய...
Book Review

புத்தக அறிமுகம்: முகமூடிகளே அமெரிக்காவின் முகம் – வே. அருண் குமார், இந்திய மாணவர் சங்கம்

''பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்'' எனும் இந்நூல் அமெரிக்காவின் திரைமறைவு வேலைகள் பலவற்றை  நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. சமீபத்தில் ...
Book Review

நூல் அறிமுகம் : கல்விக்கான ஒரு கையேடு – தேனி சுந்தர்

பள்ளிக்கல்வி - புத்தகம் பேசுது நேர்காணல்கள் குழந்தைகள் தான் படிக்க வேண்டும். ஆசிரியர்கள், அலுவலர்கள், அதிகாரிகள் படிப்பதில்லை. இது சரியல்ல. எல்லோரும் படிக்க வேண்டும். தொடர்ந்து கற்க வேண்டும். தொடர்ந்து படிப்பது மட்டுமே நமது அறிவை உயிர்த்துடிப்போடு வைத்திருக்கும். அறிவினை உயிர்த்துடிப்போடு வைத்திருக்கும் ஆசிரியரே குழந்தைகளை ஆகர்ஷிக்க முடியும். அத்தகைய ஆசிரியர்களாலேயே சாதிக்க முடியும்....
Book Review

கருக்கு: ஒடுக்குமுறைக்கு எதிரான ஆயுதம் | நூல் அறிமுகம் – மிர்துளா, இந்திய மாணவர் சங்கம்

கருக்கு எனும் இந்நூல் ஓர் சுயசரிதை நாவல் தான். சுயசரிதை என்பது ஒரு தனிநபரின் வரலாறு என்றே நாம் அறிகிறோம்....
Book Review

சே நீ வாழ்கிறாய்! புத்தக அறிமுகம் – சுபாஷ், இந்திய மாணவர் சங்கம்

சே நீ வாழ்கிறாய்!  ஏன்  'சே'வுக்கு மீண்டும் மீண்டும்  பிறப்பெடுக்கும் ஆபத்தான பழக்கம் உள்ளது?. நினைத்ததை சொன்னதாலா? சொன்னதை செய்ததாலா? ...
Book Review

தண்ணீர் – அசோகமித்திரன் | நூல் மதிப்புரை: பெ. அந்தோணிராஜ்

நூல்: தண்ணீர் ஆசிரியர்: அசோகமித்திரன் பதிப்பு: காலச்சுவடு விலை: ரூ. 160 தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். சாகித்ய...
Book Review

தெய்வம் என்பதோர்… – தொ. பரமசிவன் | நூல் மதிப்புரை: பெ. அந்தோணிராஜ்

தொ. ப என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் இந்நூலாசிரியர் நெல்லை ம. சு. பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியவர். இவரது அழகர்...
1 2 3 17
Page 1 of 17