archiveTamil Book Review

Book Review

அப்பல்லோ நூல் மதிப்புரை – மருத்துவக்குடிகளும், சம கால அரசியலும் | சுப்ரபாரதிமணியன்

மருத்துவக்குடிகளும் , சம கால அரசியலும் 

அப்பல்லோ : நாவல் : அண்டனூர் சுரா

சரித்திர நாவல்கள் என்றால் எனக்கு அலர்ஜி. பொன்னியின் செல்வன் இது வரைப் படித்ததில்லை. வைகோ அந்நூல் பேசிய பேச்சே தலையைச் சுற்ற வைத்தது. அவ்வளவு கதாபாத்திரங்கள்

சுராவின் இந்நாவலின் சரித்திர கதாபாத்திர பெயர்கள் , இடங்கள்  இவை அவ்வகையில்சிரமப்படுத்தின .ஆனால்  சரித்திர வாசகர்களுக்கு இவற்றைக் கடந்து போவது சுலபம் .

சுரா  சோதனை முயற்சியில் ஈடுபடும் அசகாய சூரர் என்பதை முந்தின நாவல்களீன் மையமும், பல சிறுகதைகளின் போக்கும் காட்டியிருக்கிறது. நாவலின் உரை  நடையின் துள்ளலும்  படிக்க வைத்தது.

 கிரேக்க பாத்திரங்கள் , கற்பனையான நாடுகள் என்று சுற்றும் போது தமிழகத்தின் சமகால சம்பவங்களும் அதுவும்  ஒரு முக்கிய அரசியல் பிரமுகரின் மருத்துவ மனை படுக்கை நிலையும் மரணமும் என்று அங்கங்கே தென்படுவதைக் கண்டு கொள்வதில் ஒரு சுவாரஸ்யம். அதுதான் மூலம் கூட

மந்திரம் மருத்துவத்தை வெல்லும் அதிசயம். மருத்துவம் முக்யம் அல்ல . நம்பிக்கை பெரிது.

 குல , இன அழித்தொழிப்பு நடவடிக்கைகள் அபாரமாகச் சொல்லப்பட்டுள்ளன. மயிர் அழித்தலும், மழித்தலும் கூட.. . ஆயுத சந்தை எங்கும் வியாபித்திருக்கிறது. சதுரங்க விளையாட்டு. ஆனால் பலியாகிறவர்களின் கதை இருக்கிறது. மருத்துவக்குடிகளின் மிச்சத்தை ஆராய்கிற சமாச்சாரங்கள்… அப்பல்லோ மருத்துவமனையா, ஆளா… மரணத்திற்குப்பின் ஆடை கவசங்களைத் துறந்து விட்டு ஓடும் குதிரையைப் போல் பலரும் தப்பிக்கிறார்கள்.. மூன்று அரச குடும்பங்கள் என்பதை அறிந்து கொள்ள சிரமங்கள் .

 அதை மீறி தொன்மையான மருத்துவக்குடிகளின் கதை வேறு ஓடுகிறது, யார் கண்ணுக்கும் தென்படாத தாழியில் கிடக்கும் பிணம், கால் இருக்கும் இடத்தில் காதுகள் கொண்ட அரசன் .காலில் விழுந்து ஏதோ சொல்ல வேண்டிய சூழலில் மக்கள் … விடுதலை- மரணம் மூலமும் கிடைக்கிறது,.

 ” சிலுவையில் தொங்கும் சாத்தான்” நாவலைப் போல் பல அரசியல் சம்பவங்கள் வேறு கால சூழல்களில் திரிகின்றன. இந்த நாவலின் நடைக்கு ஆதாரமான சரித்திர நாவல் எது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.இந்த சரித்திர நாவல் சாயலை முத்தச்சன் பள்ளத்தில் சில இடங்களில் காணலாம்.

 சம அரசியல் மர்மங்களின் முடிச்சை அவிழ்க்கும் நாவல் இது  . தேர்ந்த சொல்லாடல்கள்  அவரின் கொங்கை நாவலின் அம்சங்களை மீறி புது பரிமாணத்தில் இது விளங்குகிறது.இதில் வரும் கிரேக்க கதாபாத்திரங்களின் பெயர்களை உள் வாங்கிக்கொண்டு அவற்றின் கிரேக்க காவிய பாத்திரத்தன்மைகளுடன் இந்நாவலை வாசிக்கையில் ஒரு புது பிரதியும் அனுபவமும் வாய்க்கும்

சுராவின் புது முயற்சிகளுக்கு தேர்ந்த வாசகன் தோள் கொடுப்பான் . இதற்கும் .

 

வெளியீடு 

பாரதி புத்தகாலயம் சென்னை 

 272 பக்கங்கள்

விலை – ரூ 245 /-