archiveSFI

Book Review

நூல் அறிமுகம்: உழைக்கும் மக்களின் சென்னை – பகத்சிங் (இந்திய மாணவர் சங்கம்)

 

கறுப்பர் நகரம் எனும் இப்புதினத்தின் ஆசிரியர் கரன் கார்க்கி தனது படைப்புகள் அனைத்திலும் உயிர்ப்புள்ள கதாபாத்திரங்களைப் படைக்கிறார். அது நம்மை நாவலுடன் ஒன்றினைதுவிடுகிறது.

கறுப்பர் நகரம் என்றதும், அது எந்த நகரம்? என்ற கேள்வி எழக்கூடும். கதையில் விரியும் அந்த நகரம் நாம் அனைவரும் நன்கு அறிந்த காட்சிப் பிழைபோல் ஆங்காங்கே வண்ணம் தீட்டப்பட்ட “மெட்ராஸ்” தான். அதாவது சென்னையின் மத்திய பகுதிதான் இந்த கறுப்பர் நகரத்தின் கதைக்களம்.

வளர்ச்சியின் அடித்தளம்

நாமும் பலமுறை இந்த கறுப்பர் நகரத்தைச் சாதாரணமாகக் கடந்து சென்றிருப்போம். ஆனால் இந்தப் புதினத்தை வாசித்த பிறகு நம்மால் அப்படி சாதாரணமாகக் கடந்து சென்றுவிட முடியாது. “வந்தாரை வாழவைக்கும் சென்னை” என்பார்கள். சரி உண்மையில் சென்னை யாரை வாழவைக்கிறது?. சாலையெங்கும் வண்ணம் பூசி சித்திரங்கள் தீட்டி பிரமாண்டமான கட்டமைப்புகள் எல்லாம் நம் கண்ணுக்குப் படுகிறது. இந்த உருவாக்கம் எத்தனை மனித உயிர்களைப் பறித்திருக்கும்?

உண்மையில் இந்நகரை உருவாக்கிய ஏழை உழைக்கும் மக்களின் உணர்வுகளையும், அவர்களின் வாழ்வையும், சாதிய கட்டமைப்பையும் இப்புதினம் அழகுற எடுத்தாளுகிறது. நகரத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பவர்கள் உழைக்கும் மக்களே என்றபோதும் பயன்பெறுபவர்களோ பணம்படைத்தவர்களே.

எழுத்தாளர் கரன்கார்க்கியின் ...

உழைக்கும் மக்களின் வாழ்வு எத்தகையது? என்பதைக் கதை பேசுகிறது. ஒருநாள் வேலை கிடைக்காவிட்டாலும் அன்றைய உணவு என்பது கேள்விக்குறியே. இவ்வளவு கடினமான வாழ்விலும் அவர்களிடம் நிலவும் அன்பும் காதலும் அழகாக நாவல் முழுவதும் கலந்திருக்கிறது. செங்கேணி மற்றும் ஆராயி அதன் சாட்சியாகக் கதையில் உலாவுகின்றனர்.

மனம் முழுக்க ஆராயிதான்

சிறை சென்ற செங்கேணி தனது தண்டனைக்காலம் முடிந்து வெளியே வரும்பொழுது தான் கண்ட காட்சிகள் அனைத்தும் புதிதாய் அவருக்குத் தெரிகிறது. அவரது நினைவிலிருந்த இடங்களை எல்லாம் ஏதோ பேய் விழுங்கி விட்டதுபோல் கண்முன் தெரிந்த மாற்றங்களையெல்லாம் பார்க்கிறார். மனதில் ரணம் கொண்டு தனது பாதையில் பயணத்தைத் தொடங்கினார். மனம் முழுக்க ஆராயி மட்டுமே இருந்தாள். குழப்பமான நிலைகளில் அவருக்குத் தெளிவான அடிகளை எடுத்து வைக்க அவளால் மட்டுமே உதவமுடியும்.

ஆராயிக்கு முன்பு பரிசளிக்கத் தாமரைகளைப் பறித்த அந்த அல்லிக்குளத்தினை தேடினார். அங்கு ஒரு சிவப்புக் கட்டிடம் எழுந்துநிற்கிறது. அதனால் அவருக்குக் குளத்தின் தடமே தெரியவில்லை.
அவருக்கு நினைவு இருந்த அனைத்தையும் தேடிச் சுற்றித் திரிந்தார் ஆனால் கிடைத்ததோ வேதனைகள் மட்டுமே.

ஆராயி. செங்கேணியிடம் “வா மாமா, என் கூட வந்திரு, நம்ம எங்கயாசி போய்
சந்தோசமா இருக்கலாம்” என்று அழைக்கிறாள். செங்கேணியும் ஆராயியை பின்தொடர்கிறார். கனவுலகில் அவர் எடுத்துவைக்கும் அந்தக் காலடியோடு உண்மை நம்மைச் சுடுகிறது. ஏன் செங்கேணி சிறை சென்றார்? ஆராயிக்கு என்னவானது? என்பதோடு கலந்த அவர்களின் வாழ்க்கைப்பாட்டே புதினத்தின் கதைக்களம்.

தொழிலாளியின் உழைப்பால்தான் நகரம் வளர்ந்தாலும் உழைக்கும் மக்களின் கனவுகளும் லட்சியங்களும் சிதறிய நிலையிலேயே இருந்தது. செங்கேணியின் சிறை வாழ்விற்கு முன்பு நாய்களைக் கொல்லும் இடமாக இருந்த இடம் இப்போது பெரிய பெரிய கட்டிடங்களைக் கொண்டதாகவும், குப்பைக் கிடங்குகளாகக் கிடந்த இடங்கள் இப்போது மனிதர்கள் வாழும் இடங்களாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. அங்கிருந்த மக்கள் சென்னையை விட்டே விரட்டப்பட்டுள்ளனர். ஒரு நகரத்தையும் அங்கிருந்த மக்களையும் அழித்து, அதன் மேல் வேறு ஒரு நகரம் அமைக்கப்பட்டிருப்பதைக் கதையின் எதார்த்தமான மொழியே காட்டிவிடுகிறது.

இப்புதினத்தில் செங்கேணி, ஆராயி இடையிலான எல்லையில்லா அன்பையும் பார்க்கலாம்.
உழைக்கும் மக்களின் வாழ்வையும், வலிகளையும் உணரலாம்.

Karuppar Nagaram - கறுப்பர் நகரம் » Buy tamil book ...
நூல் பெயர் : கறுப்பர் நகரம் (நாவல்)
ஆசிரியர் : கரன் கார்க்கி
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
முதல் பதிப்பு : டிசம்பர் 2011
விலை : ₹280

Book Review

புத்தக அறிமுகம்: எழுத்தாளர் இமையத்தின் “வாழ்க வாழ்க” – அ.சொக்கலிங்கம் (இந்திய மாணவர் சங்கம்)

"உயரம்" என்ற பொருளை, தன் பெயரில் கொண்டிருக்கும் எழுத்தாளர் "இமையம்", எப்பொழுதும் எந்த ஒரு சலனமும், சங்கடமும் இல்லாமல் வாழ்க்கையை நகர்த்திச்...
Book Review

புத்தக அறிமுகம்: ஆயுதம் செய்வோம் – லா. காரல் சே.  (இந்திய மாணவர் சங்கம்)

  வகுப்பறை சார்ந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது . ஆசிரியர் மாணவர்களைப் பார்க்கும் முறை, மாணவர்கள் ஆசிரியர்களைப்...
Book Review

புத்தக அறிமுகம்: நம் தேநீரில் கலந்திருக்கும் இரத்தம் – யுகசாந்தி (இந்திய மாணவர் சங்கம்)

  முதல் பக்கத்திலேயே துளிர்விடத் துவங்கிவிடுகிறது கண்ணிர்த் துளிகள். தோட்டத் தொழிலாளர்களின் வலிகளையும் ரணங்களையும் ரத்தமும் சதையுமாக கண்முன்னே நிறுத்தும்...
Book Review

புத்தக அறிமுகம்: கண்ணீரும் ரத்தமும் வடியும் வாழ்வு – ரா. ஜான்சி ராணி (இந்திய மாணவர் சங்கம்)

ஆப்பிரிக்க மாடல் அழகியான வாரிஸ் டைரி எழுதிய "பாலைவனப் பூ" என்கிற இப்புத்தகத்தை வாசிக்கும் பொழுது ஆப்பிரிக்காவின் பரந்து விரிந்த...
Article

சிவப்பு வானில் ஒரு நட்சத்திரம் – சுபாஷ் (இந்திய மாணவர் சங்கம்)

 "மெட்ராஸ்" என்ற வடசென்னையை மையப்படுத்திய படத்தில் அன்பு என்ற அரசியல் பிரமுகர் ஏரியாவில் உள்ள சுவரில் தன் கட்சி விளம்பரம்...
Book Review

புத்தக அறிமுகம்: எழுத்தாளர் இமையத்தின் “வாழ்க வாழ்க” – சுபாஷ் (இந்திய மாணவர் சங்கம்) 

நான் இமையத்தோடு எப்போதும் பேச விழைகிறேன். காரணம் அவர் எப்போதும் சாகசங்களை கதையாக்குவதில்லை. மாறாக என்னை பற்றியும் , என்...
Book Review

புத்தக அறிமுகம்: ஈ.வே.ரா பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்?” – மா.சுகினா பாரதி (இந்திய மாணவர் சங்கம்)

இன்று எல்லா வகையிலும் பெண் முன்னேறி விட்டதாகவும் சுதந்திரம் அடைந்து விட்டதாகவும் நாம் கூறிக் கொண்டிருக்கிறோம்.  ஆனால் ஈவே.ராமசாமி பெரியார்...
Book Review

புத்தக அறிமுகம்: செயல்திறன்மிக்க புரட்சியாளர் காஸ்ட்ரோ – ப.ஸ்வாதி (இந்திய மாணவர் சங்கம்)

கியூபாவும் அதன் மருத்துவர்களும் இன்றைய மோசமான கொரோனா நோய் தொற்று காலத்தில் பல்வேறு நாடுகளுக்கு சென்று மருத்துவ சேவையாற்றிவருகின்றனர். இன்றுவரை...
Article

நாங்கள் ஆன்லைன் கல்விக்கு எதிராகவும் இணைய இடைவெளிக்கு எதிராகவும் இருக்கிறோம் – டிவி சவால் தொடங்கப்பட்ட காரணம் குறித்து இந்திய மாணவர் சங்க தேசிய தலைவர் வி.பி.சானு

  ஜூன் 4அன்று திரைப்பட இயக்குநர் ஆஷிக் அபு ஐந்து புதிய தொலைக்காட்சி பெட்டிகளை வாங்கினார். ஆனால், அவை ஐந்துமே...
1 2
Page 1 of 2