archiveSagu varadhan

Poetry

சகுவரதன் கவிதைகள்

ரேகை நிபுணர்
உங்கள் உள்ளங்கைகளில் இப்படி நிறைய ...
சிறிய சலசலப்புக்குப்பின்னர்
வேடிக்கை பார்த்தவர்கள்
அமைதியாக
பூதக்கண்ணாடி வழியாக
ரேகைகளை கவனித்தார்.
பிரதான ரேகை
கிளைரேகை என
மேடு பள்ளங்களில்
ஏறியும் இறங்கியும்
ஒதுங்கியும் விலகியும்
உள்ளங்கையில்
சுற்றிக்கொண்டிருந்தன.
கைநீட்டியவர்
தனரேகை பலன் குறித்து
கவலைப்பட
ரேகை நிபுணரோ
வயிறு கிள்ளும் பசிக்கு
ஆகும் செலவை
கணக்கிட்டுக்கொண்டிருந்தார்.உங்களுக்கு தெரியுமா?

No photo description available.

சைரன் ஒலித்த
திடீர் அதிர்ச்சியில்
மக்கள் சிதறி ஓரமாய் ஒதுங்க
கடந்துசென்றது
போலிஸ் ஜீப் ஒன்று.
அந்தப்பக்கம் இந்தப்பக்கம்
போக்குவரத்து
துரித கதியில் தடை செய்யப்பட,
காரணமின்றி சிவந்த கண்களோடு
முன்னேயும் பின்னேயும்
துப்பாக்கி ஏந்திய பூனைகள்
மக்களை வெறித்தபடி.
அதிகாரங்கள் நிரம்பிய
திமிர்த்தனங்களோடு
நடுவில் கருப்புக்கண்ணாடி கார்.
சிலருக்கு உடனே புரிந்து
கைகூப்ப,
பலருக்கு புரியாமல்
ஒருவரையொருவர் பார்க்க,
ஆம்புலன்ஸ் ஒன்று
கடைசியாய் ஊர்ந்தது.
பக்கத்திலிருந்தவரிடம்
“யாரென”  கேட்டேன்.
நிகழ்ந்த சுவடு எதுவும்
நிகழாத மாதிரி
மக்களோடு மக்களாக
கலந்துவிட்டிருந்தார்.

ஒரு நாடு கதறுகிறது

உள்ளூராட்சி தேர்தலில் பெண்களுக்கான ...

அமைதியாகத்தான் இருந்தோம்.
கிளைகளைக்கூட
ஒன்றுடன் ஒன்று
பேசவிடாமல் பார்த்துக்கொண்டோம்.
சத்தமில்லாமல் உதிர
இலைகளுக்கு சொல்லிக்கொடுத்தோம்.
காய்கனிகளை
கொய்துகொள்ள
உரிமை அளித்தோம்.
மலர்களின் வாசம் வீசி
உங்கள் முகங்களை
சுளிக்காமல் பார்த்துக்கொண்டோம்.
புயலுக்கு தாங்காமல்
புழுவென
விழுந்து துடித்தபோதும்
எங்கள் கைகளால்
தொண்டையை இறுக்கி
குரல் வெளிவராமல்
பார்த்துக்கொண்டோம்.
உங்களிடம் வேண்டுவது
ஒன்றுதான்.
அழிக்கமுடியாத
எங்களின் குறுதிக்கதைகளை
வாரிசுகளிடம் விட்டுச்செல்கிறோம்.
முற்றாக
துடைத்தெறியாதிர்.

உள்ளதை உள்ளபடி

அம்மன் ஜோதிடஆராய்ச்சி நிலையம் ...

“அப்படியென்னதான் பார்ப்பே
அந்த கண்ணாடியில்”
அம்மாவின் கூக்குரலை
அலட்சியம் செய்து
மீண்டுமொருமுறை பார்ப்பேன்.
குழிவிழுந்த கண்ணம்
அடர்த்தியான புருவம்
நுனிமுக்கில் தெரியும் மச்சம்.
பார்த்து பார்த்து மகிழ்வேன்
எப்படி சிரித்தால் அழகு கூடுமென
விதவிதமாய்
சிரித்துப் பார்ப்பேன்.
பின்னலிடா கூந்தலை
மார்பிலும் முதுகிலும்
தவழவிட்டு
கோதி கோதி ரசிப்பேன்.
நான் பார்க்கும் போதெல்லாம்
என்னை கொஞ்சி மகிழ்ந்த
கண்ணாடியை
இப்போது பார்ப்பதில்லை.
திராவகம் வீசி
தீய்க்கப்பட்ட முகத்தை
கரிய சுருக்கங்களை
அப்படியேதான் காட்டுகிறது
அந்தக்கண்ணாடி.

அதே இறைவன்
அதே பிரார்த்தனை

இரவில் து ஆ ஏற்றுக் கொள்ளப்படும் ...

நான்கு எருதுகள் வெட்டி
மனமுருக வேண்டிக்கொண்டார்
மழைவேண்டி
என் தாத்தா.
அதே கோரிக்கைக்கு
கிடாவெட்டி பொங்கல் வைத்தார்
என் அப்பா.
நானோ
தேங்காய் உடைத்து
கற்பூரம் ஏற்றிக்
கொண்டிருக்கிறேன்.
என் மகன்
கைகூப்புவானோ
சுட்டெரிப்பானோ
தெரியவில்லை.

 

சகுவரதன்
குடியேற்றம் (வே.மா)
தமுஎகச
மா.த.செயலர்
வேலூர் மாவட்டம்