archivepoem

Poetry

ஆதிரன் ஜீவா கவிதை

புதுசா அறிமுகமாகிற
சகமனுசனுடனான சந்திப்பில்
அவன் சாதிய தேடுற நீ!
இணையா பயணிக்கும்
மனம் விரும்பும் பெண்ணுடனான
இயல்பான காதல
அணை போட்டுத் தடுக்குற நீ!
நாட்டுக்கு பதக்கம் வாங்கிய
விளையாட்டு வீரனின்
பிறப்ப இணையத்தில் தோண்டுற நீ!
பெத்தமகள அவ இணையோட
வெட்டிக் கொலை பண்ணும்
சாதி மிருகத்திற்கு – மனசுக்குள்
மாலையப் போடுற நீ!
ஜில்லாக் கலெக்டரே ஆனாலும்
தன் சாதி இல்லன்னா- அவர்
திறமையத் தூசியா நெனக்கிற நீ!
ஜீன்சிற்கும் கூலிங்
கிளாஸிற்கும்
மயங்கிடுவாங்கன்னு- பெண்ணை
இழிவாக பேசுற நீ!
எந்த முயற்சியும் இல்லாம
ஓசியில் கிடைச்சிட்ட -சாதிப்
பெருமையில் சுகம் காணுற நீ!
பல சாதி வியர்வையில உருவான
சோற்றைத் தான் திண்ணலாமா?
பல பேரு உழைப்பில உருவான
துணியத்தான் உடுத்தலாமா?
வெறுப்பை விதைக்கிற
 மதவாதிப் பேச்சுல
கண்மூடிக் கெடக்குற நீ!
சாதித் திரைய கொஞ்சம்
விலக்கிட்டு பாரு!
உழைச்சா தானே உனக்கும் சோறு
கொஞ்சம் மனுசனா வாழப் பாரு!
Poetry

சகுவரதன் கவிதைகள்

ரேகை நிபுணர் சிறிய சலசலப்புக்குப்பின்னர் வேடிக்கை பார்த்தவர்கள் அமைதியாக பூதக்கண்ணாடி வழியாக ரேகைகளை கவனித்தார். பிரதான ரேகை கிளைரேகை என...
Poetry

கனகா பாலன் கவிதைகள்

பள்ளித் தோழி கலப்பு வண்ணங்களில் கை புகுந்திருக்கும் கண்ணாடி வளையல்களை எண்ணிக் கொண்டே பேசும் அவள் அப்படித்தான் இப்போதும் யாருடனோ...
Poetry

கவிதை: கடைசி வரை கவனிக்கவில்லை – சந்துரு

சாமியாடி சித்திரை செத்த சடங்கு முடிஞ்சி தீட்டுக்கழித்தபின் பிள்ளை ராஜேந்திரன் மீதே இறங்கிக்கொண்டது அருள் வாக்கு சொல்லி ஊர் காக்கும்...
Poetry

கவிதை: எங்கள் வகுப்பறைக்கு காது வேண்டும்..! – தேனி சுந்தர் ..

  பிரயோசனமே இல்லன்னாலும் பிள்ளைன்னு ஒருத்தன் இருக்கான்.. பெற்றோரின் நிம்மதி.. பத்து பைசா தரலன்னாலும் புருசன்னு ஒருத்தன் இருக்கான்.. பெண்களின்...
Poetry

ரிஸ்கா முக்தார் கவிதை…

  ஒரு நெடிய பிரிவிற்குப் பின்னர் மீண்டும் உறவுக்குள் திரும்புபவர்கள்.. அங்கு அன்பின் வார்த்தைகள் மாறுபட்டிருப்பதனை நேசத்தின் கொடிகள் அறுந்து...
1 2 3
Page 1 of 3