archivepanju kaniappan

Article

பெயரில் என்ன இருக்கிறது – க. பஞ்சாங்கம் 

 

தலித்எனக் குறிப்பிடக் கூடாது,மத்திய அரசு அறிவுறுத்தல்என்ற தலைப்பில் இந்து தமிழ் இதழில் ஒரு  செய்தி வந்தது.

பங்கஜ் மேஷ்ராம் என்பவர் தொடர்ந்த வழக்கில் மும்பை உயர்நீதி மன்றத்தில் நாக்பூர் கிளை கடந்த சூன் மாதம் பிறப்பித்த உத்தரவில், “தலித்என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாமென்று தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கு அறிவுறுத்துமாறு தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தைக் கேட்டுக் கொண்டது. அதை ஏற்று, அந்த அமைச்சகம் இவ்வாறு கடிதம்  மூலம் தனியார் தொலைக்காட்சிகளை அறிவுறுத்தியுள்ளது. மேலும் அந்தக் கடிதத்தில்தலித்என்ற சொல்லுக்குப் பதிலாகப்பட்டியல் இனத்தவர்என்று பயன்படுத்தச் சொல்லியும் அறிவுரை கூறியுள்ளது; கூடவே கடந்த மார்ச்சு மாதமேமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சகம்’ ‘பட்டியல் இனத்தவர்என்றே குறிப்பிடுமாறு மத்திய, மாநில அரசுகளையும் கூட அறிவுறுத்தியுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளது.

இந்தச் செய்தி எனக்குப் பெரும் வியப்பாக இருந்தது. எப்படி என்றால் ஆளுகின்ற அதிகாரத்தை அனுபவித்துச் சுவைக்கின்ற ஓர் அரசு, எந்த அளவிற்குச் சமூகத்தைக் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தை, அதன் இயக்கப்போக்கை மிக நுண்ணிய தளத்தில் ஆய்வுக்கு உட்படுத்திக் கவனமாக இயங்குகிறது என்பதை  மேற்கண்ட அறிவுறுத்தும் சுற்றறிக்கை எனக்குப் புலப்படுத்துவதாகத் தோன்றியது

இந்தச் சாதியச் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பெருந்திரளான உழைக்கும் மக்களைக் குறிப்பதற்குப் பல்வேறு பெயர்ச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இழிந்தோர், வினைவலர், அடியோர், புலையர், சண்டாளர் முதலிய சொற்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன; இடைக்காலத்திலும் புலையர், சண்டாளர், தீண்டாதார் (கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த பாகூரில் உள்ள திருமூலநாதர் திருக்கோயில் கல்வெட்டொன்று ஓர் ஊரில் வாழ்ந்த மக்கள் பிரிவினரைத்தீண்டாதார்எனக் குறிப்பிடுவதாக பேரா. கோ. விசயவேணுகோபால் விளக்கியுள்ளார்) பறையர், ஆகியசொற்கள் வழக்கத்தில் இருந்துள்ளன; 12-ஆம் நூற்றாணில் சைவவைணவ முரண்பாடு முற்றிய சூழலில், இராமானுசர், இவர்களை வைணவ மதத்திற்கு மாற்றியதோடுதிருக்குலத்தார்எனப் புதுப்பெயரிட்டுப் பூணூலும் அணிவித்துள்ளார்.

You don't look Dalit' & other things 'upper castes' must stop ...

நால்வருணப் பாகுபாட்டிற்குள் அடங்காத ஐந்தாவது சாதி  என்ற பொருளில்பஞ்சமர்என்ற பெயரும்  பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பியர் ஆட்சிக் காலத்தில் அயோத்திதாசப் பண்டிதர் (1845-1914) அன்றைக்கு வழக்கில் இருந்த பஞ்சமர் (பஞ்சமி நிலம்…) என்பதற்குப் பதிலாக, 1870-இல் நடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போதுஆதித்தமிழர்கள்என்று பயன்படுத்தத் தொடங்கினார்; காலனிய அரசாங்கத்தை நடத்திய ஆங்கிலேயர்கள் இந்தியா முழுவதிலும் உள்ள இந்த மக்களைப்பறையர்என்றே தமிழ்ச்சொல்லால் சுட்டினர்; அழுத்தப்பட்டவர்கள் (Suprssed) தீண்டத்தகாதவர்கள் (Untouchables) என்று வெளிநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறித்தனர். நீதிக்கட்சி மூலமாகத் திராவிட இயக்கம் மலர்ந்த போது அவர்கள்ஆதித் திராவிடர்கள்என்றனர். திராவிட இயக்கம் ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றியதால் அரசாணை இயற்றிச் சாதிச் சான்றிதழில்ஆதித் திராவிடர்என்றே குறித்திடவும் வழி செய்தனர், ஆதித் திராவிடர் நலத்துறை என்றே அவர்களுக்காக ஒரு துறையைக் கூட இந்தப் பெயரில் தொடங்கினர்; அது இன்றுவரை அதே பெயரில் இயங்குகிறது.

தேசிய இயக்கம் தீவிரப்பட்டபோது காந்தியடிகள் (1869-1948) இந்தப் பெருவாரி மக்களைக் குறிக்கக் கடவுளின் பிள்ளை என்று பொருள் தரும்ஹரிஜன்” என்ற புதியதொரு சொல்லை 1933-இல் உருவாக்கிப் பயன்படுத்தினார். ‘ஹரிஜன சேவா சங்கம்என்றொரு அமைப்பையும் உருவாக்கிச் செயல்பட்டார். காந்தியடிகள் என்பதால் இதற்கு ஆதரவு இருந்தது என்றாலும் எதிர்ப்புக்களும் பல கோணங்களில் எழுந்தன. நாங்கள் கடவுளின் பிள்ளைகள் என்றால், நீங்கள் எல்லாம் யாருடைய பிள்ளைகள்? என்ற கேள்வி கடுமையாக முன் வைக்கப்பட்டது; மேலும் காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தில் முறைதவறி தேவரடியார்களுக்குப் பிறந்து வளரும் ஒரு சமூகத்தைக் குறிக்க அந்தச்சொல் அங்கே பயன்பாட்டில் இருந்தது என்று அறிய வந்தபோது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

“ஹரிஜன மென்று அழைத்திட்டால் அகன்றிடுமோ தீண்டாமை வேகமுள்ள சமதர்ம வேட்கை நெஞ்சந் தோன்றாமல் விளம்புகின்ற காந்தியார் சொல் விஷமெனக் கொண்டால் மேன்மை” என்று விமர்சனம் செய்தர் அம்மைநாதன் என்ற தமிழ்க் கவிஞர்.

டாக்டர் அம்பேத்காரும் (1891-1956) காந்தியின் இந்தச் சொல்லைக் கடுமையாக எதிர்த்தார்; இந்தச் சொல் மூலம் நகரங்களின் பரப்பிலும் அவர்களை எளிமையாக அடையாளங் கண்டு ஒதுக்கிவைப்பது சுலபமாக நடைமுறையில் செயல்படுகிறது எனக் குற்றந் சாட்டினார். (எனவே மராட்டியம், மேற்குவங்கம், பீகார் முதலிய அரசுகள் பிற்காலத்தில் இச்சொல்லைப் பயன்படுத்தக் கூடாதென்றும் சட்டம் இயற்றின)

Stop calling Dalits ‘Harijan’: SC calls the term abusive, as we …

காந்தியடிகள் இத்தகைய எதிர்ப்புகளுக்குப் பதில் சொல்லும் முகத்தான் 14.04.1946-இல் தன்னுடையஹரிஜன்வார இதழில்பெயரில் என்ன இருக்கிறது?” என்று ஒரு கட்டுரையே எழுதினார்; ஆனால் உண்மையில் பெயரிடுதலில்தான் எல்லாமே இருக்கிறது; ஒவ்வொரு பெயரிடுதலுக்குப் பின்னாலும் ஓர் அரசியல் இருக்கிறது; 12-ஆம் நூற்றாண்டில் இராமானுசர் அவர்களை வைணவ மதத்தில் இணைத்துத் தன் சமயத்தின் பலத்தினைப் பன்மடங்காகப் பெருக்கிக்கொள்வதற்குத்தான் பூனூல் அணிவித்துத்திருக்குலத்தார்என்று பெயரிட்டார் என்ற அரசியல் பின்புலத்தை யாரால் மறுக்க முடியும்? இதுபோலவேஆதித்திராவிடர்என்ற திராவிட இயக்கம் பெயரிட்டதன் மூலம் தன் திராவிட அரசியலுக்கான ஆள்பலத்தை உருவாக்கிக் கொள்ளவில்லையா? காந்தி அடிகளும் வெள்ளையர்களுக்கு எதிராகப் பெருந்திரளாக மக்களைக் கூட்டிக்காட்ட வேண்டுமென்றால் இந்த உழைக்கும் மக்கள் இல்லாமல் சாத்தியமாகுமா? இந்த உண்மையை உணர்ந்துதான் அவரும் கடவுளின் பிள்ளைகள் என அழைத்து அணைத்துக் கொள்ளுகிறார்; 2011 இல் எடுத்த கணக்கின்படி, இந்தியாவில் 16.2% மக்கள் இத்தலித் மக்கள் மேலும் எளிதாகத் தலைமை சொல் கேட்டுத் திரளக் கூடியவர்கள்

பெயரிடுதலின் இந்த முக்கியத்துவத்தை உணர்ந்துதான் கி.மு. 1500 ஆண்டுகளுக்கு முன்பே இந்தச் சாதியச் சமூகத்தை முறைப்படுத்தி நான்கு வர்ணமாகக் கட்டமைப்பதில் வெற்றி பெற்ற மனுஸ்மிருதி தொகுத்த மனு என்பவர் ஒவ்வொரு சாதிப்பிரிவனர்க்கும் எவ்வாறு பெயரிட வேண்டும் என்பதைக் கூட வகுத்துத் தருகிறார்.

பிராமணனுக்கு மங்களத்தையும்

சத்திரியனுக்குப் பலத்தையும்

வைசியனுக்குப்பொருளையும்

சூத்திரனுக்குத் தாழ்வையும்

காட்டுகிறதான பெயரை இடவேண்டியது

சூத்திரனுக்குத் தாஸன் என்ற தொடர்

பெயராக இட வேண்டியது (அத்தி: 2: சூ. 31-32)

இவ்வாறு பெயர் வழங்குவதிலுள்ள அரசியலையும் அது தரும் ஆதாயத்தையும் 20-ஆம் நூற்றாண்டுத் தமிழர்கள் வேறு யாரையும்விட அதிகமாக அறிந்து கொள்ள முடியும். உடன் பிறப்பே என்றும் தம்பி என்றும், ரத்தத்தின் ரத்தமே என்று தொண்டர்களுக்கும் பேரறிஞர், நடமாடும் பல்கலைக் கழகம், புரட்சித் தலைவர், மக்கள் திலகம், தாத்தா, மாமா, அன்னை, அய்யா என்று தலைவர்களுக்கும் பெயரிட்டு அடைந்த பலனை நாம் நன்றாக அறிவோம்தானே.

The Radical Humanism of Jyotiba Phule | Spontaneous Order

தலித்என்ற இந்தச் சொல்லை முதன் முதலில் வழக்கத்தில் பயன்படுத்தியவராக மராட்டிய மாநிலத்தின் சீர்திருத்தத் தலைவராக அறியப்படும் ஜோதிராவ் புலே (1827 – 1890) கருதப்படுகிறார். ‘மாலிஎன்ற பிற்படுத்தப்பட்ட ஒரு சாதிப்பிரிவில் பிறந்து சாதியத்திற்கு எதிராக, பிராமண ஆதிக்கத்திற்கு எதிராகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர்; ‘மகர்போன்ற மராட்டிய மாநிலத்தின் தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிக்கதலித்என்ற மராட்டிய மொழிச் சொல்லைக் கையாண்டார், இந்தச் சொல்லுக்கான மூலம் ஹிப்ரு, மற்றும் சமஸ்கிருதத்தில் காணப்படுகிறது என்கின்றனர்; நசுக்கப்பட்டவர்கள், உடைக்கப்பட்டவர்கள், நொறுக்கப்பட்டவர்கள் என்றெல்லாம் பொருள் தரும் இந்தச் சொல், உயர்சாதியினரால் ஒடுக்கப்பட்ட மக்களைக் குறிக்கப்பெரிதும் பொருத்தமாக இருக்கிறது எனக் கருதிப் பயன்படுத்தினார் புலே; ஆனாலும் சமூகச் சீர்திருத்த இயக்கத்தில் தனது குழுவாக புலேவை ஏற்றுக்கொண்ட அம்பேத்கர் உட்பட இந்தச் சொல்லை ஏற்பதற்குத் தயங்கினர் எனச் சொல்லப்படுகிறது

அமெரிக்காவில் மனித உரிமை இயக்கம் வேகத்தோடு கிளம்பியபோது, இனவேற்றுமை பாராட்டும் வெள்ளையர்களுக்கு எதிராகத் தோன்றியதுகறுப்புச் சிறுத்தைகள் கட்சி” (Black Panther party) என்ற பேரியக்கம்; அவ்வியக்கத்தின் வீச்சினால் கவரப்பட்டு 1972-இல் மே, 20 ஆம் தேதி மராட்டிய மாநிலத்தில் நம்தேவ்தாசல், ஜை.வி. பாவர் ஆகிய இருவரும் இணைந்துதலித் சிறுத்தைகள்என்ற அமைப்பை நிறுவிச்செயல்பட்டனர்; இதனுடைய கிளைகள் தமிழ்நாடு, கர்நாடாகா முதலிய பிற மாநிலங்களிலும் தோன்றி வேகமாக இந்த அமைப்புப் பரவிய சூழலில்தலித்என்ற சொல்லிற்கும் புதியதொரு சக்தியோடு கூடிய அங்கீகாரம் கிடைத்தது

A brief history of the Dalit Panther.

தமிழ்நாட்டில்தலித் சிறுத்தைகள்என்று கிளையை மதுரையில் உருவாக்கி நடத்திக் கொண்டிருந்த மலைச்சாமி 1983-இல் கொலை செய்யப்பட்டார்; தொடர்ந்து அதன் அமைப்பாளராகத் திருமாவளவன் பொறுப்பேற்று நடத்தினார்; அவர் எட்டு ஆண்டுகள் கழித்து 1990-இல் அமைப்பின் பெயரைவிடுதலைச் சிறுத்தைகள்என்று மாற்றினார். 1999-இல் பாராளுமன்ற தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைக் கட்டமைத்தார், தலித் இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தினார்; இந்தக் காலகட்டத்தில்தான் அம்பேத்கர் நூற்றாண்டு விழா வந்தது; அவருடைய நூல்கள் அனைத்தும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்தன் அம்பேத்கர் சிந்தனை குறித்த சொல்லாடல் பெருகிய சூழலில் நிறப்பிரிகை, தலித், தலித் முரசு, போன்ற பத்திரிக்கைகள் தோன்றின. கூடவே தலித் பண்பாடு, தலித் இலக்கியம், தலித் வரலாறு, தலித் கலைகள், தலித் கலைஞர்கள், தலித் எழுத்தாளர்கள், தலித் அரங்கம், தலித் திரைப்படம், தலித் இயக்குநர் என்றெல்லாம்தலித்என்கிற இந்த ஒற்றைச் சொல் இன்றைக்கு இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களை ஒருங்கிணைத்துப் போராட்டத்தை வலுவாகக் கட்டமைக்கிற ஆற்றல்மிகு சொல்லாக வளர்ந்து நிற்கிறது. பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு பெயர்களில் சுட்டப்படும் அட்டவணை இனத்தினர் என்று அரசாங்கத்தால் சட்டப்படிக் குறிப்பிடப்படும் இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் இன்றைக்குக் கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை இந்தத்தலித்என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் தங்களுக்குள் அடையாளம் கண்டு ஒன்றாகத் திரள முடிகிறது; ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள முடிகிறது; இந்த வசதி இதுவரை பிராமணர்களுக்கு மட்டும்தான் இருந்தது. இப்பொழுதுதலித்என்ற இச் சொல் பயன்பாட்டின் மூலம் பட்டியல் இனத்தினருக்கும் வந்து வாய்த்துள்ளது.

சர்வதேச மட்டத்திலும், .நா. சபை அளவிலும் இந்தத் தலித் என்ற சொல் மூலம் தங்களின் மனித உரிமைக்குரலை மேலெடுத்துச் செல்ல முடிந்திருக்கிறது. நிறவேற்றுமையால் உரிமைகள் மறுக்கப்படும் அமெரிக்கக் கறுப்பின மக்களும் தங்களைத்தலித்என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் அளவிற்கு இதன் வீச்சு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கன்னட எழுத்தாளர் சித்தலிங்கையா மற்றும் கெயில் ஓம்வெத் போன்றோர்தலித்என்ற இந்தச் சொல்லை ஓர் இனத்தைக் குறிக்கிற பெயராக மட்டும் சுருக்கிவிடக் கூடாது, வேதனையின் குறியீடாய், சுரண்டல், வல்லாண்மை, முறைகேடு முதலிய கொடுமைகளை எதிர்க்கும் சின்னமாக இது மலர வேண்டும்என்றெல்லாம் ஆசைப்பட்டாலும்கூட, நடைமுறையில் இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களை ஒருங்கிணைக்கும் வலுவானதொரு சொல்லாக இது வினைபுரிந்து கொண்டிருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 16.2% மக்கள் இத்தலித் மக்கள், இவர்கள் ஒன்றாகத் திரண்டு எழுந்தால் என்ன ஆவது என்று அஞ்சுகிறது பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்லமை கொண்ட ஆளும் அதிகார வர்க்கம்.

 

Image may contain: 3 people

தொடர்ந்து இந்திய ஆளும் வர்க்கம் சமூக நீதியின் மேல் நிறுவப்பட்டுள்ள இட ஒதுக்கீடடுக் கொள்கையைக் குலைப்பது/ ஒரு தலித் அமைச்சரை வைத்தே உயர் சாதியினர்க்கும் இட ஒதுக்கீடு வேண்டுமெனச்சொல்லவைப்பது, தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை (மார்ச்சு, 31, 1989 இல் இயற்றப்பட்டது) மாற்றி வலுவிழக்கச் செய்ய முயல்வது பிறகு இச்சட்டத்திற் கெதிராக உயர் சாதியினரைத் தூண்டி விடுவது இப்படிப் பலவாறு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான செயல்பாடுகளைத் தந்திரமாகச்செய்து கொண்டே வருகிறது; அத்தகைய ஒரு தந்திரம்தான்தலித்என்ற சொல்லை ஊடகங்கள் பயன்படுத்தக் கூடாது, மத்திய, மாநில அரசுகளும் பயன்படுத்தக் கூடாது என்ற அறிவுறுத்தலாகும். எவ்வளவு பெரிய அதிகாரத்தோடு இயங்கும் ஓர் அரசு, ஒரு சொல்லுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றுகிறது என்றால் சொல்லின் ஆற்றலை என்னவென்று சொல்வது? பெயரிடுதலின் அரசியலும் பெயரழித்தலின்அரசியலும் எவ்வளவு நுட்பமாக நமது சமூக வாழ்விலும் அரசியல் வாழ்விலும் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பதைப் பொதுமக்களுக்கு அறிவுறுத்துவது மாற்று அரசியலை முன்வைக்கும் இயக்கங்களின் முதல் கடமையாகும் எனச் சொல்லத் தோன்றுகிறது

மேலும் திராவிட இயக்கத்தினர் ஆட்சியைப்பிடித்தவுடன் அரசியல் சட்டப்படித் தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிக்கச் சான்றிதழில்பட்டியலினம்”  என்றும் அல்லதுஆதித்திராவிடர்என்றும் குறிக்கலாமென்று சட்டம் இயற்றி ஆணை பிறப்பித்தார்கள்; அதுபோல இன்று இந்திய அளவில் உள்ள தலித் இயக்கங்கள் எல்லாம் ஒன்றுதிரண்டு, இந்தியா முழுக்க வழங்கப்படும் சான்றிதழ்களில்தலித்என்ற சொல்லைப் பயன்படுத்தும் வகையில் சட்டம் இயற்ற வேண்டுமெனப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்; இதுதான் தலையாய முதற்கடமை எனச் சொல்லத் தோன்றுகிறது. “முதலில் வார்த்தை இருந்ததுஎன்று இதைத்தான் பைபிள் சுட்டுகிறது போலும்

– க. பஞ்சாங்கம் 

 

Book Reviewஇன்றைய புத்தகம்

நூல் அறிமுகம்: தீமையின் உயிர்க் கூறுகளைக் காட்சிப்படுத்தும் மொழிபெயர்ப்பு நாவல் – பேரா.க.பஞ்சாங்கம்.

          தமிழிலக்கிய வெளியில் இன்று மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்கான அறுவடைக்காலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தாய்மொழியில் எழுதப்படும் இலக்கியங்களைவிட மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்குப் பெரிதும்...