archiveP.Antonyraj

Book Review

நூல் அறிமுகம்: சிங்கிஸ் ஐத்மாத்தவ்-ன் “என் முதல் ஆசிரியர்” – பெ. அந்தோணிராஜ் 

உங்களின் ஒரு புன்னகையால் மற்றவர்களுக்கு சந்தோசம் ஏற்படுமென்றால், அதை அள்ளி அள்ளி கொடுங்கள், தாராளமாக நடந்துகொள்ளுங்கள். அந்தப்புன்னகை மற்றவர்களுக்கு அவர்களின் வாழ்வின் அர்த்தத்தை உணர்த்துவதாக இருந்தால் மறுக்காமல் கொடுங்கள், உங்களின் ஒரே ஒரு புன்னகைக்காக எங்கேனும் ஒருவர் அதை எதிர்பார்த்திருக்கக்கூடும், அது கிடைக்கும் போது மகிழ்ச்சியில் அவர்கள் மிதக்கக்கூடும், அப்படிப்பட்ட வாய்ப்புகளை அவர்களுக்கு அளியுங்கள். பணமோ பொருளோ செய்யமுடியாத ஒரு செயலை அந்தப்புன்னகை செய்யக்கூடுமென்றால் அதை விருப்புடன் செய்து மகிழ்ச்சியடையுங்கள். புன்னகைகளில் புது உலகம் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம் உண்டு, அதற்கான முதல் அடியை எடுத்துவைப்பதற்கு தயாராகுங்கள். யாராவது நம்மை பார்த்து புன்னகைத்துவிட மாட்டார்களா என்று ஏங்கி நிற்பவர்கள் உண்டு, அவர்களுக்காக உங்கள் புன்னகைகள் மலரட்டும், அந்தப்புன்னகை அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை அளிக்கக்கூடும், ஒரு மனமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடும், வாழ்வில் ஒரு பிடிப்பை ஏற்படுத்தக்கூடும்.
அதனால் உங்கள் இதழ்கள் புன்னகைகளால் நிரம்பிவழியட்டும்.பூவுலகை புன்னகைகைகளால் நிரப்புவோம் நண்பர்களே. ஒற்றைப்புன்னகைக் கொடுத்த எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை பெற்ற ஒரு சிறுமி எவ்வளவு உயரத்தை அடைந்தாள் என்பதும், அந்த ஒற்றைப்புன்னகையை கொடுத்து அச்சிறுமியின் வாழ்க்கையை மேன்மைப்படுத்திய அவளுடைய முதல் ஆசிரியரைப்பற்றியும், முறையாக கல்வி பயிலவில்லையென்றாலும் அவனுக்கு தெரிந்த அளவுக்கு தெரிந்த வழியில், அதுவரையிலும் தலைமுறைகளாக எழுத்து என்று ஒன்று உள்ளது என்பது பற்றிய பிரக்ஞையில்லாமல் இருந்த அந்த “குர்க்குறீ “கிராமத்திற்கு கல்விn கற்பிக்கவந்தவன், அந்த ஒரு சிறுமிக்கு தேவதூதனாய் ஆனான். அந்தக்கதையை இப்போது பார்ப்போம்.
சோவியத் யூனியன் லெனின் ஆட்சியின் கீழ் வந்தபின்பு அதனுடைய ஒரு பகுதியான கிர்கிஸ்தான் என்ற பகுதி கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள நிலையில் உள்ளது. அப்போது குர்க்குறீ ஊரை சேர்ந்த தூய்ஷன்  ராணுவசேவையை முடித்துக்கொண்டு தனது ஊருக்கு ஆசிரியராக வருகிறான். அவனுக்கு அரசின் அனுமதி கிடைக்கிறது. அந்த ஊரில் பள்ளி நிறுவ கடுமையான எதிர்ப்பு வருகிறது. ஒரு குதிரை கொட்டடியில் பள்ளியை நிறுவுகிறான். ஊரில் யாரும் எந்த உதவியும் வழங்காத நிலையிலும் தனியொருவனாக செய்துமுடிகிறான். அந்த ஊரில் தாய் தந்தையற்ற ஒரு சிறுமி, தன் தாய்மாமனின் வீட்டில் அவர்கள் தயவில் வாழ்ந்துவருகிறாள். பெயர் அல்டினோய்.
ஒருநாள் சிறுவர்கள் அனைவரும் அவரவர்கள் வீட்டிற்கான கணப்பு அடுப்பிற்காக எரு பொறுக்கச்செல்வார்கள், சென்றவர்கள் தூய்ஷனின் பள்ளிக்குச்செல்கின்றனர். புன்முறுவலோடு அவர்களை வரவேற்று அன்பொழுக பேசுகிறான். அல்டினோயின் மனம் மகிழ்கிறது. பொறுக்கிய எருவை தூய்ஷனின் பள்ளியில் போட்டுவிட்டு, மீண்டும் பொறுக்கச் செல்கிறாள். நேரம் ஆனதால் அவளின் மாமியிடம் வசவு பெறுகிறாள்.
என் முதல் ஆசிரியர் (சிங்கிஸ் ...
தூய்ஷன் ஊருக்குள் வந்து பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பச்சொல்லி பெற்றோர்களை வேண்டுகிறான். வேண்டா வெறுப்பாக பள்ளிக்கு அனுப்புகின்றனர், அவர்களில் ஒருத்தியாக அல்டினோயும் செல்கிறாள். ஆசிரியரின் அன்பினால் அவளுடைய எதிர்காலத்தை வெளிச்சமாக்க முயல்கிறாள். மற்றவர்களைக்காட்டிலும் சிறந்தவளாக இருக்கிறாள்.
ஆசிரியர் தூய்ஷன் அல்டிநோயிக்கு மேற்படிப்பு படிக்க நகரத்திற்கு அனுப்பஎண்ணுகிறார். இடையில் மாமியால் இவளுக்கு ஆபத்து வருகிறது. ஒருநாள் தூய்ஷனை அடித்து போட்டுவிட்டு அல்டினோயை கடத்துகிறார்கள். ராணுவ வீரர்களின் உதவியில் அல்டினோயை மீட்டு, நகரத்திற்கு அனுப்புகிறார் தூய்ஷன்.
படித்துமுடித்து உயர்ந்தவேலைக்கு செல்லும் அல்டினோய் தூஷ்யனை தேடுகிறாள். தூய்ஷன் அங்கு இல்லை என்று அறிகிறாள். அவள் மனம் முழுக்க அவளின் முதல் ஆசிரியர்தான் நிரம்பியுள்ளார். பல ஆண்டுகளுக்குப்பின் அதே கிராமத்திற்கு பள்ளிக்கட்டிட திறப்புவிழாவிற்கு செல்கிறாள். அப்போது அங்கு வயதான, திருமணமே செய்யாமல் இருக்கிற தூய்ஷன் அதே ஊரில் போஸ்ட்மேனாக இருப்பதை கேள்வியுறுகிறாள். ஆனால் அவள் மனம் நிரம்பிய அவளின் முதல் ஆசிரியனை ஏதோ ஒரு காரணத்தினால் சந்திக்காமலேயே திரும்புகின்றாள். தூய்ஷனும் அல்டினோயும் நட்டி வளர்த்த இரண்டு பாப்ளார் மரங்கள் மட்டும் அந்தக்குன்றுப்பகுதியில் அவர்களின் நினைவுகளை சுமந்து நிற்கிறது.
முதல் ஆசிரியர் – நூல் அறிமுகம் | Read ...
தூஷ்யனுக்கும் அல்டிநோயிக்கும் இடையில் இருந்த உறவு பவித்ரமானது. அல்டினோயை நகரத்திற்கு அனுப்பும்போது அந்த ரயிலுடனே ஓடிவந்த தூய்ஷன் என்ன சொல்ல வந்திருப்பார்?
வயதான பின்பும் தன் இறுதிக்காலம் வரை இந்தஊருக்குத்தான் சேவைசெய்வேன் என்று திருமணம் முடிக்காமல் அதே ஊரிலிருக்கும் தூய்ஷனை, இந்த உலகத்திலேயே அல்டினோயால் மிகவும் நேசிக்கப்பட்ட  அந்த தூய்ஷனை ஏன் சந்திக்காமலே சென்றாள்?
சேவையும் கடமையும் தன் இருக்கண்களாகக் கருதும் தூய்ஷன் நம் மனதில் நிறைகிறார்.
அன்பினை மாணவர்களுக்கு பகிர்ந்து அள்ளித்தரும் ஆசிரியர்களுக்கு குழந்தைகள் தங்களை அர்ப்பணிக்க எப்போதும்தயாராகவே உள்ளனர்.
அருமையான ஒரு நாவல்.
அன்புடன் =பெ. அந்தோணிராஜ் 
தேனி.
நூல் = என் முதல் ஆசிரியர் 
ஆசிரியர் =சிங்கிஸ் ஐத்மாத்தவ் 
தமிழில் =தா. பாண்டியன் 
பதிப்பு NCBH
விலை =ரூ. 75/
Book Review

நூல் அறிமுகம்: தொ. பரமசிவனின் நேர்காணல்கள் – பெ. அந்தோணிராஜ் 

      நேர்காணல்கள் அனைத்தும் பல்வேறு ஆளுமைகளால் காணப்பட்டுள்ளுள்ளன ஆர் ஆர் சீனிவாசன், மணா, ஷோபாசக்தி, ஆ. தனஞ்செயன்,...
Book Review

நூல் அறிமுகம்: தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு – பெ. அந்தோணிராஜ்

       தமிழ் எழுத்துக்களை படைத்தவர் யாரென தெரியுமா?! எழுத்துக்கள் எத்தனை கதியாக பிரிக்கப்பட்டுள்ளது எனத்தெரியுமா?! எழுத்துக்களில் உள்ள...
Book Review

நூல் அறிமுகம்: அறிவியல் அறிவோம் – பெ. அந்தோணிராஜ்

நூலின் ஆசிரியர் த, வி. வெங்கடேஸ்வரன் டெல்லியிலுள்ள மத்தியஅரசின் தேசிய அறிவியல் பிரச்சார மய்யத்தில் முதுநிலை விஞ்ஞானியாக உள்ளார். சிறந்த...
Book Review

நூல் அறிமுகம்: எழுத்தாளர் ராணா அயூப்பின் “குஜராத் கோப்புகள்” – பெ. அந்தோணிராஜ்

"குஜராத் கோப்புகள்"  2016 ல் முதல்பதிப்பாக வந்து அதே மதத்தில் இரண்டாம் பதிப்பையும் கண்ட நூல்.      இதன்...
Book Review

நூல் அறிமுகம்: திருக்குறள் ஒரு மருந்தகம் – பெ. அந்தோணிராஜ் 

     நூலாசிரியர் தமிழ் மொழி ஆர்வலர். செயற்பாட்டாளர். குறள் வழித்திருமணங்களை நடத்தி வைப்பவர். இதுவரையிலும் 150 க்கு மேற்பட்ட...
Book Review

நூல் அறிமுகம்: ராசத்தியும் ஒரு பக்கிரியும் (சிறுகதைகள்) – பெ.அந்தோணிராஜ்

    நூலாசிரியர் தாமரை செந்தூர்பாண்டி ஏறத்தாழ எழுநூறு சிறுகதைகள், ஐம்பது நாவல்கள், நாடகங்கள், திரைப்படக்கதைகள், வசனங்கள் சுமார் 45வருடகாலமாக...
Book Review

புத்தக அறிமுகம்: வேதகாலம் -பெ. அந்தோணிராஜ் 

கடந்த பத்துப்பதினைந்து ஆண்டுகளாக வேதகாலத்துடன் வேறு சில பண்புகள் இணைக்க முயற்சி பெருமளவில் நடந்துகொண்டுள்ளது. ஊடகங்கள் தங்களுக்கேற்ற அறிவைக்கொண்டு வேதகால மக்கள்தாம் ஹரப்பா நாகரிகத்தை உருவாக்கியவர்கள்...
1 2 3
Page 1 of 3