archivenew tamil books

Book Reviewஇன்றைய புத்தகம்

அங்கீகரிக்கப்பட்ட பால்ய கனவு..!

கதைக்குள் நுழையும் முன்பே ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அது, 7 வயதான சமர்சேந்தனின் நூல் பற்றிய மதிப்புரை ஆகும். சிறுவர் நூலொன்றை ஒரு சிறுவன் எப்படி உள்வாங்கிக் கொண்டான் என்று அறிந்து கொள்ள முடிந்தது. அதுவும் அச்சிறுவன் பொறாமைப்பட வைக்குமளவு மிகச் சிறந்த வாசகன். கடையில் வாங்கிய புத்தகத்தை, வீட்டுக்குப் போகும் வழியிலேயே படித்து முடிக்குமளவு அதி தீவிர புத்தகக் காதலன். அவனது மதிப்புரையில் இருந்த ஓர் அட்டகாசமான கேள்வி மிகவும் யோசிக்க வைத்தது.

“சுறா மட்டும் ஃப்ரெண்ட்லியா இல்லாமல் ஏன் வயலன்ஸா இருக்குது?”

‘கதையில் ஏன் வில்லன் வேண்டும்?’ என்பதாக அந்தக் கேள்வியைப் புரிந்து கொண்டேன். வில்லன்களைச் சிருஷ்டிப்பது பெரியவர்கள் தானோ? சிறுவர்கள் உலகில் அனைவருமே நண்பர்கள் தான் போலும். ஆக, எழுத்தாளரினுடைய ஜம்பம், பிரயத்தனம் எல்லாம் சமர்சேந்தனின் ஒரே ஒரு கேள்வியில் நொறுங்கி விட்டதாகவே பட்டது. சமரைப் போலவே, கதையில் வரும் அமீருக்கும் சுறா மீது ஒரு பரிதாபம் எழுகிறது. ஆனால் பாலபாரதி மிகச் சாதுரியமாக, சமர் அமீர் என இருவரையுமே சமாதானப்படுத்தும் விதமாக, சுறாவின் அத்தியாயத்தில் ஒரு திருப்பத்தை வைத்துள்ளார். அன்பையும், பிறருக்கு உதவிடும் குணத்தையும், உயிர் நேசிப்பையும் வலியுறுத்திவிடுகிறார் பாலபாரதி.

‘ஆமை பேசுமா?’ என்று ஒரு கேள்வியை எழுப்பி, அதை லாஜிக்கலாக ஏற்றுக் கொள்ள ஒரு பதிலையும் தந்துள்ளார் பாலபாரதி. ஆமை பேசுகிறது, துடைப்பம் பறக்கிறது, பறவை கோபப்படுகிறது, பாண்டா கரடி குங்ஃபூ மாஸ்டராகிறது என்பவையெல்லாம் சிறுவர்களை மிகவும் குதூகலிக்கச் செய்யும். ‘அதெப்படிப் பேசும்? பறக்கும்?’ என்ற குதர்க்கமும், லாஜிக் தேடலும் இல்லாத மனம் வாய்த்ததால் தான் சிறுவர்களால் கதையை மனதார ரசித்து மகிழ முடிகிறது. முதல் அத்தியாயத்தில் மட்டுமே இப்படி லாஜிக்கல் குறையை நீக்க மெனக்கெட்டுள்ளார் பாலபாரதி. அதன் பின் சிறுவர்களின் கை பிடித்துக் கொண்டு, அதி அற்புதமான உலகத்திற்குள் நுழைந்து விடுகிறார். அனேகமாக கதையில் வரும் ஜுஜோ எனும் ஆமை, எழுத்தாளர் என்றே நினைக்கிறேன்.

அகநாழிகை: கடலுக்குள் ஒரு சாகசப் பயணம்

கதையினோடு, தகவல்களையும் கொடுத்து சிறுவர்களின் சாகச உள்ளத்துக்கு மட்டுமல்லாமல் அறிவுக்கும் தீனியிடுகிறார் பாலபாரதி. உதாரணம், ஜூஜோ (ஜூனியர் ஜோனதன்) என்ற பெயரை ஆமைக்கு ஏன் வைத்தார் என்ற தகவலைக் கட்டம் கட்டியுள்ளதைச் சொல்லலாம்.

இந்நூல், மிக முக்கியமான நூலாகக் கொள்ள இன்னுமொரு சிறப்புக் காரணம் உள்ளது. சுற்றுச் சூழல் பற்றிய புரிதலை மிக எளிமையாகச் சிறுவர்கள் மனதில் இந்நூல் விதைக்கிறது. வாசிக்கும் பழக்கமுடைய சமருக்கு சுற்றுச் சூழல் பற்றி முன்பே சொல்லப்பட்டிருந்தாலும், கதையோடு வரும் நீல்ஸ் எனும் திமிங்கலத்தின் மூலம் மாசுபடாத சுற்றுச் சூழலின் அவசியம் மிக ஆழமாக சமரின் மனதில் பதிந்ததாகச் சொல்கிறார் அவனது அம்மா சுந்தரி நடராஜன். அடுத்த தலைமுறையினரிடம், இன்றைய சூழலின் நிலையைப் பற்றிக் குற்றவுணர்வோடும், அவற்றைப் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தைப் பற்றிப் பொறுப்புணர்வோடும் பெரியவர்கள் உரையாட வேண்டியது மற்ற அனைத்தையும் விடப் பிரதானமாகிறது. அதை இலகுவாகச் சாத்தியமாக்கும் பாலபாரதியின் இந்நூல் கொண்டாடப்பட வேண்டிய ஒரு பொக்கிஷமே!

கொண்டாடித் தீர்க்க மற்றுமொரு காரணத்தையும் உள்ளடக்கியுள்ளது புத்தகம். அது, கி.சொக்கலிங்கத்தின் ஓவியங்கள். கடல் குதிரை, திருக்கை மீன்கள், ஜெல்லி மீன்கள், திமிங்கலம், ஆக்டோபஸ், சுறா, டால்ஃபின்கள் போன்ற ஓவியங்களால் நம்மை அற்புத உலகில் திளைக்க வைத்துள்ளார்.

 

கடல் சூழ்ந்த ராமேஸ்வரத்தில் பிறந்த பாலபாரதிக்கு, கடலுக்குள் சென்று பார்க்க வேண்டுமென்பது அவரது சிறுவயது கனவு. அந்தக் கனவு எளிமையான வார்த்தைகளால் நிறைவேறியுள்ளதா என அறியவே, சமருக்கு இக்கதையின் அத்தியாயங்களை அனுப்பியுள்ளார் பாலபாரதி. பாலபாரதியின் கனவையும், நூலின் எளிமையையும் ஒருங்கே அங்கீகரித்துள்ளான் சமர்சேந்தன்.

– தினேஷ் ராம்

நன்றி ithutamil.com

Book Reviewஇன்றைய புத்தகம்

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய “கவிதையின் கையசைப்பு” ஓர் அறிமுகம்…!

கவிஞனின் நிலவறையாகும் மொழி. கவிதை என்பது அலங்கரிக்கப்பட்ட உரையல்ல. அது ஆன்மாவின் அழுகை, அலறல், விகசிப்பு; சில நேரங்களில் அதன்...
Book Reviewநூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: உள்ளங்கையில் உடல் நலம்

 "நோய்கள் என்பவை விபத்துகள் போன்றவைதான். நல்ல ஆரோக்கியத்தோடு வாழும் மனிதர்களைக் கூட தீவிர நோய் வீழ்த்தி விட முடியும். ஆயினும்...
Book Reviewநூல் அறிமுகம்

நோக்கமும் வழிகளும் – பேரா. செ. கனிமொழியின் மதிப்புரை…!

விளதீமிர் மிஹனோவ்ஸ்கியின் 'நோக்கமும் வழிகளும்' என்ற இந்நாவல் நவீனங்களுக்கு வழித்தடம் பதிக்கும் இக்காலகட்டத்தில் 21ஆம் நூற்றாண்டாகிய நாளையை நோக்கி நம்மை...
BookfairChennai

டாக்டர் கலைஞர் பொற்கிழி மற்றும் விருதிற்கு தேர்வானவர்களின் பட்டியலை அறிவித்தது பபாசி…!

2020 -ஆம் ஆண்டிற்க்கான டாக்டர் கலைஞர் பொற்கிழி மற்றும் விருதிற்கு தேர்வானவர்களின் பட்டியலை பபாசி அறிவித்துள்ளது· விருது வழங்கும் விழா,...
Book Reviewநூல் அறிமுகம்

நூல் அறிமுகம்: “டிஜிட்டல் இந்துக்கள்” எனும் புதிய சாதிய இந்துத்துவ பாசிச மக்கள்திரள் – ஜமாலன்

'சாதியும். முதலாளித்துவமும் இணையும் இந்தியச் சூழலில், மாற்று அரசியலின் வளர்ச்சிக்கான பெரிய இடையூறு தலித் மற்றும் இடதுசாரி இயக்கங்களுக்கு இடையே...
நூல் அறிமுகம்

நூல் அறிமுகம் : உண்மைச் சங்கதிகள் சிறுகதைகளாகி இருக்கின்றன – விஜயன்

பதினெட்டு சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பின் சிறுகதைத் தலைப்புகளை படித்தவுடன் இதுநாள் வரை நான் அவருடன் உரையாடியபொழுது அவர் என்னிடம் பகிர்ந்து...
இன்றைய புத்தகம்

தோழர் இ.எம்.எஸ் நினைவுதினம்…இ.எம்.எஸ் நூல்களை வாசியுங்கள்…பாரதி புத்தகாலய வெளியீடுகள்

இந்தியாவின் பிரத்யேக நிலமைகளுக்கு உகந்த சோசலிசத்திற்கான போராட்டத் திட்டம் ஒன்றை அறிவியல் பூர்வமாக வரைந்தளிக்க முதன்மைப் பங்காற்றியவர். இந்தியாவின் போராட்டப்...
மொழிபெயர்ப்பு

மொழிபெயர்ப்பு | க. நா. சுப்ரமண்யம்

மொழிபெயர்ப்பு என்பதைச் சாதாரணமாக ஒரு கலை என்று சொல்வது வழக்கமில்லை. கலையோ, தொழிலோ - மொழிபெயர்ப்பு என்பது இலக்கியத்திலே ஒரு தனித்...
மொழிபெயர்ப்பு

படிக்க வேண்டிய மொழிபெயர்ப்பு நூல்கள்.

மொழிபெயர்ப்பின் உன்னதம் குறித்து மொழிபெயர்ப்பாளர் தேவதாஸ் அய்யாவும் திறனாய்வாளர் முருகேசபாண்டியன் அய்யாவும் பேசினார்கள். மணிகண்டன், தேவதச்சன், வினாயகமுருகன், ஹூபர்ட், மதுமலரன்,...
1 2 3 5
Page 1 of 5