archiveKodichi

Book Review

நூல் அறிமுகம்: கொடிச்சி – கந்தக பூக்கள் ஸ்ரீபதி சிறுகதைகள் – சுப்ரபாரதிமணியன்

பொதுவாக வானொலி நிலையங்களில் வாசிக்கப்படும் சிறுகதைகளை யாரும் தொகுப்பில் சேர்ப்பதில்லை .காரணம் வெளிப்படையாக கருத்துக்களை விவரங்களை பல்வேறு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு சொல்லவேண்டியிருக்கிறது. ஆனால் ஸ்ரீபதி இந்த தொகுப்பில் சில கதைகளை வானொலி நிலையத்தில் படித்தவற்றை இணைத்திருக்கிறார் .அது ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி.

பிறகு வேறு சில கதைகளிலும் கூட அந்த வானொலி நாடகங்களில் தாக்கங்கள் லேசாக இருப்பது தெரிகிறது அது குறைவாக கொள்வதற்கு இல்லை .அந்த வானொலி நாடக தொழில்நுட்ப வடிவ விஷயங்களை சிலவற்றை வேறு கதைகளில் கொண்டு வருகிறார். அதன் மூலமாக அந்த கதைகளின் வடிவமைப்பை சொல்லும் விதத்தை மாற்றி அமைத்திருக்கிறார் என்பது விசேஷமானது. இந்த சிறுகதைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன .எல்லாம் யதார்த்தவாத கதைகள் தான் ஆனால் அவற்றை ஆரம்பம் முதல் இறுதிவரை நேர்கோட்டு தன்மையில் சொல்லாமல் அவற்றைப் பிரித்துப் போட்டு ஏதோ ஒரு வடிவம் கொண்டு வருவது போல அவர் இதை செய்திருக்கிறார் .முதல் கதையில்  உதவும் மனப்பான்மை கொண்ட அவனுக்கு பெண் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. அப்படி தேடிப்பிடித்து திருமணம் செய்து கொள்கிறான் .ஆனால் வருகிற மனைவி வேறு விதமான குணங்களை கொண்டவளாக இருக்கிறாள். இரண்டு பேரும் முரண்படுகிறார்கள் இந்த முரண்பாட்டை ஒவ்வொருவரும் ஒவ்வொரு அத்தியாயத்தில் சொல்வது போல இந்த கதை அமைந்திருக்கிறது

ஒருவரை நினைத்து ஒருவர் மருவது ..எண்ணி கண்ணீர் விட்டுக் கொள்வது என்ற ரீதியில் இந்த கதை அமைந்திருக்கிறது ..இன்னொரு கதையில் தாழ்த்தப்பட்டவர்கள் சார்ந்த விவாதங்கள் இருக்கின்றன . தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் யார் எப்போது அதற்கான விடையும் இந்த கதையில் அலசப்படுகிறது . படித்தவராக இருந்தாலும் கருவறைக்கு முன்னால் செல்ல முடியாது. அதற்கு காரணம் என்ன நமக்கான சொர்க்கத்தை நாம்தான் உருவாக்க வேண்டும் என்ற விவாதங்கள் அந்த கதையில் இருக்கின்றன .இந்த கதையின் வடிவம் கூட ஒரு வானொலி நாடகத் தன்மையுடன் இருக்கிறது .சோட்டா பீமும் கதை கூட .அப்பா அம்மா கதையில் குழந்தையிடம் சோட்டா பீம் கதாபாத்திரம் கொண்டிருக்கிற ஆழமான பாதிப்பை பற்றி சொல்கிறது .இப்படி குழந்தைகளுக்கான தொலைக்காட்சிகள், குழந்தைகளுக்கான கார்ட்டூன் சித்திரங்கள் கதையில் பல இடங்களில் சாதாரணமாக வந்து போகின்றன ,கல்வித்துறை பற்றிய ஒரு சிறந்த கிண்டலாக ஒரு கதை அமைந்திருக்கிறது ,500 ரூபாயும் ஆய்வுக் கட்டுரையும் என்பது தலைப்பு, இந்த தலைப்பிலேயே இது நாம் புரிந்துகொள்ளமுடியும் கல்வித்துறை சார்ந்த ஆய்வுகள் சமர்ப்பித்தல் பு புத்தகங்கள் கருத்தரங்குகள் போன்றவற்றை வெகுவாக கேலி செய்திருக்கிறது இந்தக் கதை .ஒரு திருமணத்தை ஒளிபரப்பாக செய்கிற ஒரு நிகழ்ச்சி பற்றிய கதை ஒன்று இருக்கிறது. எல்லாம் முகநூல் நண்பர்கள் .அவர்கள் அந்த முகநூலில் பகிர்ந்து கொள்ளும் தன்மையும் அதனால் ஏற்படுகிற உணர்வுகளும் நட்பும் பற்றிய பல விமர்சனங்கள் இந்த கதையில் இருக்கிறது.

 ஒரு கதையின் தலைப்பு நாவல் .சில அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது நாவல் என்ற சிறுகதை .இந்த நாவல் எழுத வேண்டியவர் கடைசியில் படுக்கையில் கிடந்து புலம்புகிறார்.

ஒரு கதையின் ஆரம்பம் எப்படி இருக்கிறது பாருங்கள் இப்படி ” நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை எனக்கு வலதுபுறம் கடவுள் இறந்து கிடக்கிறார் இ.டதுபுறம் சாத்தான் இறந்து கிடக்கிறார் என்ன செய்வது என்று தெரியவில்லை .உங்கள் முன் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் ..இப்படி நல்ல ஆரம்ப நிலை பல கதைகள் சொல்லி உள்ளார்.

 இந்த தொகுப்பின் தலைப்பான குட்டி கதை வேறொரு கோணத்தில் இருக்கிறது ஆண் தன் சொத்து மகளுக்கு எந்த வகையிலும் போகக்கூடாது என்று பார்க்கிறார் பெண்டாட்டியிடமிருந்து காலங்காலமாக பணத்தை பிடுங்கிக் கொள்ள ஆசைப்படுகிறான். இந்த முரண்பாட்டை இந்த கதை சொல்கிறது .இந்த கதையில் வருகிற அம்சங்களில் நான் என்பது ஒரு குறியீடாகும் ஆகிவிட்டது.

 ஸ்ரீபதி தன்னுடைய வெவ்வேறு வடிவம் முயற்சிகளால் இந்த சிறுவர்களை வடிவமைத்திருக்கிறார். அதுவே சுவாரஸ்யமான வாசிப்பிற்கு வழி சொல்கிறது தொடர்ந்து இலக்கிய முயற்சிகளிலும் இலக்கிய செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வரும் ஸ்ரீபதியின் ஒரு முக்கியமான முயற்சி இந்த நூல். இதை வெளியிட்டு இருக்கிறார்கள் கந்தகப்பூக்கள்  பதிப்பகம் சிவகாசி.

 இதன் விற்பனையாளர் பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர், விலை ரூபாய் 100