archiveHaiku Poems

Poetry

சு. இளவரசி ஹைக்கூ கவிதைகள்

அலாரத்தை
முந்தி ஒலித்தது
அதிகாலை பறவைகளின் கீச்சொலி

உணவூட்டுகையில்
உணவைச் சிதறியது குழந்தை
வயிறு நிறைந்தது நாய்க்குட்டிக்கு

தனித்திருந்த பொழுது
நினைவலைகள் சுழன்றன
காற்றாடியின் துணையோடு

மறுக்கப்பட்ட மலர்கள்
தினமும் மலர்ந்தன
கைம்பெண்ணின் புடவையில்

ஆடும் நாற்காலிக்கு
ஆறுதலாயிருந்தது காற்று
தாத்தா இறந்த பிறகு

பேம்பர்ஸ் வாங்க
கடைக்குச் சென்றான் குழந்தையோடு
படுக்கையில் கிடக்கும் அம்மாவிற்காக

துணிகளை
உலர்த்திக் கொண்டிருந்தாள்
வானொலியில் மழை எச்சரிக்கை

கடிகார முள்ளின்
வேகத்தால்
தொண்டையில் சிக்கியது மீன்முள்

மூதாட்டி இரவின்
தனிமையைப் போக்கியது
முற்றத்தில் விழுந்த நிலா

அதிகாலை சிணுங்கியது
அப்பா வைத்த அலாரம்
அவரோ மூச்சற்றுக் கிடந்தார்

                        சு. இளவரசி.
 சிவகங்கை.

Book ReviewPoetry

நூல் அறிமுகம்: தடையினை தகர்த்து தடம் பதித்துச்செல்லும் இக்கவிதைகளை கண்டுகளிப்போம்.. –   செல்வக்குமார் இராஜபாளையம்

தடையின் தடத்தில்  -------------------------------- கவிஞர் துரை.நந்தகுமார் அவர்களின் தடையின் தடத்தில் ஹைக்கூ கவிதைகள் நூல் என் கையில் தவழக்காரணமானவர் தம்பி...
Poetry

ச.அனுசுயா ஹைக்கூ கவிதைகள்

1. சமபந்தி போஜனம் வீட்டு விசேஷங்களில் இல்லை மதுக்கடையில் 2. செங்குளத்தில் எட்டிப்பார்க்கும் தாமரை அதிகாலை கதிரவன் 3. கொட்டிக்...
Poetry

நீட் முடிவுகளும் ஹைக்கூ கவிதைகளும் – ஜமீல் அஹமத் 

மாணவர்கள் கொலை சொல்கிறார்கள்....... நீட் கொன்றது! நீட் வந்த நோக்கம் அறியா மாணவர்கள் நம் நினைவுகளில்! மாணவர்களின் கனவு தடை...
Poetry

பாரதியார் பாடல்  வரிகள் கொண்டு ஹைக்கூ முயற்சி – சாந்தி சரவணன்

பாரதியார் பாடல்  வரிகள் கொண்டு ஹைக்கூ முயற்சி செய்துள்ளேன். பாரதியார் நினைவு நாள் ஹைக்கூ வேத புரத்திலே வியாபாரம் பெருகுது...
1 2
Page 1 of 2