archivecorona virus

Article

கொரோனா -19 பீடையும் பொருளாதார நெருக்கடியும் – வே.மீனாட்சி சுந்தரம் 

அண்மையில் (ஜூலை ,11, 2020) ரிசர்வ் வங்கி கவர்னர் “,கொரோனா-19 தொற்றால் விளைந்த ஆரோக்கிய சீரழிவும் பொருளாதார நெருக்கடியும் கடந்த நூறு அண்டுகளில் இல்லாத ஒன்று” என ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியதை  ஆங்கில பத்திரிகைகள் தலைப்பு செய்தியாக வெளியிட்டன.

யுத்தம், பஞ்சம், பிளேக், காலரா, போன்ற கொள்ளை நோய்கள் கொரோனா-19விட அதிகமான உயிர்களைப் பறித்திருக்கின்றன.. ஆனால் இது போல் ஆரோக்கியமானவர்களை  ஊரடங்கால் வீட்டிலே முடக்கி பொருளாதார சக்கரத்தைச் சுழலவிடாமல் தடுக்கவில்லை என்ற எதார்த்தநிலையை அவர் சொல்கிறார் என கருதலாம்..அதைவிட .நூறாண்டுக் காலத்தில் இல்லாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட இத்தருணத்தில் கொரோனா தொற்று பரவி கஷ்ட்த்தை அதிகப்படுத்தியதே என  அவர் கவலைப்படுவதாகவும் ஒருவர் கருதலாம். .

பொதுவாக இந்தியாவில் “அரசியல் பொருளாதார கோட்பாடுகள்” ஒரு அரசியல் பிரச்சினையாகவே ஆவதில்லை. பொருளாதார பிரச்சினைகளை அரசியலாக்கக் கூடாது என்பது  அரசியல் கட்சிகளின் புரிந்துணர்வாக இருக்கிறது.’

இட ஒதுக்கீடு.– நதி நீர் தாவா–  எல்லை பிரச்சினை–, அதிகாரம் யாருக்கு — அரசாங்க தொடர்பு மொழி– மத நம்பிக்கைகள்–. ஜல்லிக்கட்டு–. அண்டை நாட்டுப் பிரச்சினைகள்” இவைகள் எல்லாம் உருவாக்கும் அரசியல் அதிர்வுகள் போல் பொருளாதார பிரச்சினைகள் அதிர்வை உருவாக்குவதில்லை.

இந்த அக்கரையின்மைக்கு முக்கிய காரணம் பொருளாதார பிரச்சினை ஒரு சமூகப் பிரச்சினையல்ல,  தனி நபர் குடும்ப பிரச்சினை, விலை உயர்வு. வேலையில்லா திண்டாட்டம், வறுமை கல்வி, ஆரோக்கியம் பெறுவதில் உள்ள சிக்கல்கள் இவைகளுக்கும் அரசிற்கும் சம்பந்தமில்லை என்ற பார்வை பரவலாக இருப்பதாகும்.

இப்படிப்பட்ட பார்வை பரவலாக இருக்கிற இன்று  பொருளாதார நெருக்கடிகள் கடந்த நூறு ஆண்டுகளாக அரசு தயவில் வளர்ந்து இன்று பூதாகாரமாக ஆகி மக்களைத் தவிக்கவைக்கிறது என்றால்  வரலாற்றுப் பார்வையோடு பார்ப்பவர்கள் தவிர மற்றவர்கள் ஏற்க மாட்டார்கள். இருப்பினும் அந்த பார்வையோடு இன்றைய நெருக்கடி என்ற முள்மரம் எவ்வாறு வளர்ந்தது என்பதை இந்த கட்டுரை அலசுகிறது.

இந்திய பொருளாதார கட்டமைப்பின் பூர்வோத்திரம் மற்றும் அதற்கும் மேலைநாட்டுப் பொருளாதார கட்டமைப்பிற்கும் உள்ள வேறுபாடுகள்  பற்றிய தெளிவு இல்லாமல் இன்றைய நெருக்கடியின் ஊற்றுக்கண்ணைக் காண இயலாது. .நமது தனித்துவமான பாதை எதுவாக இருக்க முடியும் என்பதை வரலாற்றுப் பார்வையோடு நெருக்கடிக்கான காரணங்களையும் அதற்கான தீர்வுகளையும் தேடுவது அவசியம். அதுவே இந்த எழுத்தின் நோக்கமுமாகும்.

மன்னர்கள், நவாபுகள் கால இந்தியப் பொருளாதார கட்டமைப்பு

DEVIYAR ILLAM: January 2011

நமது இன்றைய பொருளாதார கட்டமைப்பு ஆயிரம் ஆண்டுக் கால இந்தியப் பொருளாதார கட்டமைப்பின் சில அடிப்படை கூறுகளை இன்றுவரை  பேணுகிற   தனித்துவமான தன்மைகளைக் கொண்டது.  கடந்த ஆயிரம் ஆண்டுகளில் ஆட்சியாளர்கள் மாறியிருந்தாலும்  இந்த கூறுகள் மட்டும் மாறவில்லை

 அவைகளாவன 1) நிலையான சாதி கட்டமைப்பின் மீது கட்டப்பட்ட பொருளாதாரமாகும்  விவசாயமும் ,கைத்தொழிலும் ஒன்றை ஒன்று சார்ந்து குலத் தொழில்களாகவே வளர்ந்தன. 2) நிலம் அரசுடைமையாகவும் தனியார் உடைமையாகவும் இருந்தது 3) விவசாயத்திற்கு அவசியமான பொதுச் சேவைகள் அரசின் கடமையாக இருந்தது. நீர் பாசனவசதி, சாலை அமைத்தல் கோவில்கள் கட்டுதல், பஞ்சகால உதவி அரசின் கடமைகளாக இருந்தன.  4) கிராமத்தில் உருவாகும் உபரியை வரி மற்றும் குத்தகை இரண்டையும் இனைத்து  கையிகந்த தண்டமாக அரசர்கள் வசூலித்தனர். இது பற்றி ஒரு குறளே உள்ளது.

“கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம்”

இந்த 4 தனித்துவ அம்சங்களைக் கொண்ட இந்தியாவின் ஆதிகால அரசியல் பொருளாதார கட்டமைப்பில்  18ம் நூற்றாண்டின் கடைசிக் காலத்திலிருந்து “பிரிட்டிஷ் ராணி மற்றும் பிரிட்டிஷ் மன்னர்கள்  பல மாற்றங்களைக்  கொண்டுவந்தனர். துவக்கத்தில் அது எப்படி இருந்தது  என்பது பற்றி  மார்க்ஸ் பகடி  செய்கிறார் “ பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பு வரை அதாவது மொகலாயர்கள் ஆட்சிவரை இந்தியாவில் அரசு என்பது மூன்று இலாகாக்கள் கொண்டதாக இருந்தது.

அ) நீர்ப்பாசன வசதி.சாலை அமைப்பது போன்ற சேவைகளைச் செய்யும் இலகா, ஆ) வரி,கப்பம் என்ற பெயரில் மக்களின் உபரியைக் கொள்ளை அடிக்கும் உள் நாட்டு இலகா (இ) பிறநாடுகளில் புகுந்து கொள்ளை அடிக்கும் அந்நிய இலகா என்று மூன்று இருந்தன. பிரிட்டிஷ் ஆட்சியில்  பொதுச்சேவை இலகா மூடப்பட்டது உள்நாட்டுக் கொள்ளை  வெளிநாட்டுக் கொள்ளை என்று  இரண்டு இலகாகளும் செயல்பட்டன என்று குறிப்பிடுகிறார். இது மார்க்ஸ் வாழ்ந்த காலத்து நிலைமையாகும்.

Britain stole $45 trillion from India over 173 years, says top ...

அதற்குப் பின்னர் பிரிட்டிஷ் அரசு பொருளாதார கட்டமைப்பில் ஏற்படுத்திய மாற்றங்கள் இரண்டடுக்கு பொருளாதார கட்டமைப்பாக இருந்தது  ஏழை இந்தியர்களை வாழவைக்கும் கிராம பொருளாதார (விவசாயம்+கைத் தொழில் பின்னர் குடிசைத் தொழில் எனப் பெயர் பெற்றது,) கட்டமைப்பு. பிரிட்டிஷ் பிரபுக்களையும் இந்திய மேல் சாதியினர்களையும் வாழவைக்கும் ஏற்றுமதி சார்பு கொண்ட  எந்திரத்  தொழில்களையும் அதற்கு அவசியமான ரயில் மின்சாரம் சுரங்கம்  போன்ற கட்டமைப்பையும் கொண்ட பொருளாதார கட்டமைப்பு.

இந்த கைக்கும் வாய்க்கும் எட்டுகிற எளிய கிராமப்புற தெய்வீக பொருளாதாரமும்- ஆடம்பர பிரபுத்துவ சொர்க்கத்தை உத்தரவாதம் செய்யும் எந்திரத் தொழில் கொண்ட பொருளாதார கட்டமைப்பும் ரூபாய் என்னும் பணத்தால் கோர்க்கப்பட்டிருந்தன.

மேல் சாதியினரின் ஆடம்பர வாழ்க்கை தொடரக் கிராமப்புற மக்களின் சேவையைப் பெறப் பணமே இனைத்தது. எந்திர கனரக தொழில்களும் ஏற்றுமதி சார்பாகவே இருந்தன. விநோதமென்னவெனில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ரூபாய் சர்வதேச அந்தஸ்துடன் இருந்தது. ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் ரூபாய் செல்லுபடியானது. நமது கஜானா வெள்ளியிருப்பால் நிரம்பிய இருந்தது. ஆனால் இந்தியப் பொருளாதார இரண்டடுக்கு கட்டமைப்பு மட்டும் மாறவே இல்லை. பிரிட்டிஷ் ஆட்சியால் கிராமப்புற  பொருளாதார கட்டமைப்பு என்பது 80 சத மக்களின் எழுத்தறிவின்மை. உணவுப் பற்றாக்குறை சத்தான உணவு கிடைக்காமை இவைகளால் இந்திய மானுடத்தின் வாழ்க்கை சராசரி 37 வயதாக இருந்தது. இப்படி இருந்த இந்தியாவைத்தான் 1947ல் பிரிட்டிஷ் அரசு காங்கிரஸ் தலைவர்களிடம் ஒப்படைத்தது. பழைய கட்டமைப்பு மாறாமலே நீடித்ததால் என்ன விளைந்தது என்பதை கீழ்க்கண்ட விவரம் விளக்கும்.

1939- 1945 வரை நடந்த இரண்டாம் உலகப் போரில்  23லட்ச இந்திய ராணுவ வீரர்கள் போர்முனையிலிருந்தனர் என்றும் அவர்களில் 89 ஆயிரம்  ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக பிரிட்டிஷ் அரசு கணக்கு கொடுக்கிறது. (பிரிட்டானிக்கா என்சைக்கிளோ பீடியா)

அதேவேளையில் இந்தியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு வங்க பகுதியில் மட்டும் 25லட்சம் மக்கள் இறந்தனர். நாடுமுழுவதும் உணவின்மை மலேரியா இரண்டும் லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைக் குடித்தன. கோடான கோடி மக்கள் சத்தற்ற உணவால் பலகீனமாக இருந்தனர். அதாவது போரில் மாய்ந்த இந்தியர்களைவிட உணவுப் பஞ்சத்திலும் மலேரியாவாலும் செத்தவர்களே அதிகம். உணவு நெருக்கடியும், அறியாமையும் மிகுந்த காலத்தில் ஆட்சியில் அமர்ந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் உணவு உற்பத்தியைப் பெருக்க  உடனடியாக செய்ய வேண்டியதைச் செய்யாமல்  கனரக எந்திர தொழில், மற்றும் பெரிய பெரிய பலதுறை பயன்பாட்டு  நீர்தேக்கிகள் இவைகளுக்கு திட்டமிட்டனர். மரபு வழி விவசாயத்தால் உணவு உற்பத்தி திறன் குறைவாக இருந்தது அதோடு விவசாய உற்பத்தியில் பெரும்பகுதி நில உடைமையாளர்களின் சொத்தாகப் போனதால்  விவசாயத்தில் நேரடியாக ஈடுபடுவோரும் அதற்கு துணையான கைத் தொழில் செய்வோரும் வருவாய் குறைவால் வறுமையின் விளிம்பில் தொங்கினர். பிரிட்டிஷ்  அரசு போலவே இரண்டடுக்கு பொருளாதாரத்தை இவர்களும் பின்பற்றினர்.

பொறுப்பேற்ற காங்கிரஸ் அரசு 80 சத மக்களின்  உணவுப்பாதுகாப்பிற்கும் கல்விக்கும் ஆரோக்கியத்திற்கும் உரிய கவனமும் நிதி ஒதுக்கீடும் செய்யத் தவறினர். .அதனை ஆவடி சோசலிசம் எனப் பத்திரிகைகள் பெயர் சூட்டி மகிழ்ந்தது. உடனடி  உணவு பற்றாக்குறையைச் சமாளிக்க அமெரிக்காவிடம் உணவு வாங்க வேண்டிய நிலை வந்த து.  1956ல் நேரு அரசு  கம்யூனிஸ்ட்டுகள் முன்வைத்த ஆலோசனைகளை நிராகரித்து அமெரிக்காவிடம் 13மில்லியன் டன் கோதுமை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போட்டது பி. எல் 480 அமெரிக்க சட்டப்படி நேச நாடுகளுக்கு உணவு ஏற்றுமதி செய்வதை அனுமதித்தது. அமெரிக்க வியாபாரிகள் அங்கே பன்றிகளுக்குப் போடுகிற தாத்துரா விதை கலந்த கோதுமையை நம் தலையில் கட்டினர். இதுவும் நீடிக்கவில்லை ஒரு கட்டத்தில் நேருவின் நடு நிலை கொள்கையை ஏற்க மறுத்து கோதுமை அனுப்புவதை அமெரிக்க அரசு தடை செய்தது. 

உணவுப்பாதுகாப்பு இல்லையெனில் ஒரு நாடு சுதந்திரத்தை இழக்கும்  என்று அரசு உணர்ந்தாலும். மீண்டும் இறக்குமதி செய்வதே தீர்வு எனக் கருதியது.  அன்று உலக அளவில் நாடுகளின் உணவு உற்பத்தி நிலவரங்களைப் பற்றிய தகவல் இல்லாமல் அன்றைய அரசின் தவறுகளை உணர இயலாது. முதல் உலக யுத்தம் முடிந்த தருவாயில் உருவான சோவியத் யூனியனும், ஏகாதிபத்திய நாடுகளும் போட்டிப் போட்டு மரபு வழி விவசாயத்தைத்  தொழில்நுட்ப செறிவு கொண்ட துறையாக மாற்றினர் உற்பத்தித் திறனை வீரியமாக்க ஆய்வுகள் செய்து குறுகிய காலப் பயிர், வீரியவித்து  போன்ற கண்டுபிடிப்புகளில் சாதனை படைத்தனர்.  

இந்திய மாணவர்களே மேலை நாடுகளில் பயின்று அங்கேயே ஆய்வு செய்தனர். நேரு நினைத்திருந்தால் இந்தியாவிலும் விவசாய ஆராய்ச்சிக்கு முதலிடம் கொடுத்திருக்கமுடியும் அன்றைய தேதியில்(1950களில்) மெக்சிகோ நாட்டின் கோதுமை வீரியவித்து உலகச் சந்தையில் புகழ் பெற்று இருந்தது  மெக்சிகோ விவசாய ஆராய்ச்சியில் முத்திரை பதித்தவர் டாக்டர் எம் எஸ் சாமி நாதன் ஆவார் முதல் ஐந்தாண்டு திட்டத்திலேயே விவசாய ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கி அவரையும் அவரைப் போன்று வெளிநாட்டில் இந்த துறையில் ஆய்வு செய்வோரையும் அழைத்து ஒரு ஆராய்ச்சி மையம் அமைத்திருந்தால் வரலாறு வேறு மாதிரி அமைந்திருக்கும்.

அமெரிக்கா கோதுமை தர மறுக்கவே நேரு அரசு மெக்சிகோவிலிருந்து 18 ஆயிரம் டன் கோதுமை வீரிய விதையை வாங்கியது. சாமி நாதன் உருவாக்கிய  அரசு உணவு பாதுகாப்பிற்குத் திட்டமிடலானது. பசுமைப் புரட்சி கூட்டுறவு பால் பண்ணைகள் வந்தன 20 வருடங்கள் கடந்த பிறகே( !970களில்). விவசாய நிபுணர் டாக்டர் சாமிநாதனின் சேவையைப் பயன்படுத்த முன்வந்தது. நேரு காலத்திலிருந்தே கல்விக்கு நிதி ஒதுக்கீடு என்பது பெயரளவிற்கே இருந்ததால்  தொழில்நுட்ப தேர்ச்சி பெறுவோர் ஆய்வாளர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தன. கனரக தொழில்கள் விரிவடையவில்லை.   உணவு உற்பத்தி பெருகினாலும் நில உடைமையில் ஏற்பட்ட மாற்றங்கள் வறுமையை போக்கவில்லை  கெட்டும் பட்டணம் சேர் நகர்ப்புற ஏழைகளாயினர் 

நரசிம்மராவ் சாதனையா?

1980களில் நவீன தாராளமயமே மாற்று என வந்தது. பிரதமர் நரசிம்மராவ் புகுத்திய  புதிய பொருளாதார கொள்கை சில மாற்றங்களைக் கொண்டுவந்தது. அதற்கு அடிப்படை காரணமே  தகவல் தொழில் நுட்பத் துறை உழைப்பாளர்கள் பொதுத்துறை ஊழியர்கள். தொழிற்சங்க இயக்கத்தினால் தொழிலாளர் நல சட்டங்களால் சம்பள வருவாய் கூடவே  ரீயல் எஸ்டேட் பிசினஸ், ஆடம்பரகார்களின் உற்பத்தி இவற்றைப் பெருக்கியது. சுருக்கமாகச் சொன்னால் நவீன தொழில்களில்  உழைப்பாளர்களின் வருவாய் பெருக்கமே பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை என்பதை அது  உணர்த்தியது.  இந்த வருவாய் விவசாயத்தில்  ஈடுபடுவோருக்கும் அதனைச் சார்ந்த தொழில்கள் செய்வோருக்கும் இல்லாத நிலையில் வறுமையும் கல்வியின்மையும்  தொடர்ந்தது இன்றும் தொடர்கிறது சாதி கட்டமைப்பு உடைய மறுக்கிறது. மரபு விவசாயமே நீடிக்கிறது.

சமீபத்தில் பிரேம்ஜி பல்கலைக்கழக வெளியிட்ட ஆய்வு 91 சத இந்திய உழைப்பாளிகள் வறுமைச் சம்பளமே பெறுகின்றனர் என்று காட்டியது.

ஜூலை 28 தேதியிட்ட இந்துவில்  உணவுப்பாதுகாப்பு ஆய்வாளர் மதுரா சாமி நாதன் எழுதிய கட்டுரையில்  இந்திய மக்களின் ஆரோக்கியத்தைப்  பேண வேண்டுமானால் ஆரோக்கிய உணவு பெற உத்தரவாதம் வேண்டும் அல்லது அது பெறுவதற்கான வருமானத்தை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று கூறி குறைந்த பட்ச ஆரோக்கிய உணவைக் குறிப்பிடுகிறார்.

தானியம் 30 கிராம்,பருப்பு வகை 30 கிராம், மாமிசம் அல்லது மீன் 50 கிராம், முட்டை50 கிராம்,  பால் 100 கிராம், காய்கறி 100 கிராம். பழம் 100கிராம். எண்ணை 5 கிராம். இந்த அளவு ஆரோக்கிய உணவு பெற இயலாத வருவாய் உள்ளவர்களை வறுமைக்கோட்டைத் தாண்டாதவர்கள் என்ற பார்வை அரசிற்கு வேண்டும் என்கிறார்.  

ஆரோக்கியமற்ற இந்தியாவின் இளமை என்பது வளத்தால் வந்ததல்ல, பெரும்பான்மை மக்கள் வயோதிக வயதை எட்டுமுன் இறந்துவிடுவதால் விளைந்தது என்பதையே இன்றைய நிலவரம் உணர்த்துகிறது.

Bharat Ratna for Manmohan Singh? He doesn't deserve one

மன்மோகன் சிங்கிலிருந்து மோடி வரை இந்த எதார்த்தத்தைப் பார்க்கத் தவறியதால் 100 ஆண்டு காணாத பொருளாதார மந்தம் நம்மைச் சூழ்ந்துவிட்டது என்ற ரிசர்வ் வங்கியின் ஆளுநர்  சரியான கணிப்பை மோடி அரசு ஏற்குமா?!. 

அவருக்கு முன்னே ஆண்டவர்களைப் போலவே  பிரதமர் மோடியும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வித்திட்ட இரண்டடுக்கு பொருளாதார கட்டமைப்பைப் பேணவே பிரயாசைப்படுகிறார்  கிராமப்புற பொருளாதாரம் மரபு வழி விவசாயம் கைத்தொழில் கோவில் சேவை என்ற வட்டத்தைத் தாண்டாமல் வைக்க முயற்சிக்கிறார். கொரானாவாள் இரண்டடுக்கு பொருளாதார கட்டமைப்பு ஆட்டம் காண்கிறது.

வெள்ளம் சுனாமி, மழையின்மை தொற்று நோய் இவையெல்லாம் தெய்வீக செயலென கூறினால் மக்கள் நம்புவர். ஆனால் ஆரோக்கியமின்மை பஞ்சம், குடி நீர் தட்டுப்பாடு, சுகாதாரமின்மை சத்தான உணவு போதாமை, குடியிருப்பு போதாமை கல்வி கிடைக்காமை வேலையின்மை. இவைகளால் நேரும் நெருக்கடிகளையும்  தெய்வ செயலாகக் கருதி கந்தசஷ்டி கவசத்தை நாட வைக்கிற வைக்கிற முயற்சி நீடிக்குமா?!.

கல்வி சுகாதாரம் அரசின் கடமையாகும் கிராம பொருளாதார கட்டமைப்பையும் நவீன தொழில்களையும் இணைக்கிற முறை  விவசாயிகளின் வருவாயை வளர்க்கவேண்டும் எல்லா ரக உழைப்பாளிகளுக்கும் சம்பள வருவாய் ஆரோக்கிய வாழ்விற்கு உத்தரவாதமளிக்க வேண்டும்.

Article

அறிவியலுடனான இந்திய நடுத்தர வர்கத்தின் சிக்கல்; கோவிட்-19 வைரஸ் அணுகுமுறை அதற்கான சான்று – திரு.ஸ்ரீவத்சவ ரங்கநாதன் (தமிழில் நாராயணன் சேகர்)

  ஆழமான மத நம்பிக்கை உள்ள நமது இந்திய சமூகத்தில் அறிவியல் மனப்பான்மையோடு உள்ள அணுகுமுறை பற்றிய விவாதம் எப்போதாவதுதான்...
Article

சென்னையில் வாங்கச் சாத்தியமான வீட்டுவசதியும், கொரோனா தொற்றுக்குப் பிந்தைய வாய்ப்புகளும் – சில குறிப்புகள்: கரன் கோயல்ஹோ மற்றும் ஏ. சிரிவத்சன் (தமிழில் மிலிடரி பொன்னுசாமி)

  இந்தக் குறிப்பு ஒரு ஐந்தாண்டுக் காலகட்டத்தின் (2013-2018) தரவுகளைப் பெற்று சென்னை பெருநகர்ப் பகுதியில் வாங்கச் சாத்தியமான விலையிலான...
Article

அச்சம் வேண்டாம்; அலட்சியமும் வேண்டாம்… (மக்களுடன் பேசுகிறார்கள் அறிவியலாளர்கள்) தொகுப்பு: அ.குமரேசன்

  அறியாமையைப் போலவே அரைகுறையாக அறிந்திருப்பதும் ஆபத்தானது. கொரோனா குறித்து எளிமையாக விளக்கிடும் முனைப்பாக, ‘கோவிட்-19க்கு இந்திய அறிவியலாளர்கள் எதிர்வினை’...
Article

வீட்டிற்குள்ளும் உடலுக்குள்ளும் நிகழ்ந்த போர் – கொரோனாவை குடும்பத்துடன் எதிர்கொண்டோம் – விழியன்

அனைவரும் நலம். சென்னை மாநகராட்சி எங்கள் தனிமைப்படுத்தலை தளர்த்தியது. கடந்த மூன்று வாரங்களாக நடந்த போராட்டம் நிறைவுற்றது. மார்ச் மாதம்...
1 2 3 16
Page 1 of 16