archivebook review

Book Reviewகல்விசிறுவர் இலக்கியம்நூல் அறிமுகம்

ரஃப் நோட் -அர்த்தமுள்ள கிறுக்கல்கள்…. – எஸ்.குமரவேல்..!

விடிந்தால் 10வகுப்பு கணித பொதுத்தேர்வு முக்கியமான 10 மதிப்பெண் கணக்கு நிச்சயம் தேர்வில் வரும் அதை போடுவதற்கு சுலபமான வழி ஒன்று என்னுடைய நண்பன் ராஜாவிற்கு தெரியும் ஆனால் அந்த நேரத்தில் அவன் அதை மறந்து இருந்தான், திடீரென்று உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது இரவு இரண்டு மணிக்கு எழுந்து தன்னுடைய பழைய ரஃப் நோட்டு ஒன்றில் அதற்கான தீர்வு இருப்பதை கண்டுபிடித்தான், அப்படி நம்மால் முக்கியத்துவம் காட்டப்படாத அதேசமயம் பல முக்கியமானவற்றை உள்ளடக்கிய காணாமல் போகும் ஒரு ரஃப் நோட்டை தேடும் (ரீக்கால் அம்னீசியா குறைந்த கால ஞாபக மறதி நோய் )மற்றும் பிளாபர் ஸ்டேட் டிசாஸ்டர்( கட்டுப்படுத்த முடியாத மனம் ஓட்டம்) ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்ட ஒரு எட்டாம் வகுப்பு பயிலும் பாபு என்ற சிறுவன் பற்றிய கதைதான் இந்த ரஃப் நோட்டு எனும் சிறார் நாவல்.

Tamil School Boys, a photo from Tamil Nadu, South | TrekEarth

பாபாவிற்கு எதுவும் அதிகநேரம் ஞாபகம் இருக்காது அனைத்தையும் உடனே மறந்து விடுவான் ஒல்லியான பெரிய சோடாபுட்டி என காதல் கொண்டேன் தனுஷை நினைவூட்டும் தேக வடிவம் ஆனால் படிப்பு மோசம் பல்புக்கே(பாபுவின் பட்டை பெயர் பல்பு) புரிந்துவிட்டால் அனைவருக்கும் புரிந்து விடும் என ஆசிரியரே பரிகாசிக்கும் கடைசி பெஞ்சு மாணவன், அப்பாவால் அம்மாவை பரிதாபமாக பார்க்கப்படும் அவர்களின் ஒரே பிள்ளை.

மனதில் தோன்றுவதை தன்னை மறந்து உரக்கப் பேசும் பாபு அதனால் பட்ட துன்பங்களும் அவமானங்களும் எண்ணிலடங்காதது, பாபுவின் ரஃப் நோட்டு தொலைந்து போகிறது அதை அவனுடைய ஒரே நண்பனுடன் சேர்ந்து தேடுகின்றனர், பாபு ஏன் தேடுகிறான் என்பது கூட அவனுக்கு தெரியாது, அந்த நோட்டில் என்ன இருக்கிறது என்பது கூட நினைவில்லாத நிலையில் அவன் தேடிக் கொண்டே இருக்கிறான் அவன் தேடலில் தொடங்கும் நாவல் பல சிறுகதைகளை உள்ளடக்கியது, அந்த நோட்டில் அவன் தாத்தா தனக்கு சொன்ன கதைகளை எழுதி வைத்துள்ளான், அதை அவன் ஒவ்வொன்றாக நினைவு கூறும் நாவல் சிறு சிறு கதைகளால் கோர்க்கப்பட்டு மாலையாகும்போது நாவல் வடிவம் ஆகிறது.

AN ENCOUNTER AT THE THIRUMALAI NAYAKAR PALACE | Palace, School boy ...

ஒரு உருண்டையான அடர் மஞ்சள் நிற எலுமிச்சை பழத்தை உங்களுடைய கடைவாயில் வைத்து கடித்தால் எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள் நிச்சயம் நம் கண்கள் சுருக்கி வாயை கோணாலக்கி ஒரு நொடி எச்சில் விழுங்குவோம், ஆனால் அது ஒரு கற்பனைதான் அப்படி ஆயிரமாயிரம் மடங்கு கற்பனையால் நிறைந்தது குழந்தைகளின் உலகம், அந்த உலகத்தில் தான் ஒட்டகத்திற்கு கொம்பு இருக்கும் மார்கழி மாதமும் டிசம்பர் மாதமும் திருமணம் செய்து கொள்ளும், தேவதைகள் கதை சொல்லும், எறும்பும் தேனீக்களும் பேசும், அன்னப்பறவை தங்கசாவி தரும், அழுகையால் கடல் உருவாகும், கல்லிற்கு உயிர் வரும், ஒரு நொடியில் உலகை சுற்ற முடியும் ,ஆறும் அரசமரமும் கானம் பாடும் இப்படி குழந்தைகள் உலகம் பெரியவர்களின் கற்பனைக்கு எட்டாதது. யாருக்கு தெரியும்? அவர்கள் வேறொரு உலகத்தை கூட படைத்துக் கொண்டிருக்கலாம்.

அப்படி குழந்தைகளின் கற்பனை உலகை நமக்கு இந்த புத்தகம் சிறுகதையாக தருகிறது புத்தகத்தில் பாபு தன் ரஃப் நோட்டில் என்ன இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கும் நேரம், கழுதைக் காது தள பதி,கடைசியாக வந்தவன் போன்ற கதைகளை வாசிக்கும்போது குபீர் சிரிப்பு நிச்சயம். எவ்வளவு அடித்தாலும் அடிக்கும் தன் தாயின் கால்களையே கட்டிக்கொள்ளும் குழந்தைக்கும் தாய்க்குமான இறுதி கதை நெகிழ வைக்கிறது.

Era Natarasan - Wikipedia

ஆசிரியர். ஆயிஷா இரா. நடராஜன்

உலகம் குழந்தைகளுக்கானது அதை நாம் புரிந்துகொள்ள நாம் அவர்களோடு பயணிக்க வேண்டுமே தவிர தங்களுக்கு ஏற்றவாறு அவர்களை வடிவமைக்க முயற்சிக்க கூடாது என போகிற போக்கில் புத்தகம் பொட்டில் அடித்து சொல்கிறது.

 

ரஃப் நோட்டிற்கு என்று எந்த ஒரு வரைமுறையோ அல்லது பாதுகாப்பு அளிப்பது இல்லை ஆனால் அந்த ரஃப் நோட்டில்தான் ஏராளமான கதைகளும், கவிதைகளும், ஓவியங்களும்,ஏன் பல ரகசியங்களும் கூட ஒளிந்து கிடக்கின்றன, அந்த வகையில் 11 சிறுகதைகளை உள்ளடக்கிய இந்த 80 பக்க நாவல் எப்படி ரஃப் நோட்டிற்கு என்று எந்த முன்னுரையும் முடிவுரையும் இருக்காதோ அதேபோல் நேரடியாக பயணிக்கிறார் நூலாசிரியர் ஆயிஷா நடராஜன் தமிழகம் அறிந்த சிறார் அறிவியல் இலக்கியவாதி,வித்யாசமான கதை சொல்லும் முறையோடும் சுவாரிசியங்களோடும் கதை நகருகிறது,நூல் ஆசிரியர் நிஜத்திலும் பள்ளி ஆசிரியர், கொஞ்சம் சுயநலத்தோடு அவர் கடலூர் என்பதால் கூடுதல் லைக்ஸ்.

ரஃப் நோட் -அர்த்தமுள்ள கிறுக்கல்கள்….

நூலின் பெயர்:ரஃப் நோட்
ஆசிரியர்:ஆயிஷா இரா. நடராஜன்.
வெளியீடு:புக்ஸ் பாஃர் சில்ரன், பாரதி புத்தகாலயம்.                                                                                                        விலை: ரூ.70.00                                                                                                                                                                  புத்தகம் வாங்க : https://thamizhbooks.com/product/rough-note-371/

 

Image may contain: 2 people, people standing

தோழமையுடன்
எஸ்.குமரவேல்.. ( S. Kumaravel Cdm )

கடலூர் மாவட்டச் செயலாளர்
இந்திய மாணவர் சங்கம்.

Book Reviewஇன்றைய புத்தகம்

கல்வி,சுகாதாரம் இரண்டிலும் இந்தியா சந்திக்கும் சவால்களை சொல்லும் புத்தகம்…! – சுபொஅ.

“உத்திரபிரதேச மாநிலத்தில் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது கேடானது என்ற நம்பிக்கை உள்ளது .இந்த தவறான நம்பிக்கையின் அடிப்படையில் பிறந்த...
Book Reviewநூல் அறிமுகம்

நட்பு ,காதல் உணர்வுகள், குடும்ப சூழல் , நிறைவேறாத கனவுகள் குறித்து பேசும் தமிழ் செல்வனின் சிறுகதைகள்…!

எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதியுள்ள இப்புத்தகம் 2011 இல் முதல் பதிப்பாகவும் 2017 இல் இரண்டாம் பதிப்பாகவும் பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளது....
Book Reviewநூல் அறிமுகம்

நூல் அறிமுகம் : கதை கேட்கும் சுவர்கள்….!

வாழ்வு எல்லோருக்கும் பூங்கொத்துகளையும் மலர்களையும் மட்டுமே வைத்து காத்திருப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். ஆனாலும் என் ஞாபக அடுக்குகளில் இவ்வளவு துயருற்ற...
Book Reviewநூல் அறிமுகம்

ஆயிரம் சூரியப் பேரொளி – காலித் ஹுஸைனி…. தமிழில் ஷஹிதா…!

காபூலில் பிறந்து அமெரிக்காவில் வாழும் காலித் ஹுசைனியின் இரண்டாவது நாவல். முதல் நாவலான பட்ட விரட்டி (KITE RUNNER) தமிழில்...
Book Reviewநூல் அறிமுகம்

இன்றைய வாசிப்பில்.. ஆயிஷா இரா.நடராசன் எழுதிய “இது யாருடைய வகுப்பறை”

"ஒரு நாட்டில் ஏறத்தாள எல்லாரும் 100% கல்வி பெறுகிற உலகின் ஒரே நாடாக பின்லாந்து உள்ளது. இன்றைய கார்ப்பரேட் உலகில்...
Book Reviewநூல் அறிமுகம்

சனாதனம் வெறுத்த இராமலிங்கர் எனும் ஆளுமையை விவரிக்கும் நூல் இது…!

சமூக ஆய்வாளர், பேராசிரியர் ராஜ்கௌதமன் எழுதியுள்ள 'கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப்போக...! ' நூல் இராமலிங்கர் எனும் ஆளுமையை அவரது...
Book Reviewஇன்றைய புத்தகம்

இந்திய வரலாறு ஒரு மார்க்சிய கண்ணோட்டம் -இஎம்எஸ் நம்பூதிரிபாட்

இந்திய சரித்திரத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளை மார்க்சிய சரித்திர இயல்தத்துவமான வரலாற்றுரீதியான பொருள்முதல்வாத கண்ணோட்டத்துடன் ஆராய்வது என்ற முன்னுரையிடன் துவக்கிறது... இயற்கை...
Book Reviewஇன்றைய புத்தகம்

சிட்டுக் குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும் – ஆதி வள்ளியப்பன்

சிட்டுக் குருவிகளின் கீச் கீச் என்ற இசை இல்லாமல் காலையில் எப்போதாவது கண்விழித்து இருக்கிறோமா? அப்படி கண்விழித்த நாட்களும் தான்...
Book Reviewஇன்றைய புத்தகம்

எழுத்துலகின் காந்தி அசோகமித்ரனின் “18 ஆவது அட்சக்கோடு” நாவலை முன்வைத்து சிறிய அனுபவ பகிர்வு….!

எழுத்தாளர் ஜெயமோகனின் வீட்டுச்சுவரில் இருவரின் படங்கள் மட்டுமே மாட்டி வைக்கப்பட்டுள்ளதாக கூறுவார்கள். அந்த இருவர்கள். காந்தியும், அசோகமித்ரனும். ஒரு விதத்தில்...
1 48 49 50 51 52 59
Page 50 of 59