archivebook review

Book Review

நூல் அறிமுகம்: எழுத்தாளர் அசோகமித்திரனின் “அப்பாவின் சிநேகிதர்” – பா.அசோக்குமார்

“சாகித்தய அகாதமி” விருது பெற்ற நூல். அசோகமித்திரன் அவர்களின் ஆகச் சிறந்த சிறுகதைகளும்  (9) மற்றும் 2 குறுநாவல்களும் இடம்பெற்றுள்ள நூல்.
தேர்ந்த கதைச் சூழல் மற்றும் இயல்பான எழுத்துநடையில் அமைந்த கதைகளே அசோகமித்திரன் அவர்களின் அச்சாணியாக பரிணமித்து உள்ளது எனலாம்.
தமது வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வனுபத்தின் புனைவு வடிவங்களாகவே இச்சிறுகதைகளைப் படைத்துள்ளாரோ என்ற ஐயம் தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை.
படைப்புக்குக் கால இடைவெளி தேவை ...
எழுத்தாளர் அசோகமித்திரன்
இச்சிறுகதைகளும் குறுநாவல்களும் எதார்த்த வாழ்வியல் நிகழ்வுகளை எளிய மனிதர்களின் இயல்பான குணாதிசயங்களுடன் காட்சிபடுத்தியுள்ள பாங்கே இக்கதைகளில் நமது மனது இழைந்தோட உதவுகிறதோ என்னவோ….
1.புதிர்
2. அப்பாவின் சிநேகிதர்
3.இன்று நிம்மதியாகத் தூங்க வேண்டும்
4.சாயம்
5.பிப்லப் சௌதுரிக்கு கடன் மனு
6. ரோசம்
7. முனீரின் ஸ்பானர்கள்
8.சில்வியா
9. இப்போது வெடித்தது
ஆகிய  தலைப்புகளில் 9 சிறுகதைகளும்
1. விழா மாலைப் பொழுதில்
2.இன்ஸ்பெக்டர் செண்பகராமன்
ஆகிய தலைப்புகளில் 2 குறுநாவல்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
“இப்போது வெடித்தது” ஒரு பக்க அளவில் அமைந்த எளிய சிறுகதை. ஆனால், அது புகட்டும் பாடமோ, தீவிரவாதத்திற்கு எதிரானது.
“அப்பாவின் சிநேகிதர்” சிறுகதைக்கும் “முனீரின் ஸ்பானர்கள்” சிறுகதைக்கும் இடையே நெருங்கியதொரு தொடர்பு இருப்பதை அறிந்து வியக்கலாம்.
“சாயம்” என்ற சிறுகதையானது ” இன்ஸ்பெக்டர் செண்பகராமன்” குறுநாவல் எழுதுவதற்கு முன்னால் எழுதப்பட்டதோ என்று தோன்றும் வண்ணம் இணைந்த தொடர்பிலேயே அமைந்துள்ளது. பெயர்களிலும் சிறு மாற்றங்களே…
“ரோசம்” சிறுகதை எளிய வடிவில் அமைந்த எள்ளலுடன் கூடிய விசித்திரமான சிறுகதை என வியந்து ரசிக்கலாம்.
“புதிர்” சிறுகதை …. பெயருக்கு தகுந்தாற்போல் புதிராகவே அமைந்து சுவாரஸ்யமூட்டி இறுதியில் பச்சாதாபம் வரவைப்பதாகவே அமைந்துள்ளது.
உடனே உடனே எழுதினால் செய்திப் ...
“சில்வியா” சிறுகதை, இளவயது நவயுக யுவதியின் காதலையும் உடன்பிறப்புகளின் பார்வை கோணத்தையும் இளவயது மன ஊசலாட்டத்தையும் பதிவு செய்யும் எளிய டீன்ஏஜ் சித்திரமே ஆகும்.
“விழா மாலைப் பொழுதில்” குறுநாவலில் ஒரு பத்திரிக்கையாளரின் முந்தைய திரைப்படத்துறை வாழ்வியல் நெருக்கடியை படம்பிடித்து காட்சிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. அதிலும் காதலி ரேகா மற்றும் சகோதரி சீதாவின் வாழ்வனுபவ காட்சிகள் தத்ரூபமானதாக அமைந்து பரிதாப உணர்ச்சியைத் துளிர்விட்டு நம்மைத் தத்தளிக்க வைப்பதாகவே உள்ளது‌.
“இன்ஸ்பெக்டர் செண்பகராமன்” குறுநாவலில் ஆரம்பத்தில் கொடூரமானவராகச் சித்தரிக்கப்படும் இன்ஸ்பெக்டர் மீது இறுதியில் இரக்கம் ஏற்பட வைப்பது அசாத்திய புனைவின்  திரட்சியன்று வேறேது. இன்ஸ்பெக்டர் மனைவி மீது இழையோடும் இரக்கம் இறுதியில் “சக்கு” மீது குவிவது படைப்பின் உச்சமாகவே கருதத் தோன்றுகிறது.
இங்ஙனம் ஒவ்வொரு சிறுகதை பற்றியும் குறுநாவல் பற்றியும் வியந்து ரசித்து கூறிக் கொண்டே செல்லலாம்.
அப்பாவின் சிநேகிதர் - அசோகமித்திரன் ...
எந்தவொரு தொய்வுமின்றி, எப்போது முடியுமோ என்ற ஏக்கத்தையும் வளர்க்காமல் சீரான துரித நடையில் கதையை நேர்த்தியாக பிண்ணிய விதத்தில் எழுத்தாளர் உயர்ந்த இடத்தில் மிளிர்ந்து மிரட்டியுள்ளார் என்று கூறினால் அது மிகையல்ல.
நல்லதோர் வாசிப்பனுபவம் நிச்சயம் கிட்டும்.
வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள்.
நன்றி.
” அப்பாவின் சிநேகிதர்”
அசோகமித்திரன்
நற்றிணை பதிப்பகம்
பக்கங்கள்: 220
₹.180/-
 பா.அசோக்குமார்
மயிலாடும்பாறை.
Book Review

நூல் அறிமுகம்: எரியும் பனிக்காடு – கா.பிருந்தா (இந்திய மாணவர் சங்கம்)

  இந்த கதை ஒரு தேயிலை எஸ்டேட்டில் வேலை பார்க்கும் தொழிலாளியை பற்றியது. இக்கதையை இயக்குனர் பாலா தனது பரதேசி...
Book Review

நூல் அறிமுகம்: உப்புவேலி (உலகின் மிகப்பெரிய உயிர்வேலியின் வரலாற்று ஆவணம்) – கருப்பு அன்பரசன்

தலைப்பே இந்த நூலினை வாசிக்க உங்களை இழுத்துப் போகும்..! நான் மட்டும் விதிவிலக்காயென்ன.? வாசிக்கத் தொடங்கியதும் அதிர்ச்சிக்குள்ளானேன். விவரத்திற்கு பிறகு...
Book Review

நூல் அறிமுகம்: “பெண்ணின் மறுபக்கம்” – சிந்து சுந்தராஜ்

  "பெண்" என்ற சொல்லின் அர்த்தை  தேடுபவர்களா நீங்கள்? அப்படியானால் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது. மனிதக்குலம் எப்படி...
Book Review

நூல் அறிமுகம்: ஜெர்மன் பேறுகாலத் தாதி – ச.சுப்பாராவ் 

  இரண்டாம் உலகப்போர், வதை முகாம்கள், ஆகியவற்றைப் பற்றிய விரிவான வர்ணனையை நாம் முற்றிலும் எதிர்பார்க்காத ஒரு கதைக்களத்தில் தரும்...
Book Review

நூல் அறிமுகம்: அயலக இலக்கியம் (மல்லிகைகள் நிறம் மாறுவதில்லை :மங்கள கௌரி நாவல்) –  சுப்ரபாரதிமணியன்

  தளதளவென்று துளிர் வெத்தலை மாதிரி பளபக்கும் புதிய ஒருகளம்  மங்கள கௌரியின் நாவல் மூலம் கிடைத்திருக்கிறது.  கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில்...
Book Review

ஆசிரியர்கள் தவறவிடாதீர்கள்: சிலேட்டுக்குச்சி நூல்அறிமுகம் -ஜெயராஜ்முத்துவேல்

  நூலாசிரியர் சக.முத்துக்கண்ணன் அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 2020 ம் ஆண்டு...
Book Review

நூல் அறிமுகம்: ‘மணல்’- மணற்கொள்ளையர்களின் சூறையாடலில் காணாமல் போகும் வைப்பாறின் சோகத்தைச் சொல்லிடும் நாவல்! – பெ.விஜயகுமார்

அரசியல், பொருளாதார, சமூக வெளிகளில் சூழலியல் குறித்த விழிப்புணர்வு வியாபித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகும். நவீன மார்க்சீயமும் சூழலியல் குறித்து ஆழமான...
1 2 3 4 5 59
Page 3 of 59