archiveBook day

Poetry

தங்கேஸ் கவிதைகள்!!

கவிதை 1
வாசற்கதவை முகத்தில் அறைந்து
சாத்துகிறது வாழ்க்கை
வறுமைமுகத்தில் படர
 உடலை இலக்கற்று
 சுமந்து போகின்றன கால்கள்
ஒரு கைப்பிடி அளவு
கடுகு பெற்றவள்
அது மரணம்நிகழாத
வீடு தானாவென்று ஐயம்  கேட்கிறாள்
இல்லை என்றானதும்  கைநிறைந்திருக்கும் கடுகை
விசிறித் தெருவில் இறைக்கிறாள்
இப்பொழுது கடுகுகள்
மரணம் நிகழாத
ஒரு வீட்டை நோக்கி
தெருவெங்கும் உருண்டோடிக்கொண்டிருக்கின்றன
கவிதை 2
முற்றிலும் கரைந்து போனவன்
எண்ணங்களிலிருந்து உயிர்த்தெழுகிறான்
பீனிக்ஸ் பறவையில்லை சாம்பலுமாகவில்லை
இத்தனை நூற்றாண்டுகள் கடந்த பின்பும்
உயிர்த்தெழுதல் என்னவோ
நினைவுகளோடு தான்
மென் காற்றில் சுழன்றாடும் முதிர்ந்த சிறகுகளுக்கு
வாழ்க்கை என்பது கிறுகிறு வண்ணம்
சுற்றுவதன்றி வேறு என்ன ?
கவிதை 3
தர்மத்தின் வாழ்வு தனைச் சூது கவ்வும்
மீண்டும் சூதே வெல்லும்
இங்கே
சாத்தான்கள் வேதம் ஓதும்
சங்குப்பூனைகள் சைவமாகும்
திடீரென்று
குள்ள நரிகள் முகமூடி போட்டு
முதல் பரிசை தட்டிப்போகும்
ஜனநாயக குலவையிட்டு
மாறு வேடப்போட்டியில்
நீயும் வழக்கம் போல்
வாக்கை விற்று
வாழ்க்கை விற்று
கால் மேல் கால் போட்டு
அலுவலகத்துக்கு விடுப்பு போட்டு
தொலைக்காட்சிக்கு கைகள் தட்டி
முடிக்க
கடந்து போயிருக்கும்
இன்னொரு தேர்தலும்
என் பாரம்பரியத் தமிழா
தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்
Article

குளிர்பதன பயணமும் கொரோனா பரவலும் – இரா.இரமணன்

செப்டம்பர் ஏழாம் தேதி முதல் நான்காம் நிலை தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விளைவாக கட்டுப்படுத்தும் மண்டலங்கள் தவிர மற்ற இடங்களில்...
Book Review

மனங்களை கிளறும் குதிப்பி – கருப்பு கருணா

எழுத்தாளர் போப்பு சாப்பாட்டு புராணம் என்ற ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். அது விதவிதமான சாப்பாட்டு வகைகளை நமக்கு அறிமுகம் செய்யும்...
Poetry

உமா பாலு கவிதை!!

காலையில் துயிலெழுந்தேன் படுக்கையை உற்றுப் பார்க்கையில் விரிப்பின் ஓவியம் உவகை தந்தது கோலக் குடிலும் குதித்தாடும்பிள்ளைகளும் பாலைப்பருகிடும் பூனைக்குட்டிகளும் காதல்...
BookBook Review

வீரம் விளைந்தது (புத்தகத்திலிருந்து சில நிகழ்வுகள்)-பாவெல் – ஆன்னா – த்ஸெவெத்தாயெவ் | ச.வீரமணி

தோழர் பாவெல் கர்ச்சாகின், இயக்கத்தில் ஈடுபடும் பெண் தோழர்களிடம் மிகவும் மரியாதையுடனும், அன்புடனும் பழகக்கூடிய தோழன். எனவே, பெண் தோழர்கள்...
Book Review

புத்தக அறிமுகம்: யாசகர்களின் ஆழ்கடல் மனதை பார்ப்போம் வாருங்கள் – செல்வக்குமார் 

  பிச்சை என நாவலுக்கு பெயர் சூட்ட நினைத்தார் ஆனால் யாரையும் காயப்படுத்தாமல் அமையவேண்டும் என்பது ஆசிரியர் எம்.எம்.தீன் அவர்களின்...
Book Review

புத்தக அறிமுகம்: “பாண்டி நாட்டின் ஆனையூர்” – முத்து நாகு

ஆட்சி மாற்றத்தால் தலைநகராக இருந்த பல ஊர்கள், இன்று பல ஊர்களின் முதலெழுத்தாக (இனிசியலாக) அமைந்திருக்கும். சில ஊர்களுக்கு அந்த...
Book Review

புத்தக அறிமுகம்: எழுத்தாளர் இரா.முத்து நாகு எழுதிய “சுளுந்தீ நாவல்” – M. சுரேந்திரன்.

இரா.முத்து நாகு எழுதிய சுளுந்தீ வெறும் “நாவல்” எனும் வார்த்தைக்குள் அடக்க முடியாத ஒரு படைப்பு ஆகும். சுளுந்தீ எனும்...
Book Review

புத்தக அறிமுகம்: கவிஞர் நா.முத்துக்குமாரின் “அ’னா, ஆவன்னா” – தமிழ்மதி

நண்பனின் தங்கைகள் அண்ணன் குளிச்சுட்ருக்கு.உள்ள வந்து உட்காருங்கண்னே.நம் கூச்சத்தை போக்க எதையாவது பேசுகிறார்கள். கேட்ட பாட்டு, கல்லூரி சண்டை என....
1 2 3 43
Page 1 of 43