archivebava chelladurai

Web Series

எழுத்தாளர் பவா. செல்லத்துரை எழுதும் “இரட்டை கதவுகள்” (மலையாள நவீன இலக்கிய அறிமுகமும், படைப்புகளும்) -4: கே.ஆர்.மீரா

கொல்லம்தான் கே.ஆர்.மீராவின் சொந்த மாவட்டம்  சாஸ்தம் கோட்டா அவர் பிறப்பிடம் . புகழ்பெற்ற மலையாள மனோரமாவில் பத்திரிகையாளராக வாழ்வையும் பணியையும் துவக்கினார். மலையாள பெண் தொழிலாளர்களின் இன்னொரு  துயரமிக்க வாழ்வை கண்டறிந்து மலையாள மனோராமில் எழுதியதற்காக மனித உரிமைக்கான பி.யூ.வி. எல்.வின் தேசிய அளவிலான விருதைப் பெற்று, கேரள அறிவு ஜீவிகளும்,  வாசிப்பவர்களும்,  மீராவை கண்டடைந்தார்கள் என்று கூட சொல்லமுடியும். அதே புலனாய்வு கட்டுரைக்கு இன்னும்  பல விருதுகளும் கிடைத்தன.

முழு நேர எழுத்து வேண்டி தன் பத்திரிகையாளர் பொறுப்பைத் துறந்தார். இடைவிடாத பயணங்களும்,  வாழ்வனுபவங்களுமே தன்னை எடுத்துக் கரைய வைக்கிறது என்கிறார் மீரா.

2002-ல் அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு “ஓர்மாயும் நாரம்பு” வெளியானது. அப்புறம் மீராவை எழுத்து தீ மாதிரி பற்றிக் கொண்டது என சொல்ல முடியும். ஐந்து சிறுகதைத் தொகுப்புகள், இரு நாவல்கள், இரு குழந்தைகளுக்கான இரு புத்தகங்கள்  என இடைவிடாத எழுத்தியக்கம் மீராவுடையது.

2009-ல் தன் ஏப் மரியாவுக்காக கேரள சாகித்ய அகடாமி விருதுப் பெற்றார் மீரா. தூக்கிளிடுபவனின் வாழ்வைப்பற்றிப் காத்திரமாக எழுதப்பட்ட ‘ஓராச்சார்’  தான் மீராவின் முதன்மையான எழுத்துக்கான விளைச்சம். அது உலக அளவில் அவன் மீதான  கவனத்தைக் குவித்தது.

மத்திய சாகித்ய அகடாமி  விருது உட்பட வரிசைகளில் நீரும்  பல விருதுகளை அது அவருக்குப் பெற்றுத்தந்தது.

On the edge of life

இன்று வரை கேரள நவீன சினிமாவின் முக்கியமானதாகக் கருதப்படும் ‘ஒரே கடல்’  திரைப்படத்தில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார். அசோமியேட் என்ற பெயர் அப்படத்தில் மீராவுக்கு  கிடைத்தப் போதிலும், மீராவின்  பங்களிப்பு அசாத்தியமானது.

தமிழ் வாசகர்களுக்கு மீரா அவர் எழுதிய அளவிற்கு அறிமுகமானவர் அல்ல எனதான் சொல்லத் தோன்றுகிறது. அவருடைய பற்று கதைகளை கே.வி.ஷைலஜா தமிழில் ‘சூர்ப்பனகை’ என்ற பெயரில்  தொகுப்பாக்கியிருக்கிறார். அவ்வளவுதான்.

இன்னும் ஓரிரு கதைகள் மொழிபெயர்க்கப் பட்டிருக்கலாம்.

அவருடைய ஆராச்சார் என்ற புகழ்பெற்ற நாவல் மலையாள வாசகர்களுக்கு விரிவான வாசிப்பையும், விவாதத்தையும்  கூட்டியது. அந்நாவல் ஒரு வங்காள நாவலின் தழுவல்  என்ற குற்றச்சாட்டும் உண்டு.

ஆனாலும் தூக்கிமை,,,,,,, வாழ்வை அத்தனைக் காத்திரமாகவும், விரிவாகவும் சொல்ல வேறொரு படைப்பு மலையாளத்தில் இதற்குமுன் இல்லை என்ற கேரள விமர்சகர்களின் அழுத்தமான பதிவுகள் இல்லாமல்  இல்லை.

மீரா ‘அசோகயேட்’ என்ற அடைமொழியோடு பங்கேற்க திரைப்படம் கேரள சினிமாவின் உச்சந்தொட்டவைகளில் ஒன்றுதான்.

ஒரு அறிவுஜீவிகளும், ஒரு அபலையான மத்திய ஒர ,,,, மனைசிக்குமான காமம்  என அகக்ரையை ஒற்றை வரி புள்ளியில் குவித்துவிட முடியும்.

பணமும், புகழும் அதன் அதீத போரையும் மனிதர்களுக்குளை  குற்றங்களை நோக்கி உந்தித்தருகிறது. ஆனால் இசை எல்லாவற்றையும்  விட மனித மனமும்,  அதன் சிரைவுகளும் எத்தனைப் பெரியதும், நாம் தவறவிடுவதமான கரைகளம் மலையாள சினிமாவிற்கு  மட்டுமல்ல எம்மொழி படத்திற்கும் பொருத்தமானதுதான்.

KR Meera: I Want To Write Stories Which Turn Readers Into ...

தன் பத்திரிகையாளர் பணியை பெரும அனுபவங்களைப் பெற்றுக்கொண்டு அதிலிருந்து விலகியவர் மீரா. 

இப்போது அவருடைய உலகம் வாசிப்புகளும் எழுத்துக்குமானது.  பயணங்களும்,  திரைப்பட பங்கேற்றலும் மீராவின் எழுத்தின் செழுமையைக் கூட்டுகிறது.

ஆராச்சர் மாதிரியான  அதையும் தாண்டக்கூடிய எழுத்தை மீராவிடமிருந்து கேரள வாசகர்கள் மட்டுமின்றி,  பிறமொழி  வாசகர்களும்  எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மீராவின் இன்னும் பல சிறுகதைகளும், நிரவலும் தமிழுக்குப் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு தமிழில்  மொழிபெயர்க்கபட  வேண்டியது நவீன இலக்கியத்திற்கு ஒரு மலையாள  மொழிபெயர்ப்பாளர்  செய்தே ஆக வேண்டிய மிகப்பெரிய பங்களிப்பு என பொதுமையுடன் காலம் காத்திருப்பது போல், வாசகர்களும் காத்திருக்கிறார்கள்.  யார் அறியக்கூடும், மீராவின் இப்பெரும்  மௌனம் ஒரு புயலுக்கோ அல்லது சுனாமிக்கானதாகவோ கூட இருக்கலாம். 

In conversation with novelist KR Meera -Governance Now

  

Web Series

எழுத்தாளர் பவா. செல்லத்துரை எழுதும் “இரட்டை கதவுகள்” (மலையாள நவீன இலக்கிய அறிமுகமும், படைப்புகளும்) -3: எம்.டி.வாசுதேவன் நாயர்

  உலக சிறுகதை ஆண்டையொட்டி மாத்ருபூமி நடத்திய சிறுகதைப் போட்டியில் தன் ’வளர்த்து மிருகங்கள்’ என்ற சிறுகதைக்கு முதல் பரிசு...
Web Series

எழுத்தாளர் பவா. செல்லத்துரை எழுதும் “இரட்டை கதவுகள்” (மலையாள நவீன இலக்கிய அறிமுகமும், படைப்புகளும்) -2: பால் சக்காரியா

  ‘யாருக்குத் தெரியும்?’ என்ற சாத்தியமற்ற ஒரு கதையின் மூலமாகத்தான்  சக்காரியா தமிழுக்கு அறிமுகமானார். இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை...
Web Series

எழுத்தாளர் பவா. செல்லத்துரை எழுதும் “இரட்டை கதவுகள்” (மலையாள நவீன இலக்கிய அறிமுகமும், படைப்புகளும்) -1: என்.எஸ்.மாதவன்

  எர்ணாகுளம் மகாராஜா கல்லூரி உலகிற்கு பல ஆளுமைகளை தந்து கொண்டேயிருக்கிறது. மம்முட்டி, பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்ற அந்த வரிசையில்...