archiveamerica

Article

பூகோள ரீதியான கூட்டுறவிற்கு அடிப்படைப் பரிமாற்றம் & கூட்டுறவு ஒப்பந்தம்… அமெரிக்கா- இந்தியா ராணுவக் கூட்டணி உருவானது-  டாக்டர் ரகுந்தன் (தமிழில் பொ. இராஜமாணிக்கம்)பூகோள ரீதியான கூட்டுறவிற்கு அடிப்படைப் பரிமாற்றம் & கூட்டுறவு ஒப்பந்தம் மூலம்  (Basic Exchange and Cooperation Agreement on Geo-spatial Cooperation:BECA) அமெரிக்கா இந்தியா ராணுவக் கூட்டணி உருவானது. இது மிகப் பெரிய விளைவை ரஷ்யாவையும்  பக்கத்து நாடுகளையும் அந்நியப்படுத்தினால் பூகோள ரீதியாக உருவாக்கும்.

இந்த ஒப்பந்தம்  சமீபத்தில் 2+2 என்ற வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை ஆகிய இரணடு நாட்டின் அமைச்சர்கள் மட்டத்தில் டெல்லியில் கடந்த வாரம் கையழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு பெக்கா (BECA) என்று சுருக்கமாகக் கூறலாம்.

பெக்கா என்பது இந்திய அமெரிக்காவிற்கு இடையிலான நான்காவது ஒப்பந்தமாகக் கருதப்படுகிறது. இது போன்ற மாறுபாடுகள் உள்ளடக்கிய பல ஒப்பந்தங்களை  நேட்டோ நாடுகளுடனும் மற்றும் மிலிடரி சாதனங்களை விற்பனை செய்யும்  பிற கூடடணி நாடுகளிடையேயும் உருவாக்கி இருக்கிறது. இந்த ஒப்பந்தங்கள் மூலம் அமெரிக்கா ஆயுதங்கள் ஏற்றுமதி மேம்பட்ட மிலிடரி சாதனங்கள் மிலிடரி ஆதாரங்கள் பரிமாற்றம்  உயர் தொழில்நுட்ப தகவல்கள், அறிவுசார் தொழில்நுட்பங்கள் சேவைகள் மேலும் இணைந்து செயல்படுத்துதல் அமெரிக்காவிற்கும் பிற கூட்டணி நாடுகளுடன் செயல்படுத்துதல் ஆகியன உட்படும்

இந்த வகையில் கடந்த இருபது வருடங்களாக அரசியல் ரீதியாக தூதரக ரீதியாக ராணுவ ரீதியாக நடைபெற்று வந்த பேச்சு வார்த்தைகள் ஒரு வழியாக ராணுவ ரீதியான கூட்டணியை உருவாக்கி உள்ளது. இந்தக் கூட்டணி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் நடைபெற்றுள்ளது நீண்ட நாட்களாக அமெரிக்கா பாதுகாப்பு,  முக்கியத் துறைகளில் பங்காளியாக இந்தியாவை இணைத்துக் கொள்ளும் கனவ நனவாகி உள்ளது.

India, US To hold First Joint Military Exercise In Uttarakhand.

தேசப் பாதுகாப்புக் கூட்டணியை நோக்கி

தொண்ணூறுகளின் துவக்கத்தில் இருந்து சோவியத் யூனியன் சிதைவுக்குப் பின் இந்தியா உலகின் யாரும் எதிர் கொள்ள முடியாத வல்லரசாக குறிப்பாக புவி அரசியலில் மேலாதிக்கம் பெற்ற அமெரிக்காவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. இரண்டு நாடுகளுக்கிடையே மலர்ந்த காதல்   என்பது வாஜ்பேயீ காலத்தில்  மே 1998ல் அணு வெடிப்புச் சோதனை நடத்தியவடன் பிரச்சினைக்குள்ளாகி நல்லுறவு உறைந்து போனது.

இப்படி உறைந்து போன உறவை உடைப்பதற்கு இரண்டு நாடுகளும் பல வழிகளில் முயற்சித்தன. அணு ஆயுத விசயத்தில் இரண்டு நாடுகளுமே ஒரு தீர்வை கண்டறிவதே முக்கிமென கருதின. அதன் பின்னரே முக்கிய கூட்டாளியாக மாற முடியும் எனத் தீராமானித்தன. என்வே அமெரிக்கா அணு ஆயுத  விசயத்தில் ஒரு உடன்படிக்கை தங்களது சட்டப்படி தேவை என அமெரிக்கா நினைத்தது. அதே போல் இந்தியாவும் அமெரிக்காவுடன்  இணைந்து செயல்பட்டு வல்லரசுகளில் ஒன்றாக உயர நினைத்தது. இரண்டு நாடுகளின் இந்த முறையிலான முயறசிக்கு இடதுசாரிகளும் இத்துறையில் வல்லுநர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த இரண்டு நாடுகளின் முயற்சியில் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடநது கொண்டிருந்தது. இந்தியாவை ஆண்டு வந்த காங்கிரஸ் தலைமையிலான யுபிஏவும் பீஜேபீ தலைமையிலான என்டிஏவும் அதே போல் குடியரசு, ஜனநாயகக் கட்சி ஆட்சியாளர்களும் ஈடுபட்டே வந்தனர். இறுதியாக மிக ரகசியமாக இரு நாடுகளுகளும் ஏற்றுக் கொண்டு இந்தியாவிற்கு அணு ஆயுத நாடாக அங்கீகாரம் அளித்து விட்டனர்.அதே போல் அமெரிக்கா பாதுகாப்பு மற்றும் கேந்திரமான  கூட்டாளியாக மாறி  மிகவும் முன்னேற்றமிக்க ராணுவ மற்றும் இரட்டை பயன்பாடு கொண்ட  ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி பண்ண அமெரிக்கா அனுமதி பெற்று விட்டது.

அமெரிக்காவம் இந்தியாவும் பொதுப் பாதுகாப்பிற்கான  ராணுவ தகவல் ஒப்பந்தத்தை 2002ல் ஏற்படுத்திக் கொண்டன. 2005 ஜூலை மாதத்தில் பிரதமர் மன் மோகன் சிங் அரசு அணு விசயத்தில் அமெரிக்காவின் அனுமதியைப் பெறறார். பின்னர் இரண்டு நாடுகளும் பாதுகாப்பு உடன்படிக்கையை இணைந்து இதே போன்ற 2+2 கூட்டத்தில் ஏற்படுத்திக் கொண்டன அதன் பின்னர் மூன்று வருடங்களுக்குப் பின்னர் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் சிவில் அணு ஒப்பந்தம் 2008ல் போடப்பட்டது. இதன் மூலம் கேந்திரம்,  பாதுகாப்பு கூட்டாளியாக இணைந்துள்ளன.

What to Know Before Applying

அடிப்படை ஒப்பந்தங்கள்

இருப்பினும் தற்போதைய உடன்படிக்கையை அமுல்படுத்த அமெரிக்காவின் சட்டப்படி கீழ்க்கண்ட அடிப்படை உடன்படிக்கைகள் தேவைப்படுகின்றன.

முதலாவதாக லெமோ(LEMOA, 2016)   என அழைக்கப்படும் ஏற்பாடு மற்றும் பரிமாற்ற உடன்படிக்கை . இதன் மூலம் இருவரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பயன்படுத்திக் கொள்வதற்கானது.தகவல்  தொடர்பு மற்றும் பாதுகாப்பு உடன்படிக்கை என் அழைக்கப்படும் காம்காசா (COMCASA, 2018). இதன் மூலம் உயர் தொழில் நுட்ப அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளையும் தகவல் தொடர்பு வழிமுறைகளையும் விற்பனை செய்வது. இறுதியாக பெக்கா என்ற ஒப்ந்தம் கேந்திரமான பாதுகாப்பான கட்டணிக் கட்டமைப்பை் பெறுகிறது . இதன் மூலம் இரண்டு நாடுகளும் வரன்முறையற்ற செயல்பாடுட்டுடன் கூடிய பாதுகாப்பு வல்லவரசுத்தன்மையை நேட்டோ மற்றும் அதன்கூட்டாளி நாடுகள் பெறுவது போன்ற அந்தஸ்த்தைப் பெறுகிறது.

2005ல் இருந்து அமெரிக்கா எப்படி நேட்டோ போன்ற நாடுகளுடனும் அமெரிக்காவின் ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடுகளும்  கொண்டுள்ள அனல் பறக்கும் ஒப்பந்தம் போல் இரண்டு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஒத்துக் கொள்வது போல் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் உளள அரசியல் கேந்திர ராணுவ சமூகம் இந்த ஒப்பந்தம் அமெரிக்கா பின்னிய பூளோக ரீதியான கட்டமைப்பு வலையில் இந்தியா சிக்கியுள்ளதென்றும்  இந்தியா தனது  சுய அதிகாரத்தை இழக்கும் என்று தற்போதைய கேந்திர, ராணுவ உடன்படிக்கையை எதிர்க்கின்றனர். ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாது உடன்படிக்கைக் காலம் என்பது பீஜேபீ தலைமையிலான காலத்தில் வெகு விரைவாக நடந்துள்ளது.வெகுவேகத்தில் அமெரிக்காவின் தளவாட ஏற்றுமதி

ராணுவ மற்றும் போர்த்திறனுக்கான கூட்டணியில் இந்தியாவை அமெரிக்கா சேர்த்துக் கொண்டதால் அதற்கு மேலும் ஒரு பயன்பாடு அதிகரித்துள்ளது. அதாவது இந்திய ராணுவ இறக்குமதியில் போதிய அளவு பங்கினையும் பெற்றுவிட்டது.

இதற்கு முன்னர் இந்த வர்த்தகத்தில் அமெரிக்கா பூஜ்ஜியமாக இருந்தது. ஏனென்றால் குளிர்போர் காலத்தில் இ்தியாவின் அணிசேராக் கொள்கை அமெரிக்காவிற்கு சந்தேகத்துக்குரிய நாடாகவே இருந்து வந்தது. இக் காலக் கட்டத்தில் தான் இந்தியாவிற்கு சோவியத் யூனியன் ராணுவத் தளவாடங்களை வழங்கியதும் பின்னர் ஏற்பட்ட அமெரிக்காவின் அணு ஆயுதத்தடையும் இருந்து வந்தது.

தற்போது அமெரிக்கா படு வேகத்தில் மிலிட்டரி சாதனங்களை குறிப்பாக நுண்ணளவு மற்றும்   மேம்பட்ட தளவாடங்களையும் சாதனை புரியும் அளவிற்கு இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இது ரஸ்யா இஸ்ரேலின் இந்தியாவுக்கான ஏற்றுமதியை விட அதிகமானது. தற்போது பஜ்ஜியத்தில் இருந்து அமெரிக்க ஏற்றுமதி 1.26 லட்சம் கோடி ரூபாய்க்கு போயுள்ளது. இதற்கும் மேற்பட்ட வியாபார வாய்ப்புகள் இருப்பதை அமெரிக்கா கணக்குப் போட்டுள்ளது. இதன் மூலம் கேந்திரமான மிலிட்டரி நிலைப்பாடுகளை இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கா இறங்குவது மட்டுமல்லாமல் ஆயுத விற்பனையில் பெரும் பங்கினை அமரிக்கா வாரிச்சுருட்ட உள்ளது. இதன் மூலம் அமெரிக்காஇரட்டை லாபம் பெற உள்ளது. இதுபோன்று போட்டி போட இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன மட்டுமே உள்ளன.

காம்காசா என்ற உடன்படிக்கை  மிலிடரி தளவாடங்களையும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தையும் அமெரிக்காவிற்குக் கதவைத் திறந்து விட்டுள்ளது. தற்போது அமெரிக்காவில் இருந்து போயிங் சி-17 குளோப் மாஸ்டர் 3 என்ற வான ஊர்தியையும் சி 130ஜே என்ற சூப்பர் ஹெர்குலஸ் படைவீரர்கள் பயண விமானத்தையும் இந்தியா வாங்கியுள்ளது. ஆனால் அது தற்போது வர்த்தகத்திற்கான தகவல் தொடர்பு குறியீடுகளுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தயா காம்காசா ஒப்பந்தத்தில் கையழுத்திட்ட பின்னரே  மேம்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு குறியீடுகளை வழங்கியுள்ளது. சமீபத்தில் ஜனாதிபதி உதவி ஜனாதிபதி  பிரதம மந்திரி ஆகியோர் பயணிக்க வாங்கப்பட்ட போயிங்777 விமானம் பல சுய பாதுகாப்பு அமைப்புகளுடன் அக்டோபர் 1 2020 அன்று இறக்குமதி செய்யப்பட்டாலும் பெக்கா கையெழுத்து ஆனவுடன் மேலும் மேம்பட்ட தகவல் தொடர்புகள் இணைக்கப்பட்டன.மேம்பட்ட தொழில்நுட்பம் என்ற தூண்டில்

அமெரிக்கா சந்தேகமில்லாமல் நவீன தொழில்நுட்ப கட்டமைப்புகளுடன்அந் நாட்டின் பூகோள, உளவு, நெட் ஒர்க்கிங் ஆகியனவற்றில்  இணைவதற்கு வேகப்படுத்துவதும் இந்தியா அதற்கு இரையாவதும் நடந்து கொண்டிருக்கிறது. மேம்படுத்துதல் என்பது குறியீடுகளுடான தகவல் தொடர்பு,  சரியான அறிவாற்றல், துல்லியத்துடன் இலக்கைத் தாக்குதல், ஆயுதங்களை வழிநடத்துதல்,  சிறப்பான நெட் ஒர்க்கிங் ஆகியன சாதகமான அம்சங்களாக அமெரிக்கா வைத்திருக்கிறது.

டெல்லியில் நடந்த 2+2  கூட்டத்தில் அமெரிக்கா  எப்/ஏ 18 ஈ/எப் பிளாக் 3 சூப்பர் ஹோமெட்ஸ் என்ற போயிங் விமானத்தை இந்தயா மீது திணித்தது. இது இந்தியக் கப்பற்படைக்குத் தேவையான  ஐஎன் எஸ் விக்ரமாதித்யா (ரஷ்யா மாடல்) என்ற விமானந்தாங்கிக் கப்பலுக்கும் இந்தியாவிலேயே தயாரான ஐஎன்எஸ் விக்ரந்துக்கும் தேவையான 56 போர் விமானங்களுக்கானதாகும். இந்த 56 புதிய தேவையானது ஏற்கனவே காலாவதியாகும் காலத்தில் உள்ள ருஷ்யன் மிக் 29ப் பதிலாக புதிய கப்பற்படைக்குத் தேவையான எல்சிஏவிற்குகாத்திருந்திருந்தோம். அமெரிக்காவின்  எப்/ஏ 18 நாற்பது வருட காலம் பயன்பாட்டில் இருந்தாலும் சம காலத்திற்கான வளர்ச்சியின் அடிப்படையில் நவீன பறத்தலிலும் தகவல் தொடர்பிலும் மேம்பட்டது இன்றும் உற்பத்தியில் இருந்து வருகிறது. இந்த பைட்டர் ஏர்கிராப்ட்ஸ்கள் போயிங் கடற்படை விமானத்துடன் இணைத்துக் கொள்ளும் தகுதி படைத்தததால் அமெரிக்க அமைப்புடன் எளிதாக இணைத்துக் கொள்ளலாம்.

அமெரிக்கா மேலும் ஆயுதம் தாங்கிய கார்டியன் அல்லது பிரிடேட்டார் ட்ரோன் ஆகியனவற்றையும் வழங்குவதற்கு தயாராக உள்ளது.. இவ் வகை ட்ரோன்களை அமெரிக்கா வழங்குவதற்கு  காம்காசா ஒப்பந்தத்திற்குப் பின் கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டு உள்ளது.ஆ னால் பெக்காஉடன்படிக்கைக்குப் பின்னரே பூகோள இணைப்பும் ஆற்றல் மிக்கதாகவும்  நவீனமாக மேம்படுத்தப்பட்டது.

US, India in a tentative anti-China embrace - Asia Times

அமெரிக்க போட்ட ஆபத்தான கிடுக்கிப் பிடி.

ஆனால் மறுபக்கம் பல பாதிப்புகள் இந்தியாவிற்கு உருவாகும். முதலில்  இந்தியா சுயமாக இயங்கினாலும் காமின்ட் என அழைக்கப்படும் அமெரிக்க தளவாடங்கள் தகவல் தொடர்பு மற்றும் அறிதிறன்  அமைப்பில்  மாட்டிக் கொள்ள உள்ளது. இரண்டாவதாக எதிர்கால கொள்முதல்கள் அனைத்தும் அமெரிக்க அமைப்பையே சார்ந்து இருக்க வேண்டியதிருக்கும். இதனால் இந்தியா தனது பாதுகாப்புக்கான இறக்குமதியில் விரிவான பல பிற ஏற்பாடுகளுக்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. மூன்றாவதாக ரஷ்யா போர் விமானங்கள் அமெரிக்க கட்டமைப்புடன் இணைந்து செயல்பட முடியாது. இதற்கான சிறப்பு ஹார்டுவேர் சாப்ட்வேர்களை இணைக்க வேண்டும் அதற்கு இண்டு நாடுகளுமே ஏற்றுக் கொள்ளாது.ஏற்கனவே உருவாக்கப்பட்ட  ரஷ்யன் எஸ்400 எதிர் ஏவுகணை அமைப்புத் திட்டத்திற்கு ஆபத்தை விளைவிக்க உள்ளது.

அமெரிக்க இந்திய ஒப்பநதத்தில் முக்கிய விளைவாக நீண்ட கால  ரஷ்ய ராணுவ ஒப்பந்தத்திற்கு பங்கம் விளைய உள்ளது. இதனால் இந்தியா ரஷ்யாவுடனும் அருகாமை நாடுகளுடனும்  வைத்துள்ள பூகோள ரீதியான பல் துருவ  உறவு முறைக்கு பெரிய விலை கொடுக்க வேண்டியதிருக்கும். ஆனால் அமெரிக்காவின் சாதகஙகள் பல கடின சூழல்களாய் இருந்தாலும்  காலந்தோறும் கிடைக்குமா என்பது மிகப் பெரிய கேள்வியாகும்.அல்லது இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும் போது மட்டுந்தானா?

இருப்பினும் இது வரை பிறர் பொறாமைப்படும் அளவிற்கு பாதுகாத்து வந்த  இந்தியாவின் சுயமான திட்டங்களை இந்த உடன்படிக்கை பாதிக்கும். மொத்தத்தில் இந்த உடன்படிக்கையால் மேலோட்டமான நன்மைகள் தெரிந்தாலும் அதற்காக இந்தியா.இழக்கப் போவது மிக அதிகமே… அதுவே உண்மை.

நன்றி: நியூஸ் கிளிக்Article

அமெரிக்க இராணுவ கூட்டுகளும், மோடியின் அரசியல் செயல்திறமும் – வே .மீனாட்சிசுந்தரம்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); அமெரிக்காவோடு ராணுவ கூட்டை வலுப்படுத்தும் மோடி அரசின் (டிப்ளமசி) அதாவது அரசியல் செயல்...
Article

American Apartheid (பால் ராப்சன், கறுப்பின போராளியின் வாழ்க்கை சுருக்கம்.) – எஸ். நாராயணன்.

  ஆப்பிரிக்க வெள்ளை அரசின் 'நிறைவெறிக் கொள்கையை' Apartheid), அந்த நாட்டின் கறுப்பின மக்களுடன், உலகமே எதிர்த்து போராடி வீழ்த்திய...
Article

கறுப்பினத்தவர்களுக்கு எதிரான இனவெறிக்கு எதிராக அழைப்பு விடுக்கின்ற அமெரிக்க ஹிந்துத்துவா குழுக்கள் இந்தியாவில் மதவெறியை ஆதரிக்கின்றன – ராஜு ராஜகோபால் (தமிழில்: தா.சந்திரகுரு)

பித்ருபூமியில் தங்கள் செயல்களை வழிநடத்துவதற்கான தர்மத்திற்கு ஒரு வரையறையைப் பயன்படுத்துகிற அதே நேரத்தில் தங்களுடைய மாத்ருபூமியில் முற்றிலும் மாறுபட்ட வரையறையை...
Article

இப்போது ஜான் போல்டனின் புத்தகம் குறித்து ஏன் அதிர்ச்சியடைய வேண்டும்? ட்ரம்பின் தவறுகள் அனைத்தும் அனைவருக்கும் தெளிவாகத் தெரிகின்ற போது – சைமன் டிஸ்டால் (தமிழில்: தா.சந்திரகுரு)

  தனது மறுதேர்தல் முயற்சிக்காக, டொனால்ட் ட்ரம்ப் பெய்ஜிங்கில் தன்னைப் போன்று சர்வாதிகார தன்முனைப்பு கொண்ட ஜி ஜின்பிங்கிடமிருந்து ரகசிய...
Article

கறுப்புத் தோலின் மீது பதிக்கப்பட்டுள்ள அடிமை முத்திரை அகற்றப்படும் வரை, வெள்ளைத்தோலின் உழைப்பிற்கு விடுதலை கிட்டாது – அண்ணா.நாகரத்தினம்

  இன்றைய அமெரிக்கர்கள் ‘கம்பீரமான’ நாகரிகத்தை உருவாக்கிய ஐரோப்பாவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள். ஆப்பிரிக்கக் காடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு அடிமைகளாகக் கொண்டு வரப்பட்டவர்கள் ஆப்பிரிக்கர்கள்....
Article

கொரானாவை விட இனவெறிதான் இவர்களை நாள்தோறும் கொடூரமாகக் கொல்கிறது – அண்ணா.நாகரத்தினம்

  பூர்வகுடிகளான செவ்விந்தியர்களின் கல்லறை மேல்தான் நவீன அமெரிக்கா எழுப்பப்பட்டது என்பது வரலாறு. 16-ம் நூற்றாண்டில் ஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவுக்கு அடிமைகளாகக்...
Article

மினாபொலிஸ், கொரானாவைரஸ் ஆகியவையும் நெருக்கடியைப் பார்க்கத் தவறிய டிரம்ப்பின் தோல்வியும் -ஜெலானி காப் (தமிழில்: ச.வீரமணி)

(கொரானாவைரஸ் தொற்று நெருக்கடி போன்றே, ஜார்ஜ் ஃப்ளாயிட் மரணத்தைத் தொடர்ந்து கலவரங்கள் வெடித்ததற்கு, டிரம்ப் நிர்வாகத்தின்  வெளியே தெரியாத நிலையில்...
Article

கிஸ்ஸிங்கர் சகாப்தம் – ஒரு மாயை : தமிழில் ஜெகலால் ராம் சேட்

  அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் வெளியுறவுத்துறைச் செயலாளராக பணியாற்றிய திரு. கிஸ்ஸிங்கரின் ஆதரவாளர்களும்,விமர்சகர்களும்- ஏன் அவரே தன்னைப் பற்றி-...
1 2
Page 1 of 2