Tag: கல்வி

Post

கல்வி : ஓர் அரசியல்

காலம் காலமாய் கனவுகளிலேயே மிதந்தும் இன்னும் என் பெற்றோரை அவர்களுடைய பெற்றோரும், என்னை என் பெற்றோரும், நான் என்னுடைய குழந்தைகளையும் கரைசேர்க்க முடியாமல் போனதற்கு எது காரணம்? விதியா? இறைவனா? இறைக் கொள்கைகளை கேட்டும், பார்த்துமே வளர்ந்துவிட்ட நாம் சமாதானங்களுடனே வாழவும் இறைக்கொள்கைகளால் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். இந்த நூல் சமுதாயம் தேய்ந்த நிலையிலேயே இருப்பதற்கும், வறுமைக் கோட்டை தாண்டாமல் இருப்பதற்கும் , மானுடரின் கண்கள் எல்லாம் கனவின் தீவுகளாக மட்டுமே மாறுவதற்கும் கல்வி ஓர் அரசியல் ஆனதே காரணம்...

Post

கண்டேன் புதையலை!

திறமை இல்லாத குழந்தைகளே இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உள்ளது. எல்லாருக்கும் எல்லாத் திறமைகளும் இருப்பதில்லை. எனவே ஒரு சில திறமைகள் இல்லாத (உதாரணமாக, கணிதத்திலும், ஆங்கிலத்திலும் திறமை இல்லாத) குழந்தைகளை முட்டாளாகச் சித்திரிப்பது தவறு. அப்படிச் சித்திரித்தால் அது அவர்களுடைய வாழ்க்கையில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடக் கூடும் என்ற அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தினமணி.காம் – இல் இது தொடராக வெளிவந்தது.   “தேசியக்கவின்னு புகழப்பட்ட பாரதி கூட சின்ன வயசுல கணக்கு வகுப்புன்னாலே கணக்கு...

Post

என்ன படிக்கலாம்? : கொட்டிக் கிடக்கும் உயர்கல்வி வாய்ப்புகள்!

காலணி வடிவமைப்புத் துறை என்ற ஒன்று இருப்பதோ அதில் வேலை கிடைக்க என்ன படிக்க வேண்டும் என்பதோ உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐ.ஐ.டி.யில் எம்.ஏ. ஆங்கிலம் படிக்க முடியும் என்பது தெரியுமா? நாட்டின் பாதுகாப்புத் துறையில் சேர தேசப்பற்று, உடல் தகுதி தவிர என்ன படிப்பு படிக்க வேண்டும் என்று தெரியுமா? – இவற்றையும் இன்னும் பல கல்வி வாய்ப்புகள் பற்றியும் தெரிந்துகொள்ள ஒரு புத்தகம் இருந்தால் நன்றாக இருக்கும்...