நூல் அறிமுகம்

சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகி | ட்டி.டி. இராமகிருஷ்ணன் த. குறிஞ்சிவேலன் | விலை ரூ.295

தமிழில் நவீன உரைநடையை நோக்கி நடை பதித்த பாரதியே தன் காலத்தில் முதல் மொழிபெயர்ப்பு பணியும் தொடங்கினான். ஜப்பானிய ஹைக்கூவை தந்து அதை தொடங்கி பாரதி அசத்தினான். புதுமைபித்தன், க.நா.சு. திருலோக சீத்தாராம் டி.எஸ். சொக்கலிங்கம் என ஒரு பெரிய பட்டியல் இருப்பினும் தொ.மு.சி. தனித்து நிற்பார். பின் சுதந்திரத்திற்கு பிறகு என்.பி.டி. சாகித்ய அகாடமி மூலமே நாம் இந்தியாவின் பிறமொழி படைப்புகளை அறிகிறோம். குறிஞ்சி வேலன் அவர்களின் மலையாள மொழி பெயர்ப்புகள் அந்த வரிசையின் வருகின்றன.

ட்டி.டி. ராமகிருஷ்ணன் நாடறிந்த மலையாள எழுத்தாளர். இலங்கையில் கொலையுண்ட ராஜனி திரனகமாவின் வாழ்வை மையமாகக் கொண்டு இந்த நாவலை எழுதியுள்ளார். பல இடங்களில் மனம் விம்முகிறது. ஈழப்போர் இந்த மலையாளிகளை சிறிதும் பாதிக்கவில்லை என்றே நினைத்திருந்தேன்.

ஆனால் ஆண்டாள் தேவநாயகியின் கதையை வாசித்தபோது நான் துடித்துப் போனேன். தமிழ் ஈழ விடுதலை போராட்டத்தின் அர்த்தமே மாறிவிட்டது. காந்தளுருக்கு கோலத்திற்கு படை எடுக்கும் சிங்களப் படைக்காக ராஜ ராஜசோழன் தன் படைகளை கேரளத்திற்கு உதவ அனுப்புவதிலிருந்து பிறகு இராசேந்திர சோழனின் காலம் சிங்களம் நமது ஆளுகைக்கு வருகிறது. தேவநாயகியின் கதையை வாசித்தால் வரலாற்று நாவல்களின் அடிப்படை அரசியல் நமக்குப் பிடிபடும்.

Leave a Response