Book Review

இரண்டு சிற்பிகள் பற்றிய சிறப்புச் சித்திரங்களாய் இரண்டு நூல்கள் – சுப்ரபாரதிமணியன்

Spread the loveஒருவர் ஸ்ரீ ராமானுஜர் .எம் நரசிம்மாச்சாரி எழுதிய நூலின் தமிழில் மொழிபெயர்ப்பு இந்த நூலை சாகித்ய அகடமி இந்திய இலக்கிய சிற்பிகள் என்ற தலைப்பில் கொண்டு வந்துள்ளது. ராமானுஜரை இலக்கிய சிற்பியாக சாகித்ய அகாடமி சற்று வினோதமாக தான் எடுத்துள்ளது. அவரை சமுதாயச் சிற்பி என்று குறிப்பிட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும்

ராமானுஜர் வாழ்வில் தெய்வீகத் தன்மை வாய்ந்த செயல்பாடுகளும் பல சமயங்களில் திரும்பத் திரும்ப பேசப்படுகின்றன கிபி 1017 இலிருந்து 1137 வரை வாழ்ந்த அவர் தொலைநோக்கு சிந்தனையாளராகவும் சமூக புரட்சியாளராக வாழ்வைத் தொடங்கியவர் .இந்தப் பிரபஞ்சத்தின் உயிர் கடவுள் அதற்கு உடலாகவும் இருக்கிறான் என்ற பார்வை கொண்டிருந்தவர் .ராமானுஜர் சமயம் மற்றும் தத்துவம் துறைகளில் செய்த அனைத்து சாதனைகளுக்கும் மேலாக அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக திகழ்ந்தார் அவரின் 120 ஆண்டு கால விரிந்த வாழ்க்கையில் பல சாதனைகளை கொண்டிருக்கிறார்.

அவர் தந்து சென்ற தத்துவம் ஸ்ரீ சம்பிரதாயம் என்று அழைக்கப்படுகிறது. கோயில் வழிபாடு இன்னும் பழைய படங்களுக்கு புதிய நெறிமுறையை வகுத்து சீர்திருத்தி மீட்டெடுத்து புதுப்பித்தவர் என்றவகையில் அவர் பொதுஜன பரப்பிலும் வெகுவாகப் பேசப்படுவது அவரின் வாழ்க்கையை மையமாக வைத்து பல நவீன இலக்கியவாதிகள் நாவல்களும் பல சித்திரங்களும் தந்திருக்கிறார்கள் .அவரின் வாழ்க்கையும் அவரின் அறநெறியும் தத்துவத்தையும் சுந்தரம் முருகன் சாகித்ய அகாதவி வெளியிட்டிருக்கிற இந்நூலில் வெகு எளிமையாய் தந்திருக்கிறார், பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட சமஸ்கிருத வார்த்தைகள் சமஸ்கிருதம் சொல்லாடல்களை எளிமையான தமிழில் கொண்டு வந்திருக்கிறார் என்பது தான் மிக முக்கியமான பணியாகச் சொல்லலாம்.

Image

தமிழ்க்கனல் ம.க.ராமகிருட்டிணர் என்ற பாவேந்தரின் தலை மாணாக்கர் மற்றும் புதுவை முரசு இதழின் ஆசிரியர் பற்றிய ஒரு நூலை பாண்டிச்சேரியில் நண்பர்கள் வட்டம் வெளியிட்டு இருக்கிறது. புதுச்சேரி சமுதாய சிற்பிகள் என்ற வரிசையில் இந்த நூல் இடம்பெற்றிருப்பது பொருத்தமானதாகும். அந்த நூலை முழுக்க ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு எழுதிப் பதிவாக்கி வைத்திருப்பவர் சுந்தர முருகன் அவர்கள் .அவர் பாவேந்தரின் தலை மாணாக்கர் . தமிழ்க் கழகத்தைத் தோற்றுவித்தார் பகுத்தறிவு பாசறையின்முக்கிய தூணாக விளங்கினார். வாழ்நாள் முழுவதும் தமிழ் இனம் சார்ந்த செயல்பாடுகளில் இருந்தார் என்ற காரணத்தினால் தமிழ் கனலின் பாட்டுகளும் பாடு பொருள்களும் அவற்றிலிருந்து வெளிப்படும் அழகியலும் எப்படி தமிழ் சமூகத்திற்கு பயன்பாடு உள்ளதாக இருக்கிறது என்பதை இந்த நூலில் சுந்தரம் முருகன் காட்டியிருக்கிறார். முகமதியர் எனக்கு மட்டும் தனித்தொகுதி கொடுத்தால் காந்தியார் பறைசாற்றும் இந்து முஸ்லீம் ஒற்றுமையை எப்படி ஏற்படுத்த முடியும் சர்ச்சையானப் படைப்புகள் மூலமாக காந்தியாரின் தற்கால தத்துவத்திற்கு பெரும் சந்தேகங்களை கிளப்பியவர் .பெண்ணுரிமைக்கான பல தளங்களில் குரல்களை எழுப்பியவர்.அந்த நாட்களில் அரசாங்கத்தின் கொடுமையையும் பழமைவாதிகளின் எதிர்ப்பையும் தன் எழுத்தின் மூலம் வெளிப்படுத்தியவர் அதனால் குடும்பத்தினர் அவரை வெறுத்தார்கள் ஊரில் பகைமை ஏற்பட்டது அவை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் ராமகிருஷ்ணர் துணிவும் கொள்கையும் கொண்டு பகுத்தறிவு இயக்கத்திற்கு பெரிய பாதை அமைத்துக் கொடுத்தார் பெரியாரை சிந்தனை சிந்தனை அண்ணாவின் எடுத்து இவை அவரை வெகுவாக பாதிக்கின்றன அந்த கொள்கைகளை பாமாலை எடுத்திருக்கிறார் பாரதிதாசன் அந்த வழியை பின்பற்றி வந்த இராமகிருட்டிணன் பகுத்தறிவை பறைசாற்றும் மற்றும் சமூக சீர்கேடுகளை சாடும் படைப்புகளை மட்டுமின்றி தன் வாழ்க்கை முழுக்க அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்க ஆயுளை அர்ப்பணித்திருக்கிறார். இந்த நூலில் ஒரு ஆய்வு சார்ந்த ஒரு களப்பணியாளர் ஆக நின்று சுந்தர முருகன் தன்னுடைய பணியை சரியாக செய்திருக்கிறார் .

ஒரு நூலில் மொழிபெயர்ப்பாளராகவும் இன்னொரு நூலில் ஆய்வாளராகவும் சிறப்புடன் தன் பணிகளைச் செய்திருக்கிறார் சுந்தர முருகன் அவர்கள் .

( 1.தமிழ்க்கனல் ம க, இராம்கிருட்டினர்- நண்பர்கள் தோட்டம், பாண்டிச்சேரி வெளியீடு ரூ125..

2 .ஸ்ரீ இராமானுசர் , சாகித்ய அகாதமி வெளியீடு ரூ50 )

– சுப்ரபாரதிமணியன்


Leave a Response