Article

அம்மாஉணவகத்தில் பாலியல் துன்புறுத்தல்கள்: மோசமான வேலை நிலைமைகள் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குற்றச்சாட்டு – அனுஷா சுந்தர் (தமிழில்: செ. நடேசன்)

Spread the love

 

மிகவும்குறைந்த ஊதியம், வாராந்திர விடுமுறை இல்லாமை ஆகியவற்றைக்கொண்ட அம்மா உணவக ஊழியர்கள், தங்கள் வேலையை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தில் புகார்செய்யத் துணிவதில்லை.

சென்னை: 2020 ஏப்ரல் 19 அன்று வடசென்னை பழையவண்ணாரப்பேட்டையில் உள்ள அம்மாஉணவகம் இரண்டு பொறுப்பாளர்கள் கோவிட்19 சோதனையில் தொற்று உறுதியாக்கப்பட்டபிறகு  தற்காலிகமாக மூடப்பட்டது. அதற்குப்பின் ஒருபொறுப்பாளர் இறந்துவிட்டார். மே  அன்று திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸில் உள்ள உணவகத்தின் ஒரு ஊழியர் தொற்று உறுதியாக்கப்பட்டு ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டார்.  அதற்குப்பிறகு அந்த உணவகம் அன்று மூடப்பட்டது: எல்லா ஊழியர்களும் கோவிட் 19 சோதனைக்குள்ளாக்கப்பட்டார்கள்.

 சென்னையிலும், தலைநகரத்தை அடுத்துள்ள வடதமிழ் நாட்டின் மாவட்டங்களிலும் புதிய கொரோனா வைரஸின் உறுதியான பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டபோதிலும், அம்மாஉணவகங்கள் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தால் தாக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஏழைமக்கள் தாங்கியுள்ள காயங்களுக்கு மருந்திடுவதுபோல விலைகுறைவான உணவுகளை கருணையோடு வழங்கி காப்பாற்றிவந்துகொண்டிருக்கின்றன மானியம் அளிக்கப்படும் உணவுக்கிளைகள் என்ற அம்மா உணவகம் என்று எல்லாராலும் அழைக்கப்படும் திட்டம்,ஆளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ’அம்மா,’ ஜெ.ஜெயலலிதாவால்.2013 பிப்ரவரி 24அன்று துவக்கப்பட்டது. 

 மிகமிகக் குறைந்தவிலையான ரூ.1./முதல் ரூ.5/க்குள் உணவைப்பெறக்கூடிய அம்மா உணவகங்கள் மற்ற மாநிலங்களிலும் பின்பற்றப்படுவதற்கான வகைமாதிரியாக உருவானது. இந்தத்திட்டம் ஆந்திராவில் என்டிஆர் அண்ணா உணவகமாகவும், கர் நாடகாவில் இந்திரா உணவகமாகவும், ராஜஸ்தானில் அன்னபூர்ணா ரசோய் யோஜனாவாகவும், மத்தியப்பிரதெசத்தில் தீன்தயாள் உணவகமாகவும், டெல்லியில் ஆம் ஆத்மி உணவகமாகவும் பின்பற்றப்படுகிறது. 

  ஆனால்அம்மா’வின் பிரியத்துக்குரிய இந்தத்திட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு உணவு சமைத்து பரிமாறிவரும் ஊழியர்களில் சிலர், உணவின் மோசமான தரம் மற்றும் சுரண்டல் நடைபெறும் வேலை நிலைமகள் பற்றிய கவலையளிக்கும் கதைகளைக் கூறுகிறார்கள். இதைவிட மோசமாக, பல ஊழியர்கள்  நகராட்சி அலுவலர்களால் நடத்தப்படும் பாலியல் தொந்தரவுகளைப் பற்றி புகார் கூறுகிறார்கள்.

  இந்தத்திட்டம் முழுவதும் அரசின் சுகாதாரத்துறையின் ஆதரவில் நகராட்சிகளால் நடத்தப்படுவனவாக உள்ளபோது, உணவக ஊழியர்கள் அன்றாடம் கூலிபெறுபவர்கள்- பெருமளவில் சுயஉதவிக்குழுக்களிலிருந்து (SelfHelp Groups –SHG) வந்த பெண்களாகும். பலபெண்கள் இத்தகைய துன்புறுத்தல்களைப்பற்றி புகார் செய்தால், யார் அவ்வாறு செய்யத்துணிகிறார்களோ அவர்களை அச்சுறுத்துவதால்,, வேலைபோய்விடுமே என்ற அச்சத்தில் மௌனமாக சகித்துக்கொள்வது தொடர்கிறது..-

Cyclone Verdah: Amma canteens to serve free food

 பாலியல் தொந்தரவுக்குள்ளானவரின் புகாரை ஆதரித்ததால் வேலையிலிருந்து நீக்கப்படுதல்

 ஓராண்டுக்குமுன் சென்னையின் மிகவும் சுறுசுறுப்பான பகுதிகளில் ஒன்றின் ஓர் உணவகத்தில் தலைவராக பணியாற்றிய மல்லிகா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) உதவி சுகாதார அலுவலர் ஒருவரால் அவர் தமது பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டார்.  காரணம்?ஒரு சுகாதார அலுவலரால் பாலியல் தொந்தரவுக்காளான பாதிக்கப்பட்ட ஒருவர் குற்றச்சாட்டு சார்பாக அவர் ஒரு புகாரை எழுப்பியதுதான். அலுவலர்மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக மல்லிகா 2019 மார் 8 அன்று, அகில உலக பெண்கள் தினத்தன்று பணியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் திரும்பவும் போராடினார்: கடைசியில் தனது வாழ்வாதாரத்தை திரும்பப்பெற்றார்: அதற்கு அவர் தனிப்பட்டமுறையில் பெரும்செலவு செய்ய வேண்டியிருந்தது.

 சோர்ந்துபோன மல்லிகாவை உணவகத்தில் அவர் தனது காலை நேரப்பணியைமுடித்த பிறகு ஒயர் சந்தித்தது. இன்னும் அச்சம் நிறைந்தவராக இருந்த அவர், தனது வாழ்வாதாரத்தை மீட்ட மற்றும் சிறிதளவு நியாயத்தைப்பெற்ற அவரது சோதனையான போராட்டத்தைப்பற்றி அவர் விரிவாக எதுவும் கூறவில்லை. “உணவகங்களில் என்னநடந்துகொண்டிருக்கிறதுஎன்பதைப்பற்றி என்னால் சுதந்திரமாக  பேசமுடியாது: என்னுடன் வேலைசெய்பவர்கள் என்னைப்பற்றி மேலதிகாரிகளுக்கு புகார் செய்துவிடுவார்கள் என்பதால்.” என்று அவர் கூறுகிறார். அவரது வேலையை மீட்டெடுக்கும் போராட்டம் மல்லிகாவை,இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச்செய்து வேறுவேலை தேடமுடியாதராக, உடல் நலக்குறைவானவராக ஆக்கிவிட்டது: விதவையான அவர் உடல் நலம் தேறும்வரை திருமணமான அவரது மூன்று மகள்களால் பாதுகாக்கப்பட்டார். 

  மல்லிகாவின் தலைமையிலிருந்த உணவகத்தின் ஊழியர்களில் ஒருவரான, ராஜேஸ்வரி (பெயர் பாற்றப்பட்டுள்ளது) 2019 பிப்ரவரியில் அந்தப்பகுதியின் சுகாதார அலுவலரால் தொடர்ந்து அவர் சந்தித்துவரும் தொந்தரவுகள் பற்றி மல்லிகாவிடம் புகார் செய்தார். அதை மல்லிகா நினைவுகூர்ந்தார், ”அந்த அலுவலர் ராஜேஸ்வரிக்கு  தன்னுடன் தவறான உறவை வைத்துக்கொண்டால், தவறான நடத்தையை மேற்கொண்டால், அவருடன் வெளியே செல்லவேண்டும் என்ற பொருத்தமற்ற ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டால், அதற்கு மாற்றாக அவருக்கு ஒரு பதவி உயர்வையும், சம்பள உயர்வையும் தருவதாக அந்த அலுவலர் கூறினார் என்று ராஜேஸ்வரி அடிக்கடி புகார் செய்தார்” ராஜேஸ்வரியின் புகார்கள் அதிகரித்ததால், மல்லிகா அதை சுகாதாரத்துறைக்கு தெரிவித்தார்.

 விசாரணைக்குழுவின் முடிவாக அந்த சுகாதார அலுவலர் வேறு ஒரு பகுதிக்கு மாறுதல் செய்யப்பட்டார். என்ன நடந்ததோ தெரியவில்லை: சில நாட்களின்பின் எந்த ஒரு காரணமும் கூறாமல் அவரது பணி இனிமேல் தேவையில்லை என்று சுகாதாரத்துறையால் கூறப்பட்டார். அதிகாரபூர்வமான அலுவலக உத்தரவுகூட பெறமுடியாமல்,  மல்லிகா திடீரென தனது வாழ்வாதாரத்தை இழந்தவரானார்:  உணவகத்தில் அவர் ஆற்றிய பணிகளின் பதிவுகளைப்பற்றி எடுத்துக்கூறி சென்னை மாநகராட்சிக்கு  பலமுறை திரும்பத்திரும்ப முறையீடுகள் அளித்தபிறகு, மல்லிகா அவரது வேலையை மீண்டும் பெற்றார்: ஆனால் அவரது வீட்டிலிருந்து மிகுந்த தொலைவிலுள்ள இன்னொரு உணவகத்தில்: முன்பிருந்த பணித்தகுதியைவிட குறைந்த தகுதியில் .எங்கே அவர் உணவக ஊழியர்களின் தலைவியாக இருந்தாரோ அவர் இப்போது அந்த ஊழியர்களில் ஒருவராக, முன்பு பெற்றதைவிட சிறிது குறைந்த ஊதியம் பெறுபவராக உள்ளார்>. ஆனால் இன்னொருபக்கத்தில் குற்றம்சாட்டப்பட்ட சுகாதார அலுவலர் அம்மா உணவகத்தில் அவரது பதவி மற்றும் அதிகாரம் ஆகிய இரண்டையும் பெண்கள் தொடர்பான மன உலைச்சல் ஏதுமின்றி தொடர்ந்து வகித்துவருகிறார்,. என்று மல்லிகா மேலும் கூறினார். அந்த அலுவலரை ஒயர் தொடர்புகொள்ள முயற்சித்தபோது அவர் தேடப்பட முடியாதவராக இருந்தார்.

 “ஒரு தவறான நடத்தைக்கு எதிராக ஒரு புகாரை எழுப்பியதால், இழந்துபோன எனது வேலையை மீண்டும் பெறுவதற்கான எனது எல்லா முயற்சிகளும் மனவேதனையை ஏற்படுத்திவிட்டன.” என்று மல்லிகா நினைவுகூர்ந்தார்: இன்றைய நாள்வரை பாதிக்கப்பட்ட அந்தப்பெண், தன்னை அடையாளம் தெரியாதவராக வைத்துக்கொள்வதில் வலிகளைப் பொறுத்துக்கொண்டிருக்கிறார்: வேலை செய்யும் இடத்தில் என்ன நடந்தது என்பதை தெரிவிப்பதால் அவமானப்பட்டுவிடுவோம் என்ற அச்சத்தில் அவர் தனது கணவரிடமோ, குழந்தைகளிடமோ எதையும் கூறவில்லை. அவர் அம்மா உணவகத்தைவிட்டு விலகி வேறு வேலை தேடிக்கொண்டிருக்கிறார். “அம்மா உயிருடன் இருந்திருந்தால், பெண்கள்மீது இத்தகைய கொடூரங்கள் நடந்திருக்காது” என்கிறார் மல்லிகா.

Tamil Nadu: Amma canteen footfalls double to 7 lakh a day ...

 ஊழலைப்பற்றி கேள்வி கேட்டதற்காக பழிவாங்கப்படுதல்

 அம்மா உணவக திட்டம் மூலப்பொருள்கள் மற்றும் சாதனங்களை விலைக்கு வாங்குவதில் ஊழல் குற்றச்சாட்டுக்களை கொண்டிருந்தது. 2014-15 ஆண்டில் நடைபெற்ற தணிக்கைக் குறிப்புக்களின்படி உணவகங்கள் ரூ.63.40 கோடி இழப்பை சந்தித்திருந்தன. அம்மா உணவகத் திட்டத்தின் மிகவும் அண்மைக்கால தணிக்கைகளை ஒயர் பெறமுடியவில்லை.

 2014 பிப்ரவரியில் , சகுந்தலா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) ஓர் அரசுமருத்துவ மனை அம்மா உணவகத்தில் பணியாற்றத் துவங்கியிருந்தார். சுகாதார ஆய்வாளராலும், உணவகத்தில் தலைவராலும் கூட்டாக நிர்வகிக்கப்பட்ட உணவகத்தின் கணக்குகளில் இருந்த முரண்பாடுகளைப்பற்றி கேள்வி கேட்டபிறகு, சகுந்தலா, தொல்லைகளுக்குள்ளாக்கப்பட்டார்: இறுதியில் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். வேலை நேரத்தை மாற்றித்தரவேண்டும் என்ற அவரது வேண்டுகோளைப்பயன்படுத்தி, ஆய்வாளருக்கும் சகுந்தலா உள்ளிட்ட நான்கு ஊழையர்களுக்கும் இடையே தகராறு வெடித்தது. அதன்பிறகு அவர் நீண்ட நேரம் வேலைசெய்யவேண்டியவாராக ஆக்கப்பட்டார்: அவரது வேலை நேரம் முடிந்தபிறகும்கூட அடிக்கடி வேலைசெய்யும் பொறுப்பு அளிக்கப்பட்டார்.

 அந்த ஆய்வாளர் ஊழியர்கள் தன்னை உடல்ரீதியாக தாக்கினார்கள் என்று குற்றம் சாட்டியபோது அது மேயர் அலுவலகம்வரை நீண்டுகொண்டே இருந்தது. இதில் ஒரு சமரசம் ஏற்பட்டது: அந்தப்பிரச்சனை முறையாக முடித்துவைக்கப்பட்டது.  ஆனால் எவ்வாறோ, மூன்றுவாரங்களுக்குப்பின்னர், நான்கு ஊழியர்களும் எந்த ஒரு காரணமும் குறிப்பிடப்படாமல்,  வேலையிலிருந்து நீக்கப்பட்டார்கள். “ நாங்கள் மாநகராட்சியை அணுகி, எங்களுக்கு எதிராக எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லை என மறுத்தபோது, அலுவலர்களிடம் மன்னிப்புகேட்கவேண்டும்: அவர்களுக்கு இலஞ்சம் தரவேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் நாங்கள் எங்கள் வேலையைப்பெறலாம், என்று உறுதியளிக்கப்பட்டது” என்று சகுந்தலா குற்றம் சாட்டினார்.

 சகுந்தலாவும் அவரது சகாக்களும் இறுதியாக தமிழக அரசின் நகராட்சி நிர்வாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம்    முறையீடு செய்தார்கள். எஸ்.பி.வேலுமணியும் இதில் தலையிட்டார். அவர்கள் மூன்று மாதங்களுக்குப்பிறகு மீண்டும் வேலையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள் . மூன்றுபேர் வேலையில் சேர்ந்தபோது ஒருவர்மட்டும் வேலையில் மீண்டும் சேரமறுத்துவிட்டார்> ‘என்னிடம் எந்தத்தவறும் இல்லாதபோது, இந்த மூன்றுமாதங்களாக நான்  அனுபவித்த மனஉலைச்சல்களும், பொருளாதார நெருக்கடிகளும்  எனக்கு மிகுந்த மனவேதனைகளை அளித்தன” என்கிறார் சகுந்தலா.

Amma's Canteen serving breakfast and lunch at rock-bottom rates ...

 அம்மா உணவகங்களில் சுரண்டல் நிறைந்த அபாயகரமான வேலை நிலைமைகள்

 சுய உதவிக்குழுக்களிலிருந்து பெண்கள் வெறும் ரூ.300/ அன்றாடக்கூலிக்கு ஒப்பந்த ஊழியர்களாக உணவகங்களில் நியமிக்கப்படுகிறார்கள். வேலை இடத்தில் ஏற்படும் விபத்துக்களின்போது ஆயுள்காப்பீடு போன்ற அரசு ஊழியர்களுக்கான எந்தவொரு பயனையும் அவர்கள் பெறுவதில்லை. அவர்களுக்கு வார விடுமுறையும்கூட கிடையாது. ஒருநாள் கூலிஇழப்புக்கு மாற்றாக மட்டுமே அவர்கள் ஒருநாள் விடுமுறையை பெறலாம். சமையல்கூடத்தின் பாதுகாப்பற்ற மற்றும் ஒழுங்கற்ற மோசமான கட்டமைப்புபற்றியும், சமைக்க அளிக்கப்படும் மூலப்பொருள்களின் மோசமானதரம் பற்றியும்கூட ஊழியர்கள் புகார் செய்கிறார்கள். உணவகத்தின் வசதிகள் மேம்படுத்தப்படவேண்டும் என்று அவர்கள் கோரிவருகிறார்கள்.

 தனது பெயர் தெரியாமலிருக்க விரும்பும் ஒரு ஊழியர், அவர் சமைக்கும் சமையல்கூடத்தின் ஆபத்தான நிலைமைகள் பற்றி தொலைபேசிமூலம் ஒயருக்கு கூறினார்,” முற்றிலும் பழுதுபட்டு, பராமரிப்பு தேவைப்படும் அடுப்பு எப்போது எங்கள்மீது விழும் என்று என்னால் உறுதியாக கூறமுடியவில்லை” என்கிறார் அவர்.”மோசமான தரம், கலப்படமான மூலப்பொருள்கள் எங்களுக்கு சமைக்கத் தரப்படுகின்றன” என்று குற்றம் சாட்டுகிறார் சகுந்தலா. அவரது உணவகம் அடிக்கடி குடிகாரர்களால் சூழப்படுகிறது: அவர்கள் உணவுண்டபின் அதற்கான விலையைத்தர மறுக்கிறார்கள்: அதனால், இழப்பு கூடுகிறது என்று மேலும் அவர் கூறுகிறார்.

 இப்போது தமிழ்நாடுஅரசு, வேலையிடங்களுக்கு உணவைக்கொண்டுசெல்லும் நோக்கத்தோடு, நடமாடும் உணவகங்களை உருவாக்க 2020-21  நிதிநிலை அறிக்கை யில் ரூ .100/ கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.. உத்தேசிக்கப்பட்டுள்ள நடமாடும் உணவகங்களில் வேலை செய்வது எல்லா பெண்களுக்கும் வசதியானதாக இல்லை: குறிப்பாக ஏற்கனவே நடைமுறையில் உள்ள சமையற்கூடங்களின் கட்டமைப்பு வசதிகள் தரமானதாக இல்லாதபோது, என்று ஊழியர்கள் கூறுகிறார்கள் 

முறைசாரா தொழிலாளர்களை அமைப்பாக மாற்றுவதில் உள்ள சிரமங்கள்

பணியிடங்களில் பாலியல் தொல்லையா ...

அம்மா உணவகங்களிலும், வேறு வேலையிடங்களிலும் பெண்கள் எதிர்கொள்ளும் தொந்தரவுகளைப்பற்றிப் பேசும்போது அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ்நாடு பொதுச்செயலாளர் பி.சுகந்தி ”அணிதிரட்டப்பட்ட, மற்றும் அணிதிரட்டப் படாத துறைகள் இரண்டிலும், வேலை செய்யும் இடங்களில்பாலியல் தொந்தரவுகள் அதிகமாக காணப்படுகின்றன. இத்தகைய பிரச்சனைகளை எடுத்துக்கொள்ள சங்கங்களோ, குழுக்களோ இல்லாததால், அணிதிரட்டப்படாத துறைகளில் இதுமிகவும் அடக்கமுடியாத அளவுக்கு உள்ளது” என்கிறார்

 சங்கங்களின் முக்கியத்துவத்தை அழுத்தமாகக்கூறும் சுகந்தி, பாலியல் தொந்தரவு போன்ற பிரச்சனைகளை எழுப்புவதற்கு இந்த சங்கங்கள் ஊழியர்களுக்கு ஆற்றல்களைத்தருகின்றன: பெரும்பாலான பிரச்சனைகளில் உள்ளதுபோல இத்தகைய குற்றங்களைச் செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் மீது அதிகாரம் செலுத்தக்கூடிய ஆண்களாகவே இருக்கிறார்கள், என்கிறார்.

  “அணிதிரட்டப்படாத துறைகளில் சங்கங்கள்இல்லாமை என்பதன்பொருள், பெண்கள் மாவட்ட ஆட்சியரால் தலைமைதாங்கப்படும் குழுக்களுக்கு மட்டுமே புகார் செய்யமுடியும் என்பதாகும்” என்று சுகந்தி மேலும் கூறுகிறார். “ இதுவரை அம்மா உணவகங்களிலிருந்து எந்த ஒரு புகாரையும் நாங்கள் கேட்டிராவிட்டாலும், அந்த ஊழியர்களை சங்கமாக்குவதை நாங்கள் முன்னெடுப்போம்: அதனால், அவர்கள் தங்களுடைய குறைகளை தங்களுடைய வேலைக்கோ  அல்லது பாதுகாப்புக்கோ எவ்வித அச்சமுமின்றி பகிர்ந்துகொள்ளலாம்”

 எல்லாப்பிரச்சனைகளுக்கு அப்பாலும், எவ்வாறாயினும் இந்தத்திட்டம் தன்னளவில் ஏழைகளுக்கு மானியம் அளிக்கப்படும் உணவு அளிப்பது,, சுயஉதவிக்குழுக் களிலிருந்து வரும் பெண்களுக்கு வேலை அளிப்பது என்ற இரண்டுபயன்களை அளிக்கவேண்டும் என ஜெயலலிதா சிந்தித்ததைப்போல வெற்றிகரமாக நடைபெறும் என்று உறுதியாக நம்புகிறார்கள்.

( அனுஷா சுந்தர் தமிழ்நாட்டைச்சார்ந்த பத்திரிக்கையாளர். சுற்றுச்சூழல், பாலினம், கலாச்சாரம் மற்றும் மனநலப்பிரச்சனைகள் பற்றி எழுதிவருகிறார்.)  

 

Leave a Response