Web Series

தொடர் 3: எலி – அசோகமித்திரன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

Spread the love

ஜ.தியாகராஜன் எனும் அசோகமித்திரன் தமிழின் முக்கிய சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவராவார். அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளக்கூடியவற்றின் நுட்பமான அம்சங்களை தம் படைப்புகளில் எள்ளலுடன்  வெளிப்படுத்தியவர். வாழ்வின் மீதான அழுத்தமான நம்பிக்கைகளை இவரது கதைகள் வெளிப்படுத்துகிறது. திரைப்படத் துறையில் பயணித்தன் அடிப்படையில் தமிழில் சினிமா சம்பந்தமாக அதிக கதைகளை எழுதியவர் இவரே.

எலி

அசோகமித்திரன்

இரவுச் சாப்பாட்டுக்குப் பின் எதையும் மீதம் வைக்காமல் ஐம்பது வயது அக்காவும், நாற்பது வயது மனைவியும், பதிமூன்று வயது மகளும் படுத்து விட்டார்கள் என்பதில் கணேசனுக்கு கோபம்.  ஒரு தோசைத் துண்டு, ஒரு அப்பளத் துண்டு, ஒரு தேங்காய்ச் சில்லு கிடையாது.  எலிப்பொறிக்கு எதை வைப்பது? எக்கேடு கெட்டுப் போங்கள் என்று கணேசனும் படுத்து விட்டான்.

அரை மணி கூட ஆகவில்லை.  எலியின் அட்டகாசம் துவங்கிவிட்டது.

“ஏதாவது மிச்சம் வைச்சுத் தொலைன்னா. ஏன் இப்படித் தினம் துடைச்சு துடைச்சு வைக்கறே?”

“என்னத்தை மிச்சம் வைக்கறது?  ரசத்தை எலிக்கு வைக்கறதா?  இல்லே உப்புமாவை பொறிக் கொக்கியிலே மாட்டி வைக்கறேளா?”

கணேசனுக்கு படுக்க முடியவில்லை,  அந்த இரு அறைகளில் பத்து பேர் சேர்ந்தாற்போல் படுக்கவோ சாப்பிடவோ முடியாத அந்தச் சிறு இடத்தில் தினமும் நான்கைந்து  எலிகள் சர்வ சுதந்திரத்துடன் ஓடியாடி விளையாடுகின்றன.

கணேசன் சட்டையை மாட்டிக் கொண்டு, கால் ரூபாயைச் சட்டைப் பையில் எடுத்துப் போட்டுக் கொண்டான்.

எங்கும் வடை மீதமில்லை.  ரொட்டி, பன், பிஸ்கெட்டு, வாழைப்பழம் இவைதான் இருந்தன,  எலி இவற்றைச் சட்டை செய்வதில்லை.  எண்ணெயில் பொரித்தெடுத்த பண்டம், வடை, பக்கோடா, பப்படம் இவைதான் பலனளித்திருக்கின்றன.  பருப்பு விற்கிற விலையில் எண்ணெய் விற்கிற விலையில் தினம் எங்கே இதெல்லாம் வீட்டில் பண்ணிக் கொண்டிருக்க முடிகிறது?  அரிசி உப்புமா, ரவை உப்புமா, பொங்கல், அப்புறம் ரவை உப்புமா, பொங்கல், அரிசி உப்புமா இப்படித்தான் மாறி மாறி.

ரயில் உணவில் எலி ஐயப்ப பக்தர்கள் ...

வீடு திரும்ப இருந்த கணேசன் தூரத்தில் மைதானத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெறுவதையும், அதையொட்டி சிறிது தள்ளி ஒரு தள்ளு வண்டியைச் சுற்றிப் பலர் நிற்பதையும் பார்த்தான்.

கணேசனும் அந்த வண்டிக்கருகில் நின்று கொண்டான்.  நீர்மூழ்கிக் கப்பல்களைப் போல இருபது மாவு தோய்ந்த மிளகாய்கள் பொரிந்து கொண்டிருந்தன.  “ஒரு வடை போடுய்யா, வடை போடுய்யா” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

மீண்டும் மீண்டும் மிளகாயே எண்ணெயில் இறங்கியது.  அவர்கள் யாவரும் தாங்கள் தின்பதற்காக காத்திருக்கிறார்கள்.  ஆனால் கணேசன் எலிக்காக காத்திருக்கிறான் என்பது தெரிந்தால் எப்படியிருக்கும்?

வடைபோட்டு எடுத்தவுடன் முதலில் கணேசனுக்குத்தான் இரு வடைகள் ஒரு மாலை முரசுத் துண்டில் கொடுக்கப்பட்டது.  சுடச்சுட எண்ணெய் காகிதத்தில் ஊறி அவன் உள்ளங்கையில் பரவிற்று.  மணக்க மணக்க இரு வடைகள்.  வடையின் மேற்புற ஓட்டில் பருப்புத் துகள்கள் வெள்ளையாகத் துரத்தி நின்றன.  சூடு தாங்கமாட்டாமல் வடைகளை கைக்கு கை மாற்றி கொண்டிருந்தான்.

எலிப்பொறி கொக்கியில் ஒரு வடையைப் பொறுத்தினான்.  இன்னொரு வடை மீதம்.  கணேசனே அதைத் தின்றான்.

பொறியில் எலி அடைபட்டு இரவெல்லாம் ஏகமாகச் சப்தம் எழுப்பியிருக்கிறது.  அவனுக்குத் தெரியாது.  அவன் மனைவிதான் சொன்னாள்.

இம்முறை தெருச் சாக்கடை வேண்டாம் என்று மைதானத்தை நோக்கிச் சென்றான்.  அது பெரிய எலியும் இல்லை. மிகச் சிறியதும் இல்லை.  பரந்த வெளி பழக்கமில்லாமல் எலி தாறுமாறாக ஓடிற்று.  ஒரு பையன் கல்லை விட்டெறிந்தான்.  கணேசன் வேண்டாம் பையா என்றான்

எங்கிருந்தோ பறந்து வந்த காக்கை எலியை ஒருமுறை கொத்திவிட்டுப் போயிற்று.  எலி மல்லாந்து படுத்துத் துள்ளிற்று.  பிறகு இன்னும் வேகமாக தத்தித் தத்தி ஓடிற்று.  காக்கை ஒரு சுற்று சுற்றி விட்டு வேகமாகக் கீழிறங்கியது,  எலிக்குப் பதுங்க இடம் தெரியவில்லை.  காக்கை எலியை அப்படியே கொத்திக் கொண்டு தூக்கிச சென்று விட்டது.

வீடு திரும்ப ஆரம்பித்தவன் பொறிக்குள் பார்ததான்.  அவன் முந்தின இரவு கொக்கியில் மாட்டிய வடை அப்படியே தின்னப்படாமல் இருந்தது.

நடைவழி நினைவுகள்: அசோகமித்திரன் ...
எழுத்தாளர் அசோகமித்திரன்

1 Comment

  1. ரயில் உணவில் எலி ஐயப்ப பக்தர்கள்

    –கதைக்குட்பட்ட வரியல்ல. நீக்க வேண்டுகிறேன்,

Leave a Response

Top Reviews

Video Widget

gallery