Book Review

நூல் அறிமுகம்: ஆசிரியர் கலகலவகுப்பறை சிவாவின் “சீருடை”- திவாகர். ஜெ

Spread the love

 

*அண்ணே…. நீங்கள் ஆசிரியர் தானே?*

ஆமாம் தம்பி.

*திரைப்படங்கள் பார்க்கும் ஆர்வமுண்டா?*

என்னங்க தம்பி? இப்படி கேக்குறீங்க? சினிமா பார்க்காம யாராச்சும் இருப்பாங்களா? நானெல்லாம் ஊரடங்குங்கு முன்னாடி மாசத்துக்கு 4 படமாச்சும் தியேட்டர்ல போய் பார்த்திடுவேன். ப்ச்… இப்போ தான் முடியல…..

*நல்லது. என்ன மாதிரியான படமெல்லாம் பார்ப்பீங்க?*

எல்லா படமும் பார்த்துடுவேங்க. காமெடி, ஆக்சன், காதல்னு எந்த சப்ஜெக்ட் படம்னாலும் பார்ப்பேன்.

*இந்த கல்வி, இன்றைய கல்வி முறை இது சம்பந்தமான படங்கள்லாம் பார்க்குறதுண்டா?*

எங்க தம்பி தமிழ்ல அது மாதிரி படங்கள்லாம் வருது? ஏதோ அத்தி பூத்த மாதிரி அப்பப்போ வாகை சூடவா, குற்றம் கடிதல்னு சில படங்கள் இருக்குற எதார்த்தத்தை சொல்லுற மாதிரி ஒண்ணு, ரெண்டு வருது. அவ்ளோ தான். இன்னும் இது மாதிரி கல்வியைப் பற்றியும், கல்வி முறைகளைப் பற்றியும் பேசுற மாதிரி நிறைய படங்கள் வந்தா பார்க்கலாம் தான்.

*அப்டினா இந்தாங்க….. இந்த புத்தகம் உங்களுக்கு தான்…. முதல்ல இதைப் புடிங்க.*

என்ன தம்பி படத்தை பத்தியெல்லாம் கேட்டுட்டு புத்தகத்தைக் கையில் தர?

*அண்ணே….. நீங்க சொன்னீங்கல்ல கல்வி பற்றிய படங்கள்னு, இது முழுக்க முழுக்க அது மாதிரி வெவ்வேறு உலக மொழிகளில் வெளிவந்த கல்வி மற்றும் ஆசிரியர் பற்றி பேசுற திரைப்படங்கள் பற்றிய அறிமுகத்தைத் தருகிற புத்தகம் தான் இந்த “சீருடை” அப்டிங்கற நூல்.*

இதுல என்னென்ன திரைப்படங்கள் பற்றியெல்லாம் ஆசிரியர் சொல்லி இருக்காரு தம்பி?

*மராத்தி மொழியில் வெளிவந்த Ganvesh (சீருடை), Shikshanachya Aaicha Gho (கேவலமான கல்வி முறை), 72 Miles – Ek pravas (72 மைல் – ஒரு பயணம்) , தாய்லாந்தில் 2014 இல்  வெளிவந்த The teacher’s Diary,  2006 இல் வெளிவந்த ஆங்கில மொழிப் படமான The Ron Clark Story, ……. இது மாதிரி நிறைய கல்வியியல் சார்ந்த திரைப்படங்கள் பற்றிய அறிமுகம் இந்த நூலில் இருக்கு.*

ஓஹோ……

கணினி கல்வியின் புதுமை ...

*நாம என்னதான் இன்னைக்கு 2 செட், 4 செட்னு சீருடையை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கினாலும் குழந்தைகளுக்கு அது கிழிஞ்சிட்டா மாற்று உடை கூட இல்லாத குடும்பங்கள் இன்றைக்கும் கிராமங்களில் இருப்பது நமக்கு தெரியும். அப்படிப்பட்ட ஒரு ஏழை மாணவனும் அவனது தந்தையும் புது சீருடைக்காக படும் அவல நிலையையும், “இலவசங்களை ஒட்டுமொத்தமாக குறை சொல்லி விடுகிறோம். அதில் அத்தியாவசியமானவையும் இருக்கின்றன” என்கின்ற உண்மையையும் பேசுகின்ற படம் தான் சீருடை.*

Shikshanachya Aaicha Gho னு ஒரு படம் சொன்னாயே அது எதைப் பற்றி பேசுது தம்பி?

சரியான கேள்வியைத் தான் கேட்டு இருக்கீங்கணா. நிச்சயம் இந்த திரைப்படம் ஒவ்வொரு ஆசிரியரும், பெற்றோரும் பார்க்க வேண்டிய படம். படிப்பு, படிப்பு, படிப்பு, மார்க்,மார்க், மார்க்னு கடிவாளம் கட்டிய குதிரை மாதிரி குழந்தைகளை ஒரே திசையை நோக்கி நாம் செலுத்திகிட்டு இருக்கோம். அது தவறு. அவர்களோட ஆர்வம் என்ன? எந்த துறையில் அவர்கள் முன்னேற வேண்டும்னு நினைக்குறாங்கனு தெரிஞ்சு அதுல அவர்களோட திறமைக்கு நாம் ஊக்கம் கொடுத்தாலே போதும் அவர்கள் மிகச் சிறந்தவர்களாய் மிளிர்வார்கள்னு சொல்ற படம். நம் கல்விமுறையின் அவலங்களை தோலுறுத்திக் காட்டுகின்ற படம்னு கூட சொல்லலாம். இந்த படத்தோட முன்னோட்டத்துல இப்படி சொல்லியிருப்பார்கள்: *”இந்தியக் குழந்தைகள் போன ஜென்மத்துல நிச்சயமா கொடுமையான பாவம் செஞ்சிருக்காங்க.  அதனாலதான் குழந்தைப் பருவத்தில் சிறை தண்டனையை பள்ளியில் அனுபவிக்கிறாங்க. உடலால், மனதால் குழந்தைகள் அனுபவிக்கும் அழுத்தத்திற்கு முன்னாடி உலகின் சகல விதமான தண்டனைகளும் ஒன்றுமில்லாமல் ஆகிடும்.”*

உண்மைதான் தம்பி. நாம் நம் குழந்தைகளை கொஞ்ச நஞ்சமா கொடுமைப்படுத்துறோம். இந்த பெருநோய் தொற்று காலத்திலும் ஆன்லைன் வகுப்பு, அது இதுனு குழந்தைகளைப் போட்டு வாட்டி வதைக்குற பெற்றோர்களைக் காணும்போது கோபம் கொப்பளிக்குது தம்பி.

ஆமாம் ணா. நீங்கள் சொல்வது 100% உண்மை.

சரி தம்பி. அடுத்து அந்த 72 Miles – En Pravas -னு ஒரு படம் பற்றி ஆசிரியர் சொல்லி இருக்காருனு சொன்னயே அதோட கதையையும் கொஞ்சம் சொல்லு பா தம்பி….

ஐ….. அதெல்லாம் முடியாது. நீங்களே. இந்த புத்தகத்தைப் படிச்சு மீதி அவர் சொல்லி இருக்குற திரைப்படங்களைப் பற்றியும் தெரிஞ்சிக்கோங்க. *ஒவ்வொரு திரைப்படத்தையும் அவ்வளவு அருமையாக விளக்கி இருக்கிறார் நூலாசிரியர் கலகல வகுப்பறை சிவா அவர்கள். ஒவ்வொரு திரைப்படம் பற்றியும் வாசிக்கும் போதும் நமக்கு அப்படியே திரையில் பார்க்கின்ற அனுபவம் கிடைக்குது.* நீங்கள் ஒரு ஆசிரியர், அதோட இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையும் கூட. அதனால் நிச்சயம் இந்த புத்தகத்தை படிங்க. முடிஞ்சா இந்த திரைப்படங்கள் எல்லாம் இணையத்துலயே கிடைக்குது. பதிவிறக்கம் செய்தும் பாருங்க.

கண்டிப்பா படிக்குறேன் தம்பி. நீங்க இவ்ளோ தூரம் இந்த புத்தகத்தைப் பற்றி பெருமையா சொன்ன பிறகும் படிக்காம எப்படி இருக்குறது. நிச்சயம் படிக்குறேன்.

நல்லது. அடுத்து வேற ஒரு புத்தகத்தை படிச்சுட்டு வந்து உங்களை சந்திக்குறேன். பை பை….

 

நூல் : சீருடை

ஆசிரியர் : கலகலவகுப்பறை சிவா

வெளியீடு : Books for children

பக்கங்கள் : 64

விலை : ₹ 50

 

வாசிப்பும் பகிர்வும்

திவாகர். ஜெ

 

Leave a Response

Top Reviews

Video Widget

gallery