Book Review

புத்தக அறிமுகம்: எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனின் “சாமிகளின் பிறப்பும் இறப்பும்” – பெ. அந்தோணிராஜ் 

Spread the love
          நூலாசிரியர் ச. தமிழ்ச்செல்வன் த. மு. எ. க. ச  வின் கௌரவ தலைவர். இதில் பதினாறு கட்டுரைகள் உள்ளன. இந்நூல் துளிர் மாத இதழில் தொடராக வந்தது. நாட்டுப்புறத் தெய்வங்களின் கதைகள் சொல்லப்பட்டுள்ளன. இக்கட்டுரைக்கான செய்திகளை சேகரித்தவர்களாக அமல்ராஜன், இரத்தின விஜயன், சித்ரா, ஹெப்சிபா, பரிமளா, கனகவல்லி, இவர்களுக்கெல்லாம் தலைமையேற்ற ச. மாடசாமி ஆகியோருக்கு நன்றிகள் தெரிவிக்கிறார் ஆசிரியர்.
              இந்த உலகம்,  நம் சக மனிதர்கள், நாடு, அரசு எல்லாம் இரக்கமுடையவர்களாக மாறிவிட்டால் கடவுளை மக்கள் தேடமாட்டார்கள். நம்மிடமே கருணை பெருகிவிட்டால் கருணையின் வடிவத்தை சிலைவடிவில் ஏன் தேடப்போகிறோம். ஏக்கப்பெருமூச்சு விட்டுக்கொண்டுள்ள ஏழைகளுக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும் ஒரு சமூகம் அமைந்து விட்டால் கடவுள் தேவைப்படமாட்டார். பகுத்தறிவை பயன்படுத்த துவங்கிவிட்டால் கடவுள் என்பது மனிதனால் உண்டாக்கப்பட்ட சரக்கு என்பது புரியும்.
ச.தமிழ்ச்செல்வனுடன் நேர்காணல் - The ...
சாமிகளில் இரண்டுவகையான சாமிகள் உள்ளன. ஒன்று ஏழைச்சாமிகள், இன்னொன்று பணக்காரசாமிகள்.
பணக்காரச்  சாமிகளுக்கு நிரந்தரமான குடியிருப்பு உண்டு. புனித நூல் உண்டு. இப்படித்தான், இந்தநாளில்தான், இத்தனை முறைதான், இதற்கு முன் பெரியவர்கள் என்ன செய்தார்களோ அதில் அணுவளவும் பிசகிவிடாமல் நடந்து கொள்ளவேண்டும், சாமி தரிசனத்தில் பூசாரியோ, பாதரோ, மௌல்வியோ இருப்பார்கள்.
ஆனால் ஏழைச்சாமிக்கு எந்தச்சட்டமும் கிடையாது. ஏழைகளைப்போலவே எளிமையான இருப்பிடங்களே உண்டு. வருடத்திற்கு ஒருமுறை போனால் போகிறதென்று திருவிழா நடக்கும் அன்றுதான் படையலே இடப்படும். பிறகு வருசம்பூரா பட்டினிதான்.
பணக்காரசாமிகளுக்கு சைவச்சாப்பாடுதான். ஆசைப்பட்டாலும் அசைவம் கிடைக்காது. ஆனால் ஏழைச்சாமிகளுக்கு ஒருநாள் என்றாலும் அசைவம்தான், full கட்டுதான்.
சாமிகளிலும் சாதி உண்டுபோல, ஏழைகள் வணங்கும் சின்ன சாமிகளை பணக்காரர்கள் அதாவது சாதி அமைப்பில் மேல் தட்டில் இருப்பவர்கள் வந்து வணங்கமாட்டார்கள்.
கம்பத்தில் 1969 ல் ஒரு சாலைவிபத்து. தனம் என்கிற ஐந்தாம் வகுப்பு படிக்கும் பெண் சாலையிலேயே இறந்து போகிறாள். சுற்றி இருந்தவர்கள் எல்லாம் அதைப்பார்த்து மிகவும் மனக்கஷ்டம் அடைகிறார்கள். சாலை ஓரத்தில் ஒரு கல்லை நட்டு வழிபடுகிறார்கள். இப்போது அங்கு  தனகாளியம்மனாக வணங்கப்படுகிறாள் அந்தப்பெண்.
சாமிகளின் பிறப்பும் இறப்பும்-9
1988ல் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகில் கூனம்பட்டி. சர்க்கரையம்மாள் தன்னுடைய குடிகார கணவனின் கொடுமை தாங்காமல் பிள்ளைகளுடன் சென்று கிணற்றில் விழுகிறாள். அதில் ஒருவன் மட்டும் தப்பி வந்து விஷயத்தைச் சொல்ல அவர்களை அடக்கம் பண்ணி முடித்தபின் அவர்களை தெய்வமாக வழிபட துவங்கினர். இப்போது அவர்கள் தெய்வமாகிவிட்டனர்.
1980 ல் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் சீனியம்மாள் என்ற கன்னிப்பெண் வீட்டில் இருக்கிறாள், காட்டு வேலை முடித்து வந்த அண்ணன், வீட்டிற்கு எதிரேயுள்ள கடையை பார்க்கிறான். அங்கே சில இளைஞர்கள் நின்று இருந்துள்ளனர், அவர்களை பார்த்து கோபம் அடைந்தவன் வீட்டிற்குள் நுழைந்ததும் தங்கையை கண்டபடி திட்டுகிறான். ஒன்றும் புரியாமல் அந்த தங்கை அண்ணனின் திட்டியதை கண்டு அழுகிறாள். மானம் போனபின்பு உயிர்வாழ விருப்பமின்றி தற்கொலை செய்துகொண்டாள். முதலில் உறவினர்களால் வணங்கப்பட்ட சீனியம்மாள் இப்போது அந்த வட்டார மக்களால் வணங்கப் படுகிறாள்.
பேரையூர் அருகில் உள்ள சிலமலைப்பட்டி எனும் ஊரில் சீலைக்காரி கோப்பம்மாள் என்ற தெய்வம் தாழ்த்தப்பட்ட மக்களால்  வணங்கப்படுகிறது. அந்த கோப்பம்மாள் தொட்டிய நாயக்கர் வீட்டில் பிறந்தவள். சிறு வயதுமுதல் மாடுமேய்க்கிறாள், உடன் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச்சேர்ந்த ஒருவனும் மாடுமேய்க்கிறான். ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருக்கின்றனர். நல்ல நட்பு. கபடமற்ற நட்பு. பெற்றோர்கள் சந்தேகிக்கிறார்கள், ஒரு நாள் தண்டனையாக வீட்டிற்கு வெளியே நிற்கவைத்துவிடுகின்றனர். மானம் போனதென்று அந்தப்பெண் குயவர் சூளையில் இறங்கி தன்னை மாய்த்துக்கொள்ளுகிறாள். இறப்பதற்கு முன்பு அந்த குயவரிடம், “நான் இறந்ததை என் வீட்டாரிடம் எதுவும் கூறவேண்டாம், அந்த தாழ்த்தப்பட்ட இளைஞனின் வீட்டில் சொல்லிவிடுங்கள். எந்தப்பாவமும் செய்யாத நான் இறந்தபின்பு என்னை வணங்கினால் அவர்களுக்கு நல்லது நடக்கும் என்று கூறி இறந்துபோனாள். விபரம் அறிந்து சென்று பார்க்கும்போது நட்சத்திரபூப் போட்ட சேலையின் சின்ன பகுதி மட்டும் கிடைத்துள்ளது. அந்தப்பெண்ணை இப்போது ஆண்டுதோறும் அந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வணங்கி வருகின்றனர்.
முனியப்பசாமி கோவிலில் திருவிழா ...
     கத்தோலிக்க கிருத்துவர்களால் வணங்கப்படும் குருசடிகள் எல்லாம் மக்களுக்கு சேவை செய்த கிருத்துவ பாதிரிமார்களின் அடக்கம் செய்யப்பட்ட இடமே.
நாகூர் ஆண்டவர் என்று அழைக்கப்படும் சாகுல் ஹமீது அவுலியா வின் சமாதியை எல்லோரும் சென்று வணங்குகின்றனர்.
இப்படி மக்களின் கடவுள்களாக நிறைய சாமிகள் உள்ளன. நிறைய சாமிகள் இல்லாமல் போயிருக்கின்றன. சங்க காலத்தில் வணங்கப்பெற்ற கொற்றவை இன்று இல்லை. கிரேக்கர்களால் ஒரு காலத்தில் வணங்கப்பட்ட ஜூபிடர் இன்று காட்சிப்பொருளாகிவிட்டார்.
  மனித தேவைக்கு உருவாக்கப்பட்ட தெய்வங்களுக்கு பிறப்பும் உண்டு, இறப்பும் உண்டு.
நூல் =சாமிகளின் பிறப்பும் இறப்பும் 
ஆசிரியர் =ச. தமிழ்ச்செல்வன் 
பதிப்பு =பாரதி புத்தகாலயம் 
விலை =ரூ. 40/
அன்புடன் =பெ. அந்தோணிராஜ் 
தேனி.

Leave a Response

Top Reviews

Video Widget

gallery