Poetry

கவிதை: போகிற போக்கில் – அன்பழகன்.ஜி 

போகிற போக்கில்
– – – – – – – – – – – – – – – –
சுடாத சுடுகாடு.
தண்ணீர் ஓடாத
ஆற்றுப் பாலம்.
கண்ணாடி போடாத
குடு குடு தாத்தாவின்
பெட்டிக்கடை.
இருப்பை வெளிப்படுத்த
எப்போதாவது குறுக்கே ஓடும்
எலும்பும் தோலுமான
இரண்டு நாய்கள்.
கழிப்பறையற்ற
பேருந்து நிலையம்.
பிணவறையுடன் கூடிய
அரசு ஆரம்ப
சுகாதார நிலையம்.
எல்லாம் இருக்க
மை கொண்டு கண்காட்டி
உடல் கொண்டு உயிர்ப்பித்து
காய் மறைவு இலையாய்
காண்கின்ற அவள் மட்டும்
காணவில்லை இப்போதெல்லாம்
கவிதை கொள்ளும்  காதலோ
ஆராதனைக்குட்பட்ட அழகோ
காமாந்தக காமமோ  எதுவுமற்ற
ஏதோ ஓன்றுள்ள அவள்
ஏதேனும் ஒருநாள்
எலும்பும் தோலுமாக
காட்சியாய் காணப்படலாம்.
இருப்பை வெளிப்படுத்தும்
அந்த நாய்களைப் போல.
  – அன்பழகன்ஜி 

Leave a Response