Poetry

கவிதை: மொழி பெயர்க்கிறேன் – பொள்ளாச்சி முருகானந்தம்

116views
Spread the love
மொழி பெயர்க்கிறேன்
””””””””””””””””””’ ””””””’ “””””””””””””””
பக்கம் பக்கமாய்
பேசுகிறேன்……
இது அருகாமை சார்ந்த கவிதை……
உனக்கான மொழி-
என்னிடம் நிறைய இருக்கிறது…
இந்த கவிதைமுழுக்க-
மொழி பெயர்க்கத்தான்……..
ஆகிக் கிடக்கிற நெருக்கத்தையும்
ஒரு பாஷையில்
உன்னிடம் மொழி பெயர்க்கும்
என் கவிதை…..
உன்னிடமான சுவாசத்தின்-
முணுமுணுப்பையும்
மிகத்துல்லியமாய் மொழிபெயர்க்கும்
என் கவிதை…….
இப்படியாய்
தூரங்களை பக்கமாய்
மொழிபெயர்ப்பதே
என் கவிதையின் சிறப்பியல்……….
— பொள்ளாச்சி முருகானந்தம்

Leave a Response