Poetry

கவிதை புத்தக முன்னோட்டம்: கவிதை அனுபவம் – இந்திரன் – வ.ஐ. ச. ஜெயபாலன் நூல்

புத்தக முன்னோட்டம்

*********************************

கவிதை அனுபவம்

இந்திரன் – வ.ஐ.ச.ஜெயபாலன்

கவிதை பற்றிய உரையாடல் ஒரு புத்தகமாகப் பதிவாகியிருக்கிறது. தமிழ் ஆறும் இலங்கை ஆறும் சரளமாகச் சங்கமிக்கின்றன. தமிழ் நதியின் மேல் பூக்களும் இலை தழைகளுமாக ஒரு நிலவியல் பரப்பை அடைய முடிகிறது. இலங்கை ஆற்றின் மேல் நொப்பும் நுரையுமாக ஒரு  பரப்பைச் சேர முடிகிறது.   இந்திரனும் வ.ஐ.ச.ஜெயபாலனும் சாரையும் நாகமுமாக வார்த்தைகளால் பின்னிப் ‘பெடலெடுக்கிறார்கள்’.

இந்திரன் –

*************

“ஈழத்துக் கவிதை எங்கிருந்து கிளம்புதுன்னா பிரச்னைகளின் முகத்துக்கு நேரே எடுக்கப்பட்ட சவால்களிலிருந்து கிளம்புது.  ஆனார்ல தமிழகத்து ‘புதுக்கவிதைங்கிறது மரபுக் கவிதையின் ஒரு எதிர்வினையாதான் முன் வைக்கப்பட்டது.  குறிப்பாக திராவிட இயக்க சிந்தனை கவிதைக்குள் பிரவேசித்தபோது, சில ஆசார க்திகள் அதை எப்படி எதிர்கொள்வதென்று யோசித்து புதுக்கவிதையை அதற்கு எதிராக வச்சாங்களோன்னுகூட ஒரு சந்தேகம் தோணுது.  எனவே புதுக்கவிதையின் ஆரம்ப காலகட்டத்திலேயே வேதாந்த விசாரங்களும், தனிப்பட்ட உள்முகத் தேடல்களும் பிச்சமூர்த்தி காலத்திலேர்ந்தே தமிழ்நாட்டுல தொடங்கிடுச்சு.

வ.ஐ.ச.ஜெயபாலன் –

****************************

”பல்வேறு கவிதைப் போக்குகள் ஜனநாயக ரீதியான வடிவங்களோடு எழுதப்படவேணும்னுதான் நான் விரும்புகிறேன்.  ஆனா என்னைப் பொறுத்த அளவில் என் கண்ணுக்கு முன் நடக்கிற, என்னைப் பாதிக்கிற பிரச்சனை தொடர்பான நிலைப்பாடு எடுப்பதுதான் முக்கியமாக இருந்தது…. ஆண் – பெண் உறவிலிருந்து கோராட்டம் வரைக்கம் – எல்லாம் கவிதைக்குரிய விஷயங்கள்தான்.”

Leave a Response