Web Series

தொடர் 1: பிச்சம்மா – சிவசங்கரி | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

Spread the love

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில்  வாரந்தோறும் ஒரு சிறுகதைச் சுருக்கத்தை வெளியிடுகிறோம்,

சிறுகதை, குறுநாவல், நாவல், பயணக் கட்டுரை, வாழ்க்கைச் சரிதம், சிறுவர் கதை என்று இலக்கியத்தின் பல பிரிவுகளிலும் பங்களிப்பு செய்துள்ள சிவசங்கரி தமிழின் சிறப்பு வாய்ந்த எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கி வருகிறார்.  தற்போது 18 இந்திய மொழிகளில் ஆய்வு செய்து இலக்கியம் மூலம்  இந்திய இணைப்பு என்ற தலைப்பில்  நான்கு தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

பிச்சம்மா

சிவசங்கரி

குச்சி உடம்பில் அழக்கேறிய பாக்குக் கலர் நுல் புடவை, ரவிக்கை இல்லாத மார்பில் புரண்ட மஞ்சள் கயிறு.  காதில் ஒரு காலத்தில் தோடு போட்டிந்தமைக்கு அடையாளமாய் பெரிய துவாரம்.  எண்ணெயைக் கண்டு வருடங்களாகி விட்டதால் திரித்திரியாய் செம்பட்டை நிறத்தில் தொங்கிக் கிடந்த தலை முடி, பாதங்களில் வெள்ளை உலோக  மெட்டி. கைவிரல் ஒன்றில் பிளாஸ்டிக் மோதிரம்.

இதுதான் பிச்சம்மா.  அவளது இரு பிள்ளைகளும் முழு நிர்வாணமாய் அங்கே தவிட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர்.  நெல் அரவை மிஷினில் தவிட்டை புடைச்சு நொய்யை எடுத்துக் கொள்கிறாள்.  அதற்காக அன்றாடம் காலையில் அந்த மில்லைப் பெருக்கி கழுவிடும் பணியை மேற்கொள்கிறாள்.

“அரிசி அரைச்சு எடுத்திட்டு போறீங்களேயம்மா, தாத்தி நோம்பத் தாவலை வூடு எங்கேனு சொன்னிங்கன்னா நா வந்து செஞ்சி கொடுக்கட்டும்மா?”

“வா” என்று சொல்லி வந்தேன்.

காலையில் நேற்று பார்தத இரு பிள்ளைகளோடு வந்து விட்டாள்.

ஐந்து குழந்தைகளை தந்துவிட்டு  வைப்பாட்டியோடு வாழும் கணவன்,  முப்பது வயசுக்குள் இருந்தாலும் மற்றவர் கவனத்தை ஈர்க்காத வகையில் உடையின் தேவையை கூறுகிறான்.  சின்னப் பிள்ளைங்களை வைத்துக் கொண்டு வீட்டு வேலைக்கும் போக முடியாத நிலையை விளக்குகிறாள்.  மூத்த மகள் ஐந்தாவது கைக்குழந்தையையும்  வாதங்கண்டு படுத்த படுக்கையாய் இருக்கும் இரண்டாவது மகனையும் பார்த்துக் கொள்வதாக கூறுகிறாள்.

பிச்சம்மாளின் கதை ரொம்ப கஷ்டமானதுதான்.

வேலையெல்லாம் பகல் பன்னிரண்டு மணிக்குள் முடித்து விட்டாள்.

கல், தவிடு, நொய் எல்லாம் இரண்டு ஆழாக்குதான்.  இதில் கல், தவிடு போனால் பாக்கி என்ன இருக்கும்  அரை ஆழாக்கு நொய் கண்டால் அதிகம்.

“எனக்கு கூலி  கொடுங்கம்மா”.

ஒரு ரூபாயைக் கொண்டு வந்து பிச்சம்மாளிடம் கொடுத்தேன்.

“நொய் கிடையாதுங்களாம்மா? ஏதோ உங்க பேரைச் சொல்லி குழந்தைங்களுக்கு ஒரு வேலை கஞ்சி ஊத்துவேன்”.

உள்ளே போய் அரைப் படி நொய்யும் எட்டணா காசும் கொண்டு வந்து கொடுத்தேன்.

“என்னம்மா எட்டணா கொடுக்கறீங்க” மொதல்லே ஒரு ரூபாய் கொடுத்தீங்களே?”

“ஒரு படி நொய் ரெண்டு ரூபா விக்கறது. உனக்கு நா அரைப்படி கொடுத்திருக்கேன்.  அதுக்கே ஒரு ரூபா ஆறது,  நா போனாப் போறதுனு மேல் கொண்டு எட்டணா கொடுத்திருக்கேன்.”

பிச்சம்மாள் வாடின முகத்துடன் பிள்ளைகளை எழுப்பிக் கொண்டு நொய்யுடன் புறப்படுகிறாள்.  அவள் கதையைக் கேட்டு நான் உண்மையாகப் பரிதாபப்பட்டு வருந்துவதைப் பார்த்து நான் நிறையக் கூலி கொடுப்பேன் என்று எதிர்பார்த்தது அவள் தவறுதானே. பரிதாபம் வேறு தர்மம் வேறு.

மனசார எவ்வளவு வேண்டுமானாலும் இரக்கப்பட்டு விடலாம்.  அதற்காக அந்த அளவுக்கு தானம் செய்ய எத்தனை பேர் ரெடி?

என்ன நான் சொல்லுவது சரிதானே?

-கண்ணதாசன்,1976.

எழுத்தாளர். சிவசங்கரி

2 Comments

  1. படைப்பாளியின் பெயரை பெரிதாக போடுவதில் நியாயம் உள்ளது, சுருக்கியவர் பெயரை கீழே சிறிதாக போடுவதுதான் சரியாக இருக்கும், இனி அவ்வாறே செய்வீர்கள் என்று நம்புகிறேன்

  2. இது ஒரு நல்ல முயற்சி. தொடர்ந்து ராமச்சந்திர வைத்தியநாத் எழுதுவதை எதிர்பார்க்கிறேன்.

Leave a Response

Top Reviews

Video Widget

gallery