முதுகுளத்தூர் படுகொலை – நூல் மதிப்புரை – தீக்கதிர்

முதுகுளத்தூர் படுகொலை – நூல் மதிப்புரை – தீக்கதிர்

சாதியும், தேர்தல் அரசியலும்… தமிழகத்தின் தென்மாவட்டத்தில் சிலரின் ஆதாயத்திற்காக இன்றும் கொதி நிலையிலேயே வைக்கப்பட்டிருக்கும் சாதிய பதற்றத்திற்கு அடிப்படையான சம்பவம் முதுகுளத்தூர் படுகொலை. இந்தப் படுகொலையின் பின்னணி பள்ளர் சமூகத்தின் தலைவரான இமானுவேல் சேகரனின் கொலையோடு பிணைந்தது.இந்த வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழில் பல கட்டுரைகளும், புத்தகங்களும் வெளிவந்துள்ளன. தமிழ்வேல் எழுதிய “சமூக உரிமைப் போராளி இம்மானுவேல்சேகரன்”, பத்திரிகையாளரும், காங்கிரஸ் பிரமுகருமான தினகரன் எழுதிய “முதுகுளத்தூர் கலவரம்”, முத்து தேவர் எழுதிய “மூவேந்தர்குல தேவர் சமூக வரலாறு” ஆகியபுத்தகங்களைக் குறிப்பிடலாம்.ஆனால், கா.அ.மணிக்குமார் எழுதியுள்ள “முதுகுளத்தூர் படுகொலை: தமிழ்நாட்டில் சாதி மற்றும் தேர்தல் அரசியல்” என்கிறபுத்தகம் ஒரு முழுமையான ஆய்வு நூலாகஅமைந்துள்ளது. நூலாசிரியர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.அரசு ஆவணங்கள், அரசிதழ்கள், நீதிமன்ற உத்தரவுகள், சட்டமன்றக் குறிப்புகள், பல்வேறு புத்தகங்கள் மற்றும் முனைவர் மற்றும் இளமுனைவர் ஆய்வேடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நூல் உருப்பெற்றுள்ளது. இவ்வளவு...

பாஜக – வின் முகமூடி கிழிக்கும் மூன்றாவது நூல்

பாஜக – வின் முகமூடி கிழிக்கும் மூன்றாவது நூல்

கௌரி லங்கேஷ் பற்றிய மூன்றாவது நூல் தற்போது வெளிவந்துள்ளது. பாரதி புத்தகாலயம் இதனை வெளியிட்டுள்ளது. முதலில் காலச்சுவடு பதிப்பகத்தில் இருந்து பொன். தனசேகரன் மொழிபெயர்த்த நூல். அதை அடுத்து மயிலைபாலு மொழியாக்கம் செய்து தமுஎகச தென் சென்னைமாவட்டக்குழு சார்பில் வெளியிடப்பட்ட கவுரிலங்கேஷின் சிந்தனைக்கு மரணமில்லை என்ற நூல். மூன்றாவதாக கிராசுமொழி பெயர்த்த கௌரி லங்கேஷ் தெரிவுசெய்யப்பட்ட சொற்கள் என்றஇந்த நூல். இதில் கவுரி லங்கேஷின் பத்து கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை 2015-16 ஆண்டுகளில் எழுதப்பட்டவை. அண்மைக்கால பதிவுகள் என்பதால் அவற்றின் புரிதல்நமக்குக் கூடுதலாகவே இருக்கிறது. ஷாபானுவுக்கு மறுக்கப்பட்ட நீதி சாய்ராபானுவுக்குக் கிடைக்கட்டும் என்ற முதல் கட்டுரையே முத்தலாக் முறையை எதிர்த்த வழக்கு பற்றிய அறிமுகமாக அமைந்திருக்கிறது. முத்தலாக் முறை தவறானது. அது சட்டவிரோதமானது. பெண்கள் சமுதாயத்திற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது . கௌரி லங்கேஷின் கனவு நிறைவேறி இருக்கிறது. ஆனால் மத்தியில் உள்ள மோடி அரசு அந்த நீதியைத்...

கௌரி லங்கேஷ் – தெரிவு செய்யப்பட்ட சொற்கள்

கௌரி லங்கேஷ் – தெரிவு செய்யப்பட்ட சொற்கள்

கௌரி லங்கேஷ் – தெரிவு செய்யப்பட்ட சொற்கள் கன்னடத்திலிருந்து ஆங்கிலத்தில்: மார்க் செபாஸ்டியன், ஆரோன் மென்செஸ் தமிழில்: கி.ரா.சு கௌரி லங்கேஷ் (1962 – 2017) புத்தகங்கள் பெற.. 044 2433 2924 நாக்பூர் வடிவமைப்பு துப்பாக்கிக்கு பலியான 4 வது ஆளுமை, தபோல்கர், பன்சாரே, கல்புர்கி ஆகியோரின் கருத்துகளை தாங்கவியலா காவிப் பாசிசம் களவுகொண்ட மற்றும் ஒரு பேனாதான் கௌரி லங்கேஷ். நிராயுதபாணியாய் நின்ற இவர்களது கருத்துகள் இவர்களது படுகொலைகளால் மக்களை அடைவது நின்றுவிடப்போவதில்லை… என, ‘பகுத்தறிவின் குடியரசு’ (தபோல்கர், பன்சாரே, கல்புர்கியின் தெரிவு செய்யப்பட்ட எழுத்துகள்) வந்தது. அதனைத் தொடர்ந்து இப்போது… கௌரி லங்கேஷ் தெரிவு செய்யப்பட்ட சொற்கள். https://thamizhbooks.com/gowri-lankesh-therivu-seyyapatta-sorkal.html

  • 1
  • 2
  • 9