Article

மார்க்சிய அரசியல் பொருளாதாரமே தேச வளர்ச்சிக்கான அடித்தளமாக உள்ளது – சீன குடியரசுத் தலைவர் ஷி-ஜின்-பிங் (தமிழில் : சிபி)சீன நாடு, மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை, தேசத்தின் எதிர்கால கட்டமைப்பிற்கான அடித்தளமாகக் கொண்டுள்ளது என்றும், மாறிக்கொண்டே வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச சூழலுக்கு ஏற்ப அதனை (மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை) தகவமைத்துக்கொள்ளும் என்றும் சீன அதிபர் ஷி-ஜின்-பிங் கூறியுள்ளார்.

சீனாவின் அரசியல் பொருளாதாரமானது, மார்க்சிய அரசியல் பொருளாதார அடிப்படையைக் கொண்டதாக மட்டுமே இருக்க முடியும் என்று அரசியல் கோட்பாடு இதழில் வந்த கட்டுரையில் அவர் கூறியுள்ளார்.

தமது நாட்டின் பொருளாதார மாதிரி, சீன பண்புகளை உள்ளடக்கிய சோஷலிச அமைப்பிற்கு ஒரு தூணாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், கட்சியின் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள உதவுவதாகவும் உள்ளது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், சீன மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஜி ஜிங்பிங் கூறியுள்ளார்.

பொருளாதார சீர்திருத்தம் மற்றும் சந்தை திறப்பு நடந்து 30 ஆண்டுக் காலம் ஆகிவிட்ட நிலையில் தற்போது மாறிவரும் உலக சூழல்களில் சீன நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்திச் செல்வது கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று அவர் கூறினார்.

சீன மார்க்சிய அரசியல் பொருளாதாரம் காலாவதி ஆகிவிட்டது என்ற கருத்துக்களை  ஷி-ஜின்-பிங் திட்டவட்டமாக மறுக்கிறார். சீன மார்க்சிய அரசியல் பொருளாதாரம் நாட்டின் வளங்களை ஒதுக்கீடு செய்வதில் சந்தைக்கு ஒரு முக்கிய பங்கை அனுமதிக்கிறது; மேலும் அரசாங்கத்தின் பங்கை மேம்படுத்துவதாகவும் உள்ளது என அவர் கூறினார்.

China contributes 30% to global economic growth in 2017 – The Mast Online
சீனா தன் நாட்டில் ஏனைய சொத்து உரிமைகளை ஆதரிக்கும் அதே வேளையில், பொது உரிமையில் உள்ள பொருளாதாரத்தை ஆதரிக்கவும், வளர்க்கவும் செய்யும் என்று கூறினார்.

சீன நாட்டினுள் பொது உரிமையின் மேலாதிக்க நிலையையும், பொருளாதார அரசுடைமையையும் அசைக்க முடியாது என்று கூறினார்.

வர்த்தகம், தொழில்நுட்பம், சித்தாந்தம் மனித உரிமைகள் மற்றும் கோவிட்-19 ஆகியன குறித்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் பிரச்சனைகள் உள்ள நிலையில் ஷி-ஜின்-பிங் மேற்கண்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

பனிப்போர் காலத்தின் சோவியத் ரஷ்யாவை விடச் சீனா முன்வைக்கும் அச்சுறுத்தல்களை அமெரிக்கா கடினமாகக் கருதுவதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ சென்றவாரம் கூறியிருந்தார்.

Xi's thought a development of Marxism - Opinion - Chinadaily.com.cn
மேற்கத்திய தத்துவத்தையோ அல்லது அதன் முதலாளித்துவ முறையையோ சீனா பின்பற்ற முயலக்கூடாது என்று ஷி-ஜின்-பிங் கூறியுள்ளார்.

பல முதலாளித்துவ நாடுகள் தற்போது பொருளாதார சரிவு, வேலையின்மை, வளர்ந்துவரும் பிரிவினைவாதம், மோசமாகி வரும் சமூக முரண்பாடுகள் போன்ற பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றன என்று ஷி-ஜின்-பிங் கூறினார்.

சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றான வர்த்தக போர், 2018 ஆம் ஆண்டு முதலே இருந்து வருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்களைத் தணிப்பதற்காக நடப்பதாக இருந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை, இரு தரப்பிலிருந்தும் காரணங்கள் ஏதுவுமின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் வரவிருக்கும் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் இறங்கியிருக்கும் இந்த தருணத்தில், அரசியல் காரணங்களால் இந்த பேச்சுவார்த்தை தடைப்பட்டு இருக்கலாம் என்று ரபோ பேங்க்கின் மூத்த அதிகாரி மைக்கேல் எவிரி கூறினார்.

எக்காலத்திலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவின் வேளாண் பொருட்களை வாங்க இப்போது சீனா அதிகமான ஆர்டர்கள் கொடுத்திருப்பது பற்றி டிரம்ப் கூறியதை (இது கடந்த ஜனவரியில் உறுதி செய்யப்பட்ட ஒப்பந்தம்) மைக்கேல் எவிரி சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யார் வெல்வார்கள் என்று தெரியாத நிலையில் சீனா தற்போதைக்கு அமெரிக்காவிற்கு ஆதரவாகச் செயல்படுகிறது. ஆனால் அந்த நிலை டிரம்பிற்கு சாதகமாக அமையும் போது அந்த உடன்படிக்கை ஒரு கட்டத்தில் சரியும் என்று கருதுகிறோம் என அவர் கூறினார்.

செய்தித்தாள்: சவுத் சீனா மார்னிங் போஸ்ட்

ஆசிரியர் – கரென் யெங்கு

வெளியிடப்பட்டது: 16 ஆகஸ்ட் 2020Leave a Response