நூல் அறிமுகம்

கதைஸ்டாஸ்கோப் சொல்லும் கதைகள் | நூல் அறிமுகம் – மு. வீரகடம்ப கோபு

Spread the love

சிறுவர் இலக்கியத்திற்கான சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆயிஷா நடராஜன் எழுதிய கதைடாஸ்கோப்

கதறி அழுத சிங்கம் சிங்காரம், கயல், அயல், மயல் முயல்கள். முல்லா கரடி, உதார் மணி சுறா
விகாஸ் சிறுத்தை நரி “குள்ள குமார்” என ஒரு பட்டாளமே கதைக்காட்டில் பூமக்கா வழிகாட்டுதலில், செல்வி பாப்பா உடனிருக்க கதைஸ்டாஸ்கோப் சொல்லும் கதைகள் இந்த புத்தகத்தில்…

காட்டில் பிடித்த தீயை அணைத்த வியூகம் யாருக்கும் வராது… படிச்சா சிரிச்சிடுவீங்க…கதை சொல்லும் போது “உம்” கொட்டாவிட்டால் கதைஸ்டாஸ்கோப் வேலை செய்யாது என்பது இதிலே கண்டிசன்.

நம் பால்ய வயதில் பாட்டியும் தாத்தாவும் கதை சொல்ல “உம்” போட்டு கேட்ட நிலமைகளை இன்றைய நவீன சூழல்கள் அழித்திருக்கின்றன. கதைகேட்பது என்பது புரிதலுக்கான அச்சாரம். அந்த வகையில் கதைசொல்பவர்களின் வீழ்ச்சி என்பது மிகப்பெரிய இழப்பே… அந்த குறையினை ஈடு செய்ய இந்த புத்தகம் உங்களுக்கு கட்டாயம் உதவும்.

புதிதாக வாசிப்பு உலகத்தில் அடிவைக்கும் குழந்தைகளுக்கு ஆர்வத்தினை ஏற்படுத்தவும், அதனினும் சிறிய குழந்தைகளுக்கு கதை சொல்லவும் இந்த புத்தகம் ஒரு வரப்பிரசாதம். ஒரு தேர்ந்த கதை சொல்லியான ஆயிஷா நடராஜன் இந்த புத்தகத்தினை வடிவமைத்துள்ளார்.

நீங்களும் உங்க வீட்டு குழந்தைகளுக்கு கதைசொல்ல வேண்டுமா? உங்கள் வீட்டுக் குழந்தைகளும் வாசிப்பு உலகின் வாசல் வர வேண்டுமா?

வாங்குங்க, வாசிங்க,

புத்தக பெயர்:- கதைடாஸ்கோப்

ஆசிரியர் :- ஆயிஷா நடராஜன்
பதிப்பகம் :- பாரதி புத்தகாலயம்
Books for Children வெளியீடு.

விலை :- ₹60 மட்டும் தான்

# வாசிப்பதை பகிர்வோம்
#பகிர்வதற்காக வாசிப்போம்

நினைத்த நேரத்தில் நினைத்த நூல்கள் பெற…

கதைடாஸ்கோப் அள்ள அள்ள கதைகள்

Whatsapp: 📞 87780 73949

Show Room: ☎ 044 2433 2924

Email: 📧 thamizhbooks@gmail.com

மு. வீரகடம்ப கோபு
திண்டுக்கல்.

Leave a Response

Top Reviews

Video Widget

gallery