Book Review

நூல் அறிமுகம்: மன இடைஞ்சல் தரும் தி.தா.நாராயணன் கதைகள் – சுப்ரபாரதிமணியன்குமுதம்-ஏர் இந்தியா நடத்திய இலக்கியப் போட்டியில் வென்று இங்கிலாந்து, அய்ரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும், `மண் புதிது’ என்ற பயண நூல் எழுதும் வாய்ப்பும் எனக்குக்கிட்டியது.
அப்போட்டியில் சிறுகதைப் போட்டியில் வென்று சிங்கப்பூர் பயணம் என்ற வாய்ப்பைப் பெற்ற நாராயணனின் படைப்புகளை அப்போதிலிருந்து கவனத்தில் கொண்டு வருகிறேன். அவர் மீது இரண்டு விசயங்களில் பொறாமை உண்டு.
1)அவரின் படைப்புகள் குமுதம் போட்டிக்கு முன்பும், பின்பும், இன்றும் பல பரிசுகளை, பெரும்பாலும் வெகுசன இதழ்களின் பரிசைப் பெற்று, லட்சக்கணக்கான வாசகர்களைச் சென்றடைந்துக் கொண்டிருக்கிறது..
2) தன் குடும்ப தொழில் சார்ந்த அனுபவங்களைமட்டுமில்லாமல், பல்வேறு விசயங்களை தனது படைப்புகளுக்குகளமாக எடுத்துக் கொண்டு எழுதிப்பார்த்திருப்பது. அவற்றுள்கணிசமாகவிஞ்ஞானக்கதைகளைஎழுதியுமிருக்கிறார். விஞ்ஞானம் சார்ந்த துறைகளில்இருப்பவர்களின் அக்கறை அது சார்ந்த விசயங்களைப்படைப்பிலக்கியத்தில் கொண்டு வருவது அபூர்வமாகவே இருக்கிறது. ஆனால் அதில் நாராயணன் ஈடுபடுவதுபாராட்டப்படும். தமிழுக்கு உரம் சேர்க்கும் விசயமாகவே பார்க்கிறேன். அவ்வகையில் அவருடைய இரண்டு விஞ்ஞான நாவல்கள் வெளிவந்திருக்கின்றன.. அவை கணிசமாக சென்றடைந்திருக்கின்றன.
தொடர்ந்து விஞ்ஞானக்கதையாக்கங்களில்ஈடுபட்டிருப்பவர்நெல்லைசு.முத்து, நளினிசாஸ்திரி போன்றோர் விஞ்ஞானக்கதைகளிலிருந்துஒதுங்கியிருக்கையில் நாராயணன், தமிழ்மகன், ஆகியோர் விஞ்ஞானக்கதைகளில் தொடர்ந்து ஈடுபடுவது ஆறுதல் தருகிறது. இத்தொகுப்புக்கதைகளிலும்விஞ்ஞானக் கதைகள்,சமூக சிந்தனைகளைவெளிப்படுத்தும் கதைகள், மருத்துவ உலகம், தெருக்கூத்து சார்ந்த விஷயங்கள், காவல்துறை அனுபவங்கள், சோதிடம் சார்ந்த விசயங்களைபடைப்புக்குள் கொண்டு வந்து, வெவ்வேறு களன்களில் எழுதிப்பார்த்திருப்பது படிக்கும் வாசகர்களுக்கு சுவாரஸ்யத்தை தருவதாக அமைந்திருக்கிறது. தொழில்நுட்பம் சார்ந்து நிறையத்தகவல்கள்கொட்டியும்கிடக்கின்றன. வாசகனிடமிருந்து விலகிப் போகாமல், அடாபுடா போட்டுப் பேசும் நண்பர்களைப் போல் நெருக்கமான நடையாக இருக்கிறது.


கல்வித்துறை சார்ந்த விசயங்களை நிறைய கதைகளில்எழுதியிருக்கிறார். கணக்கு வாத்தியார், அவன் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் என்றவகையில் அவன் நல்ல மதிப்பெண்களைப் பெற்றாலும், செய்யும் கிண்டலும், துன்புறுத்துதலும், அவனை மாநிலத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்று, தலைசிறந்த மாணவனாக்குகிறது.: காவல்துறையைச் சார்ந்தவர் வீட்டிற்குள் இருக்கும் தனது மரியாதை குறைவானத் தன்மையைப் போக்கிக் கொள்ள செய்யும் சாகசத்தின் விளைவும், மகிழ்ச்சியும் உயர் அதிகாரியால் தட்டிப் பறிக்கப்பட்டு துரோகம் செய்யப்படுகிறார். :கணவன் மனைவி மத்தியில் தென்படும் சர்ச்சைகள் பெரிதாகி சமரசத்திற்கு சென்று சுபமாகிறது.. :புற்று நோய் சார்ந்த ஆய்வுகள் பெரிய அளவிலான விபரீதமாக மாறி ஒரு குரங்கை உற்பத்தி செய்துவிடுகிறது. விஞ்ஞானம் விபரீதமாகிறது.. மரபணுசிகிச்சையும், ஜீன்கள் சார்ந்த குறிப்புகளும் விஞ்ஞானஉலகத்தின் இன்னொரு புறத்தைக்காட்டுகின்றன.. : தெருக்கூத்தை வைத்து பின்னப்பட்ட கதை நல்ல திருப்பம்,காட்டேரிஎன்ற அமானுஷ்யமனோவியல் கதை ஜக்கம்மா சொல்றா…. இது இந்த தொகுப்பின் தலைப்புக் கதையாக உள்ளது. மிக சிறப்பு, பிள்ளை வளர்ப்பு பற்றி சரியான அனுகுமுறையின்றி வளரும் குழந்தைகுடிகாரனாவது பற்றி பேசுகிற`மனம் விட்டு அழட்டும்’கதை, சப்தகன்னிகள்கதை –இதுவும் ஒரு மனோவியல் கதைதான். குப்பை இன்றைக்குஊருக்கு ஊர் இருக்கின்ற தீர்க்க முடியாத பிரச்சினைகளைப் பற்றி பேசுகிறது `இள ரத்தம்’- கதை.
மருத்துவர்கள் எல்லோரும் வணிக மயமானவர்கள் அல்லர், தங்களின் மேதமை,உழைப்பை முன் வைப்பவர்களும் இருக்கின்றார்கள். அந்த உழைப்பு சில சமயங்களில் தோல்வியடைவதும் உண்டு, சாதாரண மனிதனின் பார்வைக்கு அது சாபங்களைக் கொண்டு சேர்க்கிறதாகவும் இருக்கிறது.  தினசரி வாழ்க்கையில் பெண்களின் குடும்பப் பொறுப்புகளின் தன்மை ஆச்சர்யங்கள் நிறைந்தது. கணவனைச் சார்ந்தே வாழ்பவள் போல தோன்றுபவள், ஆனால் அதே சமயம் கணவனைத் தாங்கும் ஆதி சக்தியாகவும் இருக்கிறாள். அந்த வகைப் பெண்களுக்கு குறைவேயில்லாதபடி கணவனின் கொடுமைகளைத் தாங்கிக்கொள்கிறவர்களாகவும், குடும்பத்தின் தூண்களாகவும், இருப்பவர்களை`ஒப்பனை’ கதையில்காட்டுகிறார்.எதிர்ப்பைகுடும்பத்திற்குள்ளும், வெளியில் அரசியல் தளத்திலும், காட்டும் கதாபாத்திரங்களையும் காட்டுகிறார். :
சோதிடம் பொய்த்துப் போவதாகக்காட்டுவது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. சோதிடம் தரும் மனப்போராட்டங்கள்அதிகமானவை. அவற்றை எள்ளலுடன் சொல்லியிருக்கிறார். : ஒரு பழக்கத்தை விடுவதோ இன்னொரு பழக்கத்திற்குத் தாவுவதோ கூட உண்டாக்கும் சிக்கல்கள் இக்கதைகளில் சுவாரஸ்யம் மிக்கவை.
வாழ்க்கையைச் சார்ந்த எளிய நியதிகளைஇக்கதைகள் முன் வைக்கின்றன. நெகிழ்ச்சியானதும், நினைத்துப் பார்க்கிறதுமான அனுபவங்களைக் கொண்டிருக்கின்றன. மானுடம் சார்ந்த பிரமிப்புகள் உருவாகும் கணங்களையும் கொண்டிருக்கின்றன.
 `நானும் அவனும்’—என்ற கதையில் சக குடியிருப்பில்நிகழுமொரு மரணம், குடியிருப்பவர்களுக்கு ஞாயிறு விடுமுறை சுகத்திற்குஇடைஞ்சலாக இருக்கிறது.. இத்தொகுப்பில் வரும் கதைகளும் சாதாரண வாசகனின் சோம்பல் நிலை சுகத்திற்கு பெரு இடைஞ்சலைத் தரக் கூடியதே.


( ஜக்கம்மா சொல்றா ரூ 150 , கருஞ்சட்டை பதிப்பகம்,
சென்னை -99406 58322 செய்யாறு தி.தா.நாராயணன்
1—புதுத்தெரு,முதல் குறுக்குத் தெரு,
செய்யாறு—604407
திருவண்ணாமலை மாவட்டம்.


Leave a Response