Article

’சாணத்தால் செய்யப்பட்ட “சிப்” கதிர்வீச்சை தகுந்த அளவில் தடுக்கும் … போலி அறிவியலின் உச்சம்.. – பொ. இராஜமாணிக்கம்ராஷ்ட்ரீய காமதேனு ஆயுக் என்ற அரசு நிறுவனத்தின் தலைவர்  வல்லபாய் கதிரியா என்பவர் பசுஞ்  சாணத்தால் செய்யப்பட்ட சிப் செல்போன் கதிர்வீச்சை தகுந்த அளவு குறைத்து பாதுகாப்புத்தரும் என கடந்த  திங்கட்கிழமை அறிவித்து உள்ளார்.

இந்த ஆபோக் மீன்வளம் கால்நடை பால் வளம் உள்ளிட்ட மத்திய அமைச்சக்தின் கீழ் வருகிறது. பிப்ரலரி 2019ல் இந்தஅமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.  பசுக்களையும் அதன் தலைமுறைகளையும் பாதுகாப்பது இதன் நோக்கமாக்கூறப்பட்டுள்ளது. 2019_20 பட்ஜெட்டில் அறிவிக்ப்பட்டுள்ளது.

கவ்சத்வா கவச் என்று பெயரிடப்பட்ட இந்த சிப் ராஜ்கோட்டில் ஸ்ரீகௌசாலாவில் தயாரிக்ப்பட்டு வருகிறதாம்.

தேசீய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காமதேனு தீபாவளி  அபியான் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பசுஞ்  சாணப் பொருட்களை பிரபலப்படுத்தும வகையில்  பசுவின் சாணம் கதிர்வீச்சு எதிர்ப்பு சக்தி கொண்டதென்றும் இந்தபசுஞ் சாண சிப் செல்போனின் கதிர்வீச்சை மிகவும் குறைக்கும் தன்மை கொண்டது என வல்லப்பாய் கதிரியா தெரிவிக்கிறார்.

பசுஞ்சாண சிப்பை உயர்த்திக் காட்டி இதை செல்போனில் வைத்துக் கொண்டால் கதிர்வீச்சை குறைக்கும் என்றும் நோய்களைக் குறைக்க வேண்டுமென்றால் இதனைப் பயன்படுத்த வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் நடிகர் அக்சைக் குமார் பசுஞ்சாணத்தைத் தின்றார் என்றும் அதன் சிறுநீரைக் தினசரி குடித்தார் என்றும் அதற்கு ஆயுர்வேத பயன் உள்ளது என குறிப்பிட்டுள்ளார் என்பதை நினைவுபடுத்தியுமம பேசியுள்ளார். இப்பொழுது நாங்கள் இதன் மீது ஆய்வுகளைத் துவக்கியுள்ளோம் என்றும் இதுபோன்று கற்பனையாகக் கருதப்பட்டு வந்தவைகள் மீது பல ஆய்வுகளைச் செய்ய உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

Cow dung will protect all': New Cow-dung chip to fight radiation unveiled by central dept - Republic World

பல பசுஞ் சாணப் பொருள்களைக் கண்காட்சிகளில் வைத்துப் பேசயஅவர் பசுஞ்சாணம் கதிர்வீச்சைக் கட்டுப்படுத்தும் என்றும் இதை வீட்டில் வைத்தால் வீடு கதிரவீச்சற்றதாக மாறும் என்றும் அறிவியல் ரீதியாக இது ஒப்புதல் பெற்றுள்ளதுஎன்றும் கூறுகிறார். சாண சிப்ஸ்கள் சுமார்  500 பசு பாதுகாப்பு மையங்களில் இருந்து உருவாக்கப்படுகின்றது என்றும் கூறுகிறார். ஒரு சிப்பின் விலை 50-முதல் 100 ரூபாய்க்குக் கிடைக்கும் என்கிறார். அமெரிக்காவிற்கு ஒருவர் இதனை ஏற்றுமதி செய்கிறார் என்றும் அங்கு அதன் விலை பத்து டாலர் ஆகும் என்று கூறி நமமைப் புல்லரிகக வைக்கிறார்.

இதைத் தயாரிப்பதற்கு அரசு நிதியுதவி செய்கிறதா எனக் கேட்ட பொழது நாங்கள் பசுஞ் சாணம் கதிர்வீச்சைத் தடுக்கும் திறன் கொண்டது என்பத மக்களிடம் பிரச்சாரமாக எடுததுச் செல்வதற்காக உற்பத்தி செய்கிறோம் என்றார். இது சோதணைச்சாலையில் சர்டிபிகேட் பெற்றதா என்று கேட்கும் பொழுது சர்ட்டிபிகேட் பெறவில்லை  என்றும் ஆனால் சோதித்துப் பார்க்கப்பட்டது என்றும் எந்த சோதனைச்சாயைிலும் ஏன் கல்லூரிகில் கூட சோதித்துப் பார்க்கலாம் என்றார்..(எந்தக் கல்லூரியில் கதிர்வீச்சுகள் சோதணை செய்யும் உபகரணங்கள் இருக்கிறதோ தெரியவில்லை)

இந்த காமதேனு தீபாவளி அபியான் பிரச்சார இயக்கத்தின் போது பசுஞ்சாணத்தில் தயாரிக்கப்பட்ட தீபச் சட்டிகள் மெழுகு வர்த்திகள் ஊது பத்திகள் பேப்பர் வெயிட்டுகள் கடவுள்கள் சிலைகள் ஆகியனவற்றையும் விற்பனைககுக் கொண்டு செல்கிறார்கள்.

Cowadunga! India’s cow commission doubles down on dung chip use for radiation-free life | Arab News

அது சரி சாணச் சிப் உண்மையிலேயே கதிர்வீச்சைத் தடுககுமா….?

சாண சிப்பில் மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ் இருப்பது போல் தெரியவில்லை.  அது வெறும்  காய்ந்த சாணத் துண்டாக இருக்கிறது என்கின்றனர். டாட்டா இன்ஸ்டிடியூட் ஆப் பன்டமென்டல் ரிசெர்ச் விஞ்ஞானி பேரா.அமோல் தீகே என்பவர் அறிவியலில் செய்து காட்டி விளக்க வேண்டும் அப்படி இந்த சிப் கதிர்வீச்சைத் தடுக்குமென்றால் அதன் மீது செய்யப்பட்ட சோதனை வகைகளையும் முடிவுகளையும் பொது வெளியில் குறிப்பிட வேண்டும் என்கிறார். காமதேனு ஆயோக் வெப் சைட்டில் சென்று பார்த்தால் இது போன்ற ஆராய்ச்சி ஆதாரஙகள்  எதுவும் காணப்படவில்லை என்றும் இது குறித்து ஈ மெயில் வழியாக விளக்கம் கேட்டுள்ளோம் என்கிறார்.

மேலும் அவர் கூறுகையில் நமக்கு சுமார்50-100 வருடங்களாக கதிர்வீச்சு பற்றித் தெரியம் ஆனால் சாணம் போன்ற அங்ககப் பொருட்களால் கதிர் வீச்சை உறிஞ்ச முடியும் குறைக்க முடியும் தடுக்க முடியும் என்ற பேச்சுக்கே இடமெல்லை என்கிறார். மேலும் கதிர் வீச்சுகள் பல வகை என்றும் அதில் எந்தவிதமான கதிர்வீச்சை சாண சிப்ஸ்கள் தடுக்கின்றன என கேட்கிறார். சாதாரண ஔி கூட ஒரு கதிர் வீச்சு தான் என நையாண்டி வேறு செய்கிறார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னாள் பேராசியர் டாக்டர் எஸ் கிருஷ்ணசாமி அவர்கள் இதுபோன்ற கற்பனைசார்  கண்டுபிடிப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன என்றும் அறிவியல் அறிஞர்கள் தொடர்ந்து இதை மறுத்து வருகின்றனர் என்றும்  சாண சிப்  கதிர்வீச்சைத் தடுக்கும் திறன் கொண்டது என்று இது வரை அதற்கு எந்தவிதமான தரவுகளும் இல்லை என்கிறார்.

இந்திய இயற்பியலாளர் கே. என் உத்தம் என்பார் 2011ல் டைம்ஸ் ஆப் இந்தியாவில் பசுஞ்சாணம் ஆல்பா, பீட்டா, காமாக் கதிர்களை உறிஞ்சும் தன்மை கொண்டதென்று கூறியிருக்கிறார். அதன்படி எடுத்துக் கொண்டாலும் செல் போனில் இந்க் கதிர் வீச்சுகள் எதுவும் இல்லையென்றும் ரேடியோ அலைகள் மட்டுமே அதில் வெளி வருகிறதென்றும் அதற்கு கதிர்வீச்சுத் தன்மை இல்லை எனகிறார். பசுஞ்சாணம் கதிர்வீச்சைத் தடுக்கும் என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களோ சோதணைசார் தரவுகளோ இல்லாத போது உத்தம் அவர்களும் எந்தவிதமான  அறிவியல் வெளியீடுகளையம் அவரேகூட  வெளியிடவி்லை என்கிறார்

டெல்லி சயின்ஸ் போரத்தைதச் சேர்ந்த விஞ்ஞானி ரகுநந்தன் அவர்கள் இதை சிப் என்று அழைப்பதே வேடிக்கையாக இருக்கிறதென்றும் இதில் எந்த விதமான மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ் இல்லாத போது இது வெறும் சாணத் துண்டு தான் எனகிறார்.

அப்படியே செல்போன் சாதனங்களில் இருந்து கதிர்வீச்சுகள்அதிகம் வருகிறதென்றால் அதை அரசிடம் தெரிவித்தோ நிதி ஆயோக்கிடம் அல்லது டெலிகாம் துறையிடம் தெரிவித்தோ அதைக் கட்டுப்படுத்துவதை கோரிக்கையாக லவக்கலாமே என்கிறார்.

Cow Dung Neutralizes Harmful Radiation – Oṁ Śrī Surabhi Campaign

செல் போன்களில் இருந்து கதிர்வீச்சுகள் எதுவும் வருவதில்லை எனவும் ரேடியோ அலை வீச்சும் வருகிறதென்றும் இந்த அலைகளால் செல்களில் உள்ள அயனிகளை அழிக்கும் ஆல்பா காமா பீட்டா கதிர்கள் போல் இல்லையென்றும் அதிக பட்சம் சில சென்போன்களைப் பயன்படுத்தினால் வெப்பம் உமிழும் தன்மை கொண்டதது என்கின்றன பல தரவுகள். அதிக வெப்பம் உமிழும் செல்போன்கள் பட்டியலையும் பகிரங்கமாக வெப் டை்டில் வெளியிட்டு உள்ளனர். நீங்ளே பார்க்கலாம்.

மேலும் சாண வராட்டிகளை சுவர் மீது அடித்து வைத்தால் கதிர்வீச்சு வீட்டுக்குள் வராது எனவும் அண்டப் புளுகையும் அவிழ்த்து வி்ட்டுள்ளனர். அப்படியானால் கதிர் வீச்சு அபாயம் உள்ள அணு மின் நிலையங்களின் சுவர்களிலும் உபகரணங்களிலும்  பூசி கதிர் வீச்சைத் தடுத்து  மக்களைக் காக்க முடியுமா… பதில் தாருங்கள் சாண விஞ்ஞானிகளே !Leave a Response