Poetry

கவிதா பிருத்வியின் ஹைக்கூ கவிதைகள்

*
இனிப்பிற்கு காத்திருக்கும்
அனாதை சிறுவர் கூ(ட்)டம்
 பண்டிகைக் காலம்!!
*
தூக்கம் இழந்த இரவுகள்
சிணுங்கல்களும் உதைகளும்
மழலைப் பசி!!
*
விளக்கேற்றி தேங்காய் உடைத்து
 ஊதுபத்தி புஷ்பம் மணத்தது
 சாவு வீடு!!
*
கண்ணீர் துளி
கடல் நீர்
கரித்தது மீனவனின் வாழ்வு!!
*
கார்கால மழையாய்
சிறுசிறு தூறலாய்
நின்றே போனது நட்பின் கடிதம்!!
*
காதல் இனிக்கிறது
வாழ்வின் எல்லை வரை
ஒரு தலை காதல்!!
*
பட்டாம்பூச்சி மனசு
சிறகடித்து பறக்கிறது
பதின்ம வயது காதல்!!
*
அம்மாவின் வாசம்
துள்ளியது குழந்தை
அம்மா சீலையில் துளி!!
*
காக்கையின் வருகைக்காக
காத்திருக்கும் படையல் சோறு
பசி வயிற்றோடு குழந்தைகள்!!
*
அள்ள அள்ள குறையாத
அமிர்த மழை
மழலை முத்தங்கள்!!
                           கவிதா பிருத்வி
                           தஞ்சை.

Leave a Response