Poetry

பாரதியார் பாடல்  வரிகள் கொண்டு ஹைக்கூ முயற்சி – சாந்தி சரவணன்

பாரதியார் பாடல்  வரிகள் கொண்டு ஹைக்கூ முயற்சி செய்துள்ளேன். பாரதியார் நினைவு நாள்
ஹைக்கூ
வேத புரத்திலே
வியாபாரம் பெருகுது
கல்வி தனியார் மயமானது
*
பட்டங்கள் ஆள்வதும்
சட்டங்கள் செய்வதும்
பணம்
*
வானமழைபொழிதல் போலவே
நித்தம் வந்து பொழியும்
அச்சம் ஊடகங்களிலே
**
கைமை திர்ந்ததால் படைக்க
மறந்தாயோ  பாரதி
கைம்மை துயரை
****
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல
இனிதாவது எங்கும் காணோம்
மும்மொழி திட்டம் அமுல்
**
ஜயமுண்டு பயமில்லை
மனமே
உலக ஊரடங்கு
*
உயிர்களிடத்தில் அன்பு வேணும்
யானனைக்கு  உணவு
அன்னாசி வெடி
**
ஜாதிகள் இல்லையடி பாப்பா
பதிவு செய்
பள்ளி விண்ணப்பத்தில்
**
அன்னமூட்டிய
தெய்வமணிக்கை
அனாதை இல்லத்தில்
****
தேடிச் சோறுநிதந் தின்று -பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி
கனவாக்கியது  தீ நுண்ணி
**
தொட்டதைமீள மீளவுந்
தொடுவாய்
தனித்திரு விலகியிரு
**
வெந்து தணிந்தது
காடு
தொழிற்சாலை உருவாக்கம்
**
உள்ளதெல்லாம் ஒரே
பொருள்
பட்டினி
**
அன்புடன்
சாந்தி சரவணன்

5 Comments

  1. அருமையான முன்னெடுப்பு தோழர்.கவிதைகள் சிறப்பாக உள்ளது.வாழ்த்துகள்💐💐💐👏👏👌👌🤝😍

  2. வித்தியாசமான முயற்சி. வாழ்த்துக்கள் தோழர்

  3. வாழ்த்துகள் அக்கா 💐 பாரதியின் நினைவில்… அருமையான முயற்சி 😊👍

Leave a Response