Book Review

நூல் அறிமுகம்: ஜென்னி மார்க்ஸின் “எங்களது ஒருநாள் குடும்ப வாழ்க்கை” – நா.விஜயகுமார்

Spread the love

 

ஜென்னி ஏன் இவரை நாம் காதலுக்கு உதாரணமாக சொல்கிறோம்… உலகப் புகழ்பெற்ற மாமேதை காரல் மார்க்சின் மனைவி என்பதாலா இல்லை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாலா இல்லை ஏராளமான காதல்கள் இன்றும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன… ஆனால் நாம் இன்றும் ஜென்னியின் காதலைப் போற்றுகிறோம் ஏன்?

அப்படி என்ன செய்தார் ஜென்னி மார்க்ஸ்.. காதல் காதல் காதல் காரல் மார்க்சின் மீது கொண்ட அளப்பரிய காதல் அவை ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு பொழுதும் அவரைப் பின்பற்றியே போனது அவள் கால்கள் எவ்வளவு வலிகளுக்கு மத்தியில் வாழ்வே நடத்தியபோதும் ஒரு துளி கூட அவர் மீது இருந்த அன்பு என்றுமே குறைந்ததில்லை.

ஜென்னி வான் வெஸ்ட் பாலன் 1814 ஆம் ஆண்டு பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். ஜெர்மன் மொழி இலக்கியத்தில் வல்லுநர். டிரயர் நகரின் “அழகு தேவதை” என மக்களால் பாராட்டப்பட்டவள். யூத மதம் சார்ந்த குடும்பத்தில் பிறந்த காரல் மார்க்சை காதலித்தது விந்தையிலும் விந்தைதான். தன்னைவிட நான்கு ஆண்டுகள் குறைவான காரல் மார்க்ஸ் மீது சிறு வயதிலிருந்தே காதலிக்க தொடங்கி விட்டாள்.

ஒருவரை ஒருவர் காதலித்தனர் காரல் மார்க்ஸை திருமணம் செய்து கொள்வதற்காக ஆறு ஆண்டுகள் காத்திருந்தாள் பெற்றோர்கள் தனது காதலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என புரிந்துகொண்டு 19 -6 1843 அன்று காரல் மார்க்ஸை திருமணம் செய்து கொண்டார். வறுமையான சூழலிலே வாழ்க்கை தொடங்கினாலும் அவருடன் இருப்பதே பெரும் சந்தோஷம் எனக் கருதினாள். ஜென்னி தினமும் காரல்மார்க்ஸ் எழுத்துக்களை படித்து பார்த்து யோசனை தருவது, சொன்னபடி எழுதி செப்பனிடப்பட்ட எழுத்துக்களை திருத்தமாக படி எடுத்து காரல் மார்க்ஸசுக்கு தருவது, இவருடைய அன்றாட பணிகள்.வீட்டுவேலைகளை கவனித்தல், குழந்தைகளை பராமரித்தல், தட்டுப்பாடுகள் சரிசெய்தல் எல்லாம் ஜென்னி செய்யும் அன்றாட குடும்ப வேலைகள் இதற்கு மத்தியில் காரல்மார்க்ஸ் எழுதுவதற்கு உதவியாக இருந்து வந்தாள்.

வரலாற்றை மாற்றியவரின் வாழ்க்கைத் ...

காரல் மார்க்ஸ் பிரெஞ்சு அரசாங்கத்தால் 1845 பிப்ரவரி 3 அன்று நாடு கடத்தப்பட்டார். ஜென்னி தன்னுடைய கைக்குழந்தையுடன் தட்டுமுட்டு சாமான்களை விற்றுவிட்டு வெறும் பயணச்சீட்டுக்கான பணத்தை வைத்து கொண்டு மார்க்ஸைப் பின் தொடர்ந்தார்.

ஏதோ ஒரு முறை அல்ல1845ஆம் ஆண்டு பாரிஸில் இருந்தும் 1848ஆம் ஆண்டு பிரஸிலிருந்தும் 1849 ஆம் ஆண்டு கொலோனியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 1849 ஆகஸ்ட் 23 அன்று மீண்டும் பாரிஸிலிருந்து வெளியேற்றப்பட்டார்.இப்படி ஒவ்வொரு முறையும் காரல் மார்க்ஸின் எழுத்துக்கள் ஆளும் வர்க்கத்தை அதை வைத்துக் கொண்டே இருந்ததும் அதில் அவரை நாட்டை விட்டு வெளியேற்றப்படும் எந்த சூழ்நிலையிலும் பிரியாது ஜென்னி அவரைத் தொடர்ந்து சென்றுகொண்டே இருந்தார்.

காரல் மார்க்சுக்கு ஜென்னிக்கு ஏழு குழந்தைகள் அதில் நான்கு குழந்தைகள் இறந்து போயின. அதில் ஒரு குழந்தை காரல் மார்க்சின் கையிலே இறந்து போய்விட்டது. ஏங்கல்ஸ் நட்பு கிடைத்த நேரம் அது. குழந்தையை புதைக்கக் கூட பணம் இல்லாமல் ஒரு அறையில் குழந்தையின் உடலை வைத்து விட்டு வந்து மறு அறையில் குழந்தைகளோடு படுத்துக்கொண்டு அழுது கொண்டிருந்தனர் காரல் மார்க்ஸ் ஜென்னியும். ஜென்னியின் “அறிவுச்செல்வம் மகன்” எட்கர் எட்டு வயது நிரம்பிய பாலகன் இறந்தது ஜென்னியை கொடுமையான துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாக்கியது. ஏங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் எத்தனையோ துயரங்களை நான் அனுபவித்திருக்கிறேன் எட்கர் இறந்தது எனது மீளா துயரத்தில் ஆழ்ந்து இருக்கிறேன் என்று கூறினார்.

போராட்டக்களத்தின் நடுவே ...

இன்னும் ஏராளமான துன்பங்களையும் துயரங்களையும் வறுமையின் பிடியில் மாட்டிக்கொண்டு காரல் மார்க்சும் ஜென்னியும் சந்தித்தனர். இருந்தபோதிலும் தனது இறுதி நாட்கள் முடியும் வரை காரல் மார்க்ஸ் உடனிருந்தார் ஜென்னி.
ஜென்னி ஒருமுறை கூறும்போது எனது மிகவும் சந்தோஷமான நாட்கள் எதுவெனில் காரல்மார்க்ஸ் எழுதும்பொழுது உதவியாக கூட இருந்த நாட்களே என்று கூறியுள்ளார். அந்த அளவிற்கு ஜென்னி காரல் மார்க்ஸை விரும்பினார். ஜென்னியின் வரலாற்று பக்கங்களில் ஒவ்வொரு வரிகளிலும் ஒவ்வொரு பகுதிகளிலும் காரல் மார்க்ஸ் இருப்பார் அவருடைய சுயசரிதை படிக்கும் போது நீங்களே உணர்வீர்கள் ஜென்னியின் ஒவ்வொரு அசைவுகளும் காரல் மார்க்ஸை சுற்றியே இருந்ததுள்ளது என்று.

ஜென்னி வெய்டிமையர்க்கு எழுதிய கடிதத்தில் எங்களது ஒருநாள் குடும்ப வாழ்க்கை பற்றி எழுதியிருப்பதை கண்ணீர் விடாமல் படிக்க முடியாது அவ்வளவு துன்பங்களுக்கும் மத்தியிலும் அளப்பரிய காதலை கொண்டுள்ளனர் காரல் மார்க்சும் ஜென்னியும்…

நூல் அறிமுகம் : எங்கள் ஒரு நாள் ...

எங்களது ஒருநாள் குடும்ப வாழ்க்கை

ஜென்னி மார்க்ஸ்

முதற்பதிப்பு 2005 பிப்ரவரி

பக்கம் 64

விலை 15

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,சென்ட-600098

Image may contain: 1 person, beard and closeup

நா.விஜயகுமார்

1 Comment

Leave a Response

Top Reviews

Video Widget

gallery