Book Review

அதிகாரத்தையல்ல நம்பிக்கையை உள்ளடக்கிய சிவப்புப் பேனா – ரா. யுவஸ்ரீ

Spread the love
சிவப்பு பால் பாயிண்ட் பேனா என்பது எவ்வாறெல்லாம் மாணவர்களை மிரட்டுகிறது என்பதை இப்புத்தகத்தின் அட்டையே நமக்கு எடுத்துக் கூறிவிடுகிறது. புத்தகம் முழுக்க ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான வேற்றுமை, ஒற்றுமை, நம்பிக்கை, பயம், மரியாதை, கேள்விகள், பொய்கள், அதிகாரம், ஆசை, அவமானம், பிடித்தது, பிடிக்காதது, உள்ளம், அறிவு, செயல்பாடுகள்  என  விரவிக் கிடக்கிறது.
அதிகாரம் நிறைந்த உலகம்
எங்கும் அதிகாரமே நிறைந்த இவ்வுலகில் அந்த சிறு எழுதுகோலில் இருக்கும் சிவப்பு நிறமும் ஒரு பெரிய அதிகாரமாகவே திகழ்கிறது.  பாடத்திட்டம் என்ற கட்டமைப்பில் மாணவர்களின் தனித் தன்மையை நீக்கிவிட்டு , கடிவாளம் கட்டிய குதிரை போல இந்த பாடத்திட்டங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நூல் பேசுகிறது.
வகுப்பறைகளில் மாணவர்களுக்கு ஏற்படும் அவமானங்களே அவர்களின் மரணத்திற்கான காரணமாகவும், மதிப்பெண் பெறாததால் தற்கொலை செய்து கொள்வதும் தொடர் நிகழ்வுகளாக அமைகிறது என்பதை இப்புத்தகம் விவாதித்து விளக்குகிறது.
என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா | Read ...
நம்பிக்கையின் கூடாரம்
பாடங்களை உணராமல் வெறும் மதிப்பெண்களுக்காக என்னென்ன இன்னல்களை மாணவர்கள் சந்திக்கிறார்கள் என்பதையும், வகுப்பறையில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான உறவு முறையில் இருக்கும் நெருக்கத்தையும் இடைவெளிகளையும் பொதுச் சமூகம் உணரும்படியாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர். கல்வி நிலையங்களில் எதிர்க்கொள்ளும் பண்பாட்டுத் தாக்கங்களையும் விவரித்திருக்கிறார்.
நம்மை வளர்த்தெடுக்கும் கல்வி நிலையங்களில் இருப்பவர்கள் யார்? அவர்கள் நம் வீதிகளில் இருந்து வந்தவர்கள் தான். அங்கே முளைத்த நம்பிக்கை மொட்டுகள் தான், இன்றுகல்வி நிலையங்களிலும் அழகாய் காட்சியளித்துக்கொண்டிருக்கிறர்கள். சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களையும் அவர்களின் அனைத்து கனவுகளையும் உள்ளடக்கியது தான் அந்த சிவப்பு பால் பாயிண்ட் பேனா. ஆனால் அவை பொதுவாக அதிகாரம் என்பதாகவே இருக்கிறது என்பதை மிக அழகாக எடுத்துரைக்கிறார் ஆசிரியர் மாடசாமி. ஆசிரியருக்கேயுரிய ஆழ்ந்த கல்விநிலைய அனுபவங்களும் எளிய மக்களின் நெருக்கமும் நூலோடு நமக்கு கூடுதல் நெருக்கத்தை தருகிறது.
புத்தகம்: என் சிவப்பு பால் பாயிண்ட் பேனா
ஆசிரியர்: ச.மாடசாமி
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 80
விலை:  80/-
– ரா. யுவஸ்ரீ
இந்திய மாணவர் சங்கம்

Leave a Response

Top Reviews

Video Widget

gallery