நூல் அறிமுகம்

எது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லை | ஜெயராணி | விலை. ரூ. 240

சாதி ஒழிப்பை இலட்சியமாகவும் அது குறித்த சம்பவங்களை குறுக்கு வெட்டு செய்வதை இதழியல் நோக்கமாகவும் கொண்டவர் தோழர் ஜெயராணி. மாற்று ஊடகங்களில் தொடர்ந்து ஒலிக்கும் போர் பறை இது. நான்காவது நூல் இது.

‘பிரேக்கிங் நியூஸ்’ மற்றும் ‘டிரெண்டிங்’ தாண்டி வர முடியாத நம் ஊடகங்கள், ‘பரபரப்பு’ ‘திடீர் நிகழ்வு’ தாண்டிச் செல்லாத தினசரி பத்திரிகைகள். கேட்டால் இன்றைய தலைமுறைக்கு ஆழமான செய்திகளை வாசிக்கும் பொறுமை இல்லை என பொய் சொல்கிறார்கள். ஜெயராணி இன்வெஸ்கேடிவ் ஜெர்னலிஸ்ட்.

தலித் முரசு இதழில் அவர் எழுதிய ஆழமான கட்டுரைகளே சாட்சி. களத்தில் இருக்கிறார். இந்த நூலில் குழந்தை தொழிலாளர்கள் குறித்த கட்டுரைக்காக புத்தகம் பலவிருதுகளை வெல்லும். நேர்மையாக வெல்ல வேண்டும். அத்தனை நெக்குருக வைக்கும் கள ஆய்வு அது. தொழிற்சாலை விபத்துகள் குறித்த உண்மைகள் நம்மை திகைக்க வைக்கின்றன.

அதேபோல கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டம். அது குறித்து இத்தனை ஆழமாக பதிவு வாசித்ததாக ஞாபகம் இல்லை. அதேபோல ஆம்னி பஸ் விபத்து குறித்த சாலை விபத்து கட்டுரை தனித்து குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. சிறுபான்மை மக்கள், தலித் மக்கள் பெண்டீர் என ஜெயராணி எனும் ஜெர்னலிஸ்ட் பேசா பொருள் என ஏதுமில்லை. இது தற்போதைய பத்திரிகையாளர்களுக்கு ஒரு பாடநூல்.

Leave a Response