Article

கொரோனா கால புது வரவு: NEOWISE வால்மீன் – பேரா.மோகனா 

Spread the love

இந்த 2020 ஜூலை மாதம் வந்துள்ள புதிய விருந்தாளியை (வால்மீன் ) வரவேற்போம். இப்போது கொரோனா காலத்தில் நீங்கள் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும்போது, உங்களை மகிழ்விக்க வான் ஒரு தூதுவரை அனுப்பி இருக்கிறார். அவர்தான் Neowise என்ற வால்மீன். இதனை 2020, மார்ச் 27 அன்று விண்வெளி தொலைநோக்கி மூலம் விண்வெளி வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  எனவே அந்த தொலைநோக்கியின்  பெயரையே  அந்த வால் மீனுக்கு சூட்டியுள்ளனர். அதுதான் . NEOWISE என்பது  NEOWISE (Near-Earth Object Wide-field Infrared Survey Explorer). இந்த வால் மீன்  C/2020 F3 என்ற பெயரில் மார்ச்  2020ல்  பட்டியலிடப்பட்டுள்ளது.

Calling it “last night's fireworks”, NASA astronaut shares ...

விண்வெளி வீரர்கள் கடந்த ஜூலை மாதம் 3ம் நாள் பார்த்து  வியந்து,பரவசப்பட்டு, இது கடந்த இரவின் இயற்கைப் பட்டாசுகள், அமெரிக்காவின் சுதந்திர தினத்தை கொண்டாட இயற்கை அளித்த பரிசு இந்த வால்மீன் என்று கூறுகிறார்கள்.

இப்போது சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் இருக்கும்    விண்வெளி வீரர் பாப் பெஹ்ன்கென் (Bob Behnken)  இந்த வால் மீனை ஏராளமான  படம் எடுத்து டிவீட்டரில் போட்டுள்ளார்.அவை  மனதை மயக்கும் கொள்ளை கொள்ளும் படமாக உள்ளன. இதன் வால் இதுவரை நாம் பார்த்திராத அளவு மிகவும் நீண்டு வானின் மத்தாப்பூ போல  தெரிகிறது விண்வெளியிலிருந்து எடுத்த போது. நம்மை வியப்படைய வைக்கும் படங்கள் அவை. ஆனால் நாம் பூமியிலிருந்து எடுத்த படங்களில் வால் அவ்வளவு நீளமாக இல்லை.

2020 ஜூலையின்  இந்த வாரம் முழுவதும் இது பூமியையும், சூரியனையும் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இது மார்ச்சில் சூரியனை  நெருங்கியது.இப்போது பூமிக்கு மிக அருகில். இதனை ஜூலை மாதம்  முழுவதும் நாம் சாதாரண கண்களால் எவ்வித கருவிகளும் இன்றி தெளிவாக  பார்க்கலாம்.

பூமியின் வடபகுதியில் உள்ளவர்கள் மற்றும் தென்பகுதியில் இருப்பவர்களும், வடகிழக்கு வானில் சூரிய உதயத்துக்கு முன் அதிகாலையில் 2.30 மணியிலிருந்து பார்க்கலாம். இதன் வால் மேல் நோக்கி, சூரியனுக்கு எதிர்த்த திசையில் நீண்டு தெரியும். இதனை எளிதாக இனம் கண்டுகொள்ளலாம். தொடுவானுக்கு அருகில் NEOWISE வால் மீனைப் பார்க்கலாம்”, என வான் இயற்பியலாளர் கார்ல் பாட்டாம்ஸ் ( Karl Battams) கூறுகிறார்.

பார்வைக் குறிப்பு : இப்போது விடியல் வானில் நான்கு மணிக்கே வெள்ளிக்கோள் கிழக்கில் உதயமாகிறது. ஆனால் நீங்கள் அதிகாலை ௨.30 மணியிலிருந்து NEOWISE வால்மீனை வடகிழக்கில் தொடுவானிலிருந்து சுமார் 20 டிகிரி உயரத்தில் பார்க்கலாம். அருகில் எந்த விண்மீனோ/கோளோ கிடையாது. எனவே இதனை வானில் மேகம் இல்லை என்றால் தெளிவாகப் பார்க்கலாம். வெள்ளி கோளுக்கும் வடக்கு திசைக்கும் இடையில் சில விண்மீன்கள் தெரியும். அது தேரோட்டி மகன் எனப்படும் ஔரிகா( aurika)விண்மீன் தொகுதி. இதன்  கீழேதான் NEOWISE தெரியும். NEOWISE வால் மீனின் வால் கொஞ்சம் நீளமாக உள்ளது. இதிலுள்ள படங்கள் ஜூலை 3-8 ம் நாள் வரை விடிகாலை வானில் எடுத்த படங்கள். வானம் மேகமின்றி இருந்தால் வால் மீனைத் தெளிவாகப் பார்க்கலாம்.

ஆனால் நீங்கள் சீக்கிரம் எழுந்தால்தான் NEOWISE வால் மீனைப் பார்க்கமுடியும்.; இருகண்ணோக்கி மூலமும் நன்றாகப்  பெரிது படுத்திப் பார்க்கலாம். ஆனால்  இதனை  ஆகஸ்ட் மாதம் பார்க்க இயலாது. அப்போது இதன் சுற்றுவட்டம் நம் பூமியிலிருந்து வெகு  தூரத்தில்  இருக்கும். ஆனால் விண்வெளி வீரர் பாப் பெஹங்கேன் ( Bob Behnken )  நான் அடுத்த ரவுண்டில் பூமியைச் சுற்றும்போது இன்னும் நன்றாக படம் பிடித்து போடுவேன் என்று தகவல் அனுப்பி உள்ளார்.

ஜூலை 11ல் NEOWISE வால் மீன்  19 டிகிரி உயரத்தில் இருக்கும். ஜூலை 11வரை வடகிழக்கு வானில் தொடுவானுக்கு அருகில் கொஞ்சம் மேலே தெரியும், பின்னர் மறைந்து விடும் . ஆனால் ஜூலை  12ம் நாள், மாலை வடமேற்கு வானில் அடிவானில்/தொடுவானில் பளிச்சிடும்.பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உயரத்தில் தெரிய ஆரம்பிக்கும்.

Catch a comet sighting in India as NEOWISE remains visible through ...


வால்மீன் NEOWISE  ஜூலை 22 ல் பூமிக்கு மிகவும் அருகில் இருக்கப்போகிறது. பூமியிலிருந்து சுமார் 103 மில்லியன் கி. மீ தூரத்தில் இருக்கும். பார்க்க அதி அற்புதமாக காணப்படும். ஜூலை 25ல் 30 டிகிரி உயரத்தில் வால்மீன் NEOWISE  இருக்கும். மீண்டும் NEOWISE  ஜூலை 30-31 தேதிகளில்  வரும். இது விண்மீன்  cluster  காம் பெர்னீஸ்  அருகில் உள்ளது. இப்போது மக்கள் உலகம் முழுவதும் இருந்து NEOWISE வால் மீனைப் பார்த்து படங்களை பதிவிட்டுள்ளனர். அப்படங்கள்  நம்மை மயங்க வைக்கின்றன.

ரஷ்ய விண்வெளி வீரர் இவான் வேக்னர்   (Ivan Vagner) அதன் நீளமான வாலையும் படம் எடுத்துப்போட்டு நம்மை கிறங்க அடிக்கிறார்.

பொதுவாக வானில் வலம் வரும் ஒரு வால்மீன்/வால்நட்சத்திரத்தின் வருகையை காலம் காலமாகவே  ஒரு கெட்டசகுனமாகவே   கருதுகிறோம்.   நம் எல்லோருக்கும் வால்நட்சத்திரம் /வால்மீன் வரப்போகுது  என்றாலே, ஏதோ  கெட்டது  நடக்கப் போகுது , உலகத்   தலைவர் யாரோ சாகப் போகிறார்கள் என்ற கருத்தே மக்கள் மத்தியில் பரவலாக விரவிக் கிடக்கிறது. அப்படி ஒரு கருத்து  பொதுப்புத்தியில் ஊறிப்போய்விட்டது.

How to see comet NEOWISE | Space | EarthSky

    ஆனால் வால்மீன் என்பது ரொம்பசாதுவானது; பாவம் வால் நட்சத்திரம் அப்படி எதுவும் எந்த கெட்ட  செயலையும் செய்வதில்லை. ஆனால் கெட்ட பேர் மட்டும் வாங்கிவிட்டது.
வால் நட்சத்திரங்கள்   என்பவை? ரொம்பவும்  அழகாகவும், விந்தையானதாகவும்,அற்புதமான வாலு டனும் வானில் தெரிபவை வால் நட்சத்திரங்கள்  .  வான்வெளியில் நீந்தும் வால்நட்சத்திரங்கள் வானில் சூரியனைச் சுற்றி வரும்போது,  பாரம்பரியமாக மக்கள் மனதில் பயத்தையே விதைத்து வந்துள்ளன.

எதிர்பாராமல் வானில் வந்து குதித்ததால் வால்நட்சத்திரங்களை அந்த காலத்தில் “தூமகேது” என்று அழைத்தனர்.  தூமகேது வானில் தோன்றினால் பஞ்சம், பசி, பட்டினி, அரசர் களின் இறப்பு போன்றவை நிகழும் என, ஜோதிடர்கள் வேறு பயமுறுத்தி விட்டனர்.    எனவே வால்நட்சத்திரத்தின் வரவு  ஒரு கெட்ட சகுனமானவே கருதப்பட்டது.

வால்மீன் என்றால் என்ன?

வால் மீன் என்பது விண்வெளியில் சுற்றி வரும் பனிப் பந்து. அது நம் சூரிய குடும்பத்தில் வெளியில்  சுற்றிவரும். வால்மீன்கள் பெரும்பாலும் “அழுக்கு பனிப்பந்துகள்” (Dirty Snowballs) என்று அழைக்கப்படுகின்றன. வால்மீன்களின் சுற்றுப்பாதை சாய்மானம் கொஞ்சம் அதிகமாகவே  இருக்கும் மற்றும் பெரும்பாலானவை சூரிய மண்டல பொருள்கள் காணப்படுவதிற்கு அருகிலும் இல்லை. இவை பனிக்கட்டியும், உறைந்த வாயுக்களும் மற்றும் தூசுகளும் கலந்த கலவையாகும். ஆனால் இவையும் சூரிய குடும்ப வரலாற்றின் ஒரு பகுதியான மாதிரிகள்தான்

  காமெட்(comet ) என்ற வார்த்தைக்கு கிரேக்கத்தில் “முடி”(hair)  என்றே பொருள். இதில் உள்ள நீண்ட வால் முடி போல இருப்பதாக கருதப்பட்டு இதனை comet என்று அழைத்தனர்.  பழங்காலத்தில் வால்மீன்கள் சூரிய குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற உண்மை யாருக்கும் தெரியவேதெரியாது.

வால் மீனைப் பார்த்தவர்கள் ..யார் ?

   சீனர்கள் கி.மு. 240களில் முதன் முதலில் பார்த்த ஹாலி வால்மீன் பற்றியும் பலருக்குத் தெரியாது .இது சீனர்களின் பதிவு.

வால்மீன் வருகை:

பொதுவாக வால்மீன் என்பது சூரியனுக்கு அருகில் சுற்றி வரும் ஒரு பனிக்கட்டியால் ஆன ஒரு பொருள். அவ்வளவே.  அது சூரியனை  இஷ்டம் போலவே ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்து சுற்றி விட்டுப்போகும். சில வால்மீன்கள் 20-200 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் சில வால்மீன்கள் 60,000  ஆண்டுகளுக்கு ஒரு முறையும்கூட வருவது உண்டு.  சில வால்மீன்கள் தன் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டும் வந்து சூரியனை சுற்றி விட்டு ஓடியே போய்விடும். மீண்டும் வரவே வராது.  இப்படி ஓர் ஆண்டில் சூரியனை ஆலவட்டம் போடும் வால்மீன்கள் ஏராளம் ஏராளம்.  2019, ஜூலை  வரை 6,619 வால்மீன்களைக் கண்டுபிடித்துள்ளனர்.   அது நம்மை, இந்த உலகை எதுவும் செய்யாது,  அது பாட்டுக்கு தன் போக்கில் வந்து சூரியனைச் சுற்ற வந்துவிட்டு ,இந்த பூமிக்குத் தன் இருப்பைத் தெரிவித்துக் கொள்கிறது.

வால்மீன் கண்டுபிடிப்பு 

முதன் முதல் வால்மீனைக் கண்டுபிடித்தார் கரோலின் ஹெர்ச்சல் (Caroline Herschel)என்ற  பெண்தான். பின்னர் 1680ல் இதனை தொலைநோக்கி மூலம் பார்த்தவர் காட்பிரைட் கிர்ச் ( Gottfried Kirch).இதனை முதலில் படம் எடுத்தவர் எட்வர்ட் எமர்சன் பெர்னார்ட்

நியூட்டனின் கணிப்பு..!

18ம் நூற்றாண்டின் மிகப் பெரியவிஞ்ஞானியான சர் ஐசக் நியூட்டன்தான்,  வால்மீன்கள் நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன என்ற உண்மையைக் கண்டுபிடித்தார்.   அது மட்டுமல்ல, அவர்தான்,  வால்மீன்களும்  கூட,  கோள்கள் போலவே,  சூரிய குடும்பத்தின் உறுப்பினர்கள்தான் என்றார்.  அவையும் கூட அஸ்டிராய்டுகள் போலவே சூரிய குடும்பம் உருவான போது விடுபட்டுப்போன மிச்ச சொச்சங்கள் அவையும் , கோள்கள் போலவே , மீண்டும் மீண்டும் சூரியனைச் சுற்றிவரும் என்ற மிகப் பெரிய உண்மையையும் சொன்னார்.

வால்மீனின் பிறப்பு

பொதுவாக வால்மீன்கள் வான்வெளியில், இரண்டு இடங்களிலிருந்து உருவாகின்றன.  அவையே நம் சூரிய மண்டலத்தில் கோள்களைத் தாண்டி உள்ள குயூப்பர் வளையம் (Kuiper Belt ) மற்றும்,சூரியமண்டலத்தின் தொலை தூர  கடைக் கோடி..எல்லையில் உள்ள ஊர்ட்மேகங்கள் (Oort cloud ). ஊர்ட் மேகங்கள் குயூப்பர் வளையத்திலிருந்து 1.5 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. ஒரு வால்மீன் என்பது  குயூப்பர் வளையம் (Kuiper Belt ) &  ஊர்ட் மேகத்தில் (Oort cloud ). பல கோடி ஆண்டுகள் தங்கி வாழ்ந்த பின்னரே,  அங்கிருந்து   கோள்கள் நோக்கி வரும்.  அதுவும் அது,சூடான  சூரிய மண்டலத்தின் உள் வட்டத்துக்குள் (Inner SolarSystem ) வந்த பின்னரே, வால்மீனுக்கு, சூரிய ஒளியின் சூடால் பனிக்கட்டி உருகி  வால் முளைக்கும்..
அப்போதுதான்அது பிரகாசமாகவும் தெரியும்.

1995ல் , 878 வால்மீன்களைப் பட்டியலிட்டனர். 2019, ஜூலை  வரை 6,619 வால்மீன்களைக் கண்டுபிடித்துள்ளனர். அவைகளின் சுற்றுப்பாதையும் கூட உத்தேசமாகத் தெரியும். இவைகளில் 184 ஒரு குறிப்பிட்ட காலத்தில் வந்து செல்பவை. இவை 200 ஆண்டுகளுக்குள் வந்து ஒரு முறை சூரியனைச் சுற்றிச் செல்பவை. சில வால்மீன்கள்  குறிப்பிட்ட காலத்தில் வரும் ஆனால் அவைகளின் சுற்றுப்பாதை பற்றி தெளிவாக ஏதும் தெரியாது. சில வால்மீன்களுக்கு காலகதியே இல்லை.

வால்மீன்கள் நான்கு வகைகளாக வரிசைப்படுத்தப்படுகின்றன: அவ்வப்போது வந்து போகும் வால்மீன்கள் (எ.கா. ஹாலியின் வால்மீன்), காலமற்ற/எப்போது வரும் என்று தெரியாத எப்போதாவது வரும்  வால்மீன்கள் (எ.கா. வால்மீன் ஹேல்-பாப்), சரியான சுற்றுப்பாதை இல்லாத வால்மீன்கள் (1106 இன் பெரிய வால்மீன்) மற்றும் மறைந்து போன வால்மீன்கள் (5 டி / உறைந்தவை), C:\Users\Mohana\Desktop\images.png

  வால்மீனின் திடமான கரு அல்லது மையமானது பெரும்பாலும் இருண்ட கரிம பொருட்களால் பூசப்பட்ட பனி மற்றும் தூசியைக் கொண்டுள்ளது என்று நாசா கூறுகிறது. பனியுடன் முக்கியமாக உறைந்த நீரால் ஆனது, ஆனால் அம்மோனியா, கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு மற்றும் மீத்தேன் போன்ற பிற உறைந்த பொருட்களும் இருக்கலாம். கருவில் ஒரு சிறிய பாறை மையத்தில் இருக்கும்

சூரியனுக்கு அருகில்  வரும்போதுதான் வால்மீனுக்கு வால் முளைக்கிறது சூரிய ஒளியில் பனி உருகி. அதன்  பாகங்களும் அப்போதுதான் உருவாகின்றன.

  1. உட்கரு . இது அடர்த்தியாக பாறைபோல இருக்கும். பனிக்கட்டி மற்றும் வாயுவால் ஆனது.கொஞசம் தூசு மற்றும் திடப்பொருள்  உண்டு.

  2.  வால்மீன் சூரியனுக்கு அருகில் வரும்போது, அதன் பனிக்கட்டி பகுதி தூசுடன் இணைந்து  உருகி  கொதிக்கும்,இவை இதன் மையப்பகுதியாக உட்கரு/கோமா எனப்படுகிறது. இது சூரியனால் ஒளியூட்டப்படும். சூரிய ஒளி இதனை பிரகாசமான வாலாக ஆக்கும்.

  3. ஹைடிரஜன் மேகம்.: இது பெரியதானது. பல மில்லியன் கி.மீ விட்டமுள்ளது.

  4. அழுக்கு வால் : இது 10 மில்லியன் கி.மீ நீளமுள்ளது. உட்கருவால் வீசி எறியப்பட்ட தூசும், இதுதான் பெரும்பாலும் நம் கண்களுக்குத் தெரியும்.

  5. அயனிகள்  நிரம்பிய வால். இது பல நூறு மில்லியன் கி.மீ தூரத்துக்கு நீட்டிக்கப்பட்டு இருக்கும், இது நான்காம் நிலையிலுள்ள பிளாஸ்மாவால் ஆனது. இது சூரிய காற்றுடன் உரசி உறவாடும்.

  6. சில வால் மீன்களுக்கு இரண்டு வால்களும் உண்டு

Leave a Response