Web Series

சென்னையும், நானும் – 4 | வி. மீனாட்சி சுந்தரம்

Spread the love

 

புராணங்களும் ஊர் நிர்வாகமும்

அடிமை வம்ச முதலாளித்துவம்

சென்ற பதிவில் பிரிட்டீஷ் அரசு  ஊர் நிர்வாகத்திற்கு மன்னர்கள் காலத்து மரபுகளைப் பேணியவிதம். ஸ்தல புராணங்களின் தாக்கம்  இவைகளை பற்றிய தகவல்கள் அடுத்துவரும் என்று குறிப்பிட்டிருந்தேன். அது பற்றி  ஒரு அறிமுகம் தேவைப்படுகிறது.  இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னாள் வட புல சந்திரகுப்த  மௌரியர் காலத்து மனுஸ்மிருதி வகுத்த இலக்கணப்படி ஸ்தலபுராணங்கள் கோவில்கள் அவைகளை அடிப்படையாகக் கொண்ட  ஊர்கள் என்பது பிரிட்டீஷ் ஆட்சி வருவதற்கு முன்னரே  இந்தியா முழுவதும் பரவிவிட்டன.  குறிப்பாக “திராவிட” சமீப காலமாக “தமிழ் இன” சோழ, பாண்டிய, சேர மன்னர்கள் காலத்திலேயே மனுஸ்மிருதி இலக்கணப்படி புராணங்களையும் சாதி கட்டமைப்பும் கொண்ட கிராமங்கள் தோன்றத் தொடங்கிவிட்டன. பின்னர் நாயக்கர்கள் வம்ச ஆட்சியில் பல ஆயிரக்கணக்கான கோவில் கொண்ட ஊர்கள் முளைத்தன. இந்த வளர்ச்சிப்போக்கை ஆரியன் திராவிடனை அடிமையாக்கிவிட்டான் என்ற விளக்கம் வரலாற்று நிகழ்வுகளுக்கு  பொருந்தவில்லை.. அதோடு பிரிட்டீஷ் அரசு  மேலை நாட்டு முதலாளித்துவத்திற்கு விசுவாசமாக இருக்கும் ஒரு முதலாளித்துவ கட்டமைப்பைக் கட்டுவதற்கு இதனைப் பயன்படுத்தியதையும் நம்மால் உணரமுடியவில்லை. வரலாறு காட்டுவதென்ன?

Victoria, Empress of India: A poetic exploration at Kensington ...

ஈஸ்ட் இந்தியா நிறுவனம் கல்கத்தாவைத் தலைநகராகக் கொண்டு ஆளத் துவங்கிய காலத்தில் துணை நீதிபதியாக வந்த சர்வில்லியம் ஜோன்ஸ் மனுஸ்மிருதியை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கிறார். 1794ல் அது புத்தகமாக வெளிவருகிறது. இந்த புத்தகமே இந்தியாவில் அடிமை வம்ச முதலாளித்துவத்தைக் கட்டமைக்க விக்டோரியா மகாராணிக்கு உதவப் போகிறது என்பதை அன்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். 1856 வரை நம்மை ஆளத் துடித்த ஈஸ்ட் இந்தியா நிறுவனம் இந்து சனாதன தருமங்கள் சாதி கட்டமைப்பு தங்கள் சொல்படி ஆடுகிற முதலாளித்துவ கட்டமைப்பிற்கு உதவாது என்று கருதினர். ஆனால் விக்டோரியா மகாராணி தங்கள் சொல்படி ஆடுகிற இந்திய முதலாளித்துவ வம்சத்தை உருவாக்க  மனுஸ்மிருதியை ஆயுதமாக்கினார்.  அதனடிப்படையில் முதல் நடவடிக்கையாகக்  கிராம வம்ச வழி நிர்வாக முறையை  வலுப்படுத்தினார் (விவரம் பின்னர்). மேலை நாட்டு முதலாளித்துவத்திற்குத்  துணையாக இந்திய முதலாளிகளை வளர்க்கப் பின்னர் பிரிட்டீஷ் அரசிற்கு  எளிதானது. விடுதலைக்குப் பிறகும் அந்தப் போக்கு தொடர்ந்தது. இன்று நாம் காண்பதென்ன? மேலைநாட்டு முதலாளித்துவத்திற்கு ஸலாம் போடுகிற பிரதமர் நம்மை ஆளுகிறார்.

ஸ்தலபுராணங்களின் உருவகங்கள் தெய்வங்கள் அசுரர், தேவர் குறியீடுகள் மனுஸ்மிருதி அர்த்தசாஸ்திரம் இவைகளின் தாத்பரிய செல்வாக்கு இன்றும் நீடிப்பதைப் புரிய ஆரிய திராவிட கோட்பாடுகள் மற்றும் இனமான கோட்பாடுகள் உதவாது.

Viewpoint: How the British reshaped India's caste system | CHINDIA ...

நான்  பிறந்து வாழ்ந்து கடந்து வந்த  ஊர்களின் புறத்தோற்றம் பற்றிப்  பற்றியும்  சொல்லவேண்டும். ஆண்டு நான் பிறந்த(1936) ஊர்  விடுதலைப் போருக்கும் வர்க்கப் போருக்கும்  களமாக இருந்த பாப்பான்குளமாகும். இந்த ஊர்காரார் சொக்கலிங்கம் பிள்ளை சுயேச்சை வேட்பாளர் தாமரை சின்னத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவோடு காங்கிரஸ் வேட்பாளரைத் தோற்கடித்து  1952ல் முதல் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினரானார்.

எனது பெற்றோர்கள் விவசாயத்தை கவனிக்கப் பழைய பண்பாட்டிற்கு அதாவது எசமான விசுவாசத்திற்கு இலக்கணமாக இருந்த கோவிந்தப்பேரியில் குடியேறினர்  எனது குழந்தைப்பருவம். அதாவது சிறங்கு பற்றியதால் அம்மணமாகத் திரிந்த பருவம் கோவிந்தப்பேரியில் கழிந்தது. பள்ளிப்பருவம் பாரதியாரின் மனைவி செல்லம்மாள் ஊரான கடையத்தில் கழிந்தது.  எனது கல்லூரி வாழ்க்கை அரசியல் மாற்றங்களின்  அடையாளங்களான நெல்லை மா.தி.தா இந்து கல்லூரியிலும், பாளையம் கோட்டை சவேரியர்கல்லூரியிலும் கழிந்தது. கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ஓராண்டு விடுதலைப் போரில் பங்கு பெற்ற காங்கிரஸ் சோசலிஸ்ட்  தலைவர் ஒருவர் வாழ்ந்த படுக்க பத்து என்ற கிராமத்திலிருந்த  உயர்நிலைப் பள்ளியில் ஓராண்டு ஆசிரியராகப் பணி செய்தேன்.

AMIE IEI - The Institution of Engineers... - AMIE IEI - The ...

என்னோடு படித்து பட்டம் பெற்ற சிலர் ஆசிரியாக தொடர்ந்தனர் . ஆசிரியராக இருக்க அவசியமான தகுதி என்னிடமில்லை என்பதை உணர்ந்து  என்ஜினியரிங் கல்லூரியில் சேர 1959ல் சென்னை வந்தேன். கல்லூரியில் சேர  மதிப்பெண்கள் போதாது. கோட்டையில் உயர்  அதிகாரிகளாக இருக்கும் உறவினர்கள் சிபாரிசு மூலம் பெற நினைத்தே வந்தேன். எல்லோரும் ஏ.ஐ.எம் இ படிக்கச் சிபாரிசு செய்தார்கள். அன்றையிலிருந்து  சென்னைவாசியாகிவிட்டேன். அன்றையிலிருந்து எனது உள்ளத்தழுக்கினை சென்னை கழுவத் தொடங்கியது.

தொடர் 1ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 1 | V. மீனாட்சி சுந்தரம்

தொடர் 2ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 2 | வி. மீனாட்சி சுந்தரம்

தொடர் 3ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 3 | வி. மீனாட்சி சுந்தரம்

 

Leave a Response