Category: 2018

Post
பெனி எனும் சிறுவன் – தமிழில் யூமா வாசுகி

பெனி எனும் சிறுவன் – தமிழில் யூமா வாசுகி

ஒரு குழந்தையை, தானாக வெளிப்படுத்த உதவும் ஒரு வழிகாட்டியாகவும், உந்துகோலாகவும் இருப்பவரையே குழந்தைகள் விரும்புகின்றனர் என்பதையும், அந்த உணர்வு மட்டுமே அவர்களை வாழ்க்கையில் தன் சொந்தக்கால்களில் நிற்கும், திடமான மனிதர்களாக மாற்றும் என்பதையும் ஆணித்தரமாக புரியவைக்கிறான் பெனி..ஒரு குழந்தையின் பார்வையில், சிறிய சிறிய கேள்விகளுக்கும், பாவனைகளுக்கும் ஒரு ஆழமான எண்ண ஓட்டமிருக்கும் என்பதை வாழ்ந்து காண்பிக்கிறான் இந்த பெனி – ஸ்ரீரங்கநாத் சிறுவர்கள் தங்களை சிறுவர்கள் என்று  உணர்வதில்லை.ஒரு முழுமையான மனிதனாக/மனுஷியாக தான் உணர்கிறார்கள். அவர்களை அப்படி...

Post
கண்டேன் புதையலை- பிரியசகி

கண்டேன் புதையலை- பிரியசகி

கல்வியாளர் குழந்தைப் பருவத்திலிருந்து பதின் பருவம்வரை நாம் கற்கும் விஷயங்கள் தான் நம் வாழ்வின் ஆதாரம் எனும்போது அத்தகைய மிக முக்கியமான விஷயத்தை ஒரு பிரம்பின் கீழ் வைத்து அதிகாரத்தின் கூர் முனை கொண்டு செலுத்தப்பட்ட மந்தைகள் போல் அல்லாமல் குழுந்தைகளுக்கு இயற்கையாக அமைந்துள்ள ஆர்வத்தையும், அவர்தம் தனித்திறனையும் ஒருங்கிணைத்து கற்றலை மகிழ்ச்சியான ஒரு நிகழ்வாக்கிக் கொண்டாட இது போன்ற நூல்கள் அவசியம். தலைமைப் பண்பு முதல் தியானம்வரை பல கடினமான விஷயங்களை எளிமையான மொழிநடையில் விளக்கி எல்லையில்லா...

Post
இது எங்கள் வகுப்பறை – வே. சசிகலா உதயகுமார்

இது எங்கள் வகுப்பறை – வே. சசிகலா உதயகுமார்

தனது வகுப்பறை நிகழ்வுகள் பலவற்றைப் பதிவுசெய்யும் அதே வேளையில் கற்றல் கற்பித்தலில் தேவைப்படும் புதுமைகள், வகுப்பறை மாணவர்களை மையமா கொண்டிருக்க வேண்டியதன் அவசியம், வாசிப்பின் முக்கியத்துவம் என அனைத்தையும் பேசுகிறார். உலகளாவிய அளவில் கல்வியில் மிகவும் முக்கியமான புத்தகங்கள் ”பகல் கனவு”, ”டோட்டோசான்- ஜன்னலில் ஒரு சிறுமி”. இந்த இரண்டிலும் வரும் ஆசிரியர்களான முறையே லக்ஷ்மிராமும், கோபயாட்சியும் குழந்தைகளின் மனங்கவர்ந்த ஆசிரியர்கள். இந்த “இது எங்கள் வகுப்பறை” புத்தகத்தைப் படித்துவிட்டு சிறிது யோசித்தால் ஆசிரியை வே.சசிகலா உதயகுமாரும் இவர்களுக்கு...