நூல் அறிமுகம்

புத்தகங்களைப் பற்றிய அறிமுகம்.

நூல் அறிமுகம்

தரணி ஆளும் கணினி இசை | இசையமைப்பாளர் தாஜ்நூர் | விலை ரூ.180

இசை குறித்த 21ம் நூற்றாண்டு புத்தகம் இப்படித்தான் இருக்கும். எத்தனை சுவாரசியம்... என்ன அழகான தகவல்களஞ்சியம் இசை பற்றி ஏதும் அறியாத கேட்டு ரசிக்க மட்டுமே தெரிந்த நமக்கு கிடைத்த சூப்பர் புதையல் தாஜ்நூர் சாரின் இந்த தொகுப்பு. அசாத்தியமான நுட்பங்களை தன் எழுத்தில் அவரால் வடிக்க முடிகிறது. திரைப்படங்கள் வழியே அவர் நம் புதிய இசையை கணினி மயமாக்கப்பட்ட இன்றைய பாடல் பதிவை விவரிக்கும்போது ‘மிடி’ கீ போர்டு,...
நூல் அறிமுகம்

சிதார் மரங்களில் இலைகள் பூப்பது இல்லை (கதைகள்) | அ.கரீம் | விலை ரூ.90

பாரதி புத்தகாலயம், பக். 104, விலை ரூ.90 தமிழ்சிறுகதை உலகின் தற்போதைய நம்பிக்கை பெயர்களில் ஒன்று அ.கரீம் சமீபத்தில் நான் வாசித்திருக்கும் சிறுகதை தொகுதிகளில் அதீத சோதனை முயற்சிகளும் புதிய எழுத்துப் பாதையும் புலப்படும் புத்தகமாக நான் சிதாரை முன்மொழிவேன். இந்த தொகுப்பின் கதைகள் பலவற்றை தமிழின் இலக்கிய இதழ்களில் வாசித்தும் இருக்கிறேன். இந்த தொகுப்பு முழுதும் நிழலாகும் மனித அவலங்கள் நம்மை திகைக்க வைக்கின்றன. கவர்னர் வருகைக்காக சாலை...
நூல் அறிமுகம்

அத்து மீறல் | வி. அமலன் ஸ்டான்லி | விலை ரூ. 120

அறிவியல் நாவல். மிகவும் வித்தியாசமான படைப்பு. இது ஆய்வகங்கள் பற்றியது. ஆய்வக உயிரிகளின் கதையைப் பேசுகிறது. ஆய்வக எலிகள் என்பவை மனிதனை நோயிலிருந்து காக்க தன் உயிரை பரிசோதனைகளுக்கு பலியிடுகின்றன. அமலன் ஸ்டான்லி சொல்கிறார்.. அங்கேயும் காதல் உண்டு. வெளிஆட்கள் உயிரிகள் நுழைய முடியாத பல்லடுக்குப் பாதுகாப்பை மீறி வெளியே இருந்து ஒரு ஆண் எலி ஆய்வகத்தின் அங்கமாகி ஆனால் கூண்டில் வாழப் பிடிக்காமல் தனித்து சுதந்திரமாய் திரியும் பெண்...
நூல் அறிமுகம்

சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகி | ட்டி.டி. இராமகிருஷ்ணன் த. குறிஞ்சிவேலன் | விலை ரூ.295

தமிழில் நவீன உரைநடையை நோக்கி நடை பதித்த பாரதியே தன் காலத்தில் முதல் மொழிபெயர்ப்பு பணியும் தொடங்கினான். ஜப்பானிய ஹைக்கூவை தந்து அதை தொடங்கி பாரதி அசத்தினான். புதுமைபித்தன், க.நா.சு. திருலோக சீத்தாராம் டி.எஸ். சொக்கலிங்கம் என ஒரு பெரிய பட்டியல் இருப்பினும் தொ.மு.சி. தனித்து நிற்பார். பின் சுதந்திரத்திற்கு பிறகு என்.பி.டி. சாகித்ய அகாடமி மூலமே நாம் இந்தியாவின் பிறமொழி படைப்புகளை அறிகிறோம். குறிஞ்சி வேலன் அவர்களின் மலையாள...
நூல் அறிமுகம்

நவரத்தின மலை | சோவியத் மக்களது நாட்டுக்கதைகள் | த.ரா. கிருஷ்ணையா | விலை ரூ. 350

ஒன்பதாம் வகுப்பு விடுமுறையில் இதே புத்தகம் என் கையில் இருந்தது. சோவியத்தின் ராதுகா பதிப்பகம். வெளியிட்ட கதைத் தொகுதி. கதைகளின் காதலனாக.. குழந்தைகளின் கதை சொல்லியாக என்னை செதுக்கிய நூல்களில் இது பிரதானமானது. இப்போது படித்தாலும் வேறு பாண்டசி உலகிற்குள் நம்மை கடத்தும் அழகு சிலிர்க்க வைக்கிறது. இதெல்லாம் காலத்தின் பொக்கிஷம். இந்த தொகுப்பில் ரஷ்யா, உக்ரேனியா, பேலோருஷ்யா, லித்துவேனியா, லத்வியா கரேலியா, மல்தாவியா, அஸ்பெய்ஜான், ஆர்மினியா, ஜார்ஜியா உஸ்பெக்...
நூல் அறிமுகம்

எது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லை | ஜெயராணி | விலை. ரூ. 240

சாதி ஒழிப்பை இலட்சியமாகவும் அது குறித்த சம்பவங்களை குறுக்கு வெட்டு செய்வதை இதழியல் நோக்கமாகவும் கொண்டவர் தோழர் ஜெயராணி. மாற்று ஊடகங்களில் தொடர்ந்து ஒலிக்கும் போர் பறை இது. நான்காவது நூல் இது. ‘பிரேக்கிங் நியூஸ்’ மற்றும் ‘டிரெண்டிங்’ தாண்டி வர முடியாத நம் ஊடகங்கள், ‘பரபரப்பு’ ‘திடீர் நிகழ்வு’ தாண்டிச் செல்லாத தினசரி பத்திரிகைகள். கேட்டால் இன்றைய தலைமுறைக்கு ஆழமான செய்திகளை வாசிக்கும் பொறுமை இல்லை என பொய்...
நூல் அறிமுகம்

அனைவருக்குமான உடல் இயங்கு இயல் | ப.பி. செர்கேயெவ் | த. டாக்டர் அ.கதிரேசன் | விலை ரூ. 340

1981ல் மீர் பதிப்பகம் வெளியிட்ட மிகப் பிரபலமான ரஷ்ய நூல் இது. இது மாதிரி ஒரு உடல் கூறியல் புத்தகம் இதுவரை எழுதப்படவில்லை என்று சொல்லுமளவு என்னை அன்றைய நாட்களில் பாதித்த படைப்பு இது. இதை நாம் திரும்ப வாசிக்க முடியும் என்று கனவிலும் நினைக்கவில்லை. பாரதிபுத்தகாலயம் அந்த கனவை நிறைவேற்றி இருக்கிறது. புரோட்டோமை யோசின்களின் சங்கிலி தொடரே பனிக்கட்டி என்பதில் தொடங்கி உயிர்ப்புள்ள தண்ணீர் உயிர்ப்பற்ற தண்ணீர் என்று...
நூல் அறிமுகம்

கதவு திறந்தே இருக்கிறது | பாவண்ணன் | விலை.ரூ.120

கதவு திறந்தே இருக்கிறது பாவண்ணன் பாரதி புத்தகாலயம், பக். 144, விலை.ரூ.120 கதவு திறந்தே இருக்கிறது எனும் தலைப்பில் நம் புத்தகம் பேசுது இதழில் நண்பர் பாவண்ணன் எழுதிய புத்தகங்கள் குறித்த அற்புத தொடரை விரும்பி வாசித்தவர்கள் பலர். இப்போது எல்லாருக்கும் வாசிக்க உதவியாக முழு புத்தகமாய் கொண்டு வந்திருக்கிறார்கள். எனக்கு பிடித்த அந்த தொடரின் புத்தகம் ‘கண் தெரியாத இசைஞன்’ நூல் சம்பந்தமானது. பாவண்ணன் கொரலேன் கோவின் வாழ்க்கையை...
நூல் அறிமுகம்

வாசிப்பு அனுபவம் : 66 | புத்தக தேவதையின் கதை | தமிழில் : யூமா வாசுகி

நூல் : புத்தக தேவதையின் கதை ஆசிரியர் : எஸ். சிவதாஸ் (மலையாளத்தில்) தமிழில் : யூமா வாசுகி வெளியீடு : பாரதி புத்தகாலயம் பக்கங்கள் : 104 விலை : ₹ 70 2003 இல் அமெரிக்காவால் ஈராக்கின் மீது நடத்தப்பட்ட படு பயங்கரமான தாக்குதலின் போது, நூலகத்திலிருந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை அழியாமல் காப்பாற்றிய "ஆலியா முகம்மது பேக்" என்ற பெண்மணியை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டு புனையப்பட்ட...
1 2 3 4 9
Page 2 of 9